Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனம் மொழி மதம் கலாச்சாரம் இவற்றிற்கான தொடர்புகள் என்ன?
#1
எவற்றின் அடிப்படையில் எவை உள்ளதாக நீங்கள் எண்ணுகிறீர்கள்?

படிப்பறிவு அற்ற மூளை வழர்சிகுன்றிய என்போருக்கு கொஞ்சம் உதாரணங்களோடு உங்கள் கருத்துகளை வைத்தால் பெருத்த உதவியாக இருக்கும்.

தமிழ்-மொழி திராவிட-இனம்ää நாம் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தோம்ää இந்து சமயம் நம்மவர்களிடையே மற்றய நம்பிக்கைகள் போல பரப்பப்பட்ட ஒன்று. கிறீஸ்தவ மதம் போலன்றி இந்து மதம் அதிகாலம் எம்மத்தியில் பல நூறு சந்ததிகள் வேருhண்டிவிட்டதால் அதன் பண்புகளையும் எமது கலாச்சாரமாக பாக்கிறோம் அல்லவா?

உங்கள் கருத்துக்கள்?
Reply
#2
தமிழரிடம் மதம் இருக்கவில்லை என்று சொல்வது முட்டாள் தனமானது. ஒவ்வொரு மக்கள் கூடட்த்திடமும் ஒவ்வோரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது. அதே போல் தமிழரிடமும் இந்து மதம் என்று ஒரு பெயரில் மதம் இருக்கவில்லை. இப்பெயரீடு பின்னர் வந்தது. இந்து மதம் என்பது ஒரு கூட்டு சாம்பார். அது பல தனி சமய நம்பிக்கைகளின் அதன் தத்துவங்களின் கூட்டு கலவை மட்டுமே. ஆதி தமிழ் இலக்கியங்கள் சங்க காலம் முதல் ஏதோ ஒரு கடவுளை சுட்டியே வருகிறார்கள்
மாயோன் மேய காடுறை உலகமும் எனவரும் பாட்டும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனும் குறளும் சான்று.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
ஆதி மனிதர் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டனர். முக்கியமாக சூரிய வழிபாடு இருந்து வந்தது. தற்போதும் சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் உள்ளனர். பிற்காலத்தில், மதங்கள் நிறுவனமயமாக்கப்பட்டபோது இயற்கையை வழிபட்டோரை மத நம்பிக்கையற்றவர் என்றனர். Pagan என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது தற்போது கடவுள் நம்பிக்கையற்றோரைக் குறித்தாலும், உண்மையில் இது பழையகாலத்தில் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டோரையே குறித்தது.
<b> . .</b>
Reply
#4
நம்பிக்கை என்பது இயற்கையான பண்பு மாத்திரம் அல்ல தனிமனித சுதந்திரம் தான்.
நீர் நிலம் காற்று நெருப்பு சூரியன் என்பன பல நாகரீகங்களினால் வழிபடப்பட்ட ஒன்று.
நிறுவனமயப்படுத்தப்பட்ட நம்பிகை(கள்) தான் ஒரு மதமாக உருவாகிறது என்று கூறலாம் போலுள்ளது?

எமது கலாச்சாரத்திற்கு அருகிலா வேளியேயா அல்லது உள்ளே வைத்தா இந்து மதம் பாக்க வேண்டும்?

திராவிடரிடம் மத நம்பிக்கை இருந்ததா? இல்லை அவர்கள் மத்தியில் இருந்த சில இயற்கை சார்ந்த நம்பிக்கைகளை உள்வாங்கி மேலாண்மை வாதிகளால் தந்திரமாக நிருவாக மயப்படுத்தப்பட்டது தான் இந்து மதமா?
Reply
#5
உண்மையில் திராவிடகடவுள்கள் விறுமாண்டி அண்ணண் மார் எல்லைகறுப்பன் அடுப்பு நாச்சிமார் போன்ற அது போல பிறவும் ஆகும். ஆரிய செல்வாக்குப்பின்னர் எல்லாம் மாறு பட்டது------ஸ்ராலின்
Reply
#6
stalin Wrote:உண்மையில் திராவிடகடவுள்கள் விறுமாண்டி அண்ணண் மார் எல்லைகறுப்பன் அடுப்பு நாச்சிமார் போன்ற அது போல பிறவும் ஆகும். ஆரிய செல்வாக்குப்பின்னர் எல்லாம் மாறு பட்டது------ஸ்ராலின்

