Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்
#1
மார்ச் 06, 2005

தமிழை இழந்து கொண்டிருக்கிறோம்: ராமதாஸ்

சென்னை:

தமிழ் மொழியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தமிழர்கள் மத்தியில் வலுத்துக் கொண்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


ராமதாஸ் எழுதிய பண்பாட்டுச் சீரழிவுகள், தத்தளிக்கும் கல்வி, தமிழகம் எங்கே போகிறது?, சமூகம் சில பதிவுகள், தமிழகத்தின் உயிர் நாடி ஆகிய ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். முன்னாள் சபாநாயகர் ராசாராம் நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், தமிழ் மொழியை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே வலுப்பட்டு வருகிறது. தமிழ் மொழி நமது உயிர் நாடி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தமிழையும் இழந்து வருகிறோம், காவியையும் இழந்து வருகிறோம்.

பிற மாநிலங்களில் உள்ள மொழிப் பற்றில் 1 பகுதி கூட தமிழர்கள் மத்தியில் இலலை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த வருத்தமான நிலை மாற வேண்டும்.

சினிமா மூலம் தமிழ் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தமிழ் வளரக் கூடாது, தமிழ் அழிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் எங்களது நோக்கத்தை தவறாக சித்தரித்து திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

சினிமா என்பது சிறந்த ஊடகம். ஆனால் அதை வைத்துக் கொண்டு மொழியைக் கொலை செய்வதை, பண்பாட்டைச் சீரழிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால்தான் தமிழ் கலாச்சாரத்திற்கு முரண்பாடான காட்சிகள் தமிழ்ப்படங்களில் இடம் பெறக் கூடாது, தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

சினிமாக்களில் தமிழ் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இதை சில சினிமாக்காரர்கள் மறுக்கலாம். அவர்களோடு விவாதம் நடத்த நாங்கள் தயார், அவர்கள் தயாரா?

ஆங்கிலத்திற்கு நாங்கள் எதிரிகள் இல்லை. அதை ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர வாழ்க்கை மொழியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மாணவர் விரும்பினால் எந்த மொழியையும் தனது விருப்ப மொழியாக எடுத்துக் கொண்டு படிக்கலாம். ஆனால் தமிழே படிக்காமல் உயர் கல்விக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

தமிழர்களிடையே மங்கி வரும் தமிழ் உணர்வை மீட்கவே தமிழ் பாதுகாப்பு இயக்கம். இதேபோல மறைந்து வரும் தமிழ்ப் பண்ணிசையை வளர்க்கவும் அறிஞர் குழு ஒன்றை அமைக்கவுள்ளோம். அதில் குறைந்தபட்சம் 10 தமிறிஞர்கள் இடம்பெறுவர்.

இந்தக் குழுவிடம் தமிழ் பண்ணிசையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 1 மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும். அதன் பரிந்துரைகளை திமுக தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கவுள்ளோம்.

அவர்தான் அடுத்த முதல்வராக வரப் போகிறார். எனவே அவரிடம்தான் இதை தெரிவிக்க வேண்டும். மேலும், சட்டசபைத் தேர்தலின்போது தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களின்போது பண்ணிசை வளர்ச்சிக்கான பரிந்துரைகளைத்தான் நாங்கள் நிபந்தனைகளாக வைக்கப் போகிறோம்.

தமிழுக்கு சேவை செய்பவர் கருணாநிதி. எனவே அவரிடம் இந்த நிபந்தனைகளை கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.

நிபுணர் குழு பரிந்துரைகள் தவிர, பள்ளி கல்லூரிகளில் தமிழ் இசையை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அதற்கு 100 மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். இசையறிஞர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதையும் கோரிக்கைகளாக வைக்கவுள்ளோம்.

இவைதான் எங்களது நிபந்தனைகள். இவற்றை எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதியைக் கேட்டுக் கொள்ளப் போகிறோம் என்றார் ராமதாஸ்.

ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், ராமதாஸ் பெரியார் போல. கோபம் வந்து விட்டால் சில காரியங்களை அவரது பாணியில் செய்வார். சினிமா மீது அவருக்குக் கோபம் கிடையாது. அங்கு தமிழ் அழிக்கப்படுவதால்தான் எதிர்க்கிறார்.

இப்போது அரசியலில் சரியான வழிகாட்டியாக ராமதாஸ் விளங்குகிறார். நீங்கள் என்ன செய்தாலும் அது தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமையும் என்றார் வீரப்பன்.

நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தமிழில் பேசி தமிழை வளர்ப்போம்*



தமிழுக்கும் அமுதென்றுபேர்...

பால் தமிழ்ப்பால்... என்று தமிழின் பெருமை பற்றிச் சொல்லி வருகிறோம். இதுவெறும் வாய்ச்சொல்லாக மட்டுமே இருந்து வருகிறது. தமிழர்களாகிய நாம் அதற்கு மரியாதை கொடுத்து வருகிறோமா?
தமிழைப் பேசும்போது, யாழ்ப்பாணதமிழ், கண்டி தமிழ், மட்டகளப்பு தமிழ் திருகோணமலை தமிழ் என்று தமிழைக் கொலை செய்கிறோம். உச்சரிப்புக்களிலும் தெளிவில்லாமல் பேசி வருகிறோம். ல, ள, ழ இவற்றின் உச்சரிப்புக்களை மட்டும் தெளிவாகப் பேசினால் தமிழ் வளர்ந்துவிடாது.

