Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நல்ல தமிழ் பேச
#1
நல்ல தமிழ் பேச.. பார்த்திபன் சொல்லும் எளிய வழி!

நண்டு சிண்டுகள் தொடங்கி பெருசுகள் வரை ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஆஃப் பாட்டிலை உள்ளே தள்ளிவிட்டு ஹேப்பி நியூ இயர் சொல்வது ஃபாஷனாகிவிட்டது.

கொண்டாட வேண்டிய தமிழ் புத்தாண்டைப் பற்றியோ.. தமிழ் மொழியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை!

தமிழை ஒழுங்கா பேசறயோ இல்லையோ தமிழில் பேர்வை என்று சிலர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க.. தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஓசைப்படாமல் ஒரு தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.

அந்த வாழ்த்து அட்டையில்,

<b>யாகாவாராயினும்</b>

<img src='http://www.webulagam.com/cinema/cinenews/0504/13/images/img1050413020_1_1.gif' border='0' alt='user posted image'>

"தமில் வாள்க"வென ஒலி வாங்கியில் தமிழின் உயிரை வாங்கிவிட்டு, தமிழர்களின் வாக்கையும் வாங்கப் போராடும் அரசியல்வியாதிகள் மட்டுமல்லாமல்,
தன் நாவைத் திருத்திக் கொள்ள முடியாதவர்கள், தமிழ் நாட்டையே திருத்த முற்படுகிறார்களே என்ற கெட்ட சிந்தனை இல்லாத நல்ல பொதுசனம் வரை யாராக இருந்தாலும் ல, ள, ழகரத்தை ஒழுங்காக ஒலித்துப் பேச முடியாதவர்களுக்கு இதோ ஓர் எளிய நுட்பப் பயிற்சி!

இப்பயிற்சியை மேற்கொண்டு ஓரிரு நாளில் நம்மை நாமே திருத்திக் கொண்டு பொருள் குற்றமின்றிப் பேசி, மற்றவர்களும் பேச பயிற்சி தருவோம் என்பதை இத்தமிழ் வருடத்தின் ஆரம்ப நாளில் செய்யும் நற்காரியமாகக் கொள்வோம்.

<b>... நா காக்கா</b>

<img src='http://www.webulagam.com/cinema/cinenews/images/2005/04/parthibhan_speak.jpg' border='0' alt='user posted image'>

1. நாவை முன்மேற் பல்லில் மென்மையாகப் படும்படி வைத்து "ல" என ஒலித்துக் கீழே கொணரின் லகரமும்

2. நாவை நடுமேல் அண்ணத்தில் அழுத்தமாகப் படும்படி வளைத்து "ள" என ஒலித்துக் கீழே கொணரின் ளகரமும்

3. நாவை நன்றாக உள்பக்கம் வளைத்து மேல் அண்ணத்தைத் தொடாதவாறு மென்மையாக "ழ" ன ஒலித்துக் கீழே இயல்பாகக் கொணரின் ழகரமும் வரும்.

(நன்றி: தமிழ் ழகரப் பணி மன்றம்)

சித்ரபானு ஆண்டு
சுபானு ஆண்டு
தாரண ஆண்டு

இனி,
பார்த்திப ஆண்டு...!

என்று சொல்லி தமிழை முதலில் சரியாகப் பேச பயிற்சி கொடுத்திருக்கிறார்.

பக்கத்திலுள்ள படத்தைப் பார்த்து நீங்களும் பயிற்சி செய்து பாருங்கள் பலன் நிச்சயம்!

இந்த சித்திரை அன்று பார்த்திப ஆண்டு தொடங்குகிறது. தமிழுக்காக இவர் எடுத்திருக்கும் முயற்சி எனினும் பார்த்திபன் ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்.

வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
நன்றி மதன். நமக்கு பயன்படுமோ.?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
பயன்படலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
ஆகா இதை அப்படியே சுட்டு தமிழ் பாடசாலையில போட்டுட வேண்டியது தான். மிக்க நன்றி.
[b][size=15]
..


Reply
#5
மக்கள் உவர் பார்த்தீபன் நல்ல தமிழ் கதைப்பாரே
குஞ்சுவள் முதலில இந்தியாக்காரன் தமிழில ஆங்கிலம் கலக்கிறதை விடட்டும் பிறகு யோசிக்கலாம் நல்ல தமிழைப்பற்றி

ஓம் ஓம் சுடும் நல்லாச்சுடும் என்ர குஞ்சு துயா
:evil: :evil: :evil: :evil: :evil:
நாங்கள் தமிழீழத்தமிழர் நல்லாத்தான் தமிழ் கதைக்கிறம் அதுவும் சுத்தத்தமிழ் இங்க சுவிசில தமிழ் பாடசாலை இல்லாத இடமே இல்லை குஞ்சு
உதுவளை செய்யுங்கோ உத விட்டுட்டு பார்த்தீபன் சொல்லுறார் என்டுட்டு நாக்கை செட் பண்ண வெளிக்கிடாதேங்கோ
நாலு தமிழீழத்தமிழனோடை 1 மாதம் இருந்தா நல்ல தமிழ் வரும் எண்டு உவர் தம்பி பார்த்தீபன் க்கு சொல்லுங்கோ பிள்ளையள்
படமில்லைப்போல இருக்கு அது தான் உதில வெளிக்கிட்டார் என்ர குஞ்சு

துயா செல்லம் உத சுடுறதை விட்டுட்டு மம்மீட்டை அட சீ அம்மாவிட்டை போய் நல்ல வடை அல்லது தோசை சுடப்பழகும்
பின்னடிக்கு உதவும்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#6
Mathan Wrote:<img src='http://www.webulagam.com/cinema/cinenews/0504/13/images/img1050413020_1_1.gif' border='0' alt='user posted image'>

"<b>புது</b> வருட வாழ்த்துடன்" ஓ இல்லை "<b>புதூ</b> வருட வாழ்த்துடன்" ஓ சரி?

மன்னிக்க வேணும்.... சின்னச் சந்தேகம் தான்.

-சபேஸ்-
Reply
#7
அப்பிடி போடப்பு என்ர குஞ்சு சபேசு ம் பாத்தீங்களே பிள்ளையள் மகன் மாட்டுப்பட்டுட்டர் நம்மட பிள்ளையிட்டை
பாத்தீரே துயா ???
எனி என்ன வடை தோசை சுடுறதை தொடங்கும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#8
Mathan Wrote:நல்ல தமிழ் பேச.. பார்த்திபன் சொல்லும் எளிய வழி!

[size=14]நண்டு சிண்டுகள் தொடங்கி பெருசுகள் வரை ஆங்கிலப் புத்தாண்டு அன்று ஆஃப் பாட்டிலை உள்ளே தள்ளிவிட்டு ஹேப்பி நியூ இயர் சொல்வது [b]ஃபாஷனாகிவிட்டது
ஃபாஷன் சொல்லலாம் ஹப்பி நியூ இயர் சொல்லாக்கூடாதோ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)