Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் வாணிபமாகும் ஆன்மீகம்
#1
நண்பர்களே. நான் படித்ததில் பிடித்தது. இந்த எழுத்துரு ஒத்துழைக்க மறுப்பதால் இணைப்பை தருகின்றேன். படித்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.
http://www.worldtamilarweb.com/anmigam1.php
.
.!!
Reply
#2
புலத்தில்...

வாணிபமாகம் ஆன்மீகம்.

ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம் என்பதாக ஆன்றோர் வாசகங்கள் எடுத்தியம்புகின்றன. இந்தப் புவியில் பிறவியெடுத்த ஆன்மாக்கள் பரமாத்மாவாகிய இறைவனுடன் ஒன்று சேரும் இடமே கோவில்கள் என்றும், இதனாலேயே கோவில்கள் ஆலயம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இறைவன் என்னும் பொருள் உண்டா இல்லையா என்ற பகுத்தறிவு வினாக்களுக்கு அப்பால் ஆலயங்கள் சமூக வாழ்வில் ஏற்று நிற்கும் பாத்திரத்தை மறுப்பதற்கில்லை. நாகரிகங்கள் அறியப்பட்ட சிந்துவெளி காலம் தொட்டு ஆலயங்கள் சமூக வாழ்வில் செலுத்தகின்ற தாக்கம் பெரிதாகவே உணரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் அறியப்படாத பண்டைக் காலத்தில் ஆலயங்கள் சிறப்பான மீடியா பணியை ஆற்றியுள்ளன. தமிழர்களின் கலைப்பாரம்பரியத்திற்கு கோவில்களும் அடிப்படைக·“ காரணமாயிருந்துள்ளன என்பதை வரலாறுகள் தெளிவாக விளக்குகின்றன. இன்றும் நம் மத்தியில் மூடநம்பிக்கைகளாக உலவுகின்ற பல இதிகாசங்கள் கூட. அன்றைய காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு செவிவழிக் கரைகளாக ஆலயங்களிலிருந்தே போதிக்கப்பட்டன. இதற்காகவே பல கோவில்கள் மடாலயங்களுடன் நிர்மாணிக்கப்பட்டன. இவை தனியே இதிகசங்களையும் கட்டுக்கதைகளையும் பரப்புகின்ற தளமாக இயங்கவில்லை மாறாக மன்னராட்சிக் காலங்களில், சட்டங்களாலும் தண்டனைகளாலும் திருத்தபடமுடியாமல் இருந்த மனித மனங்களுக்கு, மானுட வாழ்வின் உன்னதம் உணர்த்தும் பயிற்சிக் களமாகவே செயற்பட்டன. இதனால் தான் "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" எனும் சொற்பதம் மிகுந்த பிரபல்யம் மிக்கதாக கொள்ளப்பட்டது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கின்ற ஒருவன் சமூக வாழ்வோட்டத்துடன் ஒன்று கலக்க முடியாதவன் எனும் பொருள் தொளிக்கும் அளவுக்கு அன்றைய நம் முன்னோர்களின் வாழ்வுமுறையில் கோவில்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ஆக, தனித்தனித் தீவாய் சிதறிக் கிடந்த மனித வாழ்வை சமூகமயப்படுத்தவும், சமூகமயப்பட்ட வாழ்வை நாகரிகப்படுத்தவும் கோவில்கள் அரும்பங்கு ஆற்றியுள்ளன.

