Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தான் வேண்டாமென நிராகரித்ததாலேயே
#1
தான் வேண்டாமென நிராகரித்ததாலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது என்கிறார் அநுரா பண்டாரநாயக்க

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம் கோரிக்கை விடுத்தார். நான் தான் வேண்டாமென்றேன். இதனாலேயே மகிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி கிடைத்தது எனத் தெரிவிக்கும் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க, சுதந்திர கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டமாக இதனைத் தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹாவில் இடம்பெற்ற மாகாண சபைகள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் அநுரா அங்கு பேசுகையில்,

பிரதமராக என்னையே ஜனாதிபதி நியமிக்க முயன்றார். நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் வரை அப்பதவி எனக்கு வேண்டாமென மறுத்து விட்டேன். எனவே தான் அப் பதவி மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்தது. ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி நேரடியாக இதனைத் தெரிவித்தார் இப் பதவிக்கு உரித்துடையவர் அநுரா தான் என்று.

நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை நீக்கி, வாழ்க்கைச் செலவை குறைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் திடீரென வந்த கடல்கோளினால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பன் மடங்காகி விட்டன. இந் நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனைத் தடுத்து ஐ.தே.கட்சியின் தேவையை நிறைவேற்ற ஒரு சிலர் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியை மாற்றி பண்டாரநாயக்கர்களை ஓரங்கட்டவே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தனியார் அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவே ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

எமது கட்சியின் தலைவரை தனியார் ஊடகங்களால் தீர்மானிக்க முடியாது. அதேபோல், ஐ.தே.கட்சியின் தலைமையை அரச ஊடகங்களாலும் தீர்மானிக்க முடியாது.

ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் அவசியம் தற்போது ஏற்படவில்லை. ஆனால், ஒரு சில ஊடகங்களுக்குத் தான் தேவைப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பேசுவது கட்சிக்கு செய்யும் துரோகச் செயலாகும். அது மட்டுமல்ல ஐ.தே.கட்சிக்கு வழங்கும் ஆதரவாகும்.

தனியார் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஒரு தனிநபருக்கான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந் நபர் ஏதாவது பகிர்ந்தளித்தாலும், வனாத்தமுல்லையில் மலசலகூடத்தை திறந்து வைத்தாலும், பத்திரிகைகளில் பெரியளவில் பிரசுரிக்கின்றார்கள். அனைத்து மக்களின் விருப்பதிற்கமைய ஜனாதிபதிக்கு ஜனநாயக ரீதியாக மேலும் பல வருடங்கள் பதவி வகிக்கலாம்.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு நான் ஒருபோதும் எனது பெயரை பிரதமர் பதவிக்கு பிரேரிக்குமாறு கோரிக்கை விடுத்ததில்லை. என்றாவது ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுவாரானால் நானும் போட்டியிடுவேன். இதற்கு ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் ஜே.வி.பி.யின், தினேஷ், பேரியல் அனைவரினதும் ஆசீர்வாதங்கள் இருக்க வேண்டும்.

ஜே.வி.பி.யுடனான பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. நான், அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் விமல் வீரவன்சவுடன் பேச்சுகளை நடத்தி தீர்த்துள்ளோம்.

இந்த அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க மாட்டோம். அரசாங்கம் வீழ்ந்தால் என்ன நடக்கும்? மாகாண சபைகள் அனைத்தும் வீழ்ச்சியடையும். அடுத்த ஆண்டு பிரதேச சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. என்றுமில்லாதவாறு கம்பஹா மாவட்ட பிரதேச சபை அனைத்தும் தோல்வி கண்டன. அத்தனகலை, கம்பஹா, தொம்பேயில் தோற்றோம்.

அடுத்த வருடம் அனைத்து பிரதேச சபைகளையும் வெற்றி கொள்ள வேண்டும்.

இதற்கு பின்னரே ஜனாதிபதி தேர்தல், அதனை அப்போது பார்த்துக் கொள்வோம். சிலவேளை மக்கள் கருத்துக் கணிப்பு அடுத்த வருடம் வரக் கூடும். அதற்கும் நாம் தயாராக வேண்டும்.

முன்னணியை உடைக்க இடமளிக்க முடியாது. குறைகள் தீர்க்கப்பட வேண்டும். ஜே.வி.பி.விசேடமாக தமது பேச்சுகளில் கட்டுபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இம் முன்னணியை அமைத்தது நான். என்னை விட அதிகளவில் விருப்பு வாக்கு பெற்றது யாருக்கும் பரீட்சயமில்லாத விலாசம் இல்லாத விஜித ஹேரத்தான். எனக்கு தேவைப்பட்டது ஐ.தே.கட்சியை தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதேயாகும் என்றும் அமைச்சர் அநுர பண்டாரநாயக்க தெரிவித்தார்.


Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)