Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜப்பானில் மாபெரும் பூகம்பம், சுனாமி அலைகள் தாக்கின
#1
ஜப்பானில் மாபெரும் பூகம்பம், சுனாமி அலைகள் தாக்கின

ஆகஸ்ட் 16, 2005

டோக்கியோ:

ஜப்பானில் கடலுக்கடியில் இன்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தை தொடர்ந்து பசிபிக் கடலில் உருவான மிகச் சிறிய சுனாமி அலை ஜப்பான் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது.

வட கிழக்கு ஜப்பானிலுள்ள மியாகியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இன்று காலை இந்திய நேரப்படி 8.26 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆகப் பதிவான இந்த பூகம்பத்தால் டோக்கியோ, இவாட்டா, கியோடோ, சென்டாய் உட்பட ஜப்பானின் பல்வேறு பகுதிகளும் குலுங்கின.

கடற்கரை நகரமான சென்டாயில் உள்ளரங்க நீச்சல் குளத்தின் கூரை இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பூகம்பம் ஏற்பட்டவுடனேயே அணு மின் நிலையங்களும் ஜப்பானின் பாதாள ரயில்களும் தாங்களாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன.

டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்தில் தற்காலிகமாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடல் பகுதியை சமீப காலத்தில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இது என்பதால், பெரிய அளவில் சுனாமி அலைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்ரகப்பட்டது. ஆனால், பூகம்பம் ஏற்பட்ட 18வது நிமிடத்தில் ஆயுகவா பகுதியில் கடலோரத்தில் 10 செ.மீ. உயரமான சிறிய சுனாமி அலை தாக்கியது.

ஆனாலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

வடக்கு ஜப்பானிலுள்ள ஹொக்கெய்டோ தீவிலும் இன்று காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.9 ஆகப் பதிவானது. அடுத்தடுத்து ஜப்பானில் இன்று ஏற்பட்ட இந்த பூகம்பங்களால் அங்கு மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

சுனாமி அலைகளை சமாளிக்கும் விதத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானைத் தாக்கி வருகின்றன. ஆனாலும் அங்கு பூகம்பத்தைத் தாங்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்படுவதால் பெரும்பாலும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுவிடுகிறது.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)