Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுதந்திர தினம்
#1
இன்று இலங்கையின் சுந்திர தினம். இந்த பக்கத்தை படித்து பாருங்கள்,

http://mauran.blogspot.com/2005/02/blog-post_04.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
அப்பு மதன் அல்லது பிபிசி!

ஒரு பழமொழி தெரியுமோ! "விடிய விடிய ராமர் கதை, ...........". அப்படி வெட்டி ஒட்டி பழகிய உமக்கு! ஆனால் எதை எங்கு எப்படி எந்த தலைப்பிற்கு கீழ் ஒட்டுவதென்று தெரியவில்லை! தயவுசெய்து தெரியாவிடில் மோகனுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.

ஒரு சிலரின் விளம்பரத்திற்கு செயற்படும் நீர்? அதை மறைப்பதற்காகத்தான் எல்லாவற்றையும் சுட்டுக் கொண்டுவந்து இங்கே பசை பூசுகிறீர் என நினைக்கிறேன். "ஆறிய கஞ்சி பழங்கஞ்சி" புரியுமா தெரியாது!!!!!!!!!
" "
Reply
#3
அதுசரி தம்பி ஆருக்கு சுதந்திரதினம். அப்பிடியொண்டு இருக்கிறதா?
எப்ப வந்தது? தெரியாமல் கேட்கிறன் சொல்லுங்கோ
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
Ţº¸ý þÐܼš ÒâÂÅ¢ø¨Ä. §ÅÈ¡ÕìÌ ¸§É¡ÛìÌò¾¡ý ;ó¾¢Ãõ. «Å÷ º¢Ã¢îͦ¸¡ñÎ þÕôÀ¨¾ À¡÷òÐÁ¡ ÒâÂÅ¢ø¨Ä... :wink:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
Reply
#5
«ôÀÊ¡ Confusedhock: .... ±ó¾¸¨¼Â¢Ä «Ð Ţ츢ȡí¸û?? §¾¡Ç÷¸¨Ç Å¢ðÎ Å¡í¸§ÅÛõ.. Cry Cry Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
viyasan Wrote:அதுசரி தம்பி ஆருக்கு சுதந்திரதினம். அப்பிடியொண்டு இருக்கிறதா?
எப்ப வந்தது? தெரியாமல் கேட்கிறன் சொல்லுங்கோ

வியாசன் அண்ணா உண்மையில இந்தத் தலைப்பு தமிழர்களது அடிமை சாசன மாற்ற தினம் என்று இருந்தா பொருத்தம் ஏனேண்டா மாசி 4 ம் திகதி தமிழர்கள் ஒரு அதிகாரவிக்கத்தின் (பிரிட்டிஷ்) பிடியிலிருந்து இன்னொரு அதிகாரவர்க்கத்தினரிடம் (சிங்களவன்) அடிமையாக ஒப்படைக்கப் பட்ட நாள். :oops: :evil: :twisted:

இன்றைய தினத்தில் எங்கட அடிமை சாசன மாற்றத்த்திற்கு மிகவும் உதவி செய்த தமிழ் தலைவர்களைப் :evil: பற்றி தெரிஞ்சிருந்தா சொல்லுங்கோ.

அற்லீஸ்ட் எங்களை விக்கிறதுக்கு உதவிய எங்கள் இனத்தவரை பற்றி கொஞ்ச அறிவாவது தேவைதானே :evil:

மற்றபடி தமிழர்கள் சுதந்திரம் தேசிய தலைவரது கரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து :wink:
. .
.
Reply
#7
Niththila Wrote:
viyasan Wrote:அதுசரி தம்பி ஆருக்கு சுதந்திரதினம். அப்பிடியொண்டு இருக்கிறதா?
எப்ப வந்தது? தெரியாமல் கேட்கிறன் சொல்லுங்கோ

வியாசன் அண்ணா உண்மையில இந்தத் தலைப்பு தமிழர்களது அடிமை சாசன மாற்ற தினம் என்று இருந்தா பொருத்தம் ஏனேண்டா மாசி 4 ம் திகதி தமிழர்கள் ஒரு அதிகாரவிக்கத்தின் (பிரிட்டிஷ்) பிடியிலிருந்து இன்னொரு அதிகாரவர்க்கத்தினரிடம் (சிங்களவன்) அடிமையாக ஒப்படைக்கப் பட்ட நாள். :oops: :evil: :twisted:

இன்றைய தினத்தில் எங்கட அடிமை சாசன மாற்றத்த்திற்கு மிகவும் உதவி செய்த தமிழ் தலைவர்களைப் :evil: பற்றி தெரிஞ்சிருந்தா சொல்லுங்கோ.

