02-20-2005, 09:34 AM
புகுமுக மாணவர்கள் தங்கியிருந்த
வீட்டினுள் புகுந்த கும்பல் அடாவடி!
பகிடிவதைக் கொடூரம் எனச் சந்தேகம்?
திருநெல்வேலிப் பகுதியில் யாழ். பல் கலைக்கழக புகுமுக மாணவர்கள் தங்கியி ருந்த வீடு ஒன்றினுள் சிரேஷ்ட மாணவர்கள் என்று கூறப்படும் சுமார் 15 பேர் நேற்று முன்னிரவு பிரவேசித்து அங்கு தங்கியிருந்த மாணவர்களுடன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
அங்கு புகுமுக மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் சேற்றை வாரித் தெளித்து அசிங்கப்படுத்தியதுடன் அவர்களைத் தாக்கி னர் என்றும் - சத்தம் கேட்டு அங்கு ஒன்று கூடிய அயலவர்கள் சிரேஷ்ட மாணவர்களின் செயலுக்கு தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர் என்றும் -
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது எனவும் பின்னர் சிரேஷ்ட மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் எனவும் - சம்பவத்தை நேரில் பார்த்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த புகுமுக மாண வர்கள் விவசாய பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படடது. எனினும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் மாணவர்கள் எந்தப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.
யாழ். பல்கலைகழகச் சுற்றாடலில் இடம் பெற்றுவரும் பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புடையதே இந்தச் சம்பவம் என்று கூறிய அப்பகுதி மக்கள் மேற்படி சம்பவம் தொடர் பாகக் கடும் விசனம் தெரிவித்தனர்.
Uthayan (19.02.2005)

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>