இப்போது ஆங்கிலத்தில் பேசுவதை மிகவும் நாகரிகமாக கொண்டுள் ளார்கள் தமிழ் பேசும் மக்கள். இதற்கு காரணம் தொலைக்காட்சிகளும் தான். அதற்காக தமிழைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆங்கிலத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இலங்கையில் சுத்தத்தமிழில் பேச மறுப்பவர்கள் கோடாணு கோடிப்பேர் உள்ளனர். எத்தனையோ ஆங்கில வார்த்தைகளுக்கு சுத்தத்தமிழ் அர்த்தம் தெரியாமலேயே பேசி காலத்தை ஓட்டிக்கொண்டு வருகின்றனர்.

படிப்பறிவு இல்லாத பாமர மக்கள்கூட பேசும் அளவிற்கு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். டீ, சைக்கிள், பிளைட், ரெயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், நோட்புக், பேஸ்ட் இப்படி ஆயிரம் வார்த்தைகளை ஆங்கிலத்தில்தான் சாதாரணமாக பேசி வருகிறோம். எளிதாகப் புரிவதற்காகவும், புழக்கத்தில் இருப்பதற்காகவும் பேசுகிறோம். தவறில்லைதான். ஆனாலும் இவைகளையெல்லாம் தமிழில் ஏன் பேசக்கூடாது?

இவைகளைத் தமிழில் உச்சரிக்கும்போது கொஞ்சம் தடுமாற்றமும், சிரிப்பும் வரத்தான் செய்யும். இவற்றைத்தமிழில் தமிழர்களாகிய நாம் பேசாமல், ஆங்கிலேயர்களா பேசுவார்கள்? தேநீர், புகைவண்டி நிலையும், குறிப்பேடு, பற்பசை, காவல்நிலையம், பேருந்து நிலையம் இப்படி பேசினால் என்ன? பேசப்பேசப் பழக்கத்திற்கு வந்துவிடும். 10 வருடத்திற்கு முன்பு கம்ப்யூட்டருக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தவர் கள் நிறையபேர். …கணினி- என்று தெரிந்த பிறகு இப்போது சாதாரணமாகப் புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதேபோல் என்ஜினீயர் என்பதற்குப் பொறியாளர் என்றும் அழைத்து வருகிறோம்.

தமிழ் என்பது எல்லோருக்கும் பொது. தமிழ் வார்த்தைகளைக் கொன்று, யாழ்ப்பாண பாஷை, திருகோணமலை பாஷை என்று ஏன் இழுத்துப்பேசவேண்டும்? சுத்தமாகப் பேச வேண்டியதுதானே?
CD, CEL PHONE,DRAFT, PLATFORM, LIFT, EMAIL இப்படி ஆங்கில வார்த்தைகளையே பேசிக்கொண்டு வருகிறோம். இவைகளைக்கெல்லாம் தமிழ் அர்த்தம் என்ன? என்று யோசித்துப் பார்த்தோமோ?

இதன் பொருளைக் கவனியுங்கள்.

CD * குறுந்தகடு

LIFT * மின் தூக்கி

CEL PHONE * கையடக்கத் தொலைபேசி

Email* மின் அஞ்சல்

Platform * நடைமேடை

Draft * வரைவோலை
இப்படியான அர்த்தங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? இவைகளை நடைமுறையில் சொல்லும்போது நகைச்சுவையாகத்தான் தெரியும். பேசப்பேசப்பழகிவிடும். இலங்கை வானொலியில் சுத்தத் தமிழ் வார்த்தைகளைச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். இலங்கை வானொலியைக் கேட்டால் நிறையத் தமிழ் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு„ CDவிற்கும் கடையில், …இங்கு குறுந்தகடு வாடகைக்குக் கிடைக்கும்- என்று எழுதியிருந்தால் எல்லோரும் சிரிக்கத்தான் செய்வார்கள். உண்மைத் தமிழ் அதுதானே? ஏன் சிரிக்கவேண்டும்? டீக்கடையில் போய் …ஒரு தேனீர் கொடுங்கள்-என்று கேட்டால் சிரிப்புத்தான் வரும். இதை நினைத்தால் தமிழ்மொழி எப்படி வளரும்?

ஆங்கிலம் தேவைப்படுகிறது. ஆங்கிலமும் தெரிந்துகொள்ளுங்கள். தமிழின் பொருளையும் தெரிந்து பேசக்கற்றுக் கொள்ளுங்கள். நாம் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவதற்குக்காரணம். …ஆங்கில வழிக்கல்வி- கற்பதாகும். மேலும் மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினால் தான் நம்மை மதிப்பார்கள் என்ற கருத்துக்களைத் தனதாக்கிக் கொள்வதும்தான். தொலைக்காட்சிகள், தமிழை வளர்க்கக் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வேதனையான நிகழ்வு ஒன்று நடந்திருக்கின்றது. அதாவது தமிழ்நாட்டில் தமிழில் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் இருக்கவேண்டும் என்று சில தலைவர்கள் சொன்னார்கள். இதற்கு சில தலைவர்கள் எதிர்ப்பும் செய்தார்கள். ஏன் எதிர்க்கவேண்டும்? தமிழில் வார்த்தைகளுக்காப் பஞ்சம்? நல்ல தமிழ்ப் பெயர்கள் வைக்கலாமே? ஆங்கிலப் பெயர்கள் கொண்ட திரைப்படங்களை எண்ணிப் பாருங்கள். ப்ரெண்ட்ஸ், ஆட்டோ கிராப் என்ற இரண்டு படங்களைத்தவிர வேறு எந்தப்படமும் சரியாக ஓடவில்லை.

