Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதாநாயகனாகிறார் தங்கர்பச்சான்(நாயகி நவ்யா நாயர்)
#1
இயக்குநராக இருந்து வந்த சேரனை, நடிகராக மாற்றிய பெருமை தங்கர்பச்சானுக்கு உண்டு. இப்போது தங்கர்பச்சானே ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/thangarbachan200.jpg' border='0' alt='user posted image'>அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல் என மூன்று வித்தியாசமான படங்களை இயக்கி கோலிவுட்டில் ஒரு வித்தியாசமான டைரக்டர் என்று பெயர் எடுத்தவர் தங்கர்பச்சான்.

தென்றல் படத்திற்குப் பிறகு புதிய படம் எதையும் முடிவு செய்யாமல் இருந்து வந்த தங்கர், தற்போது "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை தயாரித்து இயக்கப் போகிறார்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார் தங்கர் என்பதுதான் விசேஷச் செய்தி.

கேமராவுக்குப் பின்னால் இருந்து வந்த இயக்குநர் சேரனை, சொல்ல மறந்த கதை மூலம் நல்ல நடிகராகவும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தங்கர். அந்தப் படம் கொடுத்த தைரியத்தில் தான் ஆட்டோகிராப்பில் துணிச்சலாக ஹீரோவாக வேடம் கட்டி புகுந்து விளையாடினார் சேரன்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி , வெகு இயல்பான ஒரு கதை என தங்கர் கூறுகிறார். சுருக்கமாக சொன்னால் ஒரு சோம்பேறியின் கதை. அந்த சோம்பேறியாக நடிக்கப் போவது தங்கர் தான். கடமைகள், பொறுப்புகளை மறந்து, தான்தோன்றித்தனமாக, எந்தவித கவலைகளும் இல்லாமல் வாழும் ஒருவர் தான் அப்பாசாமி. அவரது கதைதான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.

இதில் தங்கருக்கு ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார். இவர்கள் தவிர பிரமிட் நடராஜன், டி.பி. கஜேந்திரன், ஆர்.சுந்தரராஜன், கஞ்சா கருப்பு எனப்படும் கருப்பு ராஜா, பொன்னம்பலம், கூத்துப் பட்டறைக் கலைஞர்கள் லோகு, கருணா பிரசாத், ஜெகன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/navyanair_02-440.jpg' border='0' alt='user posted image'>
அழகி படத்திற்கு இசையின் மூலம் பெரும் பலம் சேர்த்த இளையராஜாவிடமிருந்து தென்றல் படத்தில் பிரிந்தார் தங்கர். இப்போது மீண்டும் ராஜாவுடன் கை கோர்த்து களம் காணப் போகிறார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிக்கு இசை வடிவம் கொடுக்கப் போவது இசை ஞானி.

பாடல்களை வாலி, கங்கை அமரன், .மேத்தா, முத்துலிங்கம், பழனிபாரதி ஆகியோர் எழுதவுள்ளனர். தங்கர் பச்சானின் சொந்த நிறுவனமான தங்கர் திரைக்களம் மூலம் இப்படம் தயாராகவுள்ளது.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி மிகவும் வித்தியாசமான அதே சமயத்தில் எதார்த்தமான ஒரு கதையாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறார் தங்கர்.

நன்றி: www.thatstamil.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)