Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நட்சத்திரம்
#1
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற நட்சத்திரம்
<img src='http://www.puthumai.com/images/stories/commen/paul09.jpg' border='0' alt='user posted image'>
காலதேவன் சாதி. மதம் பார்ப்பதில்லை. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசத்தை நோக்குவதில்லை. உயர்ந்தவன் தாழந்தவன் என்று தரம் பிரிப்பதில்லை.
அவன் கணக்கு முடிந்து விட்டால் மரணம் மனிதனைத் தேடி வந்துவிடுகின்றது.
வளர்ந்து விட்ட விஞ்ஞானத்தால் சாவைத் தள்ளிப்போட முடிகிறதே ஒழிய. சாவைத் தடுக்க முடிவதில்லை. இங்கேதான் இறைவன் ஒருவன் மேலே இருக்கின்றான். அங்கிருந்து கொண்டு எம்மை ஆட்டுவிக்கின்றான் என்ற ஞானோதயம் மனிதனுக்குத் தெரிய வருகின்றது. என் சக்தியையும் மீறிய ஒருவர் இருக்கிறார் என்பது அவனுக்குப் புரிகின்றது. புதிய புதிய கண்டுபிடிப்புகளால் இறுமாப்புடன் நிற்கும் விஞ்ஞானத்திற்கும் தன்னை மீறிய சக்தியொன்று இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.

26 வருடங்கள் சிம்மாசனத்தில் இருந்தவர் உலகெங்கும் வாழும் 110 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கும் ஓர் ஆன்மீகத் தலைவராக வாழும் கடவுளாகத் திகழ்ந்த பரிசுத்த பாப்பரசர் இறைவனடி சேர்ந்திருக்கின்றார்.
மரணம் அவரையும் விட்டு வைக்கவில்லை.
பிறந்தவரெல்லாம் இறந்தேயாக வேண்டும் என்ற வாழ்வின் நியதியில் ஓர் ஒப்பற்ற ஆன்;மீகத் தலைவரையும் காலதேவன் கவர்ந்து கொண்டு சென்றிருக்கின்றான்.
455 ஆண்டுகால இத்தாலியர்களின் இராஜயத்தை கவிழ்த்து ஓர் இரும்புத்திரை நாட்டில் இருந்து கொண்டு ஒருவர் இந்த இராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஏறி உட்கார்வது என்பது ஒரு சாதாரண விடயமல்ல.

<img src='http://www.puthumai.com/images/stories/commen/paul08.jpg' border='0' alt='user posted image'>
வத்திக்கான் நகரில் 265வது பாப்பரசராக அரியாசனம் ஏறிய இந்த நிகரற்ற ஆன்மிகத் தலைவர் பற்றிய கடந்த காலங்களை இங்கு நினைவு கூர்வது அவசியமாகின்றது.
Karol Jozef Wojtyla என்பதுதான் இவர் இயற்பெயர். இரும்புத்திரை நாடாக அப்பொழுது திகழந்த போலந்து நாட்டில் 1920ம் ஆண்டு மே மாதம் 18ந்திகதிதான் இவர் பிறந்தார். இவருடைய தந்தை ஓர் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியிருக்கின்றார். சிறு வயதிலேயே காலதேவன் இவர் குடும்பத்தில் பலரின் கணக்கை முடித்திருக்கின்றான்.. தந்தை தாய் சகோதரன் என்று மூவரையும் இவர் சிறுவயதிலேயே இழந்திருக்கின்றார். கருவில் மரித்த குழந்தையொன்றை பிரசவித்து விட்டு தாய் மரணத்தை அணைத்தபோது இவருக்கு வயது ஒன்பது. பன்னிரண்டு வயதில் அன்புச் சகோதரனையும் இழந்திருக்கின்றார்.

இழப்புகளின் தாக்கத்திலும் ஒரு நாடக ஆசிரியராக நடிகனாக விளையாட்டு வீரனாக பல்மொழி வல்லுனராக இவர் பிரகாசித்தது பலரையும் வியக்க வைத்தது. இளம் வயதிலேயே 11 மொழிகளைச் சரளமாகப் பேசும் திறன் இவரிடம் இருந்திருக்கின்றது.

