Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
பிப்ரவரி 25, 2005
தமிழர் கட்சி ஆதரவு வாபஸ்: இலங்கையில் ஆளும் கூட்டணி மெஜாரிட்டி இழப்பு
கொழும்பு:
இலங்கையில் ஆட்சியில் உள்ள அதிபர் சந்திரிகாவின் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இத் தகவலை அக் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம். எங்களுக்குத் தந்த சில உறுதிமொழிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆதரவை வாபஸ் பெற்றோம் என்றார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்பிக்களில் இப்போது சந்திரிகாவின் கூட்டணிக்கு வெறும் 111 உறுப்பினர்களின் ஆதரவே உள்ளது. இதனால் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது.
தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவால் வென்று வரும் காங்கிரஸ் கட்சி, புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை சந்திரிகா தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் கூட்டணியில் இடம் பெற்றது.
புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டால் ஆளும் கூட்டணியை விட்டு விலகுவோம் என இலங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கூட்டணியில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்ட
இ.தொ.காங்கிரஸ் இப்போது
இரண்டும்கெட்டான் நிலையில்!
எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகிவிட்டன. உத்தரவாதங்கள் எல்லாம் உதாசீனப்படுத்தப் பட்டுவிட்டன. பெரும் நம்பிக்கைக் கனவுகளு டன் அரசுக்கு முட்டுக்கொடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று அரசுக்குள் செல்லாக்காசாக்கப்பட்டு அந்தரிக்கின்றது. வீறாப்புடன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து அரசைவிட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டு அது இரண்டும் கெட்டான் நிலை யில் அது அந்தரித்துக்கொண்டிருக்கிறது.
மலையகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சைதான் இப்போது பூதா கரமாகி நிற்கின்றது என்று கூறப்பட்டாலும் தனிப்பட்ட ஒரு சிறுவர் பூங்கா விவகாரம் மட் டும்தான் இ.தொ.காவின் இப்போதைய இழுபறி முடிவுக்கான காரணம் அல்ல என்றும் கூறப்படு கின்றது. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எந்தவிதமான அமைச்சுப் பொறுப்பு களையும் வழங்கமுடியாது என ஜனாதிபதி அறிவித்தபின், ஜனாதிபதியைச் சந்திக்கப் பல முறை வாய்ப்புக்கேட்டும் அதை வழங்க ஜனாதிபதி சந்திரிகா மறுத்துவந்துள்ளார் எனக் கூறப் படுகின்றது.
கடைசியாக அமைச்சர் முத்துசிவலிங்க மும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.செல்லச்சாமி யும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யும் கடிதங்களை ஒப்படைத்த பின்னரும்கூட ஜனா திபதி இ.தொ.காவினரைச் சந்திக்க மறுத்து விட்டார் எனக் கூறப்பட்டது. இ.தொ.கா. வட் டாரத்தில் இது பெரும் அதிருப்தியையும் ஏமாற் றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அறியமுடிந்தது.
இ.தொ.கா. எம்பிக்கள் நேற்று சபாநாயக ரைச் சந்தித்து இ.தொ.கா. சார்பில் இதுவரை அமைச்சர்களாக இருந்த இருவருக்கும் நாடாளு மன்றில் எதிர்க்கட்சி வரிசையில் ஆசனம் ஏற் பாடுசெய்யும்படி கோரிக்கை விடுத்தனர். எனி னும், அவர்கள் சபைக்குள் பிரவேசிக்கவில்லை.
அரசுக்கு முட்டுக்கொடுக்க இ.தொ.கா. முன் வந்ததற்குப் பிரதியுபகாரமாக அமைச்சர் சி.பி. ரத்னாயக்காவிடமிருந்து தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு பறிக்கப்பட்டு இ.தொ.காவின் முத்துசிவலிங் கத்திடம் ஒப்படைக்கப்பட்டது தெரிந்ததே.
தாம் அமைச்சரானவுடன் பொலீஸ் சேவை யில் ஆயிரம் பேருக்கும் ஆசிரியர்களாக 3,500 பேருக்கும் அரச முன்னரங்க அலுவலகங் களில் 2,500 பேருக்குமாக மலையக இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றார் முத்துசிவலிங்கம்.
அதை அமைச்சரவை அங்கீகரித்துவிட்டது என்றும் அமைச்சர் முத்துசிவலிங்கம் பின்பு பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இன்று வரை ஒரு நியமனம் கூட வழங்கப்படவில்லை.
இதுவிடயத்தில் ஜனாதிபதி இ.தொ.கா.வை இழத்தடித்துக்கொண்டே இருக்கின்றார் என்கின் றன விடயமறிந்த வட்டாரங்கள்.
தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம், நோர்வூட் விளையாட்டரங்கு, ரம்பொடை கலாசார நிலையம் என்பனவற்றை தொண்ட மான் பவுண்டேசனுடன் உரித்துடையதாக்கித் தாரைவார்க்கவேண்டும் என்ற இ.தொ.கா. கோரிக்கையும் அமைச்சரவையினால் நிராகரிக்கப் பட்டுவிட்டது.
பொதுமக்களுக்கு முகம் கொடுக்க முடியா மலே இ.தொ.கா. அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்தது என்றும் கூறப்படுகின்றது.
இ.தொ.காவின் இராஜினாமா தொடர்பாக எதிர்க்கட்சி வட்டாரங்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மஒரு ஸ்திரமான நிலைப்பாட்டைக் கொண்டிராத இவர்களை எப்படி நம்புவது? இவர்களை எதிர்க்கட்சிக் கூட்டமைப்பில் மீண் டும் இணைத்து செயற்படுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லைடு என்று கூறப்பட்டது.