ட்ரீம்ஸ், பாய்ஸ், நியூ, ரெட், டபுள்ஸ், யூத், ஸ்டைல், ஸ்டார், லவ்பேர்ட்ஸ், ஐ லவ்யூடா..., பைவ்ஸ்டார், தி 4 Students இப்படி ஆங்கிலப் பெயர் கொண்ட திரைப்படங்கள் தோல்வி களைத்தான் சந்தித்துள்ளன. ஒருபடம் ஓடினால், அதையே பின்பற்றுவது வாடிக்கையாகிவிட்டது. இதுவெல்லாம் ஒரு மூடநம்பிக்கை. கதை நன்றாக இருந்தால் எந்தப்படமும் ஓடும்.

இனிமேல் தமிழுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமானால், தமிழ் அர்த்தங்களைத் தெரிந்து கொண்டு, தமிழில் பேசுவதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள், ஆங்கிலத்தையும் தெரிந்துகொண்டு, தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொளுங்கள்.

தமிழைத் தமிழன்தான் வளர்க்க வேண்டும். …யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனி வேறெங்கும் காணேன்- என்று பறைசாட்டப்பட்டதிற்கேற்ப, நாம் அன்றாட வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும்.

வாழ்க தமிழ்

Vaanampaadi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
தமிழைப் பேசும்போது, யாழ்ப்பாணதமிழ், கண்டி தமிழ், மட்டகளப்பு தமிழ் திருகோணமலை தமிழ் என்று தமிழைக் கொலை செய்கிறோம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதைதானே இலங்கையின் 10/11 ஆண்டு பாடப்புத்தகத்திலும் அறிமுகப்படுத்தி தமிழை கொலை செய்கிறார்கள், இதுதான் தமிழென்று இல்லாமல் பேசுவதெல்லாம் தமிழ் என்று பாடப்புத்தகத்திலும் போட்டால் எப்படி தமிழ் வளரும்?
Reply
#4
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
தமிழைப் பேசும்போது, யாழ்ப்பாணதமிழ், கண்டி தமிழ், மட்டகளப்பு தமிழ் திருகோணமலை தமிழ் என்று தமிழைக் கொலை செய்கிறோம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதைதானே இலங்கையின் 10/11 ஆண்டு பாடப்புத்தகத்திலும் அறிமுகப்படுத்தி தமிழை கொலை செய்கிறார்கள், இதுதான் தமிழென்று இல்லாமல் பேசுவதெல்லாம் தமிழ் என்று பாடப்புத்தகத்திலும் போட்டால் எப்படி தமிழ் வளரும்?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

தஞ்சாவூர் தமிழ், சென்னைத்தமிழ், பாண்டிச்சேரித்தமிழ், மதுரைத்தமிழ் இவற்றையெல்லாம் விட்டுவிட்டீர்களே? ஏன் அந்தக்காலத்திலேயே பாண்டியர் தமிழ், சோழர் தமிழ், சேரர் தமிழ் என்று இருக்கவில்லையா? பாண்டியர் பயன்படுத்திய வட்டெழுத்து சோழருக்கும், சோழர் பயன்படுத்திய கோலெழுத்து பாண்டியருக்கும் புரியாமல் இருந்த காலமும், பின்னர் இவையிரண்டும் தமிழ்ச்சங்களின் பின் ஒன்றாக இணைக்கப்பட்டு உருவான தமிழும், அதன் பின் மதம் பரப்ப வந்த பெஸ்கி பாதிரி தமிழெழுத்துக்கு குத்தும் வைத்து, வசனங்களுக்கு அரைத்தரிப்பும், முழுத்தரிப்பும் போட்டு, காட்டிய தமிழில் தானே நாம் இன்று எழுதுகிறோம்? இது தமிழின் வளர்ச்சி இல்லையா?

சேரநாடு கேரளம் ஆனதையும், சேரநாட்டு தமிழ் 18ம் நூற்றாண்டில் மலையாளம் ஆனதையும் எவராலாவது தடுக்க முடிந்ததா?
தமிழ் வாழும் மொழி. வாழும் மொழி இடத்து வழக்குக்கு மாறுபடுவதும், மற்ற மொழிகளில் இருந்து உள்வாங்கி வளர்வதும் இயற்கை. இதை நீங்களோ நானோ தடுக்க முடியாது.
Reply
#5
ஆகா கிளம்பீட்டாள்டா கிளப்பீட்டாகடா! இதுவும் ஒரு தமிழ் தான். பிரதேசத்திற்க்கு ஏற்றவகையில் மொழி மாறுவது தவறு என்று யாரும் வாதாட முடியாது. இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழ் மட்டக்களப்புத்தமிழ் மலையகத்தமிழ் கொழும்புத்தமிழ் என்று பிரிவுகள் உண்டு . இதில் அனைத்து தமிழழும் தமிழாய்த்தான் கதைக்கப்படுகின்றது. நாங்கள் மாலை நெரம் என்றால் மலையகத்தில் அந்தி என்பார்கள் இதில் எந்த வேறு பாடும் இல்லை மாலை என்பதற்க்குரிய இன்னொரு பதமே அந்தி. எனவே எமக்கிடையே பேசப்படும் தமிழில் வேற்றுமை இருப்பினும் அவை ஏதோ ஒரு வகையில் தூய தமிழாக இருக்கிறது. இந்நதியாவிலும் இப்படியான தமிழ் இருப்பினும் அங்கு கொடிகட்டிப்பறப்பது சினிமாத்தமிழ் அதை விட எம்மவரிடம் அதாவது புகலிடத்தவர்களிடம் இருப்பது தமிழல்ல தங்கலிஸ் அதாவது நான் வசனம் பேசினால் மூன்று வசனம் ஆங்கிலம். இப்படி நாமே இருக்கும் பொது தமிழை பேசி தமிழராய் வாழ்வோம் என்று நாமே கேட்பது கொஞ்சம் அதிகமே!

