Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூமியின் முதல் விஞ்ஞானி யார்?
#1
<b>பூமியின் முதல் விஞ்ஞானி யார்? இறைவன் 10! குழந்தை 100! </b>(நக்கீரன் - கனடா)


சென்ற கிழமை இறுதியில் நியூயேர்சி மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 'தமிழர் திருவிழா" விற்குப் போயிருந்தேன்.

வழக்கமாக இந்த விழாவை ஆண்டுதோறும் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் தமிழ்நாடு அறக்கட்டளையும் சேர்ந்து நடத்தி வந்தன. இம்முறை தனித்தனியாக அ.த.ச. பேரவை நியூயேர்சியிலும் தமிழ்நாடு அறக்கட்டளை புளோரிடாவிலும் தனித்தனியாக நடத்தின.

இன்றைய நவீன தொழில் நுட்ப வசதிகளின் விளைவாக தில்லி இராஜ்பவனில் இருந்து கொண்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடக்கவுரையை நிகழ்த்தி அ.த.ச. பேரவையின் 16வது மாநாட்டை ஆரம்பி;த்து வைத்தார்.

'தமிழ்நாட்டின் இராமேசுவரம் தீவில் ஒரு நடுத்தர தமிழ்க் குடும்பத்தில் நான் பிறந்தேன். என் அப்பா ஜைனுல்தீன் பெரிய பணக்காரர் அல்ல. மெத்தப் படித்தவரும் கிடையாது. இருந்தாலும் அவர் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் தரும சிந்தனை நிறைந்தவர். என் அம்மா ஆஷியம்மா அப்பாவின் மனதிற்கேற்ற துணை. தினந்தோறும் அம்மா எவ்வளவு பேருக்கு சாப்பாடு போடுவாள் என்பது துல்லியமாக என் நினைவுக்கு வரவில்லை. ஆனால் எங்கள் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களைவிட அதிகமான வெளியாட்கள் எங்களுடன் சாப்பிடுவார்கள் என்பதை என்னால் உறுதியகச் சொல்ல முடியும்." என்ற முன்னுரையோடு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாம் எழுதிய 'அக்கினிச் சிறகுகள்" தன் வரலாற்றை ஆரம்பிக்கிறார்.

தனது சொந்த முயற்சியால் பல்கலையும் கற்று இன்று இந்திய நாட்டின் முதல் குடிமகனாக கலாம் உயர்ந்து இருக்கிறார். அவர் ஒரு நாடறிந்த அறிவியலாளர். அமெரிக்க சனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது அவர் காண விரும்பிய ஒரே மனிதர் அப்துல் கலாம்தான். காரணம் அவர்தான் இந்திய அரசின் அணுக்குண்டு மற்றும் ஏவுகணை தயாரிப்பின் முதன்மை அறிவியல்வாதி. ஒலியின் வேகத்தைவிட 12 மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய அக்கினி, ஆகாஷ் போன்ற ஏவுகணைத் திட்டத்தின் சூத்திரதாரியும் அவர்தான். அதற்காக 1990ம் ஆண்டு குடியரசுத் தினத்தில் பத்மவிபூஷணன் விருது கொடுத்து மேன்மைப் படுத்தப்பட்டார்.

மதத்தால் முஸ்லிம் ஆக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராக அப்துல் கலாம் வாழ்கிறார். ஆரம்பக் கல்வியை தமிழ்மொழி மூலம் படித்தவர். தமி;ழ்ச் சிறார்களின் கற்கைமொழி எப்போதும் தமிழாக இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வற்புறுத்தி வருகிறார். திருக்குறளில் நல்ல தேர்ச்சியும் ஈடுபாடும் உள்ளவர். அன்று அவர் ஆற்றிய உரையின் போது இரண்டு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அப்துல் கலாம்தான் அடுத்த குடியரசுத் தலைவர் என முடிவாகிய பின்னர் அவரது பதவி ஏற்பு விழாவை ஒட்டிய ஒழுங்குகளைச் செய்ய அமைச்சர் ஒருவரை இந்திய மைய அரசு நியமித்திருந்தது.

அமைச்சர்: 'எந்த நாளில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? சோதிடத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்து சுபநேரத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள்?"

