02-22-2005, 01:14 AM
"மரணத்தில் முடியாது வாழ்வு" என்று கூறுமளவுக்கு எல்லா தனி மனித வாழ்வும் உயர்வானதான இருந்துவிடுவதில்லை. மரணத்துடன் மறக்கப்படும் தனிமனித வாழ்க்கையையே யதார்த்தத்தின் கண்கள் தினமும் சந்திக்கின்றன. இருப்பினும் மரணம் தம்மை துரத்திவருவதாக வாக்குமூலம் அளித்துப் பெற்றுக்கொண்ட வாழ்வினைக் கூட மரணத்தால் அழித்துவிட முடியும் என்பதை கட்டியம் கூறுவதாகவே புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் அவலச்சாவுகள் அமைந்து கொள்கின்றன. ஓடும் ரயிலின் தண்டவாளப்பாதையில் குளியலறையின் திரைமறைப்பில் இன்னும் எங்கெல்லாமோ தமிழர்களின் சாவுச் சங்கதிகள். இவற்றில் பெரும்பாலானவை தன்முயற்சிக் கொலைகளாகவே அமைகின்றன. வாழ்வின் இறுதிக் கணத்தையும் உவப்பானதாக வாழ்ந்து விடத் துடிக்கும் மேற்கத்தேயத்தவர்கள் மத்தியில் எம்மவர்களின் இவ்வாறான தன்முயற்சிக் கொலைக்கான காரணங்கள் என்ன? இவை இயல்பாகவே அவர்கள் மனதிலெழுந்த விரக்தி உணர்வின் வெளிப்பாடா? அல்லது வேறு ஏதேனும் தூண்டற் காரணிகளும் உண்டா? உண்மையில் அவர்களின் விரக்தி உணர்வு தான் அவர்களை இவ்வாறானதொரு முடிவுக்கு தள்ளியிருப்பினும் அந்த விரக்தி உணர்வை உண்டாக்கும் சுழ்நிலைகள் என்ன? என்பதை ஆராய்வது ஒரு சமூகப் பொறுப்புள்ள செயலாகும். அதனை இதுவரையில் எந்த "சேவைகளும்" மேற்கொண்டதில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
சில காலங்களுக்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் அமைகின்றது. மேற்படி வள்ளி எனும் அப்பெண்ணின் நண்பர் ஒருவரே இக்கொலையைப் புரிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதியாக நம்புகின்றது. இது கொலையா ?தற்கொலையா? கொலையெனின் யார் அதன் சுத்திரதாரி? என்பதற்கு அப்பால் அப்பெண்ணின் கொலை பற்றி வெளிவந்த "குசுகுசுப்புகள்" கசப்பு மிக்கவை. கொலைக்கான நியாயப்படுத்தலாக வெளிவந்த வக்கிரக்குரல்களாகவே அவை இருந்தன.
பல்லினப் பண்பாட்டை குறிக்கோளெனக் கொண்டு தங்கள் வாழ்வுமுறையை நெறிப்படுத்தியுள்ள சுவிஸ்நாட்டவர்கள் மத்தியில் எங்கள் தனித்துவங்கள் சில மாற்றங்களை காணும் என்பது இயல்பு. அத்துடன் ஐநூறு ஆண்டு காலம் மாறி மாறி அடிமை வாழ்வுக்குட்பட்டிருந்த எமக்கு எது எமது பண்பாடு என்பதே வினாக்குறியாயிருப்பதும் அதேநிலையில் புலம்பெயர்ந்த நாம் "காஞ்ச மாடு எங்கோ விழுந்த மாதிரியாய்" வேற்றினப் பண்பாட்டை தலையில் தூக்கிச் சுமக்க நினைப்பதுவும் ஆத்திரத்திற்குரியதல்ல. அதுவும் குறிப்பாக இளைய தலைமுறை தங்களைச் சுற்றியுள்ள நடைமுறை வாழ்க்கையுடன் ஒன்றிய இந்த பண்பாட்டம்சங்களை தாங்களும் பின்பற்றவெண்ணுவது வியப்பானதல்ல. பண்பாடு என்பதன் உள்ளார்ந்த பொருள் புரியமால் செய்யப்படுகின்ற வியாக்கியானங்களால் இன்று எமது பண்பாடு என்பது பெண்கள் கட்டும் சேலையாகவும் ஆண்கள் இடுப்பில் சுற்றும் வேட்டியாகவும் மட்டுமே உருமாறிப்போய்விட்டதற்கு இளைய தலைமுறை எப்படி காரணமாகலாம். ?
ஒருவன் தான் காதலித்த பெண் அல்லது தன்னைக் காதலித்த பெண் தன்னை மறுதலித்து விட்டால் உடனடியாக அவன் கொலை கூட செய்யலாம். அதனை இந்த சமூகக் கட்டமைப்பு பண்பாட்டின் பெயரால் நியாயப்படுத்தி அவனைக் காப்பாற்றி விடும். ஒரு விதத்தில் இது தனிமனித உரிமைக்கு பண்பாட்டின் பெயரால் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. வீட்டில் உணவு சமைப்பதினாலேயே தாங்கள் அடிமைப்படுத்தப்ட்டு விட்டோம் என காட்டுக்கூச்சல் போடும் பெண்ணிலை வாதிகளின் குரல் இது விடயத்தில் மௌனவிரதம் காப்பதன்காரணம் என்ன? சில வேளைகளில் இவ்வாறான பொறுப்பு மிக்க பணிகள் மேடைகளையும் கைதட்டல்களையும் தங்களுக்குப் பெற்றுத் தராது என அவர்கள் எண்ணியிருக்க கூடும். இவர்கள் பெண் விடுதலை என கூப்பாடு போடுவதெல்லாம் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுந்த கதையாகத்தான்.
நாம் பேச்சளவில் எப்படித்தான் விடுதலை விடுதலை என்று கொண்டாடிக் கொண்டாலும் பெண்விடுதலை என்பது சமூகத்தின் அடித்தளத்தில் இன்னமும் பதியமிடப்படவில்லை என்றே தோன்றுகின்றது. இதனை பெண்ணியவாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே அரிதாரம் புசிக்கொள்பவர்கள் உணர்ந்து கொண்டு செயற்பட முன்வருதல் பயன்தரும்.
இந்தச் சமூகப் பிணிக்கு உரிய சமூக ஆய்வொன்றின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இவ்வாறான எவரும் கண்ணீர் சிந்தாத மரணங்கள் அதிகரித்தே செல்லும்.
பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

.
.!!
.!!