அற்லீஸ்ட் எங்களை விக்கிறதுக்கு உதவிய எங்கள் இனத்தவரை பற்றி கொஞ்ச அறிவாவது தேவைதானே :evil:

மற்றபடி தமிழர்கள் சுதந்திரம் தேசிய தலைவரது கரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து :wink:
பெயர் சொல்ல கூடியளவிற்கு பெரிய தமிழ்அரசியல்தலைவர்கள் யாரும் இல்லை ஓரிருவர் அருணாச்சலம் செல்வநாயகம் போன்றோர் அப்பப்ப குரல் கொடுத்தவை அவ்வளவுதான். மற்றபடி ஈழ தமிழனை துரத்தியே பழக்கப்பட்ட சிங்களவன் திரும்பியோட வெளிக்கிட்டது ஒரேயொரு தவைனை பார்த்துத்தான் அது யாரென்று உலகிற்கே தெரியும்
; ;
Reply
#8
ஷியாம் அண்ணா நான் சொல்லுறது சரியோ தெரியாது :?

பிரிட்டிஷ் அரசு சிறி லங்காக்கு சுதந்திரம் கொடுக்க முதல் தமிழர் தரப்பிலிருந்த சேர் பொன் ராமனாதன்??? :?: அருணாச்சலம் :?: போல ஆக்களிடம் தமிழரது பகுதிகளை பிரிச்சு தரவா எண்டு கேட்டவையாம் (பகிஸ்தான் போல) ஆனா தமிழரது தரப்பினர் வேண்டாம் என்றவையாம்.

அது உண்மையா

அப்படி செய்த மகாத்மாக்கள் யார்

இது பற்றி உங்களுக்குத் தெரியுமா
. .
.
Reply
#9
அந்த நேரத்திலை இருந்த இராமநாதன் போன்றோர்க்கு பாகிஸ்தானை பிரித்த ஜின்னா மாதிரி தீர்க்கதரிசனம் இருக்கவில்லை.
இப்ப இருக்கிற தலைவனை ஏமாத்துகிற அளவுக்கு சிங்களத்தில் ஒரு தலைவரும் இல்லை பிள்ளை. எங்கடை தலைவரின் தீர்க்கதரிசனம் சிங்களத் தலைமையிடையே இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#10
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிக்குமாறு செல்வம் எம்.பி. வேண்டுகோள்

தென்னிலங்கையின் அரசியல் தலைமைத்துவங்களினால் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் 57 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) த்தின் தலைவரும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் சிங்களப் பேரினவாதிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டு 57 வருடங்கள் கடந்த நிலையிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது விடுதலைக்காக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும் சமாதானப் பேச்சுகள் முடக்கப்பட்டு தமிழ்ப் பிரதேசமும் தமிழ் மக்களும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படும் நாளே தமிழர்களின் உண்மையான சுதந்திர நாளாகும்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
இன்றைய தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை

இலங்கையின் சுதந்திர தினமென்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை துக்கதினமாகவே இருப்பதால் இன்றைய நாளை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்றைய சுதந்திர தினத்தை பகிஷ்கரித்து தமிழ் மக்கள் துக்கதினம் அனுஷ்டிக்க வேண்டுமெனக் கோரி மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில்:

சுதந்திர தினம் தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை துக்க தினமாகவே அமையும். தமிழர்களாகிய எம்மைப் பேரினவாதச் சிங்கள அரசாங்கம் நசுக்குவதற்கு ஆரம்பித்த நாள்தான் இலங்கையின் சுதந்திர தினமாக அமைந்திருக்கின்றது. 1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் சுதந்திரத்தினைப் பெற்ற இலங்கைத் தீவில் சிறுபான்மை இனம் என்ற முத்திரை குத்தப்பட்டு, வந்தேறு குடிகள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் பல்வேறுபட்ட வகையில் தமிழர்களைப் புறக்கணிப்பதில் சிங்கள ஆட்சி பீடத்தில் ஏறிய பேரினவாதச் சக்திகள் முனைப்புப் பெற்றுச் செயற்பட்டன.

நில ஆக்கிரமிப்புகளைச் செய்து மொழி உரிமையைப் பறித்து தனிச் சிங்களச் சட்டம் என்ற இன அழிப்பு வேலைக்கு அடித்தளங்கள் போட்டு, தமிழ் மக்களை அடக்குமுறைச் சகதிக்குள் தள்ளினார்கள்.

இவ்வாறான அடக்குமுறைகளுக்கு தமிழர்களை இட்டுச்சென்ற நாளே சுதந்திர தினமாகும்.

இந்த நாள் சிங்களவர்களுக்கு மட்டுமே சுதந்திர தினமாகும். தமிழர்கள் இன்றும் சுதந்திரம் பெறவில்லை. தமிழர்களுக்கு என்ற தனித்துவம் இன்னும் அமையப்படவில்லை. தொடர்ந்து வந்த இனவாதப் போக்குடைய சிங்கள அரச தலைவர்கள் மேலும் மேலும் தமிழர்களை ஓரம் கட்டவே எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இராணுவ ஆக்கிரமிப்பில் நிலத்தினை இழந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசு பல்வேறுபட்ட அடக்குமுறைகளையே மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை இராணுவம் சொந்த நிலத்தில் சொந்தக் கடலில் சுந்திரமாக தொழில் செய்ய முடியாமல் தமிழர்களைத் தடுத்தும், பல்வேறு தடைகளை ஏற்படுத்தியும் வருகின்றது. இந்த நிலையில் ஒரு பக்கம் சுதந்திரம் என்ற தொனிப்பும் மறுபக்கம் அடக்குமுறை என்ற இன அழிப்பு நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருவதனை வெளிப்படையாக உணரலாம்.