திறமைகள் பல இருந்தும் அந்தத் திறமைகளைத் தந்த இறைவன்பால் இவருக்கு நாட்டம் அதிகமாக இருந்திருக்கி;னறது. இறை சேவையில் இருந்த அதீத ஈடுபாடு 1946இல் குருத்துவப் பட்டம் பெறுமளவிற்கு உயர்த்தியது. போலந்தின் இரு பல்கலைக்கழங்களில் ஆன்மீக விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்புகளும் இவரைத் தேடிவந்தன.

1963ம் ஆண்டின் இறுதியில் இவரின் வாழ்வு இன்னுமொரு உன்னத நிலையை எட்டிப் பிடித்தது. Archbishop என்ற ஆன்மீகப் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
இங்கே இந்தப் பதவிகள் பற்றிய ஒரு சிறு விளக்கம் தருவது ஒரு சிலருக்கு ஏற்படும் மயக்க நிலையைத் தவிர்க்க உதவியாக இருக்கலாம்.

ஒரு மதகுருவாக தன் ஆன்மீகப் பணியை ஆரம்பிக்கும் ஒரு கத்தோலிக்க குருவானவர் பல நிலைகளைத் தாண்டி இறுதியில் பாப்பரசராக வரும் வாய்ப்பைப் பெற முடிகின்றது. பாப்பரசர் என்ற நிலை பல கோடிகளில் ஒருவருக்கு என்ற நிலையாக இருந்தாலும் மற்றைய முக்கிய நிலைகளை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு பலருக்கு இருக்கின்றது.

திருமணத்தைத் துறந்து குருத்துவத்தை ஏற்கும் ஒருவர் தனது அப்பழுக்க சேவையினால் பல படிகளைத் தாண்டி விடுகின்றார். குருவானவர் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய முக்கிய நிலைகளில் ஒன்றுதான் Bishop என்பது. இதையும் கடந்து இவர் தன் திறமையால் பலரையும் ஈர்க்க ஆரம்பிக்கும்போது Archbishop என்ற நிலைக்கு உயருகின்றார். இதையடுத்து கிடைக்கும் நிலைதான் Cardina என்று அழைக்கப்படுகின்றது. உரோம கத்தோலிக்க ஆலயத்தில் பாப்பரசருக்கு அடுத்த நிலையில் இருப்பது இவர்கள்தான்.இவர்கள் 80 வயதுக்கு உடப்ட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது இங்குள்ள ஒரு விதிமுறையாக இருக்கின்றது.

கார்டினல் கல்லூரி என்று ஒரு கல்லூரி இயங்குகின்றது. இதில் 183 பேர் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இதில் 117 பேருக்கு இந்தத் தடவை புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் பணி காத்திருக்கின்றது. பாப்பரசரின் ஆலோசகர்களாக வத்திக்கான் நிர்வாகிகளாகப் பணியாற்றும் பொறுப்பு இவர்களிடமே விடப்படுகின்றது. வத்திக்கானின் இளவரசர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.

இந்த விளக்கத்துடன் மேலே தொடரும்போது தெளிவு அதிகமாக இருக்கலாம்.

இன்றைய பாப்பரசருக்கு அன்று Archbishop பதவி வழங்கியது அப்பொழுது பாப்பரசராக இருந்த ஆறாவது சின்னப்பர் என்று அழைக்கப்பட்ட பாப்பரசர்தான். 1967இல் இதே பாப்பரசர் இப்பொழுது உயிர்நீத்துவிட்ட பாப்பரசருக்கு கார்டினல் என்ற பதவியை வழங்கினார்.