அப்துல் கலாம்: 'பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கும் நேரத்துக்கும் இந்த சுழற்சிதான் காரணம். என்னைப் பொறுத்தளவில் எல்லா நாளும் நல்ல நாட்களே! எல்லா நேரமும் நல்ல நேரமே! எந்த நாளும் நேரமும் உங்களுக்கு வசதியோ அன்று பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம்" என்று பதில் அளித்தார்.

சனாதிபதி அப்துல் கலாம் அவர்களது அறிவுபூர்வமான பதிலுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் அவர் ஒரு அறிவியல்வாதி. இரண்டு அவர் ஒரு முஸ்லிம். இந்து மதம்போல் அல்லாது இஸ்லாமிய மதத்தில் நாள், கோள், நட்சத்திரம் போன்றவற்றுக்கு இடம் இல்லை. புராணக் கதைகளுக்கோ, புனைந்துரைகளுக்கோ, அர்ச்சனை அபிசேகத்துக்கோ, உருவ வழிபாட்டுக்கோ இடமில்லை.

சனாதிபதி அப்துல் கலாம் கொடுத்த பதிலைக் கேட்டு அரங்கு கையொலி எழுப்பி ஆரவாரித்தது. அந்தக் கையொலியின் சத்தத்தை வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்தவர்களில் குறைந்தது 90 விழுக்காட்டினர் நாளும் கோளும் பார்க்காத பகுத்தறிவுவாதிகள் என்று நினைக்கத் தோன்றும்! ஆனால் திரும்பி வரும் வழியில் Bridgewater என்ற இடத்தில் நல்ல அமைதியான சூழலில் கலையழகோடு கட்டியிருந்த ஸ்ரீ வெங்கடேசுவரர் ஆலயத்தையும் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனபோது நான் கண்ட காட்சி எனக்கு ஒரே வியப்பாக இருந்தது.

முதல்நாள் கைதட்டிய பலர் அங்கிருந்த நவக்கிரகங்களை சுற்றிக் கொண்டு இருந்தார்கள்!

நான் நினைக்கிறேன். இந்திய நாட்டின் வரலாற்றில் நாள் நட்சத்திரம் பாராது சனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டவர் அப்துல் கலாம் ஒருவர்தான். அவர் ஆழ்ந்த இறைபக்தி உடையவராக இருந்தாலும் காலம் நேரம் என்று வரும்போது அவர் ஒரு அறிவியல்வாதி என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்!

அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த சனாதிபதி அப்துல்கலாம் சென்னை மயிலாப்ப+ரில் உள்ள இராமகிருஷ்:ண மடத்து ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேடையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. மாணவர்கள் மேடையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். சனாதிபதி உள்ளே நுழைந்ததும் மேடைக்கு செல்லாமல் நேராக மாணவர்கள் அருகிலேயே சென்று, அவர்களுடன் அன்பாக பெயர் விசாரிக்கத் தொடங்கினார். உடனே எல்லா மாணவர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பத்திரிகை படப்பிடிப்பாளர்கள், தொலைக் காட்சி படப்பிடிப்பாளர்கள் அவரை நெருங்கிப் படம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் சனாதிபதியிடம் மேடைக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். அதன் பிறகே அவர் மேடைக்கு சென்றார்

மீண்டும் மாணவர்கள் மேடையில் இருந்து சிறிது தூரம் தள்ளிப் போய் அமர்ந்தனர். இதைப்பார்த்த சனாதிபதி அவர்கள் அனைவரையும் மேடைக்கு அருகிலேயே வந்து அமரும்படி சொன்னார். உடனே அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி மேடைக்கு அருகில் போய் அமர்ந்தனர்.

பிறகு ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்கள் மத்தியில் பேசினார். ''உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து"" என்ற திருக்குறளை முதலில் சொல்லி மாணவர்களிடம் திரும்ப சொல்லச் சொன்னார். அவர்களும் ஒரே குரலில் திரும்பச் சொன்னார்கள். யாராவது ஒருவர் அதற்கு பொருள் சொல்லுங்கள் என்று கலாம் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து 'உயர்வான எண்ணத்தையே எண்ண வேண்டும். அது கூடாவிட்டாலும் எண்ணுவதைக் கைவிடக் கூடாது" என்று பதில் சொன்னார்.