இயற்கையின் அனர்த்தத்தினால் தெற்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுத்து சொந்த இடத்தில் அவர்களை குடியமர்த்த வேண்டும் என்ற உலக நாடுகளிடம் உதவிப் பிச்சைக்கு கையேந்தும் இன்றைய அரசாங்கத்திடம் பல ஆண்டுகளாக சொந்த வீடுகளை உயர் பாதுகாப்பு வலயம் என்ற இராணுவ ஆக்கிரமிப்புக்குள் பறிகொடுத்த தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணப்பாடு ஏன் ஏற்படவில்லை?

இதுவே இன ரீதியான பாகுபாட்டினை, இன ரீதியான அடக்குமுறையினை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. எனவே, தமிழர்களை அடக்குவதற்கு காழ்கோளாக ஆரம்ப நாளாக இருந்த சுதந்திர தினத்தினைக் கரிநாளாக, தமிழர்களை இருண்ட வாழ்வை நோக்கி நகர்த்திய நாளாகவே நாம் கருதுகின்றோம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
Niththila Wrote:
Quote:ஷியாம் அண்ணா நான் சொல்லுறது சரியோ தெரியாது :?

பிரிட்டிஷ் அரசு சிறி லங்காக்கு சுதந்திரம் கொடுக்க முதல் தமிழர் தரப்பிலிருந்த சேர் பொன் ராமனாதன்??? :?: அருணாச்சலம் :?: போல ஆக்களிடம் தமிழரது பகுதிகளை பிரிச்சு தரவா எண்டு கேட்டவையாம் (பகிஸ்தான் போல) ஆனா தமிழரது தரப்பினர் வேண்டாம் என்றவையாம்.

அது உண்மையா

அப்படி செய்த மகாத்மாக்கள் யார்
இது பற்றி உங்களுக்குத் தெரியுமா
ஒன்று முதலில் கவனிக்கபட வேண்டும் பிரித்தானிய அரசு இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்ததே பிச்சை போட மாதிரி அதே நேரம் எந்த காலத்திலும் அதைதமிழருக்கும் சிங்களவருக்கும் பிரித்து கொடுக்க நினைத்ததில்லை.அவர் கள் காலத்தில்(இந்தியாவில் காங்கிரஸ் போல)இலங்கையில்தமிழ் சிங்கள புத்திசாலி உயர்வகுப்பினரால் 1888ம்ஆண்டு இலங்கைதேசியசங்கம் ஆரம்பிக்கப்பட்டது அதன் முதல் தலைவர் பொன்.இராமநாதன் இவர்கள் வெள்ளையர்களிடம் போசியும் சில கூட்டங்களை நடத்தி தங்கள் வலிமையை காட்டி போரம் பேசி சில சலுகைகளை பெறமுயன்றனர்(கவனிக்க சுதந்திரம்அல்ல) பின்னர் இலங்கையின் முதல் இனரீதியான கலவரம்1915ம் ஆண்டு வர்த்தகர்களின்வியாபாரபோட்டியாலும் சிலகாரணங்களாலும்சிங்களவரால்தமிழ் முஸ்லிம்மககளிற் கெதிராககண்டியில் ஆரம்பிக்கப் பட்டது வடக்கு கிழக்குதவிர்ந் சிங்களபகுதிகள் எங்கும் அதிகமாக முஸ்லிம் மக்களே இதில் பாதிக்கப் பட்டனர் தமிழர் வியாபார தலங்களும் பாதிக்கப்பட்டன(சிங்களவரின் முதல் இனவெறி தாக்குதல்) அப்போதிருந்த மாஷல் சட்டத்தால் கலவரம் அடக்கப்பட்டுபாதிப்படைந்த தமிழ் மற்றும் முஸ்லிம்களிற்கு தாக்கிய சிங்களவர்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நட்டஈடு வழங்கபடவேண்டுமென அச்சட்டம் பரிந்துரைத்தது.இராமநாதன் அதற்கெதிராகவும் சிங்களவருக்குசார்பாகவும் சட்டசபையில் பேசியது மட்டுமல்லாது இங்கிலாந்துவரை சென்று எலிசபெத்மகாராணியை சந்தித்து வாதாடி நட்ட ஈடு கொடுக்க தேவையில்லை என்று எழுத்து முலம் வாங்கி வெற்றியும்பெற்று கைதாகியிருந்த சிங்கள இனவெறியர்க்கு விடுதலையும்வாங்கிதந்து தமிழனின் முதுகில் குத்திய முதல் படித்தபுத்திசாலிதமிழன் என்ற பெயரை பெற்று கொண்டார்
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)