ஸ்ராலின்... சிங்களவர்கள் முருகன் தங்கள் கடவுள் என்று சமீபகாலமாகக் கூறிவருவது போல...சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மதம் சார்ப்பான குழப்பத்தை யாழ் கள வாசகர் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் மதமாற்ற நோக்கம் கொண்டோரின் செயற்பாட்டுத் தொனியிலும் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து முன்வைக்கிறீர்கள்..!

மேலே நீங்கள் சொன்னதற்கு உங்களால் இயன்ற ஆதாரங்களைத் தரமுடியுமா...???! சும்மா கற்பனைகளையும் வக்கிரங்களையும் விதைத்து சக மனிதர்களை தப்பா பாதையில் வழிநடத்தாதீர்கள்...! உங்களை மேன்மையானவர் புரட்சிவாதி என்று காட்டிக் கொள்வதற்காக...!

அதேபோல் வாசகர்களும் தகுந்த சான்றுகளுடனான ஆதாரங்கள் இல்லாத கருத்துக்களை உள்வாங்க வேண்டாம்..அதை எவர் தரினும்...குருவிகள் தரினும் கூட....!

குறிப்பாக.. மதமாற்றம் நோக்கி மாணவ அனுமதி வழங்கிய சென் பற்றிக்ஸ் வழிவந்த கல்விக் கூடங்களையும் இதர கிறீஸ்தவ மதம் வழி வந்த பாடசாலைகளையும் தமிழர் சமூகத்துக்கு வழிகாட்டவில்லையா என்று சுட்டிக்காட்டிக் கேட்டதில் இருந்து உங்கள் கருத்துக்களின் உள் நோக்கம் குறித்து சந்தேகிக்க வேண்டிய நிலை இருக்கிறது...!

நாவலரை மையமாக வைத்து வந்த கருத்தில் அவர் ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரியை நாம் உதாரணம் காட்டினோம்...தேவை கருதி... உண்மையில் உங்களிடம் மதம் சார் நிலைப்பாடு இருந்திடாவிடில்... வேம்படி மகளிர் கல்லூரியை யாழ் மத்திய கல்லூரியை...யாழ் ஒஸ்மேனியா முஸ்லீம் கல்லூரியை நீங்கள் குறிப்பிட்ட பாடசாலைகளுடன் சேர்த்து... அவை தமிழர் சமூகத்தை முன்னேற்ற உதவவில்லையா என்று வினவியிருக்கலாம்...! ஆனால் நீங்கள் அப்படிச் செய்யாததும் நீங்கள்... இந்து மதத்தைத் தரக்குறைவாய் விமர்சனம் செய்து தமது வக்கிர ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சாதாரண இந்துக்களின் மனதைப் புண்படுத்த எண்ணும் ஆதிக்க சக்திகளுக்கு துணை போவதும் உங்கள் கருத்துக்களின் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது...!

அதனால் தயவுசெய்து உங்கள் மதம் இனம் மற்றும் கலாசாரம் பற்றிய கருத்துக்களுக்கு இயன்ற ஆதாரங்களை முன்வைத்து அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்குமாறு சக வாசகர்களாக நாம் எதிர்பார்க்கின்றோம்...! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
kuruvikal Wrote:

