Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெள்ளரிக்காயின் மகிமை
#1
வெள்ளரிக்காயின் மகிமை...


வெள்ளரிக்காய் வில்லைகளைக் கண்ணின் மேல் வைத்துக் கொண்டால் கண் எரிச்சல் உடனே போகும். வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால், கரும் புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளப்பாகும். வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, தயிரில் போட்டு அத்துடன் பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து குளிர் சாதன பெட்டியில் வைத்து பிறகு ஜில்லென்று ஒரு கப் சாப்பிட்டால் வெய்யிலால் வரும் தாகம், சோர்வு களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

உதடுகள் பளப்பளக்க...



முகத்திலேயே மிக மிக மென்மையான பகுதி உதடுகள்தான். உதடுகள் உடலின் வெப்பம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி வறண்டு, கறுத்துப் போகும். இரும்புச் சத்து குறைவாக இருப்பதும், உதடுகள் கறுப்பாக இருப்பதற்கு ஒரு காரணம். இதற்கு ஒரே வழி, சுத்தமான பன்னீர் ரோஜாவின் சாறு எடுத்து தினமும் வெண்ணெய் கலந்து உதடுகளில் பூசி வரவும். சில நாட்களில் உதடுகளில் மாற்றம் தெரியும். தண்ணீர் நிறையக் குடிக்கவும். நல்ல தரமான லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தவும்.

கால்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமா...



கால்களுக்கு தினமும் கட்டாயம் ஓய்வு தேவை. மசாஜ் செய்வதன் மூலம் கால்களுக்கு இந்த ஓய்வைக் கொடுக்கலாம். கால்களை அடிக்கடி சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு மென்மையான துண்டால் இதமாகத் துடைத்து வைத்துக் கொள்ளவும். கணுக்காலிலிருந்து பாதம் வரை வாரம் இருமுறை ஆயில் மசாஜ் செய்து கொள்ளவும். முடிந்தால் ஒத்தடம் கொடுக்கவும். வெந்நீர் மூலம் ஒத்தடம் கொடுத்தால் (எண்ணெய் மசாஜ் பிறகு) கால்கள் பளபளப்படையும். எப்போதும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்றுவது சிறப்பு.

முடி கொட்டாமல் இருக்க...



சிலருக்கு முடி அடிக்கடி கொட்டும். இந்த பிரச்சனைக்கு இதோ உடனடி தீர்வு. முடி கொட்டுவதற்கு முக்கியக் காரணம் உடலில் ஏற்படும் மாற்றங்கள். மன அழுத்தம், கவலை, உடல்நலத்தில் பாதிப்புகள், மற்றும் உடல்சூடும் ஒரு காரணமாகும். நிறைய இயற்கை உணவுகள் (காய் கறி, பழ சாலட்டுகள்) சாப்பிடவும். தலை முடிக்கு உயர்தர மூலிகை எண்ணெய் நல்ல பலன் தரும். மோரில் வெந்தயப் பொடி கலந்து சாப்பிட்டால் முடி கொட்டுவது நிற்கும்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)