இவர் கார்டினல் என்ற நிலையை அடைந்து விட்டதால் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு ஆகஸ்ட் 1978இல் இவரைத் தேடிவந்தது. எனவே இவர் வத்திக்கானுக்குப் பயணமாகினார். Albino Luciani என்ற இத்தாலியர் ஒருவர் பாப்பரசராகத் தெரிவாகும் வாக்கெடுப்பு நிகழ்வில் இவரும் பங்குபற்றினார். பாப்பரசராகத் தெரிவாகிய இவர் தனக்குத் தேர்ந்தெடுத்த பெயர் முதலாவது சின்னப்ப பாப்பரசர் என்பதுதான். 65 வயதில் இந்த இத்தாலிய மதகுரு பாப்பரசராகத் தெரிவாகியபோது மிக இளம் வயதில் ஒரு பாப்பரசர் தெரிவாகி விட்டதாக கருத்துக்கள் வெளிவந்தன. காரணம் பொதுவாக 70 வயதை எட்டிப் பிடித்தவர்களே பாப்பரசராக வருவது வழமையில் இருந்திருக்கின்றது.

ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு அப்பொழுது சம்பவித்தது.
பதவியில் 33 நாட்கள் மாத்திரமே இருந்த புதிய பாப்பரசர் திடீரென மரணமாகி உலகை அதிர வைத்தார்.
இருதய அதிர்ச்சிதான் மரணத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. என்றாலும் இவர் மரணத்திற்கான காரணம் பற்றி இணையப் பக்கங்களில் பல கதைகள் சொல்லப்படுகின்றன.
இயற்கையான மரணம் இல்லை என்றும் சந்தேகம் கிளப்பப்படுகின்றது. விஷமூட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சில இணையப் பககங்கள் சந்தேகப்படுகின்றன. ஆனால் அது இங்க நமக்கு ஓர் அவசியமற்ற விவாதம்.
33 நாட்களில் புதிய பாப்பரசர் இறந்தது மட்டும் நிஜம்.
புதிய பாப்பரசரை மீண்டும் தெரிவு செய்தாக வேண்டுமே.
மீண்டும் ஒக்டோபர் 78இல்-அதாவது இரண்டு மாதகால இடைவெளியில் இவர் வத்திக்கானுக்கு விஜயம் செய்தார். இந்தத் தடவை இத்தாலியர்களே மீண்டும் தெரிவாகும் வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இரண்டாவது சின்னப்ப பாப்பரசராக ஒக்டோபர் 16ந்திகதி இவர் நியமனம் பெற்றார்.
அப்பொழுது இவருக்கு வயது 58.
தொலை நாட்டில் இருந்து வந்தவர் என்று இனம் காணப்பட்ட இவர் ஆட்சி ஆரம்பமாகிற்று. பாப்பரசர் ஆட்சியில் இருந்த பல விதிமுறைகளும் உடைக்கப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மீக நட்சத்திரம் ஒன்று சுடர்விடடு ஒளிர ஆரம்பித்தது.
ஆறாவது சின்னப்ப பாப்பரசர் 12வது பயஸ் என்றழைக்கப்பட்ட பாப்பரசர் 22வது ஜோன் என்று அழைக்கப்பட்ட பாப்பரசர் போன்றவர்கள் இதுவரை நியமிக்க பாப்பரசர்களில் பெரிதாகப் பேசப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் எல்லோரையும் மிஞ்சும் வண்ணம் இப்பொழுது நம்மை விட்டு மறைந்துள்ள பாப்பரசர் இரண்டாம் ஜோண் போல் என்பவரின் சேவை அமைந்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றார்கள்.

உலக நாடுகளெங்கும் பயணிப்பதில் இவரை இனி யாரும் மிஞ்ச முடியாது. இதுவரையில் 117 நாடுகளுக்கு பயணித்த சாதனை இவரையே சாருகின்றது. தன் ஆட்சிக் காலத்தில் 1167000 கி.மீறறருக்கு அதிகமாகப் பயணித்தவர் இவர் ஒருவர்தான் இதுவரையில் ஏனைய பாப்பரசர்கள் சந்தித்தராதவர்களை இவர்தான் நேரில் சந்தித்து இருக்கின்றார். உதாரணமாக பிரிட்டனின் எலிசபெத் மகாராணியாரை முதலில் சந்தித்தது இவரேதான். பிரான்ஸ் நாட்டுப் பயணமே இவரது இறுதி வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது.