எனக்கு எந்த தேவையுமில்லை குழப்பத்தை உண்டு பண்ணுவதற்க்கு உம்மைப்போல இன்ர நெற் ஆதாரத்தை மட்டும் கொண்டு எம்மை வளர்த்துக்கொள்ளவில்லை .வாசித்து அறிந்து கேட்டறிந்த விடயஙகளை கொண்டு வரமுடியாது.ஒன்று செய்யும் தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் திருமாவளவன் நெடுமாறன் போன்றோரிடம் தொட்பு கொண்டு கேட்டு பாரும் திராவிட கடவுள்கள்பற்றி--------------------------------முதலில் உமக்கு ஓன்று சொல்லிக்கொள்ள விரும்பிகிறன் உமது கள பொலிஸ்கார நினைப்பை விட்டுவிடும் எனது கருத்துரீதியான நடவடிக்கை எடுக்க மட்டுறத்தினர்கள் பொறுப்பாளர்கள் சொன்னால் கட்டுப்படுவேன் தமிழீழ தந்தை s.j.v செல்வா வின் இந்த மூன்று இனிசியலும் என்ன என்று தெரியுமா விதணடாவாதம் செய்யும் கத்துக்குட்டியான உமக்கு பதிலெழுதிபிரோயசனமில்லை யென்று நினைக்கிறேன்---------------------------------------------ஸ்ராலின்
Reply
#8
எங்கள் எழுத்துக்களுக்கு ஆதாரம் இருக்கு...இன்ரநெட்டில் இருப்பது இலத்திரனியல் கோவைப்படுத்தப்பட்ட ஆவணங்களே...உங்களுக்கு அச்சுப்பதிப்பு இல்ல இதர ஆவணக்கள் சான்றுகள் அவசியம் காட்ட வேண்டும் என்ற நியாய பூர்வ தேவை இருப்பின் எம்மால் அவற்றைக் காட்ட வழிவகை செய்ய முடியும்...உங்களைப் போல அவரைக் கேள் இவரைக் கேள் என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கற்பனைக் கதை வளர்க்கம்...!

தந்தை செல்வாவை இதற்குள் கொண்டு வராது பிறிதொரு இடத்தில் அவருக்கான மரியாதையுடன் கேளுங்கள் உங்களுக்கு விளக்கம் சொல்லத் தயார்...! ஒரு வாசகனாக உங்கள் கருத்துக்கு ஆதாரம் கேட்க எங்களுக்கு உரிமை உண்டு...அதை மட்டுறுத்தினரும் பொறுப்பாளரும் கேட்க வேண்டும் என்ற எந்த விதியும் இங்கு இல்லை...! அப்படிக் கேட்பது களப் பொலீஸ்காரத்தனமல்ல...கருத்துக்கள தர்மம்...! அதுகூடத் தெரியாது நீங்கள் ஒரு கற்பனைக் கருத்தாளராக உலாவருவதில் ஆச்சரியமில்லை...!

உங்களோடு தனிப்பட்ட முறையில் கருத்தாடுவதல்ல எமது நோக்கம்...கருத்தின் நியாயத்தைத் தேடுவதே நோக்கம்...அதைக் காட்ட முடியாதவரிடம் கருத்துக் கேட்பதில் அல்லது அவருக்குப் பதில் கூறுவதில் பயனில்லை...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ஊரில் தற்பொழுது உள்ள நிலவரத்தை வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அறவிக்கும் பொழுது "இந்துக்கள்" என்று தமிழரை பொதுவாக கூற முனைகின்றனர் இதை நீங்கள் புத்தர் சிலை விவகாரத்தை பற்றிய செய்திகளிலும் ஆய்வுகளிலும் காணலாம். தமிழ் இனத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளில் பற்றிய முழுவிளக்கம் பொதுவாக இல்லாததான் வெளிப்பாடு போல உள்ளது.
இந்த குழப்பத்தின் பின்னணியில் தான் இந்த தலையங்கத்தை போட்டேன்.

இதை விட இன்னெரு விடையம்ää எமது கலாச்சாரம் பண்பாடு சம்பிரதாயங்களில் சடங்குகள் கடமைகளில் இந்து சமயம் ஆளமாக வேருன்றியுள்ளது. சிலவேளைகளில் பிரித்துப்பாற்க கடினமாக கூட இருக்கிறது. மதத்தை கால நீரோட்டத்திற்கேற்ப மாற்ற முடியாது. ஆனால் கலாச்சாரத்தில் அப்படியான மாற்றங்களை முக்கியமாக பல தலமுறை இடைவெளியில் அவதானிக்கலாம். இந்த வகையில் தமிழரின் கலாச்சாரத்தில் இந்து மதத்திற்கு முக்கிய பங்கிருந்தாலும் இரண்டையும் ஒன்றாக பார்ப்பது சரியா?
மேற்கத்தேயவர்களிற்கு எவ்வாறு இவற்றை விளங்கப்படுத்தலாம்?

