07-20-2005, 07:58 AM
கல்லூரிக்குள் புகுந்து 15 பேர் கும்பல் அட்டகாசம்: ரூ. 10 லட்சம் கொள்ளை
ஜூலை 20, 2005
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரிக்குள் புகுந்த 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் 7 காவலாளிகளைத் தாக்கி விட்டு ரூ. 10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது
திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்ப் பந்தல் என்ற இடத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக கல்லூரிக்கு நேற்றிரவு 15 பேர் கொண்ட கும்பல் வந்தது.
கல்லூரியில் பணியில் இருந்த 7 காவலாளிகளையும் இக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாறுமாறாக அடித்துக் கட்டிப் போட்டனர். தடுத்த சில காவலாளிகளுக்கு கத்திக் குத்தும் விழுந்தது. பின்னர் 7 பேரையும் ஒரு அறைக்குள் போட்டு அடைத்தனர்.
அவர்களது வாயில் துணியை வைத்து சப்தம் வராத அளவுக்கு அடைத்தனர்.
அதன் பின்னர் முதல்வர் அறை, காசாளர் அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளின் பூட்டுக்களை உடைத்துத் திறந்து உள்ளே சென்றனர். இதில் காசாளர் அறையில் இருந்த பணப் பெட்டகத்தை உடைக்க முயன்று முடியாத காரணத்தால் அதை அப்படியே எடுத்துச் சென்றனர்.
மொத்தம் ரூ. 10 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி-Thats Tamil.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

hock: