Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.ஆர்.ஏ ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுகிறது
#1
ஐ.ஆர்.ஏ தனது ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது

வட அயர்லாந்தில் பல தசாப்தங்களாக நடந்து வந்த பிரிவினைவாதப் போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

வட அயர்லாந்தில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தி வந்த ஐரிஷ் குடியரசுப் படை தனது வன்முறை இயக்கத்தை இன்று மாலை ஜிம்டி நேரப்படி 1500 மணியிலிருந்து கைவிடுவதாக அறிவித்துவிட்டது.

தனது உறுப்பினர்கள் அனைவரும் ஆயுதங்களை களையுமாறு அது கோரியுள்ளது.

இனி அரசியல் வழிமுறையில் ஈடுபட விரும்புவதாகவும் அது கூறியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை, வட அயர்லாந்தை 1998 ஏப்ரலில் கையெழுத்தான நல்ல வெள்ளி ஒப்பந்தத்துடன் தொடங்கிய ஒரு வழிமுறையின் முடிவுக்கு ஒரு பெரிய அளவில் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

இந்த ஒப்பந்தம், வட அயர்லாந்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட ஒரு நுண்மையான பேரார்வம் மிக்க ஒரு திட்டம்.



இந்த ஒப்பந்த்தின் கீழ், பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசுகள் , அரசியல் கட்சிகள், இரண்டு சமுதாயங்களைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள், என எல்லோருக்கும் கடப்பாடுகள் இருந்தன.

எனவே இந்த ஒப்பந்ததின் இறுதி வெற்றியால் அனைவருக்குமே லாபம்தான்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் தன்மை காரணமாக, ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியைச் சார்ந்தே இருக்க வேண்டியிருந்தது.

ஒரு குழு செய்ய வேண்டிய ஒரு பகுதி வேலையை செய்ய தாமததித்தால் அது ஒட்டு மொத்த வழிமுறையையே ஸ்தம்பிக்க வைத்துவிடக்கூடும்.
மேலும் கடந்த ஏழு ஆண்டுகளில் இது போல ஒட்டு மொத்த வழிமுறையே ஸ்தம்பித்த பல தருணங்கள் உண்டு.

ஐ ஆர்.ஏ தனது ஆயுதங்களை கீழே போட வைப்பது என்பது தான் மிகவும் சிரமமான கட்டம் ஏனென்றால், ஐ.ஆர்.ஏ ‘தான்’ சரண் அடைவது போல தோற்றம் அளிக்கக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயாராக இல்லை.

ஆனாலும் இந்த அடிப்படையான போர்நிறுத்தம் நீடித்தத்து.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குழுக்கள் காலப்போக்கில் எந்தவிதத்திலும் பொருத்தமற்றவர்களாக, காலாவதியானவர்களாக, அதிலும் குறிப்பாக, ஒரு கத்தோலிக்க ஆண் ஒரு மதுக்கடைக்கு வெளியே சாதாரணமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் போன்ற பல சம்பவங்களுக்குப் பின்னர், தேவையற்ற வகையில் பிரச்ச்னைகளை தோற்றுவிப்பவர்களாக அவர்களது ஆதரவாளர்களுக்கே தெரிய
ஆரம்பித்தனர் என்கிறார் எமது பிபிசி ஆய்வாளர் எலிசபெத் ப்லண்ட்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பல்வேறுவகையான கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.
ஐ.ஆர்.ஏ வின் இந்த அறிவிப்பை வரவேற்றார் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்



ஆனால் வட அயர்லாந்தில் ப்ரொட்டஸ்டண்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் ஒன்றான அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஸர் ரெக் எம்பி இந்த அறிவிப்பு குறித்து சற்று அவநம்பிக்கையுடனே இருக்கிறார்.

அதேவேளை வட அயர்லாந்தில் ப்ரொக்ரஸிவ் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவர் டேவிட் இர்வின் இந்த அறிவிப்பில் நம்பிக்கை ஒளியைக் காண்கிறார்.

BBC Tamiloosai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)