Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ஊடக பங்களிப்பு
#1
புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பும் ஊடகங்களுக்கான சமூகத்தின் பங்களிப்பும் என்ற விடயமாக சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்று ஒட்டுமொத்தமான தமிழ் ஊடகங்களும் ( தமிழீழ புலம்பெயர் ஊடகங்களை மட்டும் கருதுகிறேன்) தமிழ் மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவுமே செயற்பட்டு கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் தமிழர்களின் எதிர்கால சந்ததி தமிழ் மறந்த ஒரு நிலை ஏற்பட கூடாதென்பதற்காக தமிழ்ச் சமூகம் சிந்தித்து செயற்படவேண்டும். இதற்காக செய்யக்கூடியவை என்ன? தமிழ் ஊடகங்களாக இன்று இயங்கி வரும் முக்கியமாக தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது முக்கியமானதாகும். தனியே வியாபார நோக்கத்துடன் செயற்படுகின்ற தொலைக்காட்சிகளாக தமிழீழ சார்பு தொலைக்காட்சிகள் இல்லை என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எனவே தொலைக்காட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது பிள்ளைகளை தமிழ் சமூகத்தின் பிள்ளைகளாக, தமிழ் இனம் என்ற உணர்வுடன் வளருவார்கள். தமது பிள்ளைகள் ஒழுக்கநெறியுடன் வாழவேண்டும் என கருதும் பெற்றோர் தாம் தமிழ் சமூகத்தின் அங்கம் என்பதையும் அதனை ஊட்டுவதன் மூலமும் நமது சமூகத்துக்கு ஏற்ற பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலமும் தமது நாட்டின் நிகழ்வுகளை செய்திகள் மூலம் அறிந்து கொள்வதன் மூலமும் தமிழர்களாக வாழுவார்கள்.

தொலைக்காட்சிகள் பார்ப்பது கூடாது என்று கூறிய காலம் போய் இப்போது இவன் என்ன தொலைக்காட்சிகளை பார்ப்பதை ஊக்குவிக்கிறானா எனவும் சிலர் எண்ணக்கூடும். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

எனவே நமது புலம்பெயர் தமிழர்கள் சமூகத்துக்கு பங்களிப்பு என்ற ரீதியில் தொலைக்காட்சிகளையோ வானொலிகளையோ பத்திரிகைகளையோ ஊக்குவிக்கும் முகமாக அவற்றுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்.
Reply
#2
உங்கள் உங்கள் நாடுகளில் இது பற்றி என்ன செய்யலாம் செய்யகூடாது என்பதை குறிப்பிடுங்கள்.

உங்கள்
தமிழ்வாணன்.


.
Reply
#3
என்ன நீங்கள் புலம்பெயர்நாட்டில்தானா இருக்கிறீர்கள்? அல்லது இந்த
தொ(ல்)லைக்காட்சிகளை நீங்கள் பார்வையிடுவதில்லையா? இந்த தொ(ல்)லைக்காட்சிகளில் தமிழுக்குஎன்ன செய்கின்றார்கள். தென்னிந்திய கீழ்த்தர நிகழ்ச்சிகளைத்தான் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்கின்றன. அவை பெரும்பாலும் திரைப்படங்களில் இடம்பெறும்

பாடல்கள் , நகைச்சுவை? சிலகாட்சிகளைத்தொகுத்து ஒரு நிகழ்ச்சி இப்படி நேரம் கடத்தப்படுகிறது. நான் இரசித்த சண்டைக்காட்சி எனக்கு பிடித்த டைட்டில் இந்த நிகழ்ச்சிகள்தான் இன்னுமும் ஆரம்பிக்கப்படவில்லை.(விரைவில் ஆரம்பிக்கப்படலாம்)

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் ஆங்கிலத்திடையே கொஞ்சம் தமிழை பேசுகிறார்கள்

