ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம்
பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான்.
ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும்.
வெளியான வெள்ளிக்கிழமையில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தொடர்ந்து வசூலை அள்ளிக் குவிக்கிறது பட்டியல்.
இளைய நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ள ஆர்யாவும், பரத்தும் தனித்தனியே நடித்து வெற்றிப் படம் கொடுத்தவர்கள். பாய்ஸில் அறிமுகமான பரத் காதல் படத்தில் அப்பாவிக் காதலனாக வாழ்ந்து சிறந்த நடிகராக பரிணமித்துள்ளவர். பட்டியல் படத்தின் கடைசி நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார் பரத்.
கையில் பாட்டிலுடன் அனல் பறக்கும் ஆக்ஷன் நாயகனாக கலக்கியிருக்கிறார் ஆர்யா. திரையரங்கம் முழுவதும் படம் முடியும் வரை காதைக் கிழிக்கிறது ஆர்யா...ஆர்யா...என்ற ரசிகர்களின் ஆவேசக் கூச்சல். வெள்ளித் திரைக்கு வெளியிலும் நண்பர்களாக இருக்கும் இந்த 2 இளம் ஹீரோக்களுக்கும் பட்டியல் படத்தின் வெற்றி போனஸ்.
விருதுநகரில் படப்பிடிப்பில் இருக்கும் பரத், 2 ஹீரோக்கள் கதை என்றதும் முதலில் தயங்கினேன். என் நண்பர்கள் வேறு வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால் விஸ்வநாதன் சொல்லக் கேட்டவுடனே தயக்கமெல்லாம் பறந்தோடி விட்டது என்றார்.
ரசிகர்(கை)களின் செல்பேசி சிணுங்கல்களுக்கு மத்தியில் முத்துக் குளிக்கும் ஆர்யா, 2 ஹீரோ படங்கள் சினிமாத் துறைக்கும் நல்லது. நல்ல கதை, திரைக்கதையின் மூலம் கூட்டாகவும் வெற்றியைச் சாதிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் என்கிறார். அதிரடி நாயகனாகவும் நிரூபித்த திருப்தி ஆர்யாவுக்கு. அனைத்து முன்னணி தமிழ் நாயகர்களையும் கவர்ந்திருக்கிறது பட்டியல். விக்ரம் முதல் நாளே பார்த்துவிட, படம் பார்த்த விஜய் இருவரையும் அழைத்து வானளாவ புகழ்ந்திருக்கிறார். ஆக பட்டியலின் புகழ் எங்கும் வாசிக்கப்படுகிறது.
எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறது பட்டியல். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முகமெல்லாம் புன்னகை. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.300 கொடுக்கக் கூட தயாராக ரசிகர்கள்.
புதுவையை பொறுத்த வரையில் ரஜினி படம் என்றால் மட்டுமே 2 தியேட்டர்களில் திரையிடப்படும். ஆனால் அலைமோதும் கூட்டத்துக்கிடையில் பட்டியல் 2 திரையரங்குகளில் ஓடுகிறது. ஆண்கள் கூட்டம் அலைமோதும் ரோஹினி தியேட்டரில் கல்லூரிப் பெண்கள் டிக்கெட் வாங்க முண்டியடிக்கின்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளுக்கான அனைத்துக் காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்து விட்டது என்கிறார் திருவண்ணாமலை பாலசுப்ரமணியா தியேட்டர் உரிமையாளர் அம்பிகாபதி. இந்த போக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்தால் படம் சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமில்லை.
dinamani.com
விடுப்பு : [img
<img src='http://img83.imageshack.us/img83/5439/main010hj.jpg' border='0' alt='user posted image'>]
[/img]
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>