07-24-2005, 04:18 PM
சென்ற வாரம் சென்னையே அல்லோகலகல்லோகலப் பட்டுவிட்டது. இன்னா மேட்டருன்னு கேக்கறீங்களா... இந்தியாவின் ஒண்ணாம் நம்பர் ஜோதிடத் திலகர், நம்பர் ஒன் வாஸ்து வல்லுனர், முதல் எண் நியூமராலஜி நிபுணர், டாப் மோஸ்ட் அதிர்ஷ்டக் கல் வித்தகர் (மொத்தம் நாலு பேரான்னு கேக்காதீங்க, எல்லாம் ஒரே ஆளுதான்)திருதிரு. சுபஸ்வரா99லிங்கர்3 (நியூமராலஜி, நேமாலஜி, பயலாஜிப்படி பேரை இப்படி ரிப்பேர் பண்ணி மாத்தியிருக்காருங்கோ!) சென்னைக்கு (திருட்டு ரயில்ல) வந்திருந்தாரு. ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு லாட்ஜ்(க்கு வெளியே ப்ளாட்பாரத்துல) -அங்கதான் தங்கியிருந்தாரு. நம்ம பிரபலங்கள் சிலர் முக்காடு போட்டு மூச்சுவிடாம அவரைச் சந்திச்சு ஆலோசனை கேட்டுக்கினு வந்திருக்காங்கோ! நாம வுடுவோமா? யாரு யாரு சந்திச்சாங்கோ? இன்னா பேசிக்கிட்டாங்கோ? -நம் நிருபர் கொடுத்த ஒரு ரகசியா ரிப்போர்ட்... ச்சீ, ரகசிய ரிப்போர்ட்! (ஹலோ, ஏக் நிமிட், அதான் ரகசிய ரிப்போர்ட்னு சொன்னோம்ல, இப்படி பப்ளிக்கா படிக்கிறீக, போய் பாத்ரூமுக்குள்ள குந்திகினு கதவை மூடிக்கினு படிங்க!)
ஜூலை இரண்டாம் வாரம் ஒரு இருட்டு வேளை... விஜய டி.ராஜேந்தர் விருட்டென சைக்கிளில் வருகிறார். முகத்தில் முடிக்காடு, தலையில் முக்காடு! (அங்கே நடந்த உரையாடல் அப்படியே குத்துமதிப்பாக!)
விஜய டி.ஆர்: நான் விஜய டி.ஆருங்க! வந்திருக்கேன் வருங்காலத்தைப் பாருங்க!
லிங்கர்: வா மகனே, உன் அடையாளம் தாடி, நீ சிம்புவின் டாடி, சைக்கிளில் வந்திருக்கிறாயே எதை நாடி?
விஜய டி.ஆர்: இது சைக்கிளு, இப்ப என் போராட்ட வெகிக்கிளு, ஏன்னா ஏறிப்போச்சு பெட்ரோலு, "என்னான்னு நீ கேளு'ன்னு மனசாட்சி சொல்லிச்சு! என் காலு பெடலு மிதக்க கௌம்பிச்சு!
லிங்கர்: உங்களுக்கு இப்ப உதட்டில் தோஷம்!
விஜய டி.ஆர்: நம்பளுக்கில்ல சிம்புவுக்கு. அடிச்சான் கிஸ்ஸþ சிம்பு; அதனால் வந்துச்சு வம்பு!
லிங்கர்: உனக்கும் தோஷம் உள்ளது மகனே!
விஜய டி.ஆர்: ஆங்... டமுக்கு டுமுக்கு டாமி, இப்ப நான் என்னா செய்யணும் சாமி?
லிங்கர்: இப்படி ஏப்பம் வந்தால் கூட எதுகை, மோனையில பேசி மொக்க போடுறதை விடணும். பேசறப்போ ஆடாம பேசணும். முக்கியமா வடை விக்கிற ஆயா ஈ ஓட்டுற மாதிரியே கையை ஆட்டிகிட்டு பேசவே கூடாது. இப்ப எடுக்கிற படத்தோட பேரு என்ன மகனே?
விஜய டி.ஆர்: வீராசாமி
லிங்கர்: அதை மாற்ற வேண்டும்.
விஜய டி.ஆர்: ராமதாúஸ சும்மா இருக்காரு. நீங்க ஏன் மாத்தணும்னு சொல்லுறீங்க?
லிங்கர்: ஆங்கிலத்துல ய எத்தனையாவது எழுத்து?
(விஜய டி.ஆர், தன் கை விரல்கள், கால் விரல்கள் எல்லாவற்றையும் உபயோகித்து எண்ணத்தொடங்குகிறார். இருபத்திரெண்டு நிமிடங்கள் கழித்து)
விஜய டி.ஆர்: 22
லிங்கர்: அது உங்களுக்கு ஆகாது. படம் தியேட்டரில் போகாது. ஆங்கில எழுத்து வரிசையில் ய-யோட இடத்தை 27-ன்னு மாத்து. இல்லாட்டி படத்தோட பேரை "லாராசாமி'ன்னு மாத்து. இல்லாட்டி போயிடுவ தோத்து!
