Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் காதலனே!!
#1
<b>என் காதலனே!!</b>
கவிதை வரைந்தேன் உண்மை மூடி
காதல் கொண்டேன் கண்ணை மூடி
படிக்கச் சென்றேன் பையை மூடி
பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று

<b>என் காதலனே!!</b>

உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால்
உன்மீது பாசத்தைப் பொழிந்தேன்
உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால்
உன்மீது ஆதரவாக நடந்தேன்

<b>என் காதலனே!! </b>[/b]

காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக்
காண வரும் போது உன் நரையை மறைத்தாய்
கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக்
காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய்

<b>என் காதலனே!!</b>

காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய்
காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய்
காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய்
காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய்

<b>என் காதலனே!!</b>

நீ உள்ளென்று வைத்து வெளியொன்று சொல்வாயென்று நானறியேன்
நீ உண்மையை மறைத்து பொய்யை சொல்வாயென்று நானறியேன்
நீ அன்பு இல்லாமல் என் பணத்திற்காக காதலிப்பாயென்று நானறியேன்
நீ என் அனுமதியில்லாமல் கற்பைப் பறிப்பாயென்று நானறியேன்

<b>என் காதலனே!!</b>

என்னிடம் சுளை சுளையாய் பணம் வேண்டி பறந்து சென்றாய்
உன் கைத்தொலைபேசிக்கு அடிக்கடடிக்க பெண்ணொருத்தி பதில் தந்தால்
காதலனே அப்பாவிப் பெண்ணை என்னைப் போல ஏமாற்றாதே
காதலனே நீ ஏமாற்றினால் கூண்டில் நிற்பாயென உறுதிசெய்கின்றேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
_/\_Only God Can Judge Me_/\_
Reply
#2
எனக்கு கவிதையெழுதிப் பழக்கமில்லை
இது எனது சிறு முயற்சி தான்...

யாரையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லையென
தாழ்மையுடன் அறியத்தருகிறேன்.......
_/\_Only God Can Judge Me_/\_
Reply
#3
கவிதை எல்லாரும் பழகி கொண்டு எழுதுறதில்லை தினவா. எல்லாம் முயற்சி செய்துதான் எழுதுறது. இன்னும் முயற்சி செய்தால் நன்றாக எழுதலாம். நீங்கள் சொல்ல வந்த விடயம் நன்று அதை கொஞ்சம் வசனங்களை மாற்றி சொன்னீர்கள் என்றால் இன்னும் அழகாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#4
காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக்
காண வரும் போது உன் நரையை மறைத்தாய்
கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக்
காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய்

அழகான வரிகள் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)