Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் சொல்லா ?
#1
தமிழ் சித்திரை புத்தாண்டு பார்த்திப வருடம் என்ற பெயருடன் பிறக்கின்றது.
இந்த பார்த்திப என்ற சொல் தமிழ் சொல்லா...?
தெரிந்தவர்கள் இது பற்றி ஒரு வார்த்தை சொல்வார்களா...?
Reply
#2
பார்த்தீபன் இது தமிழா............
வடிவா தெரியலை.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
பார்த்திபன் என்றால் அரசன் என்று ஒரு அர்த்தம் இருக்கே அதால தமிழ் சொல்லு என்றுதான் நினைக்கிறன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#4
பார்த்தீப என்பது தமிழாக வராதே.. கூடுதலாக வடமொழியாக தான் இருக்கும்
[b][size=18]
Reply
#5
ஆங்கிலவருடம் 2005, தமிழர்களுக்கு இது எத்தனையாவது வருடம்?

பின்வரும் தகவல், இனையத் தகவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்டது.

சூரியன் மேஷ ராசி, அதாவது அஸ்வினி நட்சத்திரத்தில், நுழையும் பொழுது, புத்தாண்டு பிறக்கிறது. அது சித்திரை 13 அல்லது 14ல் நிகழலாம். நம் முன்னோர்கள், வான் பகுதியை, 12 சம பகுதிகளாகப் பிரித்து, மேலும் முதல் மீனம் ஈறாகப் பெயரிட்டார்கள். மேலும், இதே பகுதியை, 27 பிரிவுகளாகவும் பிரித்து, வானில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் இருந்த நட்சத்திரங்கள் பெயர்களையும் (அஸ்வினி முதல் ரேவதி முடிய) வைத்தார்கள். இதனால், 360 டிகிரி கோணத்தையும் இவ்வாறு பிரிக்கலாம். அவ்வாறு செயுங்கால், ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரியும், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் 13- 1/3 டிகிரியும் வரும், ஆக, சூரியன் 0-வது டிகிரிக்குள் நுழைவதே, நம் தமிழ்ப் புத்தாண்டு.
Reply
#6
இது உண்மையா யாராவது கேள்விப்பட்டீர்களா..??

இந்த பார்த்திப வருடம் சிங்களவர்களிற்கு கூடாதாம். சிங்கள ராசாக்கள் அநியாயம் செய்வார்களாம். அதனால் அழிவார்களாம். :wink: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
வணக்கம் சண்முகி அக்கா...

சித்திரையில் வருவதாகக் குறிப்பிடப்படும் புதுஆண்டினையே முந்தைத் தமிழர் கொண்டாடவில்லை, அதாவது தமிழ்ப் புத்தாண்டு இல்லையென்று சொல்கிறார்கள். அதனால் இந்தப் பெயர்கள் மட்டும் தமிழா இருக்கும் என்று நினைக்கவில்லை.

முன்னர் எங்கோ படித்த ஞாபகம் 60 ஆண்டுகளின் பெயர்களும் தமிழில்லை. அனைத்துமே வடமொழிச் சொற்கள் என்று பெரியார் அவர்களின் புத்தகம் ஒன்றில் படித்ததாய் ஞாபகம்.

இப்பொழுது நீங்கள் எழுதியதன்பின் புத்தகத்தில் தேடிப்பார்த்தேன். தற்போது என் கண்ணில் அது அகப்படவில்லை. ஆனால் வருடப் பிறப்பு என்கிற தலைப்பில் பகுத்தறிவு இதழில் பெரியார் எழுதிய ஒரு கட்டுரை கண்டேன். அதில் வாழ்த்துக்கள் சொல்தையும் வருடப்பிறப்புக் கொண்டாட்டங்களையும் தான் மூடப்பழக்கவழக்கங்களில் ஒன்றாகக் கருதுவதாகவும், தாம் இதைக் கொண்டாடுவதில்லையெனவும், யாரையும் வாழ்த்தப் போவதில்லையெனவும் 6.1.1935 இல் குறிப்பிட்டுள்ளார். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அவருடைய கருத்தில் முழுமையான உடன்பாடு எனக்கு இல்லையென்றாலும், விவாதக் கருப்பொருளாய் சிலவேளை அமையலாம் என்பதால் எங்கு இடுகிறேன். பெரியார் இங்கு குறிப்பிட்டதோடு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடலாம். மெளன அஞ்சலி செலுத்துவது என்றுவிட்டு 1 (?) நிமிடம் கண்ணை மூடி நிற்பது. இதுபற்றி ஒரு கவிஞர் கவிதை ஒன்று எழுதியிருந்தார்.

Quote:<b>மெளன அஞ்சலி</b>
ஜெயபாஸ்கரன்

எல்லோருடனும் சேர்ந்து
எழுந்து நிற்பேன் நானும்.