விஜய டி.ஆர்: வேற எதையும் மாத்தணுமா?
லிங்கர்: உங்கள் தாத்தாவுக்குப் பெரியப்பாவோட ஒண்ணுவிட்ட தம்பியோட பக்கத்து வீட்டுக்காரரோட பேரு "அங்குசாமி'. ம்ஹீம், அந்த பேர் உங்களுக்கு ஆகாது. அதை "சங்குசாமி'ன்னு மாத்தறது மங்களம்.
விஜய டி.ஆர்: சாமி, என் அரசியல் வாழ்க்கை பிரகாசமா அமைய என்ன பண்ணனும்?
லிங்கர்: அதுலயும் உங்களுக்குப் பேர் தோஷம் இருக்கு! அதனால பிரதோஷத்துக்குப் பிரதோஷம் உங்க பேர்ல இருந்து கடைசி எழுத்தைக் குறைச்சுக்கிட்டே வரணும். வர்ற பிரதோஷத்துல உங்க பேரை "விஜய டி.ராஜேந்த'ன்னு மாத்திடணும். அப்புறம், "விஜய டி.ராஜேந்', இப்படி பண்ணிக்கிட்டே வந்தா...
விஜய டி.ஆர்: எனக்குப் பேரே இல்லாம போயிடும். ஏய், நீ ஒரு போலி. உன்னை நான் ஆக்குறேன் காலி!
- என டென்ஷனாக டயலாக் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் விஜய டி.ஆர்.
மறுநாள்... பகல் வேளை...
எம்.ஜி.ஆரின் பழைய பிரச்சார வேன், ஓசையின்றி வந்து நின்றது. உள்ளிருந்து ரெயின்கோட் அணிந்த ஒரு உருவம் பம்மியபடி இறங்குகிறது. உத்துப் பார்த்தா, அட நம்ம விஜயகாந்த்!
லிங்கர்: வா மகனே, நீ வரவேண்டிய நேரம் வந்துவிட்டது.
கேப்டன்: அதாங்க, அறுத்தது போதும், வருத்தது போதும், பொருத்தது போதும்னு "குபுக்'குனு பொங்கி எளுந்துட்டேன்.
லிங்கர்: அடங்கு, உனக்கு அப்பாயின்மெண்ட் 12 மணிக்குக் கொடுத்திருந்தேனே, அதைச் சொன்னேன்.
கேப்டன்: அர்சியள்ல நான் குதிக்கிற நேரம் சரிதானே?
லிங்கர்: இல்லை உன் வாட்ச் பத்து நிமிடம் பாஸ்ட்டாக ஓடுகிறது.
கேப்டன்: ஒரு கடிகாரத்துல 12 நம்பர் இருக்கு. ரெண்டு முள் இருக்கு. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கு. அதுல 1440 நிமிசம் இருக்கு. அதுக்குள்ள 86400 செகண்ட் இருக்கு... தமிழ்நாட்டுல 25637343 வாட்ச் இருக்கு. அதுல 457865 வாட்ச் ஓடாம இருக்கு...
லிங்கர்: இப்படி எதுக்கெடுத்தாலும் புள்ளி விவரம் சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா, உங்களுக்கு நியூமராலஜில பிரச்சினை வரும்.
கேப்டன்: கண்டிப்பா மாத்திக்கிறேன். மதுரையில மாநாடு நடத்தலாமா?
லிங்கர்: அதுல வாஸ்துக் கோளாறு இருக்கு.
கேப்டன்: அதுக்குத்தான் கூட்டத்தைக் கூட்டி கும்மாளமா பூமி பூசை பண்ணிட்டேனே!
லிங்கர்: இல்லை. உங்கள் வீட்டுக்குப் பால் போடுறவர் ஜாதகப்படி அவருக்கு செவ்வாய் தோஷம்.
கேப்டன்: அதுக்கு நான் என்ன பண்ணனும்? அவரை நிறுத்திரவா?
லிங்கர்: ...ம். அதுக்கு பரிகாரமா செவ்வாய் கிரகத்துல போய் சிம்பிளா ஒரு ஹோமம் பண்ணிட்டு வந்தீங்கன்னா, அவரை நீங்க ஒரு தொகுதியில வேட்பாளராவே நிறுத்தலாம். அப்புறமா உங்களுக்கு "மேடை தோஷம்' இருக்கு. அதனால இனிமே பொதுக்கூட்டங்களில் மேடையில ஏறி பேசாம, மேடைக்கு மேலே மேற்கூரையில ஏறிப்பேசுறது உத்தமம்.
கேப்டன்: நான் என்னோட கட்சி வலர்ச்சிக்கு என்ன பண்ணனும்?
லிங்கர்: தொண்டர்களுக்கெல்லாம் காம்ப்ளான் வாங்கிக்கொடுக்கணும். உங்க கட்சியில "மருத்துவர்' அணி இருக்கிறது நல்லதில்ல. அப்புறம் "வழக்கறிஞர்' அணியில யாரும் கருப்பு கோர்ட் போடுறது ஷேமமில்ல! "மகளிர் அணி'யில "அம்மா' ஆனவங்களைச் சேர்த்துக்கறது நல்லது!
கேப்டன்: யாரோடயும் தேர்தல் கூட்டணி வச்சுக்களாமா...
லிங்கர்: தமிழ்நாட்டுல உங்க ஜாதகம், யாரோட ஜாதகத்தோடயும் பொருந்தல. அலசி ஆராய்ந்து, பிழிந்து, காயப்போட்டு பார்த்ததில் உ.பி.ல மாயாவதியோட பகுஜன் சமாஜ் கூடவும், அமெரிக்காவுல புஷ்ஷோட குடியரசுக் கட்சியோடயும் கூட்டணி வைச்சுக்கிட்டா, தமிழகத்துல உங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு!
கேப்டன்: நீங்கலே என் கட்சிக்கு ஒரு பேரை வச்சுருங்கலேன்.
லிங்கர்: விஜய திராவிட காந்த முன்னேற்ற கழகம்.
கும்பிடு போட்டுவிட்டு குழம்பிப் போய் இடத்தைக் காலி பண்ணினார் கேப்டன்.
அடுத்த நிமிடமே இன்னொரு கேப்டன் (!) வந்தார். அட கங்குலிங்க!
கங்குலி: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
லிங்கர்: நீங்கள் எப்படி ஆக விரும்புகிறீர்கள்?
கங்குலி: ஏன் என்னோட பழைய பார்ம் போச்சு?
லிங்கர்: காரணம் நீங்கள் "ரன்' தமிழ் படத்தைத் திருட்டு விசிடியில் பார்த்தீர்கள். அதனால் லிங்குசாமியின் சாபம் உங்களை இப்படி ஆக்கிவிட்டது.
கங்குலி: அதுக்கு பரிகாரம் என்ன?
லிங்கர்: மூன்று மாதத்திற்கு வாராவாரம் திங்கள்கிழமை மெüனவிரதம் இருந்து நக்மாவிற்கு மாவிளக்கு போட்டீர்கள் என்றால் நிவர்த்தியாகிவிடும்.
கங்குலி: நான் மட்டுமே கேப்டனாக நீடிக்க என்ன பண்ணனும்?
லிங்கர்: நல்லா விளையாடணும். அதுக்கு இப்ப இருக்குற சர்வதேச மைதானங்கள் எதுவுமே உங்களுக்கு ஒத்துவராது. அதனால மைதானத்தின் அளவை 16ஷ்16 அடிகள் இருக்கும்படி கிரிக்கெட் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
கங்குலி: பாவிப்பசங்க. இதுக்கு ஒத்து வர மாட்டாங்களே! வேற எதுவும் பண்ண முடியுமா? என் பேட்டுல எதுவும் கோளாறா?
லிங்கர்: உண்மைதான் மகனே.
கங்குலி: அதுக்கு என்ன பண்ணனும்?
லிங்கர்: சானியா மிர்சாவின் மட்டையை வைத்து ஆறு மேட்சுகள் விளையாண்டால் சரியாகிவிடும்.
கங்குலி: அய்யோ, அது டென்னிஸ் பேட்டாச்சே! வேற பரிகாரமே கிடையாதா?
லிங்கர்: இருக்கிறது. உங்கள் பேட் செய்யப்பட்ட மரத்தில்தான் கோளாறு. அதில் "ஜலதோஷம்' இருக்கிறது.
கங்குலி: அதுக்கு விக்ஸ் ஆக்ஷன் 500 சாப்பிடணுமா?
லிங்கர்: இல்லை. இந்த அதிர்ஷ்டக் கல் மோதிரத்தை அணிய வேண்டும்.
கங்குலி: போட்டுக்கிறேன்.
லிங்கர்: நீங்கள் அணியக்கூடாது. இந்த பச்சைக் கல் மோதிரத்தை உங்கள் மட்டையின் கைப்பிடியில் மாட்டிவிட்டு மைதானத்திற்குள் இறங்குங்கள். இதோ இந்த மஞ்சள் வண்ண தாயத்துக்களை செலக்ஷன் கமிட்டி மெம்பர்களின் சுண்டுவிரலில் கட்டிவிடுங்கள். இந்த சிவப்பு நிற தாயத்தை பந்து போடுபவரின் நெற்றியில் கட்டிவிடுங்கள். இந்த ஊதா நிற அதிர்ஷ்ட கம்மலை அம்பயரின் காதில் மாட்டிவிடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான். ஆட்டத்திற்கு ஆட்டம் ஐம்பது, நூறு என ரன்களைக் குவிப்பீர்கள்.
கங்குலி பயபக்தியோடு எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு தட்சணையாக "காராச்சேவும், கடலை மிட்டாயும்' கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
டெல்லிக்கு சென்று அத்வானிக்கும், மன்மோகனுக்கும் ஜோசியம் பார்த்துவிட்டு, தற்சமயம் திருதிரு. சுபஸ்வரா99லிங்க3, பிகாரில் முகாமிட்டிருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூற மறுக்கின்றன.
கட்டுரை: நிருபர் கூட்டணி
புகைப்படங்கள்: யாருமே எடுக்கவில்லை
Thanks
inamani

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............