07-24-2005, 12:15 PM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அணு குண்டுக்கு இந்த வருடம் வயது 60</span>
60 ஆண்டுகளுக்கு முன்னால். பொழுது இன்னும் புலராத ஒரு காலைப் பொழுது.
அமெரிக்காவின் நியு மெக்சிக்கோ பாலைவனத்தின் நடுவே ஒரு பெரிய பளிச்சிடும் வெளிச்சம் வான் பரப்பை நிறைத்ததது.
150 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கண் பார்வை அற்ற சிறுமி ஒருத்திக்கே தெரியக் கூடிய பளிச்சிடும் வெளிச்சம்.
அந்த வெளிச்சத்துடன் வந்த பெரும் இரைச்சலும் அதிர்வலையும் - அது என்னவென்று தெரிந்த விஞ்ஞானிகளையும் ராணுவத் தலைமை அதிகாரிகளையும் வந்தடைந்தன.
பாலைவனத்தின் நடுவே நிலத்திலிருந்து சுமார் 12,000 மீட்டர் உயரத்துக்கு ஒரு ராட்சத காளான் போல பன்னிற புகை மண்டல முகில் கூட்டம் தோன்றியது.
அந்த வெளிச்சம், புகை மண்டலம், இரைச்சல், அதிர்ச்சி அனைத்தும் கட்டியம் கூறியது அணு யுகம் உதித்து விட்டதை.
பூவுலகில் அணு குண்டு யுகம் பிறந்து இன்றுடன் அறுபது ஆண்டுகளாகின்றன.
மன்ஹட்டன் புரொஜெக்ட் என்று ரகசியப் பேரிடப்பட்ட திட்டத்தின் கீழ் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜேர்மானிய எதிரிக்கு எதிராக நடந்த ஆயுதப் போட்டியில் 28 மாத காலத்துக்குள் உருவானது குண்டு இது.
அன்று நடந்த சோதனை-வெடிப்பு அத்தனை வெற்றிகரமாக அமையுமென்று அதில் சம்பந்தப்பட்டிருந்த 2000 விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்களில் எவருமே எதிர்பாத்திருக்கவில்லை.
அந்தச் சிக்கலான புளுட்டோனிய அணு குண்டு வெடித்ததில் அதைத் தாங்கியிருந்த எஃகு கோபுரமே ஆவியாகிக் கரைந்து விட்டது.
அக் குண்டு 20 ஆயிரம் தொன் எடையான ரி.என்.ரி வெடிகுண்டு வெடித்ததற்கு சமமானது.
அது வெடித்த இடத்தில் ஏற்பட்ட குழியின் அகலம் சுமார் 4000 மீட்டர்.
இதற்கு 3 வாரத்துக்குப் பின்னால் குட்டிப் பையன் "லிட்டில் போய்" எனப் பெயரிடப்பட்ட அணு குண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் போடப்பட்டது.
அதற்கு இன்னும் 3 நாள் கழித்து ஆகஸ்ட் 9 குண்டன் "பட் மான்" என்ற அணு குண்டு நாகசாகி நகரை அழித்தது.
அவ்விரு குண்டுகளிலிலும் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் இறந்தனர்.
ஒரு வாரத்தில் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்தது. அந்த உலகப் போரில் உயிரழந்தவர் சுமார் 50,000,000.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

:wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->