தமிழை யாராலும் அழிக்கமுடியாது பெரும்பாலும் பெற்றோர்கள் அதில் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால் இந்த தொ(ல்)லைக்காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தால் தமிழ் அழிந்துவிடும் இதுதான் யதார்த்தம். இங்கு நடைபெறும் தமிழ்ப்பாடசாலைகள் தமிழ் அழிந்துவிடாது என்பதற்கு நான்றாகிறது.
தொ(ல்)லைக்காட்சிகள் தமிழை வளர்ப்பதற்கு பதில் அழிக்கிறது என்பது கசப்பான உண்மை
இவர்கள் சினிமா நிகழ்ச்சிகள் மூலம் தமிழை வளர்க்கின்றார்கள் என்றால் நாம் பிள்ளைகளுக்கு திரைப்பட ஒளிப்பேழைகளை வாங்கிகொடுத்தால் தமிழ் வளர்ந்துவிடும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
வெக்டோன் டிவி ஒளிபரப்பும் வார்த்தை ஜாலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர்கள், இளையவர்கள் அனைவது ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசுகின்றார்கள். போட்டியின் முக்கிய விதிமுறை ஆங்கிலம் கலக்க கூடாது என்பது. அதில் பல இளையோர் பெற்றோர் உதவியுடன் தனி தமிழில் பேசி பரிசு பெறுவதை கவனித்துள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
ஆனால் மதன் மற்றைய நிகழ்ச்சிகள் நடத்தும்போது கவனித்தீர்களா? அவர்கள் ஆங்கிலத்திடையே தமிழை பேசுகிறார்கள். சினிமாவையும் இந்திய சின்னத்திகைளையும் நம்பினால் ஆங்கிலத்தொலைக்காட்சிதான் நடத்தமுடியும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
நேற்று பார்க்கவில்லை. எந்த நிகழ்ச்சி அது?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
viyasan Wrote:என்ன நீங்கள் புலம்பெயர்நாட்டில்தானா இருக்கிறீர்கள்? அல்லது இந்த
தொ(ல்)லைக்காட்சிகளை நீங்கள் பார்வையிடுவதில்லையா? இந்த தொ(ல்)லைக்காட்சிகளில் தமிழுக்குஎன்ன செய்கின்றார்கள். தென்னிந்திய கீழ்த்தர நிகழ்ச்சிகளைத்தான் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்கின்றன. அவை பெரும்பாலும் திரைப்படங்களில் இடம்பெறும்

வெளிநாடுகளில் வாழும் இளையோர்கள் தமிழில் பேசி பழக கூடிய நிலைமை பெரும்பாலானோருக்கு அவர்களின் வீடுகளில் தான் கிடைக்கும். அதுவும் நேரம் இருக்குமா? எல்லோருக்கும்.

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் அவர்கள் தமிழை மறக்காமல் இருக்க ஒரு ஊடகம் தேவை. தமிழர் என்ற உணர்வு வர ஓரு ஊடகம் தேவை.

அவற்றின் மூலம் தமிழ் அறிவதை விட வேறு என்ன வழி இருக்கிறது.

நானோ நீங்களோ 100 வீத தமிழை எதிர்பார்க்காமல் 70வீதத்தையாவது தமிழீழம் அடையும்வரை காப்பாற்றலாம் அல்லவா?
Reply
#8
தமிழ்வாணன் மதன் உங்கள் வாதங்கள் சரியானவையே. தற்போது புலத்தில் இயங்கும் ஊடகங்கள் முடிந்தவரை நன்றாகவே செய்கின்றன. இங்கு எந்த ஊடகம் 100 விதம் தமிழ் சேவை செய்கின்றது??? உண்மையில் தேசியம் பேசுகின்ற ஊடகங்களை விட மற்றவை எவ்வளவோ மேல்

. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#9
வசம்பு இலண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொல்லைக்காட்சிகளில் பாடல் கேட்க வருபவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார்கள். சின்னத்திரை தொடர்கள் பெரும்பாலும் இந்தியமொழியை திணிக்கின்றன. சமீபத்தில் ஆரம்பமான ஒருதொடர்(செல்வி)யில் இலங்கைத்தமிழ் கொச்சைப்படுத்தப்படுகிறது. தமிழ் பேசுவதற்கு தொலைக்காட்சிகள் ஒன்றும் செய்யவில்லை. பெற்றோர்கள் சிரமத்திடையே தமிழ்ப்பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச்செல்கின்றார்கள். நீங்கள் இலண்டனை மனதில்வைத்து கருத்துக்களை வைக்கின்றீர்கள் போலும்.
சென்ற ஆடிமாதம் இலண்டனிலிருந்து ஊருக்குச்சென்ற ஒரு தகப்பன் தன்னுடைய மகன் உறவினர்களுடன் பேசமுடியாமல் அங்குவைத்து ஒரு மாதத்துக்குள் தமிழ் கற்றுக்கொடுக்க (?) முயன்ற சம்பவம் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
நீங்கள் தமிழை வீட்டில் பேசி தமிழ் பாடசாலைக்கு அனுப்பி வந்தால் பிள்ளை தமிழை கற்றுக்கொள்ளும். அதைவிடுத்து தமிழ் கற்றால் என்னுடைய பிள்ளை வசிக்கும் நாட்டுமொழியை கற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு தப்பான எண்ணத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொண்டு தமிழ்பேச தடைபோடுகிறீர்கள். அப்படியானவர்கள் தமிழ் தொலைக்காட்சி பார்வையிடுவதற்கு பிள்ளைகளை அனுமதிப்பார்களா?
இங்குள் பாடசாலைகளில் இரண்டுக்கு மேற்பட்டமொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். மற்றையது அவர்கள்(ஆசிரியர்கள்) சொல்கின்றார்கள் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தாய்மொழியை கற்றுக்கொடுங்கள் நாங்கள் எங்கள்மொழியை கற்றுக்கொடுக்கின்றோம் என்று.
தொலைக்காட்சியைவிட அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் மொழிவளர்ச்சிக்கு பெரிதும் குழந்தைகளுக்கு உதவும். நாங்கள் தொலைக்காட்சிகளை நம்பியிருந்தால்
கவுண்டமணி செந்தில் உச்சத்திலிருந்த நேரத்தில் பல குழந்தைகள் சொறிநாய்தலையா பனங்கொட்டைத்தலையா என்ற வார்த்தைகளை பேசி தமிழை வளர்த்ததுபோன்ற நிலைதான் வரும்.
இந்திய சின்னத்திரைகளில் வரும் வார்த்தைகள் பலவற்றுக்கு தமிழ் அகராதியில் அர்த்தங்களை தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் உருவாகும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#10
நன்றி வியாசன்

நான் எந்த நாட்டையோ அல்லது மக்களையோ உதாரணமாக வைத்து எழுதவில்லை. இங்கு நாமும் ஒரு அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பின் மூலமாக தமிழ் நடன சங்கீத வகுப்புக்கள் பல வருடங்களாக நடாத்திக் கொண்டுதானிருக்கின்றோம். பெற்றோர்களின் மனநிலை பிள்ளைகளின் மனநிலை என்பவற்றை நன்றாக புரிந்தே வைத்துள்ளேன். ஒரு மொழியை எவ்வளவுதான் நன்கு கற்றாலும் அதை பயிற்ச்சியினால்த் தான் நன்கு பதிய வைக்க முடியும். அப்பயிற்ச்சியை முழுக்க முழுக்க பெற்றோர்கள் கொடுப்பதென்பது புலம்பெயர் வாழ்வில் மிகவும் கடினம். அதே போல் எந்த ஒரு மொழியும் கற்பதொன்று பேசுவதொன்று. நீங்கள் இங்கு கருத்தெழுதும்போது சாதாரணமாக கதைப்பது போலவா கருத்தெழுதுகின்றீர்கள்?? இல்லையே. இதில் பெற்றோர்களின் பங்களிப்பை ஓரளவாவது ஊடகங்கள் நிவர்த்தி செய்கின்றன என்பதே என் கருத்து. இலணடனிலிருந்து ஊருக்கு போன பெற்றோரின் நிலையை எழுதியிருந்தீர்கள். ஆனால் இலண்டனிலுள்ள பல பிள்ளைகள் இப்போ தமிழ் கற்றுக் கொள்வதே ஊடகங்களில் பங்கு பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால்த்தான். நீங்கள் சில நிகழ்ச்சிகளில் தரக்குறைவான தமிழ் பேசுவதாக குறிப்பிட்டீர்கள். அது உண்மை. அதனை சிறுவயதுப் பிள்ளைகள் கையாள்வதாகவும் குறிப்பிட்டீர்கள். ஆனால் அப்பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அது தவறென தெரீந்து கொள்கின்றார்கள் தானே. இப்படியான நிகழ்ச்சிகளை பெரும்பாலும் தவிர்த்துத்தானே வெக்டோன் தொலைக்காட்சி நடக்கின்றது. அத்தொலைக்காட்சியும் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டுமாயின் எத்தனை பேர் முன்வருவார்கள்???????? அன்னப்பட்சி போல் நல்லதை எடுத்துக் கொண்டு தீயதை விட்டு விடுவோம்.



:?: Idea :?: Idea
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)