Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஊறுகாய் செய்யும் முறை சொல்லுறன். நாங்க செய்கிறது தான் தப்பா றைட்டா தெரியாது.
தேவையான பொருட்கள்
தேசிக்காய் -- 10, 20
மிளகாய்த்தூள் - அளவாய்
கொஞ்சம் சரக்கு தூள்
உப்பு
நல்லெண்ணை
வேறை என்ன வாசனைத்திரவியங்கள் போடவிரும்பிறியளோ அதை சரக்கு தூளுடன் அரையுங்கள்
முதல் தேசிக்காயை நாளாக பிளந்து அதனுள் நன்றாக உப்பு தடவி வெயிலில் காய வையுங்கள். வெயில் இங்கு இல்லை என்கிறீர்களா அவனில் நன்றாய் வைத்து அவியவிடுங்கள். நன்றாய் காய்ந்து உப்பு ஊறிய பின் அதை எடுத்து (நன்றாய் காயாவிட்டால் பூஞ்சனம் பிடிச்சிடும்) சரக்கு மற்றும் மிளகாய் எடுத்து நீங்கள் காயவைத்த அளவு தேசிக்காயை பிழிந்து சாற்றை எடுத்து அதனுள் கரையுங்கள். கரைத்துப்போட்டு. காயவைத்த தேசிக்காயை எடுத்து அதனுள் கொட்டி நன்றாய் கலக்குங்கள். அதனுள் உப்பையும் தேவையான அளவு (ஏற்கனவே தேசிக்காயில் உப்பு இருப்பதால் பாத்து அளவாய்) பின்பு கொஞ்ச மிளகாய் எழுத்து அதனை தனியாக அருவள் நொருவளாய் அரையுங்கள். கொஞ்ச நல்லெண்ணையையும் கொதிக்க வைத்து அதையும் ஊற்றி நன்றாய் கிளறி. மசிச்சு சூடு எல்லாம் ஆறியபின்னர். அதை போத்தல் அல்லது கூஜாவில் போட்டு நன்றாய் மூடிவிடுங்கள். அதன் பின் ஒரு சில வாரங்களிற்கு திறந்து பார்க்காதீர்கள். நன்றாய் ஊறி ஊறுகாய் ஆனபின் எடுத்து சரப்பிடுங்கள். அதிகமாய் செய்யாதீங்க அப்புறம் சக்குப்பிடிச்சிடும். நம்ம ரெசபியாச்சா அது தான்.
இன்னொரு முறை என்னவென்றால் தேசிக்காயை வெட்டி கொஞ்ச தண்ணீர் விட்டு நன்றாய் அவிய விடுங்கள் அவிந்த பின்னர் வழமையான முறையில் செய்யுங்கள். செய்து பாத்துவிட்டு ஒரு பாட்டில் நமக்கும் அப்படியே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
இப்படியான செய்முறை அறியலை........
நம்ம முறை.....
தேசிகாயை நாலா பிளந்து உப்பு மஞ்சள் தூள் கலவை யை அந்த பிளவினுள் அடைந்து காற்றிறுக்கமான போத்hலில் போட்டு மூடி 2கிழமை அவியவிட வேண்டும் . பின் வெயிலில் அல்லது அவனில் காயவைத்து...அதே ஊறவிட்ட போத்தலில் மீண்டும் போட்டு தேசிபுளி காய்ந்த தேசிக்காய் மட்டத்துக்கு விட்டு மூடி 2 கிழமை வைத்து விட்டு சாப்பிடலாம்.
[size=18]ஆனால் உப்பு பூசி உடனை காயவைக்கிறேல்ல எண்டது உறுதி
விரும்பினால் மிளகாய் கடுகு தூள் போன்றவை காயவைத்து புளி விடும் போது சேர்க்கலாம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
உறுகாயுக்கும் உடன உப்பு தடவி காயவிடுறேல்ல.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அக்கா இது நல்லாய் இல்லை இங்கையும் ஒரு போத்தல் அனுப்புங்கோ.. தம்பி சொல்ல மறந்திட்ன் மஞ்சள் தூளும் போடனும்.. ஆனரல் நாங்கள் இப்படித்தான் செய்கிறனாங்க.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
:?: :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
நன்றி. நானும் குளம் அண்ணா சொல்லிய முறை படி தான் செய்வதை பார்த்து இருக்கிறே. மிளகாய் தூள் சேர்ப்பது இந்திய முறை என நினைத்தேன்
[size=16][b].
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
உங்களுக்கு யார் தாறதெண்டது.. ஆ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>வெஜிடபிள் ஊறுகாய் </b>
கேரட் 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
பச்சை மிளகாய் 4
சௌசௌ 1
பெங்களூர் தக்காளி 100 கிராம்
மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 100 கிராம்
கடுகு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காய்களை நன்றாகக் கழுவி துடைத்து சிறிது சிறிதாய் வெட்டிக்கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகை பொரித்து எடுக்கவும்.
கடுகு பொரிந்தவுடன் வெட்டிய காய்களை எண்ணெய்யில் போட்டு நன்றாக வதக்கவும்.
பாதி வதங்கிய பிறகு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காய பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்றாக வதங்கியவுடன் எண்ணெய் தளர்ந்துவர ஆரம்பிக்கும்.
காய்கள் வெந்தவுடன் ஆறவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
<b>தக்காளி ஊறுகாய் </b>
தக்காளி 10
பெரிய வெங்காயம் 1
மிளகாய்வற்றல் 4
மல்லி 2 தேக்கரண்டி
பூண்டு 10 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 3 தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
பூண்டை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் தக்காளியையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் மற்றும் இஞ்சியை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் மற்றும் மல்லி விதைகளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
சற்று வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி பாதி வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இறக்கிவிடவும்.
<b>காரட் ஊறுகாய்</b>
காரட் 150 கிராம்
பச்சை மிளகாய் 10
எலுமிச்சை இரண்டு
கடுகு அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
காரட்டை நன்கு சுத்தம் செய்து துருவல் தட்டில் தேய்த்து பூ பூவாகத் துருவிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழங்களை பிழிந்து சாறு எடுத்து மிளகாய், காரட் துருவலுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
கடுகு, பெருங்காயத்தை தாளித்துக் கொட்டி கிளறி வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஊறியபின் பயன்படுத்த சுவையாய் இருக்கும்.
<b>இஞ்சி மிளகாய் ஊறுகாய்</b>
பச்சை மிளகாய் 1/4 கிலோ
எலுமிச்சை பழம் 10
இஞ்சி 100 கிராம்
உப்பு 5 டீஸ்பூன்
மஞ்சள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
கடுகுத்தூள் 4 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ளவும்.
இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிடவும்.
ஒரு நாள் கழித்து உணவுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் ருசியாய் இருக்கும்.
குறிப்பு: நான் இப்ப சமையலில் சரியான பிசி¡¸ þÕ츢Èý! தயவுசெய்து இது சம்மந்தமாக கேள்விகள் கேட்கவேண்டாம்! செய்து பாருங்கள் நல்ல இருந்தால் சாப்பிடுங்கள், சரிவரவில்லையென்றால் மனசுக்குள் திட்டுங்கள்!
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
ஏன் உங்களுக்கு நேரில திட்டினா அழுவுங்களா? சரி இந்த ஊறுகாய்களை எத்தனை நாட்களுக்கு பாவிக்கலாம்?
[size=16][b].