நிலவன்
_____________
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#6
Nilavan Wrote:எனவே எமக்கிடையே பேசப்படும் தமிழில் வேற்றுமை இருப்பினும் அவை ஏதோ ஒரு வகையில் தூய தமிழாக இருக்கிறது.
நிலவன்
_____________

தூயதமிழின் வரைவிலக்கணம் என்ன?
<ul>
<li> சமஸ்கிரதம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம், டச்சு மற்றும் எம்.ஜீ.ஆர். அறிமுகப்படுத்திய 'லை', பெஸ்கி பாதிரி அறிமுகப்படுத்திய குத்து ஆகிய எதுவுமே கலக்காத தமிழ்

<li> என்ன கலங்தாலும் ஆங்கிலம் கலக்காத தமிழ்

<li> என்ன கலந்தாலும் எங்களுக்கு தெரியாதவை மட்டும் கலந்த தமிழ்
<ul>

இவை எதுவும் தூய தமிழழை வரைவிலக்கணம் செய்யாவிட்டால் எப்படி நாம் தூய தமிழை வரைவிலக்கணம் செய்யலாம்?


அண்மையில் தூயதமிழில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் போத்தல் தமிழல்ல புட்டில் தான் தமிழ் என்றார். ஆனால் புட்டில் போத்தலிலும் பார்க்க ஆங்கில வார்த்தையான bottle க்கு நெருக்கமாக இருக்கிறது. மேலும் bottle பழைய ஆங்கிலலமான botel, பிரெஞ்சு bouteille, பழைய லத்தீன் butticula ஆகியவற்றில் இருந்து வந்ததாக ஆங்கில அகராதிகள் சொல்கின்றன. எங்கே தூய தமிழ்? அலவாங்கு என்கிறோம். அது போர்த்துகல், டச்சு மொழிகளில் இருந்து வந்ததாக பாடசாலையில் கற்று கொடுத்தார்கள். அலுமாரி, மேசை, கதிரை எல்லாம் தமிழ் சொற்கள் அல்லவே? ஆனால் இவற்றை தானே இலங்கையில் நாளும் பயன்படுத்துகிறார்கள்? இவற்றை எப்படி தூய தமிழ் என்று சொல்ல முடியும்?
Reply
#7
தூய தமிழில் பேசவேண்டும் என எண்ணுபவனுக்கு, நாற்காலி என சொல்வதில் கடினம் இருக்காது. நமக்கு புரியாத ஒன்றை புரிகின்றபோது அதனை உள்வாங்குவதே பண்பு. தமிழை வளர்க்கவேண்டும் தூயதமிழில்த்தான் பேசிடல் வேண்டும் என்றால் அது யாராலும் முடியும். நான் தமிழிழை பள்ளியில் பைன்று தேர்ச்சி பெற்றவன் அல்ல. எனது சொந்தமுயற்சியால் பொத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை கொண்டதனால், ஏதோ என்னால் முடிந்தவரையில் தூய தமிழினை பேசுகின்றேன்.

மனம் உண்டானால் இடம் உண்டு.

தூங்குவதை போல நடிப்பவனை, துயில் எழுப்ப முடியாது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#8
இதுக்கு ஒன்று செய்யலாம் அண்ணா மரே நீங்கள் அனைவரம் உங்களுக்கு தெரிந்த தூயதமிழ்ச் சொற்களை களத்தில் அல்லது புதிதாய் ஒரு இணையப்பக்கத்தில் போட்டால் இணையத்தில் தமிழுக்குரியா தூய தமிழை அறியாதவர்கள் இலகுவாய் அறிவார்கள்.. இது பற்றி சிந்தியுங்கள் மற்றவர்கள் பொல நாங்களும் எழுத்திலும் பேச்சிலும் தமிழ்பேசி பிரயோசனமில்லை ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய முற்ப்பட வேண்டும்... தமிழ் பற்றிக்கதைத்ததால் இந்த ஆலோசனையை வழங்கினேன் இது தொடர்பாக நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்??
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#9
நல்ல முயற்சி நிலவன் அவர்களே. நீங்கள் சொல்வதனை போன்று தூய தமிழ் சொற்களை ஒரு பகுதியில் போடுவோம். சிலவேளைகளில் எங்களை அறியாமலே நாங்கள் வேற்று சொற்களையும் தமிழ் என எண்ணும் சொற்களையும் போடுவோம். அவற்றிற்கு தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் முடிந்தால் விளக்கம் தரட்டும். இப்படியே நமது தமிழ் மொழியை தாழ்த்துவதை விடுத்து, ஆக்க பூர்வமான உங்கள் கருத்தினை நான் உள்வாங்கிக் கொள்கின்றேன்.

முடிந்தால் நண்பர் கிருபான்ஸ் அவர்களும் இத்திட்டத்திற்கு உதவிடல் வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

உங்களின் இந்த எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் நிலவன் அவர்களே....

