Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னமா idea போடுறாங்க
#1
பிரபல கொள்ளைக் கும்பலை சேர்ந்த தம்பதிகள், தாங்கள் சிறையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஒரு தந்திரம் செய்தனர். "எங்களை சிறை வளாகத்தில் உள்ள கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று சிறைத்துறை அமைச்சர் வந்தபோது சொல்ல, அவரும் பக்திப் பரவசத்தை பார்த்து "ஓகே' சொல்லிவிட்டார். ஆனால், இந்த கேடி தம்பதிகள் விஷயத்தில் அதிகாரிகள் தான் கடுப்பாகி உள்ளனர்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் பயங்கர கொள்ளைகள், கொலைகள் செய்து வந்த பல கொள்ளையர்கள் கடந்தாண்டு சரண் அடைந்தனர். அப்படி சரண் அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ராமஷ்ரே சவுபே, அவர் மனைவி குசுமா நயீன். சவுபேயை "பக்காட் பாபா' என்று அவரின் கூட்டத்தில் அழைப்பர்.

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு ஜூன் எட்டாம் தேதி சரணடைந்தனர். போபால் சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். தம்பதிகள் இருவரும் பார்த்து பேச முடியவில்லையே என்று தினமும் குமுறினர். அதற்கு "பக்காட் பாபா' ஒரு தந்திரம் செய்தார். தன்னை பார்க்க வரும் உறவினரிடம், தன் மனைவியிடம் ஒரு யோசனை சொல்லுமாறும், அமைச்சர் வரும் போது அதை சொல்ல வேண்டும் என்று கூறி, தன் "தந்திரத்தை' சொன்னார்.

அதாவது, "நாங்கள் ரொம்பவும் பக்தி மிக்கவர்கள். நாங்கள் கோயிலுக்கு செல்ல வேண்டுமானால், சிறை வளாகத்தில் ஆண்கள் சிறைப்பகுதியில் தான் கோயில் உள்ளது. அங்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்' என்பதே அந்த "தந்திர' கோரிக்கை. இதே கோரிக்கையை தானும், தன்னை சேர்ந்தவர்கள் மூலமும் கேட்க முடிவு செய்தான்.

கடந்த மாதம் சிறைத்துறை அமைச்சர் தால் சிங் பிசேன் வந்தார். அவர் முன் கைதிகள் நிறுத்தப்பட்டனர். கொள்ளைக்கும்பல் கைதிகள் எப்படி உள்ளனர் என்று விசாரிக்கும் போது, "பக்காட் பாபா' எழுந்து, "ஐயா, நாங்கள் கடவுள் பக்தி உள்ளவர்கள். ஏதோ அறிவில்லாமல் கொள்ளை, கொலைகளில் இறங்கி விட்டோம். அதெல்லாம் பழைய கதை. நாங்கள் திருந்தி விட்டோம், நாங்கள் கடவுளிடம் பிராயச்சித்தம் கேட்க விரும்புகிறோம். நாங்கள் தினமும் கோயிலுக்கு போக அனுமதிக்க வேண்டும். என்னுடன் என் மனைவியும் பக்தி அதிகம் உள்ளவர். அவரை என்னுடன் தினமும் ஒரு மணி நேரம் வழிபாட்டு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று மன்றாடினார்.

இதைக்கேட்ட அமைச்சர் சந்தோஷப்பட்டார். அதிகாரிகளை அழைத்து உடனே இவர்களை கோயிலுக்கு சென்று பூஜை செய்ய அனுமதியுங்கள்' என்றார். அதிகாரிகள் தயங்கினர். இப்படி கைதிகளை அனுமதித்தால் விபரீதம் ஏற்படும் என்று அவர்களுக்கு தானே தெரியும்.

இப்படி கடந்த காலங்களில் அமைச்சர் சொல்லி கைதிகளுக்கு சலுகை காட்டி அதிகாரிகள் படாதபாடு பட்ட அனுபவ சம்பவங்கள் நிறைய உண்டு. சில ஆண்டுகள் முன்பு, இப்படித்தான் தம்பதி கைதிகள் சந்தித்து பேச அனுமதிக்கலாம் என்று அமைச்சர் சொல்லிவிட்டார். அப்படி அனுமதி வாங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரபல கொள்ளையன் அரவிந்த் கஜ்ஜார். அவனுடன் சிறையில் இருந்த அவன் மனைவி சீமா கஜ்ஜார் சந்திக்க அனுமதி தரப்பட்டது.

சில மாதங்களில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சீமா கஜ்ஜார், ஆறு மாத கர்ப்பம் என்பதே அது. என்ன செய்வது என்றே தெரியாமல் அதிகாரிகள் உறைந்து போயினர். எனினும், சீமாவுக்கு குழந்தை பிரசவம் பார்க்க தனியாக டாக்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படி ஏதும் நடந்து மீண்டும் பிரச்னை கிளம்பி விடக்கூடாது என்று ஜெயில் அதிகாரிகள் கவலை அடைந்தனர். அமைச்சர் சொன்னாலும், ஆரம்பத்தில் அதிகாரிகள் "பக்காட் பாபா' தம்பதிகளை கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால், டி.ஐ.ஜி., விஜயவார்கியா இதுதொடர்பாக உத்தரவு போட்டதும் அதிகாரிகளுக்கு வழியில்லாமல் போய்விட்டது. இந்த கைதி தம்பதி, டி.ஐ.ஜி., வந்தபோது, அமைச்சர் அனுமதித்தும் தங்களை கோயிலுக்கு போக அதிகாரிகள் விடுவதில்லை என்று புகார் கூறிவிட்டனர். அதனால், வேறு வழியின்றி டி.ஐ.ஜி., உத்தரவு போட வேண்டியதாயிற்று.

இப்போது தினமும் மணிக்கணக்கில் பூஜை என்ற பெயரில் "பக்காட் பாபா' தம்பதிகள் கோயிலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். போலீசார் கேட்டால், கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல பாசாங்கு காட்டுகின்றனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)