'நமக்கு உயர்வான எண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய இலட்சியத்தில் வெற்றி பெற உள்ளத்தில் உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியும் அதிகம் கிடைக்கும். நீங்கள் எல்லாம் பத்தாம் வகுப்பு வரை இங்கு படிக்கிறீர்கள். படித்து முடித்த பிறகு என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று 'நான் மருத்துவராக வர விரும்புகிறேன், பொறியியலாளராக வர விரும்புகிறேன், ஐ.பி.எஸ் அதிகாரியாக வர ஆசைப்படுகிறேன்" என ஆளுக்கொரு பதில் சொன்னார்கள். இன்னொரு துடிப்பான மாணவர் எழுந்து 'நான் உங்களைப்போல விஞ்ஞானி ஆவேன்" என்றார். அப்போது தான் கலாமுக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? என்று ஆர்வத்துடன் கேட்க, மாணவர்கள் கடினமான உழைப்பு (hard work) வேண்டும் என்றனர்.

'அப்படி டாக்டர் ஆக, என்ஜினீயர் ஆக, விஞ்ஞானி ஆக வேண்டும் என்றால் உங்களுக்கு அப்படி ஆக வேண்டும் என்ற இலட்சியம் முதலில் தேவை. இரண்டாவதாக நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்க வேண்டும். மூன்றாவதாக தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாது. தோல்வியை விரட்டியடிக்க வேண்டும். இடும்பைக்கு இடும்பை கொடுக்க வேண்டும். அப்படியென்றால் துன்பத்திற்கு துன்பம் கொடுக்க வேண்டும். நீங்கள் எல்லாம் இறைவனின் மக்கள். நான் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லுங்கள். இறைவனின் மக்கள் நாங்கள், வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோர் வெல்வோம், சாதிப்போம். வேதனை துடைத்து எறிவோம். எந்தை அருளால் எதுவும் எம் வசமாகும். (இதை மாணவர்கள் அப்படியே திருப்பிச் சொன்னார்கள்) அடுத்து சனாதிபதி கலாம் மாணவர்களைப் பார்த்து கேள்வி கேட்டார்.

சனாதிபதி கலாம்: ப+மியின் முதல் விஞ்ஞானி யார்? சொல்லுங்கள் பார்ப்போம்?

மாணவன்: இறைவன்!

சனாதிபதி கலாம்: உனக்கு 10 மதிப்பெண்தான் கொடுக்க முடியும்.

இன்னொரு மாணவன்: முதல் விஞ்ஞானி குழந்தை!

சனாதிபதி கலாம்: உனக்கு 100 மதிப்பெண்! ஏன் அப்படி? அதைச் சொல்லாமல் விடமாட்டேன்!

மாணவன்: குழந்தைதான் தனது அம்மாவிடம் நிறையக் கேள்வி கேட்கும்!

சனாதிபதி கலாம்: குழந்தைகள் 3 வயதில் இருந்து கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அறிவியல் என்றால் என்ன? என்று கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் விடை கிடைக்கும். மின்சாரம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்டதால்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தது. ப+மி சுற்றுவதால்தான் இரவும், பகலும் வருகிறது. ப+மி சூரியனை சுற்றுவதற்கு ஒரு வருடம் ஆகிறது. நான் 71 தடவை சுற்றி முடித்து இருக்கிறேன். இப்போது 72-வது தடவை சுற்றுகிறேன். அப்படி என்றால் என் வயது என்ன?

மாணவர்கள்: 72 வயது!

