Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம்
#1
<img src='http://img49.exs.cx/img49/9460/kingcoco15xf.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img49.exs.cx/img49/6991/kingcoconut9zb.jpg' border='0' alt='user posted image'>

செவ்விளநீர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நிறம் - செவ்விளநீர் நிறம் என்று ஒரு நிறத்தை சுட்டுவோம்
வருத்தத்துக்க குடிப்பது......
கோயிலுக்கு அபிசேகம் செய்ய...........
நாம் குடிக்கிறோமோ இல்லையோ கோயிலுக்கு தப்பம தேடி கொடுப்போம்.

இதன் ஆங்கில பெயர் King Coconut
தாவரவியற் பெயர் <i>Cocos nucifera </i>var, <i>aurantiaca</i>
இது இலங்கைக்கு தனித்துவமானது. ஆதாவது இலங்கையில் மட்டும் சிறப்காக காணப்படுகிறது.

தற்போதய உலகில் செயற்கை குளிர் பாகங்களின் நிறப்பொருட்கள் இரசாயன சேர்க்கைகள் காரணமாக இயற்கை குடிபானங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் சூழ்நிலையில் செவ்விளநீர் பற்றி பார்ப்பது பொருத்தமானது என கருதுகிறேன்.

குரும்பை பிடித்ததிலிருந்து 6-8 மாத பருவமுடைய இளம் பருவம் இளநீர் பருவமாகும.;
இளநீரின் போசணை பெறுமதி

நீர் 95.5%
புரதம் 0.1%
கோழுப்பு 0.1%
கனியுப்புகள் 0.4%
காபோவைதரேற்றுகள் 4.0%

அத்துடன் இளநீரில் காணப்படும் சில சுயாதீன அமினோ அமிலங்களின் அளவு பசுப்பாலில் காணப்படுவதிலும் அதிகமாகும். அத்துடன் விற்றமின் சி விற்றமின் பி கூட்டம் என்பனவும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.

பயன்கள்
இளநீர் இயற்கையாகவே கிருமி தொற்று அற்று இருப்பதால் குளுக்கோசு கரைசலுக்கு பதிலாக நோயாளிகளுக்கு செலுத்த முடியுமாம். அவ்வாறு இரண்டாம் உலக யுத்த காலத்தில் பயன்பட்டதாக கூறப்படுகிறது.
குடலில் காணப்படும் குடற் புழக்கள் வயிற்றோட்டம் என்பவற்றுக்கு நிவாரணமாக
வாந்தியை கட்டுப்படுத்த
அம்மை நோய்களின் வீரியம் அல்லது அதன் தாக்கத்தை குறைக்க
இதில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுவதால் சிறுநீர் போக்கு அதிகரிக்கும்.
சிறுசநீரகத்தில் ஏற்படும் கனியுப்பு நஞ்சாக்கத்தை குறைத்தல்
குழந்தைகள் நோயாளிகளுக்கான ஊட்ட பானமாகும்
முட்டை வெண்கருவுடன் கலந்து செயற்கை முறை சினைப்படுத்தலுக்கான விந்து ஐதாக்கியாக.
தாவர ஓமொன்கள் காணப்படுவதால் இழையவளர்ப்பு ஊடகத்திற்கு
நொதிக்கப்பட்ட இளநீரிலிருந்து நேரா டீ கொகோ எனும் நொதித்தலுக்குட்படுத்தப்பட்ட குடி பானம் தயாரிப்பு.
தகரத்திலடைத்த இளநீர்


இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளநீர் வருடாந்தம் ஏற்றுமதியாகிறது.

எமது புலத்தமிழர்கள் பல்வேறு தொழில் முயற்சியிலும் ஈடுபடுகிறனர். அவர்கள் செவ்விளநீர் ஏற்று மதியிலும் ஈடுபடலாமே.
இங்கு செவ்விளநீர் ஏற்றுமதி என்பது தகரத்திலடைத்ததை அல்ல முழமையான இளநீரையே சுட்டுகிறேன்
ஏற்றுமதி செய்வதற்கு அதற்கான தொழில்நுட்பத்தை பயன் படுத்துவது அத்தியாவசியமானது.
சரியான பருவத்தில் பிடுங்குதல் அல்லது அறுவடை செய்தல்.
சுரியானமுறையில் பரிகரிப்புக்குட்படுத்தல் அதாவது இளநீரின் தோல் நீரிழப்பால் சுருக்கமடையாது இருக்க தகுந்த பதுகாப்பு செய்தல்- மெழுகுப் பூச்சிடல் பொலிதீன் சுருளிடல் போன்றவை.
போதியிடல்.
தகுந்த வெப்பநிலை ஈரப்பதன் என்பவற்றை கொள்கலனில் பேணூதல்.

என்பவை மிகமுக்கியமானவை.

மெழுகு பூச்சு புலத்தில் மரவள்ளி கிழங்கு வேண்டியோருக்கு தெரிந்திருக்கும். இதுகும் அது பொனறது. ஆனால் இளநீருக்கு தனித்துவமாது.

இவற்றிகுரிய தனித்துவமான தகவல்களை அதாவது வெப்பநிலை மெழுகு கலவை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளமுடியாது.