கோவில் எனும் அமைப்புமுறை மக்கள் மத்தியில் ஏற்படுதியிருந்த செல்வாக்கு, பிற்காலத்தில் ஆட்சிப்பீடத்திலிருப்போருக்கு மக்களை வழிநடத்த பல இலகுவான வழி வகைகளை பெற்றுக் கொடுத்தது. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் என்பதற்கு அப்பால் ஆளும் தரப்பு கோவில்களை நிர்மாணிப்பதிலும் அவற்றை பராமரிப்பதிலுமே அதிக அக்கறை கொண்டிருந்தது. சோழர் மன்னர் காலத்தில் வளர்ச்சியடைந்ததாக கூறப்படும் கட்டடக்கலை கோவில்களை கட்டும் கலையாக மட்டும் இருந்ததற்கும், பல்லவை மன்னர் காலத்தில் பாடப்பட்ட அருமையான பல இலக்கியங்கள், பக்தி இலக்கியங்களாகி கோவில்களில் மட்டுமே பாடப்படும் இலக்கியங்களாகவும் மாறிப்போனதன் வரலாற்று பின்னணி இது தான் மக்களின் சுயமான வாழ்வுமுறை தங்களின் சுகபோக வாழ்வுக்கு பாதகம் என்பதை உணர்ந்து கொண்ட முதலாளித்துவத்தின் ஆதிவடிவம் கோவில் அமைப்புமுறையை சரியாகவே பயன்படுத்தக் கற்றுக் கொண்டது. இவையெல்லாம் கோவில்கள் தேவையற்ற ஒன்று என்றோ அல்லது பிற்போக்கு சிந்தனாவடிவம் எனும் தொனிப்பொருளிலோ கூறப்படுவன அல்ல. மாறாக கோவில் என்கின்ற கூரான கத்தி பல்வேறு காலகட்டங்களில் தவறான உறைகளில் செருகப்பட்டுள்ளது என்பதையே இடித்துரைக்கின்றது.

இந்த நிலைதான் இன்றும் நம் ஆலயங்களுக்கு என்னும் உண்மையை, சற்று கசக்கும் என்றாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தாயகம் சந்திக்கின்ற பேரழிவுகளிலிருந்து தம்மை தற்காத்துகொள்ளும் ஒரு நிலையாகத் தான் தமிழினத்தின் புலம்பெயர் சமூகம் தோற்றம் பெற்றது என்பது வரலாற்று உண்மை பல்வேறு தட்ப வெப்ப பிரதேசங்களில், பல்வேறு கண்டங்களில், பல்வேறு மொழி, இன தேசியங்களுடன் ஒன்றிவாழும் நிர்பந்தத்திற்குள்ளாகிவிட்ட புலம்பெயர் சமூகம், தமது தனித்துவங்களை இழந்து விடாது பேணும் முயற்சியில் பணியாற்றுவது போற்றுதற்குரியதே. இந்தப் பணியின் தொடர்ச்சியாகவே மேலைத்தேசங்களின் ஆலய உவாக்கங்கள் நோக்கப்பட வேண்டியுள்ளது.

ஆலயங்களின் உருவாக்கத்திற்கான காரணம் என்னவோ சமூக சிந்தனையுடன் நோக்கப்பட்டாலும் அவற்றின் பணிகளில் சமூகசிந்தனை குதிரைக்கொம்பாகவே உள்ளது. ஆலயங்களின·“ அமைப்புமுறையை ஆகம விதிமுறைகள் உரைப்பதாக கற்றறிந்திருக்கின்றோம். ஆனால் ஆலயங்களின் அமைப்புமுறைக்காக ஆகமங்கள் உருவாக்கப்படுவதும், ஐயர் வரும் நேரம் தான் அமாவாசை என்பதாக மூகூர்த்தம் சொல்லப்படுவதும் புலத்தில் மட்டுமே இடம்பெறுகின்ற சோகம் இவை நம்போன்ற பாமரபக்தர்களிடம் "வேதம் ஓதுதல் வேதியர்க்கு அழகு" என்பது வெறும் சொற்பிரயோகம் தானா என்பது போன்ற சில தர்க்க ரீதியான வினாக்களை உருவாக்கிவிடுகின்றது. பகுதிநேர வேலையாக வேதம் ஓதுதல் தவறில்லை என்றாலும் மரபுகளை தங்கள் வசதிகளுக்கு வளைத்துப்போடும் இந்நிலை சற்று எரிச்சலை உண்டுபண்ணாமலும் இல்லை. திதி பார்த்தல், மூகூர்த்தம் பார்த்தல் என்கின்ற பழைய சரக்கையெல்லாம் இந்த தகவல் தொழில்நுட்ப காலத்திலும் காவிச்சுமக்க வேண்டும் என்பது நம் வாதமல்ல. ஆனாலும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என எண்ணும் ஏமாந்த பக்தினிடம் வித்துவச்சரக்கை விற்க முனைவதையே சாடுகின்றோம் இதற்கும் மேலாய·“ சாத்திரமுறைகளையெல்லாம் சொப்ட்வேர் மயப்படுத்தியிருக்கும் கைரெக்(ன) ஐ வியப்பதா அல்லது செவ்வாய்த்தோச பொருத்தம் கண்ணடறியும் ளுழகவறசந ஐ வியப்பதா? புரியவில்லை நமது சின்னமூளைகளுக்கு.