மதசார்பற்ற இவரது விஜயங்கள் உலகைக் கவர்ந்தன. முதற்தடiவாக ஒரு பாப்பரசர் யூதர்களின் பிரார்த்தனை மண்டபத்திற்குள் நுழைந்திருக்கின்றார். அது வேறுயாருமல்ல. 1986இல் இவர்தான் அதை ரோமில் சாதித்து இருக்கின்றார். 2001ம் ஆண்டு மே மாதம் முஸ்லீம்களின் பள்ளிவாசல் ஒன்றிற்குள் கால்வைத்த முதல் பாப்பரசரும் இவர்தான்.

இப்படியொரு உன்னதமானவரை கொல்லும் முயற்சிகளும் இடம்பெற்றிருப்பது விந்தையானதுதான். 1981ம் ஆண்டு மே மாதம் 18ந் திகதி ஒரு துருக்கி நாட்டவன் பீட்டர் சதுக்கத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டிருக்கின்றான் மயிரிழையில் காயத்தோடு உயிர் தப்பியிருக்கின்றார் பாப்பரசர். அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்புத்தான் இந்தக் கொலை முயறசியின் பின்னணியில் இருந்துள்ளது என்கிறார்கள். தன்னைக் கொல்ல வ்நதவனை இவர் பின்பு சிறையில் நேரில் சென்று சந்தித்து உரையாடி மன்னிப்பும் வழங்கி இருக்கின்றார்.

அடுத்த கொலை முயற்சி 1982 மே மாதம் 12ந் திகதி இடம்பெற்றிருக்கின்றது. நடந்த இடம் போர்த்துக்கல். கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ஒருவன் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கப்பட்டு இருக்கின்றான்.

அடுத்த பாப்பரசர் எப்படித் தெரிவாகப் போகின்றார்?
பாப்பரசர் ஒருவர் மரணித்தால் இரு வாரங்களில் புதிய ஒரு பாப்பரசரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே வழமையில் உள்ள விதிமுறை. இறந்தவருக்காக 9 நாட்கள் துக்க அனுஷ்டானமும் இடம்பெறுவதுண்டு.

ஒரு பாப்பரசர் இறந்ததும் உடனடியாக சகல அதிகாரங்களும் வததிக்கானின்
இராஜாங்க அமைச்சரிடம் சென்று விடுகின்றன. இவரை Camerlengo என்றே அழைக்கின்றார்கள். எதுர்டோ மார்ட்டினஸ் என்பவர்தான் இன்றைய இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். பாப்பரசர் இறந்ததும் இவர் செய்ய வேண்டிய சடங்குகள் சில இருக்கின்றன.

இறந்த பாப்பரசரின் பிறப்புப் பெயரான Karol என்ற பெயரைச் சொல்லி இவர் மூன்று தடவைகள் அழைப்பார். அதற்குப் பதில் வராதபோது பாப்பரசருக்குரிய சின்னங்கள் அழிக்கப்படும். வேறு யாருமே உபயோகிக்காத வகையில் இந்தப் பாப்பரசரின் பாவனையில் இருந்த பிரத்தியேக இலச்சினையும் அழிக்கப்படும் கையில் அணிந்துள்ள மீனவனின் மோதிரம் என்று அழைக்கப்படும் மோதிரமும் அழிக்கப்படும். சென்ட் பீட்டர்ஸ் தேவாலயததின் வெண்கலக் கதவுகளும் இழுத்து மூடப்படும்.

மரணச் சடங்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பணி இவரிடம் விடப்படுகின்றது. அடுத்த பாப்ரசரைத் தெரிவு செய்யும் பொறுப்பும் இவர் தலையிலேயே விழுந்து விடுகின்றது.
ஒரு பாப்பரசர் இறந்ததும் அவரின் கீழ் பணியாற்றிய அனைத்து வத்திகான் அதிகாரிகளும் தமது பதவிகளை இழந்து விடுவதுää இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.