Arrow Idea Idea Idea Idea Idea
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#10
Mathuran Wrote:தூய தமிழில் பேசவேண்டும் என எண்ணுபவனுக்கு, நாற்காலி என சொல்வதில் கடினம் இருக்காது. நமக்கு புரியாத ஒன்றை புரிகின்றபோது அதனை உள்வாங்குவதே பண்பு. தமிழை வளர்க்கவேண்டும் தூயதமிழில்த்தான் பேசிடல் வேண்டும் என்றால் அது யாராலும் முடியும். நான் தமிழிழை பள்ளியில் பைன்று தேர்ச்சி பெற்றவன் அல்ல. எனது சொந்தமுயற்சியால் பொத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை கொண்டதனால், ஏதோ என்னால் முடிந்தவரையில் தூய தமிழினை பேசுகின்றேன்.
மனம் உண்டானால் இடம் உண்டு.
தூங்குவதை போல நடிப்பவனை, துயில் எழுப்ப முடியாது.

மதுரன், தூயதமிழில் பேசவேண்டும் என்ற ஆர்வத்தினால் தாங்கள் தூயதமிழில் பேச முயற்சிக்கிறீர்கள். தங்களை போலவே பலரும் முயற்சிக்கிறார்கள். இவர்கள் இன்று நேற்றல்ல, பல தலைமுறைகளாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அவர்களது முயற்சிகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு ஆங்கிலமும் சமஸ்கிருதமும் வேறு மொழிகளும் தமிழில் பெருமளவு கலந்திருக்கின்றன. இன்னமும் கலந்து வருகின்றன. நீஙகளும் மற்றும் சிலரும் தூய தமிழில் பேசுவதனால் தமிழ் மாற்றமடைவதோ வேற்று மொழிகளில் இருந்து சொற்களை உள்வாங்குவதோ மறைந்து விடப்போவதில்லை. வாழும், வளரும் தமிழ் சிறப்பான வளர்ச்சி பெற அதன் வளர்ச்சி திட்டமிட்ட முறையில் அமைய வேண்டும்.


தமிழ் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டால் தான் அதன் பயன்பாடு கருதி அது வளர்ச்சி பெறும். தமிழில் பொழுதுபோக்கு இலக்கியங்கள் பெருமளவு வருகின்றன. ஆனால் வாழ்க்கையில் பயன்பாட்டு மொழியாக தமிழ்நாட்டில் ஆங்கிலம் இருப்பதால் பொழுதுபோக்கு இலக்கியங்களில் பெருமளவு ஆங்கிலம் கலக்கிறது. தமிழீழத்தில் நிலைமை அப்படியல்ல.

சிறிலங்காவில் <b>"சிங்களம் மட்டும்"</b> சட்டம் 24 மணித்தியாலத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், பண்டாரநாயக்க பாடசாலைகளில் அள்று வரை போதனை மொழியாக இருந்த ஆங்கிலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத்திலும் தமிழிலும் மட்டுமே பாடசாலைக்கல்வி அமையவேண்டும் என ஆணையிட்டார். இதன் விளைவாக பாடசாலையுடன் கல்வியை முடித்துக் கொண்டவர்களுக்கு அங்கு ஆங்கில புலமை மிகவும் குறைவு. ஆகவே தமது அறிவை பெருக்கிக்கொள்ள அவர்கள் தமிழில் தங்கியிருக்கிறார்கள். தமிழ் சிறப்புடன் வளர தமிழீழ பிரதேசம் சிறந்த விளைநிலமாக இருக்கிறது. ஐ.நா. சபையின் தமிழ் வெளியீட்டுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் ஆர்வலர் மணவை முஸ்தபா அவர்கள் புதிய தொழில்நுட்ப சொற்களுக்கு பல அகராதிகளை தயாரித்துள்ளார். அறிவியல் வெளியீடுகளை பெருமளவில் தமிழில் உருவாக்கி தமிழீழத்தில் வெளிவர செய்வது, தமிழ் சிறப்பாக வளர உதவும் ஒரு நல்ல செயற்திட்டமாக அமையும். அங்கே தமிழ் தேவை காரணமாக வளரும். மற்ற நாடுகளில் தமிழில் ஆர்வமுள்ள சிலரே தமிழை பேசியும் எழுதியும் வருவர்.

<b>ஆகவே அறிவியல் வெளியீடுகளை பெருமளவில் தமிழில் வெளிவர செய்ய யாழ் களத்தினர் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.</b>

ஒவ்வொரு அறிவியல் துறைக்கும் ஒருவர் பொறுப்பெடுத்து மாதம் ஒரு ஆக்கமாவது தயாரித்து வழங்க வேண்டும். தமிழீழத்தில் அது அச்சில் வெளிவரவும், சேகரித்து வைக்கப்படவும், மக்கள் மத்தியல் விற்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்படவும் வேண்டும். இதன் மூலம் தமிழ் சிறந்து வாழ நாம் நல்ல பங்களிப்பை செய்ய முடியும்.
Reply
#11
நிச்சயமாக இது நல்ல முயற்ச்சி முழுக்கம் எனும் பத்திரிகையில் தூய தமிழ் எழுத்துக்கள் வருகிறது அவற்றை ஒரு புளோக் செய்து சேர்க்கலாம்..
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
நண்பர் யூட் அவர்களே உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டேன். உங்கள் சிந்தனை திறன் மிக்க கருத்துக்கள் என்போன்றோரை மேலும் சிந்திக்க கருவிகளாக அமைகின்றன. நான் குறிப்பிட வருவது. நீங்கள் மேலே எழுதிய சொற்களில் ஏதவது ஒரு சொல்ல்லினை பிறமொழிச்சொல் என அடையாளம் உங்களால் காணக்கூடியதாக உள்ளதா? அப்படி வேற்று சொல் என உங்களால் அடயாளம் காண முடிந்தால் அந்த சொல்லினை அறியத்தாருங்கள். முற்று முழுதாக அன்றி முடிந்தவரை கூடிய பங்கில் தூய தமிழ் பேசிடல் வேண்டும் என்பதே எனது விருப்பு.

