Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
தமிழ் இளஞ்ஞ இளஞ்ஞிகளின் விளையாட்டு துறை பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதனை இங்கே குறிப்பிட முடியுமா? கால்பந்து விளையாட்டாக இருந்தாலும் சரி மெய்வல்லுனர் விளையாட்டுக்களாக இருந்தாலும் சரி. தமிழர்கள் தங்கள் திறனை தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வது சரியா? உலக அரங்கில் தமிழர்கள் தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்பௌத்தப்போவது எப்போது? முடிந்தால் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், விவாதிக்கலாம்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நல்ல தலைப்பு. விளையாட்டில் ஈழத்தமிழர்கள் கால்பதிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது என்கருத்து. அங்கு புறச்சுழ்நிலை இல்லை. அதைவிட மாணவபருவத்தில் பரீட்சையில் சித்தியெய்த பாடசாலை தனியார் கல்வி நிலையம் என ஆலாய் பறப்பதிலே மாணவர்களுக்கு பொழுது சரி.விளையாட்டுக்கு போதிய ஊக்குவிப்பு கொடுக்கப்படுவதில்லை. விளையாட்டு கல்வியை போதிபபதற்கு ஆசிரியர்கள் இல்லை.
பல்கலை கழக மட்டத்தில்கூட தகுந்த பயிற்றுவிப்பாளர்கள் இல்லை.
யாழ்பல்கலைகழகத்தில் உதைபந்தாடடத்துக்கு ஓரு அநுபவசாலி இருந்ததால் அத்துறையில் தேசியமட்த்தில் ஜெயிப்பர்கள் தற்போது தெரியாது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
தம்பி நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆனால் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றார்கள்.
நான் வாழும் நாட்டில் இருக்கக் கூடிய தேசிய கழகம் ஒன்றில் எனது நண்பன் ஒருவரின் தம்பி நல்ல சிறப்பாக விழையாடி வந்தார். திடீரென தமிழ் விழையாட்டு கழகங்கள் அவரை தங்களின் விளையாட்டு கழகங்களில் சேர்த்தனர். அவரும் இரண்டு கழகங்களிலும் விளையாடி வந்தார். அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். திடீரென இன் நாட்டின் தேசிய விளையாட்டுக்களகங்களில் விளையாடுவதை நிறுத்திவிட்டார். தமிழ் விளையாட்டு களகங்களில் சேர்ந்து அபாரமாக தனது விளையாட்டு திறமைகளை காட்டினார். பின்னாளில் சில தமிழ் இளஞ்ஞர்களுடன் சேர்ந்து நன்றாக விளையாடுகின்றார். என்றாலும் அவ்வப்போது அடி தடி சண்டைகள் என இறங்கிவிடுவார். ஒரு திறமையான விளையாட்டு வீரனின் எதிர்காலத்தினை நினைத்து சலித்துக்கொள்வேன். நமது இளைஞ்ஞர்களின் திறமைகள் இப்படி வீணாகி போய்விடுமோ? தமிழ் கழகங்கள் எல்லாம் ஒரு குறிக்கோள் இன்றி விளையாடினால் போதும் என நேரத்தினை விரயம் பண்ணுவதனைப்போலவே நான் உணருகின்றேன்.
ஆபிரிக்க இனத்தவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எப்படியோ புலம்பெயர் நாட்டு தேசிய அணிகளில் பிரகாசிக்கின்றார்கள். இத்தனை தமிழ் இளஞ்ஞ இளஞிகள் என்னையும் சேர்த்துத்தான் புலம்பெயர் நாடுகளில் இருந்தும், ஏன் ஒரு தமிழ்னால் கூட பிரகாசிக்க முடியவில்லை?
:roll: :roll: :roll:
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஒருவன் முன்னேறினால் ஒருவன் குழிபறிப்பான்! அவ்வளவுதான்!
Posts: 76
Threads: 4
Joined: Mar 2005
Reputation:
0
[quote=மாணவபருவத்தில் பரீட்சையில் சித்தியெய்த பாடசாலை தனியார் கல்வி நிலையம் என ஆலாய் பறப்பதிலே மாணவர்களுக்கு பொழுது சரி.விளையாட்டுக்கு போதிய ஊக்குவிப்பு கொடுக்கப்படுவதில்லை.
[/quote]
எங்கடை சனம்விடுகிற பெரிய பிழை இதுதான் படிப்பில் காடடும் ஆர்வத்தில் ஒரு சிறு அளவுதன்னும் விளையாட்டில் காட்டுவதில் இல்லை இதில் பெற்றோரின் ஊக்கமும் கொஞ்சம் தேவை..நான் பாடசாலைகாலத்தில் ரீயுசனுக்கு போறது என பொய் சொல்லிதான் கிரிகெட் பிரக்ரீஸ்க்கு போறது அப்படி போனபடியால் பாடசாலை அணியில் கப்டன் பதவி கிடைச்சது (ஸ்கந்தவரோதயா )...அதன் பயன் இங்கும் இலங்கைகுரிய கிரிகெட் ரீமில் 5வருடமாக விளையாடிவருகிறேன் (2003 ஆண்டு கப்டன் ஆக இருந்தேள்) முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்ட அணியில் எனக்கு அந்த பதவியை கொடுத்ததை எனது வாழ்நாளில மறக்க முடியாது இதை எனது அப்பருக்கு சொன்னபோது மிகவும் சந்தோஷபட்டார்...இதை ஏன் சொல்கிறேன் என்றால் பிள்ளைகள் விளையாட்டில் பெயர் வாங்கினாலும் பெற்றவர்களுக்கு பெருமைதானே.... .எனவே பெற்றோர் பிள்ளைகளை படி..படி என சொல்வதை போல விளையாட்டிலும் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால் அது அவர்களின் தேகஆரோக்கியத்துக்கும் நல்லது என்பதே எனது கருத்து............
...............
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
ம்ம் இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன். ஈழத்தில் வாழ்கின்ற நம் இளைஞ்ஞர்களுக்கு அன்று இப்படியான விளையாட்டுக்களுக்கு பெற்றோரின் ஊக்கிவிப்பு மிக குறைவாகத்தான் இருந்தன. ஆனால் இன்றய நமது இளைஞ்ஞர்கள் இருண்டு ஓடங்களி பயணிக்க எண்ணி அவர்களின் திறமைகள் சில கழகங்களுக்குள்ளேயே முடக்கப்படுகின்றனவோ என சிந்திக்க எம்மை தூண்டுகின்றது. எனவே இவற்றினை கருத்தில் கொண்டு தமிழீழ விளையாட்டு துறையாவது. அனைத்துலக தமிழ் இளஞ்ஞ இளஞ்ஞிகளை ஒன்றிணைத்து. ஒரு பெறுமதி மிக்க ஆக்கபூர்வமான களம் ஒன்றை எமது உறவுகளுக்காக அமைத்து, தமிழ் இளைஞ்ஞ இளைஞ்ஞிகளின் சிந்தனை வேறு தீய திசைகளில் திரும்பிடாது இருக்க வளி செய்திடல்வேண்டும் என்பதுவே எனது அவா.