Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள்
#1

<span style='font-size:22pt;line-height:100%'>டொராண்டோவில் தமிழியல் மாநாடு! அனைவரையும் அழைக்கிறார்கள்.

டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுhரியில் நடைபெற இருக்கும் தமிழியல் மாநாடு பற்றி ஏற்றகனவே அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் எனக்கு இம்மாநாடு பற்றிக்கிடைத்த மேலதிக தகவல்கள் உங்களுக்காக.....</span>


தமிழியல்: திணையும் தளமும் நிலையும்

வடஅமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஒன்று கூடும் தமிழியல் மாநாடு, மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டொராண்டோ பல்கலைக்கழக டிரினிடி கல்லுìரியில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புவோர் அனைவரும் இந்த இணையத் தளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்கள் மாநாடு நடைபெறும். ஆண்டுதோறும் நிகழவுள்ள தமிழியல் மாநாட்டுத் தொடரின் முதல் நிகழ்வாக இம்மாநாடு அரங்கேறுகிறது.

மேற்குலகின் ஆகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டிருக்கும் டொராண்டோவில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான நீண்ட காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மாநாடுகள் அமைகின்றன. வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வி மையமாக டொராண்டோவை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாடும் கோடைக்கால தமிழ் மொழி வகுப்பும் இடம்பெறுகின்றன.

டொராண்டோ பல்கலைக்கழகத்துடனும் வடஅமெரிக்காவின் தமிழ்க் கல்வியாளர்களுடனும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தைப் புத்தாக்க வழியில் மாநாட்டின் வழி இணைப்பது ஏற்பாட்டாளர்களின் நோக்கம். மேலும் டொராண்டோ மாணவர்களுக்கும் வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கும் தமிழ்க் கல்வியின் விரிந்த தளத்தையும் இம்மாநாடு அறிமுகப்படுத்தும்.

வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்கள் தங்களது படைப்புகளை சக கல்வியாளர்கள் மற்றும் டொராண்டோ தமிழ்ச் சமூகத்தின் முன்னிலையில் படைக்க ஒரு வாய்ப்பையும் இந்த டொராண்டோ மாநாடு தருகிறது. அதனுடன் தமிழ்நாடு, இலங்கை தொடர்பான கல்விகளில் ஈடுபட்டிருக்கும் கல்வியாளர்கள் தங்களது ஆய்வுகளைப் பரிமாறிக்கொள்ளவும், இந்தத் தமிழ் வட்டாரங்கள் குறித்த கல்வியை பரந்த ஒப்பீட்டு முறையில் அணுகவும் மாநாடு வகைசெய்கிறது. அனைத்துலக கல்வி மையத்துக்கான மங் சென்டர் அல்லது பல்கலைக்கழக அச்சகம் மூலம் மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகளை நுìலாக வெளியிடுவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று.

அறிமுகம்

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும் இணைந்து 'திணையும் தளமும் நிலையும்' தமிழியல் மாநாட்டை 2006ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி நடத்துகின்றன. தென்அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களை இம்மாநாடு ஒன்றிணைக்கிறது. வரலாறு, இலக்கியம், மானுடவியல், சமயம், கலாசாரா மனோவியல், மொழியியல், புலம்பெயர் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் இடம்பெறுகின்றன. லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ்த்தேச நாடுகள் மற்றும் ஆப்ரிக்கக் கல்விக் கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், உப்சாலா பல்கலைக்கழகம், மாசேய் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பிரஞ்சு கல்வி நிலையம், மாக்கில் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்று விரிந்த கல்வித் தளங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

சக கல்வியாளர்கள் முன்பு தங்களது படைப்புகளை பன்முகத் தளத்தில் படைக்கும் ஓர் தனித்தன்மையான வாய்ப்பை வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வியாளர்களுக்கு இம்மாநாடு வழங்குகிறது. வடஅமெரிக்காவின் தமிழியல் கல்வி பெருமளவில் தமிழ் நாடு சார்ந்த ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த மாநாடு, தமிழியல் மற்றும் தமிழியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்யும் கல்வியாளர்களை ஒன்றுகூட்டி, பன்முக ஆய்வை மேற்கொள்ள ஒரு தளத்தை அமைக்கிறது.

கருப்பொருள்

பண்டைக்கால தமிழ்க் கவிதை முதல் தற்கால இலக்கியம் வரை காணப்படும் படைப்பிலக்கியம், நிகழ்கலை மரபுகளின் வளர்ச்சியும் தொடர்ச்சியும்.

இடைக்காலம், தற்காலத்தின் தேசியக் கற்பனைகளின் மறுஉருவாக்கம்.

மேற்கத்திய நகரங்களில் தமிழ் புலம்பெயர் சமூகங்களில் உருவாக்கம்.

இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான கலாசார, பண்பாட்டு ஆய்வுகள்.

தற்காலத் தமிழ்நாட்டில் பால், சாதி, சமயம் தொடர்பான சமூக, கலாசார, இலக்கிய மறுஉருவாக்கங்கள்.

மாணவர்களுக்கு குறிப்பாக டோராண்டோவின் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழியலின் விரிந்த துறைகளை இந்த மாநாடு அறிமுகப்படுத்தும். இதற்காக மாணவர்களுக்கான ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் வடஅமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் கல்விக்கான வாய்ப்புகள் பற்றி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பேசுவார்கள். மேலும் இத்திட்டங்களில் சேர்வதற்குத் தேவையான கல்வி, பயிற்சித் தகுதிகள் பற்றியும் விளக்குவார்கள்.

தகவல்:http://tamilstudiesconference2006.blogspot.com
For more information, please visit http://www.chass.utoronto.ca/~tamils/main.html.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இணைப்புக்கு நன்றி சினேகிதி.
.
Reply
#3
நன்றி இருக்கட்டும் சுஜீந்தன்..கனடாவிலதானே இருக்கிறீங்கள்.உடனே இம்மாநாட்டுக்கு வாறதுக்கு றெஜிஸ்டர் பண்ணுங்கோ.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
தகவலுக்கு நன்றி சிநேகிதி
<b> .. .. !!</b>
Reply
#5
உடனே பதியுறன்.
Quote:நன்றி இருக்கட்டும் சுஜீந்தன்..கனடாவிலதானே இருக்கிறீங்கள்.உடனே இம்மாநாட்டுக்கு வாறதுக்கு றெஜிஸ்டர் பண்ணுங்கோ.
.
Reply
#6
என்ன ரசி அக்காவும் சுஜீந்தனும் மட்டும்தானா? அருவி. நிதர்சன். றமாக்கா, மற்ற கனடாப் பட்டாளம் எல்லாரும் எங்க போட்டிங்கள்??
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)