உங்களை போன்ற கூரிய சிந்தனாவாதிகளின் உதவியுடன் தூய தமிழில் பேசிட முயல்வோம்.

சிக்குகள் நிறைந்த நூலின் தொடக்கத்தினை கண்டு பிடிப்பது கடினம். நேரத்தை செலவளித்து முயல்வோமானால் என்றோ ஒருநாள் சிக்குகள் தெளிந்து, தொடக்கத்தை கண்டு பிடிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.

Arrow Idea Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#13
ஜூட் உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.இதனை இப்படியே விட்டுவிடாமல் நீங்கள் முன்நின்று யாழில் இம்முயற்சியை செயலாற்ற ஆவன செய்யவேண்டும்.

தமிழின் சிறப்பு தொன்மையில் இல்லை தொடர்ச்சியிலேயே உள்ளது என்பார்கள் பெரியோர்.பழங்கதைகள் பேசிக்கொண்டிருப்பதிலும் பார்க்க இருப்பதை விருத்தி செய்வதிலும் இனியும் அழியாமற் காப்பதிலும் கவனம் தேவை.அதற்கு சமகாலத்துடன் ஒட்டியதாக மொழியின் பயன்பாடு இருத்தல் அவசியம்

யாழ் களத்தில் தமிழில் எழுதும் விருப்புடன் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதே போன்று தமிழை வாசிக்கும் விருப்புடன் பலர் வருகிறார்கள்.ஆனால் எழுதப்படும் மறுமொழிகளில் கருத்தைப் பார்க்கும் அளவுக்கு நாங்கள் மொழியைப் பார்ப்பதில்லை.நிறைய எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் உண்டு.இதனை உங்களைப் போன்ற ஆர்வலர்கள் திருத்தலாம் எவரும் கோபிக்கப் போவதில்லை.கள உறுப்பினர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு இதில் தேவை.ஒருவர் கருத்தில் எழுத்துப் பிழையோ இலக்கணப் பிழையோ- உதாரணமாக சந்திப் பிழை- இருக்குமிடத்து மற்றவர் சுட்டிக்காட்டலாம்.அரட்டை அடிக்கும் நேரத்தையே நல்லதொரு தமிழ் உரையாடலை மற்றவர்களும் படிக்கும் வகையில் பிரயோசனப்படுத்தலாம்.

கள உறுப்பினர்களின் விருப்பிற்கேற்ப நானும் இதில் இணைந்துகொள்வேன்
\" \"
Reply
#14
Quote:தூயதமிழின் வரைவிலக்கணம் என்ன?



சமஸ்கிரதம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம், டச்சு மற்றும் எம்.ஜீ.ஆர். அறிமுகப்படுத்திய 'லை', பெஸ்கி பாதிரி அறிமுகப்படுத்திய குத்து ஆகிய எதுவுமே கலக்காத தமிழ்


என்ன கலங்தாலும் ஆங்கிலம் கலக்காத தமிழ்


என்ன கலந்தாலும் எங்களுக்கு தெரியாதவை மட்டும் கலந்த தமிழ்

இதைத்தானே நானும் முன்னர் கேட்டேன். எவ்வளவு காலத்திற்கு பின்னோக்கிப் போய் நாம் தமிழைத் திருத்தப் போகிறோம் என்று ஒரு வரையறை போட்டுக் கொண்டு செயற்படுவது நல்லது. அப்போதுதான் உலகத்தமிழ் என்று ஒன்றை உருவாக்கலாம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு வந்தமாதிரி இன்னும் பல பிரதேசத் தமிழ் உருவாகி விடும்.

!
Reply
#15
தமிழுக்கும், தூய தமிழுக்கும் அதிக வித்தியாசம் உண்டு என்பது எனது அபிப்பிராயம். முதலில் தற்போது பாவனையிலுள்ள தமிழை வளர்க்க முயலவேண்டும்.

80களின் பிற்பாடு தோன்றிய தொடர்பாடல் ஊடகங்களின் மூலம், ஆங்கிலம், மற்றும் பிற மொழிகள் தமிழரது பேச்சு மொழியில் அதிகம் கலக்க ஆரம்பித்துள்ளது. எனினும் எழுத்து மொழியில் பிறமொழித் தாக்கம் அதிகம் இல்லையென்றே சொல்லலாம் (அதாவது, ஏற்கனவே கலந்த வடமொழி, போர்த்துக்கீச, டச்சு சொற்களைத் தவிர புதிதாக பிற சொற்கள் பெரிதாகக கலக்கவில்லை).

எழுத்துத் தமிழ் உலகளாவிய ரீதியில் பொதுவாக இருக்க வேண்டும், ஒரு சிறு வட்டத்துக்குள் மாத்திரம் பாவனையில் இருக்கக் கூடாது. உதாரணமாக சுவிஸிலும், ஜேர்மனியிலும், அவுஸ்ரியாவிலும் ஜேர்மன் எழுத்து மொழி பொதுவானது, அல்லாவிடில் நாளாந்த வங்கிக் கருமங்களைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியாது. இதே நேரத்தில், இந்நாடுகளில் உள்ள ஜேர்மன் பேச்சுமொழி இடத்துக்கிடம் வேறுபடுகின்றது.


