02-14-2005, 12:39 PM
மோசமான சர்வாதிகாரிகள் பட்டியல்: முஷரப் இடம் பிடித்தார்
வாஷிங்டன் பிப். 14-
உலகில் மோசமாக விளங்கும் சர்வாதிகார குணம் படைத்த ஆட்சியாளர்கள் யார்-யார்? என்ற விவரத்தை அமெரிக்க பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டி யலில் 10 தலைவர்கள் இடம் பெறுவார்கள்.
மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மோச மான சர்வாதிகாரிகள் பட்டி யலில் பாகிஸ்தான் அதிபர் முஷரப் இடம் பெற்று இருக்கிறார். அவருக்கு 7-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு முஷரப் இந்த பட்டியலில் இடம் பெற்ற தில்லை. இப்போது தான் முதல் முறையாக சேர்க்கப்பட்டிருக் கிறார்.
மோசமான சர்வாதிகாரியாக முதல் இடத்தை பிடித்திருப்பவர் சூடானை சேர்ந்த உமர் அல்-பஷ்மிர் ஆவார். கிம் ஜாங் இல்-2 (வடகொரியா) 2-வது இடமும் தான்சுவி (பர்மா) 3-வது இட மும் ஷீ ஜிந்தா (சீனா) 4-வது இடமும் இளவரசர் அப்துல்லா (சவுதி அரேபியா) 5-வது இட மும் கடாபி (லிபியா) 6-வது இடமும் பெற்றுள்ளார்கள்.
முஷரப்புக்கு அடுத்தபடியாக சாபர்முரத் தியாசோவ் (துர்க் மினிஸ்தான்) 8-வது இடத்தை யும் ராபர்ட் முகாபே (ஜிம் பாப்வே) 9-வது இடத்தையும் திடோரோ ஒபியவ் நியுமா (இகிடோரியல்கினியா) 10-வது இடத்தையும் பெற்றிருக்கிறார் கள்.
கடந்த ஆண்டில் வெளியான பட்டியலில் கியுபா நாட்டு ஜனாதிபதி பிடரல் கேஸ்ரோ சுவிட்சர்லாந்து மன்னர் மஸ் வாதி ஆகியோர் இடம் பெற்றி ருந்தார்கள். ஆனால் இந்த முறை அந்த இருவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் கள்.
இதற்கு காரணம் தற்போது இடம் பெற்றுள்ள 10 பேரைவிட அவர்கள் இருவரும் பரவா யில்லை என்பதேயாகும்.
பாகிஸ்தான் அதிபராக இருக் கும் முஷரப் ஜனாதிபதி மற்றும் ராணுவ தளபதி ஆகிய இரு உயர்ந்த பதவிகளை வகிக்கிறார். ராணுவ தளபதி பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்தார். பிறகு பல்டி அடித்து விட்டார். அவருடைய இந்த நிலையற்ற தன்மை காரணமாக சர்வாதி காரி பட்டியலில் இடம்பிடித்த தாக கூறப்படுகிறது.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>