எமது போராட்டம் பயங்கரவாத சாயத்தில் இருந்து வெளுத்து விட்டது. இனி மதவாத சாயத்தை எப்படி விளக்கலாம்?
Reply
#10
மதநம்பிக்கை என்பதைவிட ஒவ்வொரு இனத்திற்கும் ஒருவகை கடவுள் நம்பிக்கை இருந்தது. தன்னை மீறிய சக்தியாக இயற்கையைப் பார்த்து பயப்பிட்ட மனிதன் அவற்றை வழிபடத் தொடங்கினான். வழிபாடுகள் வழக்கமாயின. வழக்கங்கள் மதக்கோட்பாடுகளாயின.

மற்றையது மேலே குறிப்பிட்டுள்ளதுபோல் இந்து மதம் என்று ஒன்று இருக்கவில்லை. அது பல மதங்களின் அல்லது பல கடவுள் நம்பிக்கைகளின் தொகுப்பு. இந்து என்கிற சொற்பதமே ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் உண்டானது என்று கருதுகிறார்கள். இயற்கையை போன்று தனிமனித வழிபாடுகளும் தோன்றின. அவை கடவுள்களாகப் மாற்றம் பெற்றன. சாதனை செய்தவர்கள், தமக்காகப் போராடியவர்கள், தனித்துவமான சக்தியைக் கொண்டவர்கள் ஆகியோர் உயிரோடிக்கும் போதும், இறந்தபின்னும் வழிபடப்பட்டார்கள். வழிபாடுகளின் வடிவங்கள் இடத்துக்கு இடம் மாறுபட்டன. அவை வழக்கங்களாகப் பின்பற்றப்பட்டன.

கலாச்சாரங்கள் மொழி சார்ந்த கலாச்சாரமாகவோ, அல்லது மதம் சார் கலாச்சாரமாகவோ, அல்லது இனம்சார் கலாச்சாரமாகவோ வடிவம் பெறலாம். தமிழர் கலாச்சாரம் என்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அது இனம் சார்ந்ததா? மதம் சார்ந்ததா? என்பது சிக்கலான விடயம்.

Reply
#11
இளைஞன் அவர்களே ஓர் அறிதலுக்காக கேட்கிறேன் கலச்சாரம் என்பதும் நெகிழ்வு போக்குடையதாய்தான் இருக்கும் அது மதம் சார்ந்த கலச்சாரமாகஇருந்தாலென்ன இனம் சார்ந்ததா இருந்தாலென்ன-----அப்படியானால் கலாச்சாரமும் காலத்துக்காலம் மாற்றமடையுமா----------கிறிஸ்தவமத வருகையின் பின்னர் நாவலரனால் சமய சீர்திருத்த செய்யப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்-------------------------------------ஸ்ராலின்
Reply
#12
stalin Wrote:இளைஞன் அவர்களே ஓர் அறிதலுக்காக கேட்கிறேன் கலச்சாரம் என்பதும் நெகிழ்வு போக்குடையதாய்தான் இருக்கும் அது மதம் சார்ந்த கலச்சாரமாகஇருந்தாலென்ன இனம் சார்ந்ததா இருந்தாலென்ன-----அப்படியானால் கலாச்சாரமும் காலத்துக்காலம் மாற்றமடையுமா----------கிறிஸ்தவமத வருகையின் பின்னர் நாவலரனால் சமய சீர்திருத்த செய்யப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்-------------------------------------ஸ்ராலின்

மன்னிக்கவும் ஸ்ராலின் உங்கள் பதிலை இன்றுதான் கவனித்தேன்.

உண்மைதான். கலாச்சாரம் என்பதும் நெகிழ்வுப் போக்குடையதாய்த்தான் இருக்கும். ஒன்றன் மேல் ஒன்று ஆதிக்கம் செலுத்துவதும், ஒன்றுள் இன்னொன்றைத் திணிப்பதுவும், உன்றை இன்னொன்று உள்வாங்குவதுமாய் கலாச்சாரம் என்பது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்துகொண்டே இருக்கிறது.