இது போலவே தமிழிலும் பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் என்று உண்டு.
பேச்சுத்தமிழ் இடத்துக்கிடம் வேறுபாடு உடையது. வடமராட்சியில் பாவனையிலுள்ள சில சொற்கள் தென்மராட்சியிலுள்ளவர்களுக்குப் புரியாது. அதுபோலவே மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கில் வேறுபாடு உடையன.

எனவே பேச்சுத் தமிழை மாற்றுவோம் என்ற கூற்றுடன் என்னால் உடன்பட முடியாது. இயலுமானால் பிற மொழிச் சொற்களின் கலப்பைக் குறைக்க முயலலாம். நான் ஊரில் இருந்த சமயம் ஆங்கிலச் சொற்களின் கலப்பில்லாமல்தான் பேசினேன். எனினும் தற்போது ஒரு வசனம் பேசும்போதே பல ஆங்கிலச் சொற்கள் புகுந்துவிடுகின்றன. இதையிட்டு நான் பெருமை கொள்வதில்லை, மாறாக வெட்கப்படுகின்றேன். இப்படி எனது பேச்சு மாறியதிற்கான காரணம், ஒரு நாளின் பெரும்பகுதி ஆங்கிலத்தில் உரையாடுவதிலும் எழுதுவதிலும் கழிவதுதான் (மூளை தமிழில் சிந்தித்தாலும்!).

தமிழ்ச் சொற்களின் பிரயோகத்தினை அதிகப்படுத்துவதற்கு தமிழை வாசிக்கவும் எழுதவும் வேண்டும். தனியே பேசினால் மட்டும் நிறைவேறாது. ஆங்கிலம் கற்கும்போது கற்றபாடம் இதுதான். அதிக வாசிப்பும், எழுத்தும் ஒருவரை ஒரு மொழியில் பாண்டித்தியம் அடையச் செய்கின்றது.

எழுத்துத் தமிழை நாம் முடிந்தவரை தமிழிலும், இயலுமானால் தூய தமிழிலும் எழுத முயலவேண்டும்.
பலருக்கு யாழ் களம் போன்ற இணையத் தளங்களில் மட்டுமே எழுத சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இங்கு எழுதும்போது, முறையான இலக்கண சுத்தத்துடனும், எழுத்துப் பிழைகளின்றியும் எழுதமுற்பட்டால் தமிழை வளர்க்கமுடியும்.

கடைசியாக ஊரில் நடந்த உண்மைச் சம்பவம்.

எமது ஊரிலுள்ள தமிழ்ப் பண்டிதர் கோயிலுக்கு அர்ச்சனை செய்யவதற்காகப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்று கடையில்லுள்ளவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்.
"ஒரு சீப்பு வாழைப்பழமும், மூன்று வெற்றிலை பாக்கும் தாருங்கள். மிகுதியைச் சிறுசிறு சில்லரையாகத் தாருங்கள்".

கடைக்காரனும் அங்கு நின்றவர்களும், பண்டிதர் போனபின்னர் விழுந்துவிழுந்து சிரித்தனர்.
<b> . .</b>
Reply
#16
Eelavan Wrote:ஜூட் உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.இதனை இப்படியே விட்டுவிடாமல் நீங்கள் முன்நின்று யாழில் இம்முயற்சியை செயலாற்ற ஆவன செய்யவேண்டும்.

தமிழின் சிறப்பு தொன்மையில் இல்லை தொடர்ச்சியிலேயே உள்ளது என்பார்கள் பெரியோர்.பழங்கதைகள் பேசிக்கொண்டிருப்பதிலும் பார்க்க இருப்பதை விருத்தி செய்வதிலும் இனியும் அழியாமற் காப்பதிலும் கவனம் தேவை.அதற்கு சமகாலத்துடன் ஒட்டியதாக மொழியின் பயன்பாடு இருத்தல் அவசியம்

யாழ் களத்தில் தமிழில் எழுதும் விருப்புடன் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதே போன்று தமிழை வாசிக்கும் விருப்புடன் பலர் வருகிறார்கள்.ஆனால் எழுதப்படும் மறுமொழிகளில் கருத்தைப் பார்க்கும் அளவுக்கு நாங்கள் மொழியைப் பார்ப்பதில்லை.நிறைய எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் உண்டு.இதனை உங்களைப் போன்ற ஆர்வலர்கள் திருத்தலாம் எவரும் கோபிக்கப் போவதில்லை.கள உறுப்பினர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு இதில் தேவை.ஒருவர் கருத்தில் எழுத்துப் பிழையோ இலக்கணப் பிழையோ- உதாரணமாக சந்திப் பிழை- இருக்குமிடத்து மற்றவர் சுட்டிக்காட்டலாம்.அரட்டை அடிக்கும் நேரத்தையே நல்லதொரு தமிழ் உரையாடலை மற்றவர்களும் படிக்கும் வகையில் பிரயோசனப்படுத்தலாம்.