முன்னர் மன்னராட்சி நிலவிய வேளைகளில், மன்னனின் வீரப்பிரதாபங்களை ஆலயங்களில் கட்டியம் கூறும் வழக்கம் இருந்ததாம் மன்னராட்சி முடிந்து மன்னர்களும் முடிந்து விட்ட இன்றைய தேதியில், அந்த மன்னர்களின் பணிகளையும் பாவம் நமது பொருளுடை வள்ளல்கள் தான் செய்ய வேண்டியுள்ளது. அதனால்தான் என்னவோ, ஆலயங்களில் வேதம் ஓதுதற்கு பதில் உபயகாரின் உச்சாடனம் உரத்து உச்சரிக்கப்படுகின்றது. உற்சவம் என்கின்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் உபயகாரர் ஒவ்வொருவவினதும் பொருளாதாநிலைச் சுட்டி. இதனால் ஏற்படும் போட்டிகளில் கடவுளர்களும் சிக்கித் தவிக்கின்றார்கள் என்பதைவிட விரையமாவது தமிழினத்தில் அங்கம் ஒருவனின் பொருள்வளம் தான் என்பது எவ்வளவு வேதனைக்குரியது. தனது மண்ணில் ஒரு நேர உணவுக்கும் வழியின்றி நாளும் உறவுகள் வாடுகின்ற நிலையில், கலோரி அளவைக் குறைக்க னுயைவல் இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கி புண்ணியம் தேட விளைபவர்களை என்னவென்பது. ஆக புலத்தில் ஆலயங்கள் என்பவை ஆன்மீகப்பணியின் அங்கம் தானா? அல்லது இலவச விளம்பர சேவைகளா என்பதை காலம் விரைவில் கண்டறிந்து சொல்லும்

தனது திருமணம் ஒரு குறித்த முகூர்த்த நேரத்தில் நடைபெற வேண்டும் என எண்ணிஆலயத்தை அணுகும் ஒருவருக்கு கிடைக்கின்ற அனுபவம் அலாதியானது. சாதாரண முகூர்த்தம் பார்த்தல், சனி ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களுக்கு முகூர்த்தம் பார்த்தல், என பலதெரிவுகள் அவனுக்கு வழங்கப்படும் முகூர்த்தம் எனப்தை ஒரு சுபநேரம் எனப்தாக மட்டுமே அர்த்தப்படுத்திக் கொண்டு திரியும் ஒருவன், இவ்வாறான யஉயபந முகூர்த்தங்களைக் கண்டு அரண்டு விடுகின்றான். இது தாண ஆன்மீகம் காட்டுகின்ற வாழ்கைமுறை என்ற சந்தேகம் மனதைக் குடைகின்றது.

மொத்தத்தில் ஆன்மீகமும் ஆன்மீக நிலையங்களான ஆலயங்களும் அவற்றை புலத்திலும் பதியமிட்டு வளர்க்கும் ஆன்மீக வாதிகளும், நமக்கு மார்வாடிகடைத்தெருக்களையும் கல்லாப் பெட்டிகளையும் தான் நினைவுபடுத்துகின்றார்கள். வெற்றிகரமாக வாணிபம் செய்யவிரும்புகின்ற ஒருவர் புலத்தில் செய்யவேண்டியது, ஒரு ஆன்மீக நிலையத்தை கடைவிரிப்பது தான் வியாபாரம் செழிக்கும் கல்லாப்பெட்டியும் நிறையும்.

இந்த இழிநிலையில் இருந்து இனத்தை கரையேற்ற ஆன்மீகத்தில் வாணிபம் இல்லா நிலை உவாக்கப்படுதல் முதற்பணி உரியவர்கள் சிந்தித்து பணியாற்ற முன்வருதல் பயன்தரும். இல்லையெனிலோ காலம் விரைவில் வரவழைக்கும்.

மானுடன்.

þô¦À¡ØÐ ºÃ¢Â¡ ¿ñÀ§Ã... :wink:
[b]

,,,,.
Reply
#3
நன்றிகள் செல்வன்
.
.!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)