117 கார்டினல்கள் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் தகுதியைப் பெற்றுள்ளார்கள். வத்திக்கானில் இடம்பெறும் இரகசிய தேர்தலில் பதிய பாப்பரசரை இங்கு தெரிவு செய்வார்கள். வெளியார் யாருமே வாக்கெடுப்பு நடக்கும் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்;. கதவுகள் சாரளங்கள் எல்லாமே பூட்டப்பட்டு விடும். யாருக்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு கிடைக்கின்றதோ அவரே புதிய பாப்பரசராக நியமனம் பெறுவார். முதல் வாக்கெடுபபில் இப்படி ஆதரவு கிடைக்காவிட்டால் அது தொடரும். இப்படி 30 தடவைகள் தொடர்ந்தால் 31 வது தடைவ பாதித் தொகைக்கு ஒன்று அதிகமாக யார் பெறுகிறாரோ அவரே புதிய ஆன்மீகத் தலைவராகின்றார்.

புதிய பாப்பரசர் தெரிவாகி விட்டால் வத்திக்கானிலிருந்து வெண்மையான புகை வெளியேறும். வெளியே காத்திருக்கும் பார்வையாளர்கள் தகவலை அறிந்து ஆர்ப்பரிப்பார்கள். தெரிவாகாவிடின் கரும்புகை வெளியேற்றப்படும்.

இஸ்ரவேலில் தொடரும் கலவரங்கள் அடங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இவர் மத்திய கிழக்கிலும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றார். கம்யூனிஸ வீழச்சிக்கு மறைமுகமாக இருந்த ஒரு சக்தி இந்தப் பாப்பரசர் என்று அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் மிக்கெயில் கோர்பச்சேவ் ஒரு தடவை குறிப்பிட்டுள்ளார்.

கருச் சிதைவுக்கு போர்க்கொடி ஓரினச் சேர்க்கைக்கு சிவப்பு விளக்கு கம்யூனிஸத்திற்கு ஆப்பு நாஸீயவாதிகளுக்கு சவுக்கடி என்று துணிச்சலாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி மதசார்பற்ற ஒரு நிலையில் வேற்று மதத் தலைவர்களைச் சந்தித்து புரட்சிகரமான ஓர் ஆட்சியாளராக ஒளிர்ந்து இன்று அவர் மறைந்திருப்பது உலகிற்கு ஒரு பெரிய இழப்புத்தான்.
ஒரு சிறந்த கத்தோலிக்க தலைவராக மாத்திரமல்ல சமாதானத்தின் பாதகாவலாராகவும் செயற்பட்ட இவர் நாற்காலியில் இனி யார் உட்காரப் போகின்றார்கள்?
அறுவர்களின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

78 வயதை எட்டிப் பிடித்துள்ள இன்றைய இராஜாங்க அமைச்சர்(இத்தாலியர்) 71 வயதான மிலான் நகரின் Archbishop, 60 வயதான வியன்னா நகரின் Archbishop,
72 வயதான நைஜீரிய நாட்டவர் ஒருவர் 62 வயதான Hondura நாட்டவர் Sao Paulo நகரின் Archbishop (70 வயது) ஆகியோரே இவர்களாவார்கள். இத்தாலிய நாட்டவர் ஒருவரே இப் பதவிக்கு வரவேண்டும் என்பதே பல கர்டினல்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்தியாவின் மும்பாய் நகரக் கார்டினல் ஒருவருக்கும் இந்த வாய்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.

மறைந்தும் மறையாதவராகி இருக்கின்றார் பரிசுத்த பாப்பரசர். இவருடைய அசாத்திய துணிச்சலோடு வெளிப்படையாகவே கருத்துக்களை சொல்லும் ஆற்றலோடு இவர் நாற்காலியில் யார் அமரப் போகின்றார்கள்.?
சில வாரங்களில் தெரியத்தானே போகின்றது
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நன்றி வானம்பாடி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)