சனாதிபதி கலாம்: 71 முடிந்து 72-வது வயது நடக்கிறது. சூரியன் பாலுலகம் எனப்படும் galaxy யை ஒருதடவை சுற்றுவதற்கு 250 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. ப+மி, சூரியன் என எல்லாம் சுற்றும்போது நாம் ஏன் சுற்றக்கூடாது? மனிதன் மட்டும் ஏன் ஓய்வு எடுக்க வேண்டும்? வாழ்க்கையில் வெற்றிபெற உழைக்க வேண்டும். நான் சிறுவனாக இருந்த போது இரண்டு விடயங்களை படித்தேன். எனது ஆசிரியர் அய்யாத்துரைசாமி எண்ணெய் ஊற்றுவதால் விளக்கு எரியும். மனிதன் இறைவன் இல்லாமல் வாழ முடியாது என்று ராமகிருஷ்:ண பரமஹம்சர் கூறிய கருத்தை சொல்வார். நான் 8வது படிக்கும்போது அதை கேட்டேன். இன்னொரு ஆசிரியர் ராமகிருஷ:ணய்யர் எங்களை அடிப்பார். ஆனால் அன்பாகவும் இருப்பார் (உங்களை ஆசிரியர்கள் அடிப்பார்களா? என்று கேள்வியும் கேட்டு சிரிக்க வைத்தார்.) அவர் சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒளி பற்றி கூறினார். அதையெல்லாம் நான் கேட்டு பயன்பெற்றுள்ளேன்.

இனி நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்; (இதைத்தொடர்ந்து மாணவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். அதற்கு ஜனாதிபதி கலாம் பதில் அளித்தார்)

கேள்வி: மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இதில் நீங்கள் வெற்றிபெற யார் பங்கு அதிகம்?

பதில்: குருதான். எனக்கு அருமையான தந்தை, அருமையான தாய் என் முன்னேற்றத்தில் அவர்களுக்கு பங்கு உண்டு. ஆனால் என் கல்விக்கு முதல் வழிகாட்டி எனது 5-வது வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம்தான். அவர்தான் அறிவு விளக்கு ஏற்றி வைத்தார். எனவே, அவரை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன்

கேள்வி: நீங்கள் இந்த அளவுக்கு உயர்வீர்கள் என்று இளமைப் பருவத்தில் எதிர்பார்த்தது உண்டா?

பதில்: எனது 5வது வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம் ஒரு தடவை பள்ளியில் பறவை எப்படிப் பறக்கும் என்று பாடம் நடத்தினார். வகுப்பில் மொத்தம் 40 மாணவர்கள் இருந்தோம். 40 நிமிடம் அவர் பாடம் நடத்தினார். பிறகு புரிந்ததா? என்று கேட்டார் நான் எழுந்து புரியவில்லை என்றேன் அதே போல 30 மாணவர்கள் புரியவில்லை என்றனர். பத்து மாணவர்கள் மட்டும் தெரிந்தவர்கள் போல உட்கார்ந்துகொண்டனர். உடனே ஆசிரியர், ரொம்ப சந்தோசம் நீங்கள் எல்லாம் உண்மையை சொன்னீர்கள். பறவை எப்படிப் பறக்கும் என்று இன்று மாலை உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். அதன்படி இராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பறவைகள் எல்லாம் பறப்பதை காட்டினார். இறக்கையை விரித்து அவை பறப்பதை பார்த்தபோது பறவை எப்படி பறக்கும் என்று எனக்கு 5 நிமிடத்தில் புரிந்தது. அந்தக் கணத்தில் நான் ஒரு முடிவு எடுத்தேன். அப்போது எனக்கு 10 வயது இருக்கும். விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தேன். physics (இயற்பியல்) படித்து Aero Nautical Engineering படித்து விஞ்ஞானி ஆனேன்.

மாணவர்களிடையே சனாதிபதி அப்துல் கலாம் ஒரு தமிழ் ஆசிரியரைப் போல முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

நாங்கள் குழந்தைகள் கேள்வி கேட்டால் 'சும்மா இரு. கேள்வி கேட்காதே, எதிர்த்துப் பேசாதே, வாயை மூடிக்கொண்டிரு" என்று சொல்லித்தானே பெற்றோர்கள் அவர்களது வாயை அடைக்கிறார்கள்! அப்புறம் தமிழ்க் குழுந்தை ஒன்று ஒரு அறிவியல்வாதியாக எப்படி எப்போது வர முடியும்?

வாழ்க்கையில் உயர்வதற்கு உயர்ந்த எண்ணம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். தெளிவாகச் சிந்திக்கத் தெரிய வேண்டும். ஏன்? எப்படி? எதற்காக? எனக் கேள்வி கேட்கத் தெரிய வேண்டும்.

