Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடைசி கேமிரா
#1
கோனிகாவின் கடைசி கேமிரா


மார்ச் மாதத்துடன் தனது மினோல்டா கேமரா உற்பத்தியை நிறுத்திக் கொள்ளப்போவதாக கோனிகா நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கோனிகா நிறுவனம், நுõறாண்டுகளாக உற்பத்தி செய்து வரும் கேமராவை இனி உற்பத்தி செய்யப் போவதில்லை என்று அறிவித்திருப்பது போட்டோ, கேமரா தொழில் நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தவிர, போட்டோகிராபி பிசினசில் இருந்தே மெல்ல மெல்ல விலகிக் கொள்ளப்போவதாகவும் கோனிகா அறிவித்துள்ளது. இனி அந்த நிறுவனம், ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் மருத்துவக் கருவிகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் கேமராவின் பிரமாண்டமான வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய துறையில் ஒன்று மரபு ரீதியிலான பிலிம் அடிப்படையிலான போட்டோ தொழில் ஆகும். பியூஜி நிறுவனம் போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் முதலாவது இடத்திலும், கோடாக் நிறுவனம் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. டிஜிட்டல் கேமரா விற்பனை 2004 2005ல் 67 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் கேமராக்களின் விற்பனை 2009ல் 10 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் உலகின் மொத்த டிஜிட்டல் கேமரா விற்பனையில் கேனன் நிறுவனம் 18 சதவிகித மார்க்கெட்டையும், சோனி நிறுவனம் 15 சதவிகிதம் அளவிற்கும், கோடாக் நிறுவனம் 12 சதவிகித அளவிற்கும் தன் வசம் வைத்திருந்தன என்று ஐ.டி.சி., என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)