கள உறுப்பினர்களின் விருப்பிற்கேற்ப நானும் இதில் இணைந்துகொள்வேன்


வணக்கம்,

நீங்கள் குறிப்பிடுவதனை போன்று. தமிழில் எழுதும் பொழுது இலக்கண பிழையின்றி எழுதிடல் வேண்டும். என்பது மிகவும் நல்ல ஆரோக்கியமான கருத்து. நான் கூட நான் எழுதும் தமிழில் இலக்கணப்பிளை இருப்பதாகவே உணருவேன். ஆனால் அவற்றினை எவ்வாறு சரி செய்வதென எனக்கு புரிவது இல்லை. எழுத்துப்பிழையினை தவிர்த்திட நான் பல முறை முயன்றேன். ஆனால் ஏனோ அவற்றில் இருந்து என்னால் முற்றாக நீங்கிவிட முடியவில்லை. நாங்கள் தமிழினை சிறுவயதில் இருந்து சரியான முறையில் கற்காததன் விளைவினை இன்று அனுபவிக்கின்றோம் என்பது மனவேதனை. தமிழில் புலமை உள்ளவர்கள் யாராயினும் சரி சுட்டி காட்டுங்கள் தவறுகள் எதுவாகினும் திருத்திட முயலுகின்றேன்.

தமிழில் எழுதும் பொழுது.

சொல்: தவறு

இந்த சொல்லினை எழுதும் பொழுது. தவறுக்காக வருந்துகின்றேன் என வருமா? இல்லை தவறிற்காக வருந்துகின்றேன் என வருமா?

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :roll: :roll:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#17
Mathuran Wrote:தமிழில் எழுதும் பொழுது.

சொல்: தவறு

இந்த சொல்லினை எழுதும் பொழுது. தவறுக்காக வருந்துகின்றேன் என வருமா? இல்லை தவறிற்காக வருந்துகின்றேன் என வருமா?

"தவறுக்காக வருந்துகின்றேன்" என்பது தான் சரி என்று எனக்கு தோன்றுகின்றது, அதனை எழுதுக்கள் சேரும் தமிழ் இலக்கண முறையை வைத்து விளக்கலாம் என்று நினைக்கின்றேன். அவை முழுமையாக ஞாபகத்தில் இல்லை, வேறு யாராவது எது சரி என்று விளக்கத்துடன் சொல்வார்கள் .... பொறுத்திருங்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
வணக்கம் யூட்,

உங்கள் கருத்துக்களை பல இடங்களில் கவனித்தேன். அவை தர்க்க ரீதியாக சிந்திக்க வைப்பனவாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
நன்றி மதன். எனது தவறினை திருத்திக்கொண்டேன்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#20
தமிழின் குறையா ? தமிழனின் குறையா ? தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ் மொழி பயன்பாடு மற்றும் வளர்ச்சிக் குறித்து பல்வேறு முக்கியமான கோரிக்கைகள் குறித்து பலரும் பல தளங்களில் விவாதித்து வருகின்றனர். மருத்துவர் இராமதாசு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் அனைவராலும் எற்புடையதல்ல என்றாலும், தமிழ் வழிக் கல்வி மற்றும் தமிழ் ஆட்சி மொழி கோரிக்கைகள் மிக முக்கியமானவை.

எப்பொழுதும் போல, இந்த அழுகிய ஊடகங்கள், இந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, பின்னுக்குத் தள்ளி, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற நியாயமான கோரிக்கைகளின் வீரியத்தை குறைத்து விட்டார்கள்.

இதில் குறிப்பாக கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தப்பிறகு தான், இந்த ஊடகங்கள் தைரியம் கொண்டு தலையங்கம் எழுதுகிறார்கள். இராமதாசு மற்றும் திருமாவளவனை கேலி செய்கிறார்கள்.

இதன் நடுவில் இன்னொருக் கூத்து சட்டமன்றத்தில் அரங்கேறியது. பா.ம.க. சட்டமன்றத் தலைவர் மணீ, மிதி வண்டியின் பாகங்கள் பெயரை தமிழில் கூறுமாறு ஜெயலலிதாவால் கோரப்பட்டு, திணறி நகைப்புக்குள்ளானார். இது தமிழின் குறையா ? கலைச்சொற்களை உருவாக்காமல் இருப்பது தமிழனின் குற்றம். அப்படியே உருவாக்கினாலும் அதனை நடைமுறை சொல் வழக்கில் உபயோகிக்காமல் இருப்பது தமிழனின் குற்றம். ஆனால் இன்று சராசரி தமிழனின் மனதில் ஏற்பட்டிருக்கும் பிம்பம் என்ன ? பிற மொழிக் கலப்பில்லாது தமிழ் பேச முடியாது என்பதே. சட்டமன்றத்தில் முதல்வரின் தலைமயில் நடைப்பெற்ற நிகழ்வும் இதற்கு ஈடான பிம்பத்தையே ஏற்படுத்தியது. (இந்த வலைப்பதிவில் இருக்கும் மொழிப் பிழைகளுக்கு தமிழ் மீது நான் பழிபோடுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பிற மொழிக் கலப்பில்லாது தமிழ் பேச முடியாது என்ற எண்ணனமும்.) தன் தாய் மொழியை தானே இழிவுப்படுத்தும் நிகழ்வை தமிழனால் தான் செய்ய முடியும். பிறகென்ன, சினிமா வந்தேறிகளும் தமிழ் மொழி பற்றி நமக்கு அறிவுறுத்துவார்கள்.

தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்த திமுகவினர் வாயே திறக்கவில்லை. வாயைத் திறக்காமலேயே ஜெயலலிதா சன் தொலைக்காட்சியை சாடினார். வாய்த் திறந்திருந்தால்....

இப்படிப்பட்ட தலைமை தான் நமக்கு.

கோபப்படுவோம். சன் தொலைக்காட்சி பார்க்காமல் இருபோம். ஜெயா தொலைக்காட்சி பார்க்காமல் இருபோம். முடியுமா தமிழனால் ? ஊடகக்காரர்கள் சிரிப்பது தெளிவாகக் கேட்கிறது.



நன்றி....
தோழா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)