இது தெரியாத மூடர்கள் மந்திர தந்திரங்களால்: பூசை புனர்க்காரங்களால், அர்ச்சனை அபிசேகங்களால், தேர் தீர்த்தங்களால், தெட்சனை காப்புக்களால் இறை அருள்பெற்று வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்று நினைத்து கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்கள்!

பூமியில் எள்ளெண்ணைச் சட்டி எரித்தால் அது எப்படி 792 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வாயுக் கோளமான சனியின் கெட்ட பார்வையை அல்லது தோசத்தை நீக்க முடியும்? அதென்ன உயிருள்ள பொருளா? ஆறறிவு படைத்த மனிதர்கள் இவற்றை இட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இன்று மூட நம்பிக்கைகள், முட்டாள்த்தனமான பழக்க வழக்கங்களால் பாழ்பட்டுப் போகும் தமிழ் சமூகத்திற்கு அவசர அவசியமாகத் தேவைப்படுவது அறிவியல் கல்வி. எத்தனை காலத்துக்குத்தான் முத்தமிழின் பெருமையை முழங்கிக் கொண்ருப்பது? நான்காவது தமிழாக அறிவியலைச் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழி மட்டுமல்ல தமிழ் இனமும் ஏனைய சமூகங்களோடு சரிநிகர் சமானமாக தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

தொடர்ந்து விட்ட இடத்தில் இருந்து எழுதுமுன் ஒரு சிலர் தேவ கணம், மனித கணம், ராட்ஸச கணம் என்றால் என்ன? நாங்கள் எல்லோரும் மனித கணம்தானே? பின் எப்படி தேவ கணமாகவோ இராட்ஸச கணமாகவோ இருக்க முடியும் என்று கேள்விகள் கேட்டு எழுதியுள்ளார்கள்.

முதலில் சோதிடம் என்பது ஒவ்வொருவரது மனதில் குடி கொண்டிருக்கும் ஒரு நம்பிக்கை மட்டுமே என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை காரண காரியம் கொண்டு மறுக்க முடியாது.

இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி படித்தேன். புண்ணிய பூமி, புனித கங்கைகள், வானுயர்ந்த கோயில்கள், மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாகக் கூறப்படும் இந்தியாவில் ஒரு மணித்துளிக்கு ஒருவர் காச (tuberculosis) நோயால் இறந்து கொண்டிருக்கிறார். இதேபோல் உலகத்தில் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பாதிப் பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பார்வை தெரியாதவர்கள் எண்ணிக்கையும் அப்படித்தான்.

இதற்குக் காரணம் என்ன? நாளும் கோளுமா? விதியா? அல்லது இந்தியாவில் நிலவும் வறுமை, ஏழ்மை, சூழல் சீர்கேடு, சத்துணவு இல்லாமை, நல்ல குடிதண்ணீர் பற்றாக்குறை போன்றவையா?

இங்குள்ள ஆலயங்கள் பக்தர்களை வானொலியில் தொலைக்காட்சியில் வருந்தி வருந்தி அழைக்கின்றன. ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் அம்பாள் வேண்டு மட்டும் அருள்பாலிப்பாள் என்கிறார்கள். இரண்டு கைகளால் முருகனுக்கு அள்ளிக் கொடுத்தால் முருகன் பன்னிரு கைகளால் திருப்பித் தருவான் என்கிறார்கள்.

தெரியாமல் கேட்கிறேன். தமிழீழத்தில் பக்தர்கள் செய்த அர்ச்சனை அபிசேகம் தேர்த் திருவிழா குடமுழுக்கு கொஞ்ச நஞ்சமா? வாரியாருக்குக் கொடுத்த பீசில் கஞ்சத்தனம் செய்தோமா? எதில் குறை வைத்தார்கள்? அவை என்னவாயிற்று? அங்கு நடக்காத அற்புதம் இங்கு மட்டும் நடந்து விடுமா?

தேவ கணம், மனித கணம், இராட்ஸச கணம் பற்றிய கேள்விக்கு விடை காண்பதற்கு வேதகாலத்துக்கு நாம் திரும்பிப் போக வேண்டும்.

நன்றி: தமிழ் நாதம்
Reply
#2
தகவலுக்கு நன்றி மன்னா
----------
Reply
#3
நன்றி (மன்னா) ஹரி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
உபயோகமான தகவல் நன்றி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)