___________________________________________________________________
கலாச்சாரம் - மதம் - இனம் - மொழி என்பவற்றில் எதை/எவற்றை எதனுள்/எவற்றுள் உள்ளடக்குவது என்று ஆராய்ந்தல் அது சிக்கலானதாகவே இருக்கும். கலாச்சாரத்தை மதத்துக்குள்ளும், மதத்தைக் கலாச்சாரத்துக்குள்ளும் உள்ளடக்கி நாம் சமூகத்தை நோக்கமுடியும்.

___________________________________________________________________
அது ஒருபுறமிருக்க ஹன்றிங்டன் என்பவர் சொல்கிறார் நாகரீகங்கள் இடையிலான முரண்பாடுகள் தான் இன்றைய உலகமோதல்களாக நிகழ்கின்றன என்று. ஹன்றிங்டனின் இந்த வாதத்தை பற்றி அன்ரன் பாலிசிங்கம் அவர்களும் தனது "விடுதலை" நூலில் ஆழமாக அலசியுள்ளார்.

அவற்றில் இருந்து:
Quote:"நாகரிகங்கள் மத்தியிலான முரண்பாடும் மோதலுமாகவே இனப் போர்கள் வெடிக்கின்றன. நாகரிகங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அவை மத்தியில் நிலவும் உறவு முறைகளுமே எதிர்கால உலக ஒழுங்கமைப்பையும் மனித வரலாற்றின் போக்கையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்டனின் வாதம்"

Quote:"இன விடுதலைப் போராட்டங்களை பண்பாட்டுத் தனித்துவத்திற்கான போராட்டமாக மட்டும் வரையறுத்துப் பார்க்க முனைவது தவறு. அந்நிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தேச சுதந்திரம் வேண்டி நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஆழமான பரிமாணங்களை அவர் (ஹண்டிங்டன்) கண்டு கொள்ளவில்லை."

எனக்கென்னவோ இதில் ஹன்றிங்டனின் வாதம் சரியானதாகவே படுகிறது. அந்நிய அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கும்போது அது தமது நாகரீகத்தை இன்னொரு நாகரீகத்தின் மீது திணிக்க முயல்கையிலும், தனது நாகரீகத்தை மேன்மையானதாகவும், அதிகாரமுடையதாகவும் நிறுவமுயல்கையிலுமே நிகழ்கிறது. அந்தவகை அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான போராட்டம் பண்பாட்டுத் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே தொடங்குகிறது. அதன்பின்னரே அது தேசவிடுதலைப் போராட்டமாகப் பரிணமிக்கிறது எனது கருத்து. இதற்கு உதாரணமாக அண்மையில் திருகோணமலையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையும், அதற்கெதிரான மக்களின் கொந்தளிப்பையும் காட்டலாம்.

___________________________________________________________________

கிறிஸ்தவமத வருகையின் பின்னர் நாவலரால் சமய சீர்திருத்தம் செய்யப்பட்டதென்று நானும் படித்திருந்தேன் - ஆனால் அது எவ்வகையான மாற்றம் என்பது பற்றி அறியேன்.

ஒன்று மட்டும் தெளிவு: கலாச்சாரம் என்பது மிகச் சிக்கலான விடயம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/i]

Reply
#13
நனறிகள் இளைஞன் விளக்கம் தந்தமைக்கு....கலச்சாரம் என்பது சிக்கலான விடயம் தான்--------ஸ்ராலின்
Reply
#14
இளைஞன் Wrote:

எனக்கெண்டா நீங்க எழுதினதொண்டும் விளங்கலண்ணா. கலாச்சாரமெண்டுறீங்கள் பிறகு மதமெண்டுறீங்கள். புத்தர் சில கலாச்சார பிரச்சனையோ இல்லாட்டி மதப் பிரச்சனையோ இனப்பிரச்சனையோ அத சொல்லுங்கோவன்.

எனக்கெண்டா கலாச்சம் எண்டுறது சும்மா பொய்க்கு கத்துகினம். இதான் எங்கட கலாச்சாரமெண்டுகினம் ஆனா ஒருவரும் உங்கட கலாச்சாரமெண்டா என்னெண்டு ஒழுங்கா சொல்லுகினமில்ல. கலாச்சாரமெண்டால் என்னெண்டு சொல்லுங்கோவன் யாரவாது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)