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து விட்ட இ.தொ.கா. இப்போது இரண்டும்கெட் டான் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக இ.தொ.கா. தலை வருடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் தொடர்பு கிடைக்கவில்லை. ஏனைய மூத்த உறுப்பினர்கள் உதயனுக்குக் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
'இ.தொ.கா அரசில் தொடரும்'
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/02/20050228164329r-yogarajan.jpg' border='0' alt='user posted image'>
ஆர். யோகராஜன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன் வைக்கப்பட்ட 14 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொண்டு அவற்றை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதால் தமது கட்சி தொடர்ந்தும் அரசில் இணைந்து செயற்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் கூறினார்.
இன்று கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தமது இராஜினாமாவை சமர்ப்பித்த போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாகவே பணியாற்றுவார்கள் என்றும் யோகராஜன் குறிப்பிட்டார்.
தமிழோசை
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
ஜனாதிபதியிடம் மசிந்தது இ.தொ.கா.!
அமைச்சுப் பதவிகளைத் தொடர முடிவு
தமக்கு வழங்கப்பட்ட ஓர் அமைச்சர் பத விகளையும் ஒரு பிரதி அமைச்சர் பதவியையும் தூக்கி எறிவதாகக் கடந்த சில நாள்களாக ஆர்ப் பாட்டம் பண்ணிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நேற்று ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து அடங்கிப் போனது.
தாம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளில் தொடரவும், ஜனா திபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசுக் கான தமது நிபந்தனையற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கவும் இ.தொ.கா. முடிவு செய்ததாக அறிய வந்தது.
இ.தொ.கா. தலைவர்கள் கடந்த சில நாள் களாகப் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள், எடுப்புக் கள், வழங்கிய பேட்டிகளைப் பார்த்தோரும், அமைச்சர் ,பிரதி அமைச்சர் பதவிகளை இரா ஜினாமாச் செய்துவிட்டனர் என இ.தொ.கா அறிவித்ததை அறிந்தவர்கள் எல்லோரும் இத்தோடு அக்கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு எதி ரணியில் போய் அமர்ந்துவிடும் என எதிர் பார்த்தனர்.
இதை மேலும் உறுதிப்படுத்துவது போல நாடாளுமன்றத்தில் தமக்கு எதிர்க்கட்சி வரிசை யில் ஆசனங்களை ஒதுக்கித்தருமாறு இ.தொ.கா. சார்பில் அமைச்சராக இருக்கும் முத்து சிவ லிங்கமும், பிரதி அமைச்சராக இருக்கும் எம்.எஸ். செல்லச்சாமியும் சபாநாயகரிடம் கோரியிருந் தனர்.
ஆனால், அரசிலிருந்து விலகிவிடுவோம் என்ற இ.தொ.காவினரின் மிரட்டல் பாச்சா ஜனாதிபதி குமாரதுங்கவிடம் பலிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
அதனால் அமைச்சுப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் தமது வழமையான நிலைப் பாட்டை நிலைநிறுத்துவதற்காக, வேறுவழி யின்றி ஜனாதிபதி குமாரதுங்க முன்னால் அடங் கிப்போக- மசிந்துபோக - அவர்கள் தீர்மானித்த னர் என்றும் -
தாம் அரசில் தொடர்வதை மக்களுக்கு நியா யப்படுத்திக்கூறும் காரணங்களைத் தயார் செய்வதில் நேற்று மாலை இ.தொ.கா. தலை வர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர் என் றும்-
விடயமறிந்த வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.
இ.தொ.கா.பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு மிடையே நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற மூன்று மணிநேர சந்திப்பினையடுத்தே அரசுக்கு வழங்கிவரும் ஆதரவைத் தொடர்ந்து நீடித்துக் கொள்வதற்கு இ.தொ.கா. தீர்மானித்தது.
நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையி லான இ.தொ.காவின் எட்டு எம்.பிக்களும் அடங் கிய குழு ஜனாதிபதியை சந்தித்தபோது மலை யகப் பகுதிகளில் நிலவும் பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மலையகப் பகுதிகளில் பொலீஸாரின் அத்து மீறல்கள் உட்பட பல பிரச்சினைகளை இ.தொ.கா. சுட்டிக்காட்டியபோது, அவற்றிற்குத் தீர்வு பெற் றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். இதனையடுத்தே அரசுக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதற்கு இ.தொ.கா. தீர் மானித்தது - என்று அக்கட்சி வட்டாரங்கள் மஒப் புக்குச் சப்பாணிடுக் காரணங்கள் கூறின. அரசில் இணைவதற்குக் கடந்த ஆண்டு தாங்கள் முடிவுசெய்தபோது, தாங்கள் முன்வைத்த 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பார் என ஜனாதிபதி நேற்று தங் களிடம் உறுதியளித்தார் என்றும் இ.தொ.காவி னர் இப்போது கூறுகின்றனர்.
நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மங்கள சமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக் ஆகியோ ரும் கலந்துகொண்டனர்.
நேற்றைய சந்திப்பின்போது ஜனாதிபதி காட்டிய கடும்போக்குக் காரணமாக, இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு காத் திரமான அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க வேண்டும் என்ற கதையையே இ.தொ.கா. தரப்பு எடுக்கவில்லை என்றும் -தெரிவிக்கப்பட் டது.
நன்றி உதயன்.
"
"