Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறதி மருத்துவர்கள்
#1
மறதி மருத்துவர்கள்


வெலிங்டன்: அறுவை சிகிச்சையின்போது 5-வயது சிறுவனின் தொண்டையில் மருத்துவர்கள் வைத்த 12 சென்டிமீட்டர் பிளாஸ்டிக் குழாயை அகற்றாமல் விட்டது 2 நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது.

பல் அறுவை சிகிச்சைக்காக நியூஸிலாந்தைச் சேர்ந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். வீட்டுக்குத் திரும்பிய அவனால் சாப்பிடவோ, பேசவோ முடியவில்லை. தண்ணீர் குடித்தால் கூட மூக்கு வழியாக வெளியே வந்தது. தொடர்ந்து இருமல் ஏற்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டதன் பின்விளைவு என்று கருதிய சிறுவனின் தாயார் 2 நாள்களாக அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2 நாள்களுக்குப் பிறகு உள்ளூர் சுகாதார மைய மருத்துவர் சிறுவனை பரிசோதித்தபோது தொண்டையில் பிளாஸ்டிக் குழாயின் முனையைப் பார்த்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். பிளாஸ்டிக் குழாய் அகற்றப்பட்டது.

Dinamani
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)