இதைபற்றி இலங்கையில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலை நாடுகளில் செயற்கையில் களைத்து இயற்கையை நாட எம் தாயகத்தில் இயற்கையை புறந்தள்ளி கோலாக்களில் முழ்கிகோண்டிருக்கிறோம். Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
செவ்விளநீரில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவா? சத்தியமாக நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. சிலவேளைகளில் காச்சல் என்றால் ஒரு செவ்விளநீர் வெட்டித்தருவார்கள், ஆனால் அதன் சிறுப்பினை அறிந்திருக்கவில்லை.

தகவலுக்கு நன்றிகள் தம்பி
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
நன்றி குளக்காட்டான் அண்ணை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#4
அருமையான , தெரிந்து கொள்ள வேண்டிய விடயம். அதிலும் இலங்கையில் உள்ளவர்கள் செய்தால் என்ன என்று கேட்டது அருமையான ஒரு யோசனை. நாங்கள் தானே ஆரம்பிக்க வேண்டும்...அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் வசதி இல்லை தானே
[size=16][b].
Reply
#5
முதலாவது படத்தில இருக்கிற அந்தப் பையன் யார் தெரிகிறதா? வேறு யாருமல்ல...குளம் அண்ணா தான்.... :wink: :wink: :wink: (அண்ணா கத்தாதைங்கோ தங்கைமேல..சும்மா ஒரு guess தான்...சில வேளை சரியா வந்தாலும் வரும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
" "
" "

Reply
#6
அருமையான தகவல் , நன்றி குளக்கட்டான்!
Reply
#7
Malalai Wrote:முதலாவது படத்தில இருக்கிற அந்தப் பையன் யார் தெரிகிறதா? வேறு யாருமல்ல...குளம் அண்ணா தான்.... :wink: :wink: :wink: (அண்ணா கத்தாதைங்கோ தங்கைமேல..சும்மா ஒரு guess தான்...சில வேளை சரியா வந்தாலும் வரும்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
குளம் வந்து சொல்லட்டும் அந்தப் பையன் யார் என்று...
Reply
#8
எழுதப்பட்ட கருத்துடன் ஒத்து போகாதால் நீக்கியுள்ளேன் தவறுக்கு வருந்துகிறேன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
அட ஆசைய பாரு..படியுங்கோ முதல்ல... :wink: :wink: :wink: அண்ணா அழகான குழந்கை உங்களுக்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#10
எழுதப்பட்ட கருத்துடன் ஒத்து போகாதால் நீக்கியுள்ளேன் தவறுக்கு வருந்துகிறேன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
அப்படியா சரி சரி...நல்ல வடிவான பிள்ளையா இருக்கு.... :wink:
" "
" "

Reply
#12
நன்றி குழைக்காட்டான்
[b][size=18]
Reply
#13
இப்ப எல்லாம் எங்களுக்கு நாங்களே வெட்டுறமா? இராவணன் அண்ணாக்கு வேலை மிச்சம்.

செவ்விழனி மரம் எத்தனை ஆண்டுகள் வாழும்?
[size=16][b].
Reply
#14
தென்னம் பிள்ளை நட்டு 5 வருடத்தில் பலனை எதிர் பார்கலாம் என்று சொல்லுவார்கள்.
வடிவாக தெரியவில்லை......ஆயினும் 30-40 வருடங்களுக்கு மேல் எதிர் பர்க்கலாம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
எங்கட அப்பாச்சி வீட்டில ஒரு மரம் இருக்கு, எங்கட அப்பாச்சி சொல்லுவா, அது அவ பிறக்கும் முன்னரே இருந்த்தது என்று. அப்படி பார்த்தால் இப்பொழுது அம்மரத்திற்கு 80 வயதிற்கும் அதிகம்...
[size=16][b].
Reply
#16
thamizh.nila Wrote:எங்கட அப்பாச்சி வீட்டில ஒரு மரம் இருக்கு, எங்கட அப்பாச்சி சொல்லுவா, அது அவ பிறக்கும் முன்னரே இருந்த்தது என்று. அப்படி பார்த்தால் இப்பொழுது அம்மரத்திற்கு 80 வயதிற்கும் அதிகம்...
ஆம உண்மை அது தான்........நம்ம விடுகளிலும் அவ்வாறு உண்டு............ஆனால் இலாபகரமான பேருந்தோட்டத்தில் அவ்வாறு 80 வருடமுடைய மரங்களை விட்டு வைக்க மாட்டார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#17
ஆம் அவ் மரங்கள் சோடைபத்திப்போம் என்று சொல்வார்கள்... எங்கள் வீட்டில் செவ்விளநீர் இருக்கு எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்று தெரியா. ஆனால் எல்லாம் சின்ன மரங்கள் அதிகம் உயரமாக வளராது ஆனாலும் குழைச்சத்தகத்தால் பிடுங்கினால் கீழை விழுந்து வெடித்து இளநீர் எல்லாம் ஓடிடும் Cry
[b][size=18]
Reply
#18
குழைசத்தகத்தால் பிடுங்கி கொண்டு ஏந்த தெரியாத.......:mrgreen: தலை பிளந்தால் நாம் பொறுப்பல்ல.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
அது தான் பேந்து பேந்து செய்யுறனாங்கள் என்ன யாரும் உதவி செய்யாயினம் நாம தான் பிடுங்கணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)