இறந்துபோன ஒருவருக்காக
ஒரு நிமிடம் அஞ்சலியாம்

இறந்தவருக்கான அஞ்சலியாய்
எழுந்து நிற்பதில் எந்த முரணுமில்லை எனக்கு.

ஆயினும்
அமைதி காக்க நேரும்
அந்த ஒரு நிமிடத்தில்
எதை நினைப்பது என்பதுதான்
எல்லா அஞ்சலியிலும்
என் கவலையாக இருக்கிறது.

கண்மூடி தலைகவிழ்ந்து
என்னருகே நிற்பவரும்
இறந்தவரைத்தான் நினைக்கிறார்
என்பதற்கான ஆதாரமில்லை

ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்,
இறந்து போன எவரைப் பற்றியும்
நிறையவே நினைப்பதுண்டு நான்.

ஆயினும்
நினைப்பதற்காகவே ஒதுக்கப்படும்
அந்த ஒரு நிமிடம்
அதன் பொருட்டுக் கழிவதில்லை
நானும் எழுந்து நிற்க நேரும்
எந்தவொரு அஞ்சலியிலும்.

என்னவோ தமிழன்னைக்கே அனைத்தும் வெளிச்சம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#8
இதோ அறுபது ஆண்டுகளின் பெயர்களும்:

<img src='http://www.yarl.com/forum/files/aandu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/aandu1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/aandu2.jpg' border='0' alt='user posted image'>

நன்றி: ஆறாம்திணை


Reply
#9
பார்த்திப வருடம் பற்றிய தங்கள் அலசல்களுக்கு நன்றிகள் இளைஞன்.
தமிழ் வருடங்களின் அட்டவனையைப் பார்க்கும் போது சித்திரை தமிழர்களின் வருடப்பிறப்பா என்ற சந்தேகமே எழுகிறது.

நீங்கள் குறிப்பிட்ட மெளன அஞ்சலி கவிதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். அதில் குறிப்பிட்டுள்ள வரிகள்
ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்..
சற்றே சிந்திக்க வைக்கின்ற வரிகளாக இருக்கின்றன.
Reply
#10
இளைஞன் பதிலுக்கும் பட்டியலுக்கும் நன்றி.கொண்டாட்டங்களை சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளலாம் தமிழோ,சிங்களமோ என்று பாராது ஏதோ மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதை நாமும் கொண்டாடுவோம் என்றால் நல்லது.ஆனால் அதுவே அடிமை மனநிலையில் அப்படியே பின்பற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
தமிழர் சிங்களவர் மட்டுமல்ல கேரளாவின் சில பகுதிகள்,வங்காளிகள்,மியான்மார் மக்கள் இந்தக் குறிப்பிட்ட காலத்தை புதுவருடமாகக் கொண்டாடுகிறார்கள்.அது எப்படி இலங்கைக்கு வந்தது (சிங்களவர்களுக்கு) ஆராயப்படவேண்டியது.

பார்த்தீப என்பது திரிபடைந்த வடிவம் முன்னையநாளில் மன்னர்களுக்கு பார்த்திபன் என்ற பெயருமிருந்தது சரியான தமிழ்தானா என்று தெரியவில்லை
\" \"
Reply
#11
தாய்லாந்து மக்களும் சித்திரை புத்தாண்டு கொண்டாடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
அஷய வருடத்துக்கு (2047ம் ஆண்டு) பிறகு ஒன்றுமே இல்லையா?
:roll: :roll:
Reply
#13
vasisutha Wrote:அஷய வருடத்துக்கு (2047ம் ஆண்டு) பிறகு ஒன்றுமே இல்லையா?
:roll: :roll:
60 வருட சுற்று இது திரும்பவும் முதலில் இருந்து தொடங்கும்................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#14
அட அப்படியா. தகவலுக்கு நன்றி குளக்ஸ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

( நான் நினைச்சன் அதுக்கு பிறகு என்ர பேர் வைக்கலாம் என்று..
பிழைச்சுப்போச்சு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) :mrgreen:
Reply
#15
ஏன் இல்லை?மீண்டும் பிரபவ தொடங்கும் :roll:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#16
Quote:நான் நினைச்சன் அதுக்கு பிறகு என்ர பேர் வைக்கலாம் என்று..
பிழைச்சுப்போச்சு
சே மனம் உடைஞ்சு போகாதீங்க உங்க வீட்டுக்கலண்டரில்.. பெயரை மாற்றிவிடுங்கள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
<b>நு}ர்த்தல் </b>( விளக்கு நு}ர்த்தல்.) என்பது தமிழ் சொல்லா? ஏனென்றால் இச் சொல் தமிழ் நாட்டிலேயோ, அல்லது பிற தமிழ்பேசும் இடங்களிலேயோ இல்லை. யாழ்ப்பாணத்திலும், மலையாளத்திலும் மட்டுமே இருக்கின்றது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)