Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் சிறிலங்கா காவல்துறையினரால் இளைஞர் கைது
#1
யாழில் சிறிலங்கா காவல்துறையினரால் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கலட்டிச் சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றினை இன்று காலை 9.30 மணியளவில சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கிருந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


இச்சம்பவத்தின் போது கதிரமலை வைதீகன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இக்கைது சம்பவம் தொடர்பாக அவரது தந்தையார் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை இவரைக் கைது செய்து சென்ற வேளை சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந் தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 சிறிலங்கா காவல்துறையினர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து இப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது

<i>puthinam</i>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)