Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமரின் கொலையும், சந்திரிகாவின் நிலையும். பகுதி 4
#1
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.

கட்டுரைக்குள் போகமுன்....

எமது தொடரில் குறிப்பிட்டதுபோன்று சந்திரிகா தனது குடும்ப அரசியலுக்காக கதிர்காமரை கொலைசெய்திருக்கலாம் எனக்குறிப்பிட்டிருந்தோம். நினைவிருக்கின்றதா? வாசகர்களே!. எமது ஊகம் சரியானதாக இருக்கும் என நீங்கள் இப்போ நம்புகின்றீர்களா? நாம் முன்சொன்ன ஆய்வின் சில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு கீழே வைக்கின்றோம் இப்போ. இருப்பினும் நாம் எமது அடுத்த ஆய்வில் இறங்குகின்றோம். தொடர்ந்து படியுங்கள்.

1.சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது.

2.சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை.
ஜஉழடழசசிறீசநனஸ
3.சந்திரிக்காவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது பொனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும்;ஜஃஉழடழசஸ

4.அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை

5.பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள்

வணக்கம் வாசகப்பெருமக்களே! சென்ற எமது கட்டுரையில் மேலே கூறப்பட்டவையை குறிப்பிட்டிருந்தோம் சந்திரிகா தனது குடும்ப அரசியலை கதிர்காமரின் கொலைக்குப்பின்னர் அழகாகச்செய்வார் என்று. ஞாபகம் இருக்கின்றதல்லவா?. எமது எண்ணத்தைப்போன்று கதிர்காமரின் கொலைக்குப்பின்னர் தனது சகோதரனின் அரசியல் பிரவேசத்தை மிகவும் விரையாக செயலாற்றியிருக்கின்றார் அல்லவா? எமது ஊகம் பொய்க்கவில்லை பார்த்தீர்கள் அல்லவா?. இக்கொலையை அவர்கள் செய்திருப்பதில் உள்ள உண்மைத்தன்மையை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். இருப்பினும் நாம் சொன்னது போன்று ஜேவிபியும், சிங்கள உறுமயாவும் இக்கொலையை செய்திருப்பதற்கான காரணத்தை இப்போ நோக்குவோம்.

1970களில் ஜேவிபி தனது ஆக்ரோசமான கிளர்ச்சியின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பிரசித்திபெறத்தொடங்கியது. தொழிலாளர் புரட்சியைக் கையில் எடுத்து அப்பாவிச்சிங்கள மக்களை தம்பக்கம் ஈர்த்து தமது எழுச்சியை அரங்கேற்றத்தொடங்கிய நேரம். அப்போ திருமதி சந்திரிகாவின் தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசியலில் பிரதமராக இருந்த வேளை அவரின் ஆட்சியையே ஆட்டம் காணவைத்தார்கள். அவ்வேளையில் பிரதமமந்திரியின் கையில் தான் சகல நிறைவேற்று அதிகாரங்களும் இருந்தது. தற்சமயம் சந்திரிகாவின் கையில் அதிகாரம் இருப்பது போன்று தாயாரின் கையில் அதிகாரங்கள் இருந்தவேளை ஜேவிபியை அடக்கி ஒடுக்கவேண்டிய தேவையை சிறீமாவோ அன்று உணர்ந்தார். அன்றைய கணக்கின்படி கிட்டத்தட்ட அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் ஜேவிபி என்கின்ற சந்தேகத்தின் பெயரில் சுட்டும்,வெட்டியும் கொல்லப்பட்டு தன்னுடன் கூடவிருந்த ஒருவனாலேயே ஜேவிபித்தலைவனான றோகண விஜயவீரா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அத்துடன் அவன் சிறையில் இருந்து விடுபடும்மட்டும் ஜேவிபி தனது சோபையை இழந்து கட்சியை நடாத்த யாருமற்று தவிர்த்து மீண்டும் ரோகண விஜய வீராவின் விடுதலைக்குப்பின் மீண்டும் புத்துணர்ச்சிபெற்று 1987 மட்டில் மீண்டும் தனது புரட்சியை ஆரம்பித்தது. அன்றைய ஜனாதிபதியாகிய பிரேமதாசாவின் கடும்போக்கால் கிட்டத்தட்ட ஒருஇலட்சத்தி முப்பதாயிரம் சிங்கள இளைஞர்களைப்பலிகொண்டதோடு அதன் தலைவர் ரோகணவிஜயவீராவும் கைதுசெய்யப்பட்டு 1989 நவம்பர் மாதமட்டில் அன்றைய இரவே சுட்டும் கொள்ளப்பட்டார். அதன் பின் இன்றைய ஜேவிபிதலைவரான சோமவன்ச இலண்டனுக்கு தப்பியோடி அங்கே அடைக்கலம்புகுந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அத்துடன் ரோகண விஜய வீராவின் மனைவியினை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதன்பின்னர் நாம் ஜேவிபியினர் எனச்சொல்லவே அனைவரும் பயந்தனர். காரணம் ஆட்சி செய்தவர்கள் யுஎன்பியினர். மீண்டும் சுதந்திரக்கட்சி ஆட்சியைக்கைப்பற்றியபின் 1994களில் இலங்கைவந்து தமது அரசியல் பிரவேசத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களுடன் அன்றிருந்த ஒருவரே சிங்கள உறுமயவைத்தோற்றுவித்து மூன்று வருடங்களின் பின் அது தானாகவே கலைக்கப்பட்டு இப்போ ஜாதிக கெல உறுமயாவாக தோற்றம் கண்டிருக்கின்றது. அதன் தலைவரான எல்லாவெல மேதானந்த தேரர் படுசுத்தமான ஓர் சிங்கள வெறிபிடித்த இனவெறியர். இவ்விரண்டு கட்சிகளும் தமிழனையும், தமிழனுக்கு ஆதரவாக யார் பேசினாலும் பகிரங்கமாக எதிர்ப்பதுடன் தமது எதிர்ப்புணர்வுகளை இலங்கையில் உள்ள வெளிநாட்டு து}தராலயங்களுக்கும் தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவிக்கும் முறையே தனிப்பாணியாக இருக்கும். இவரினதும், ஜேவிபியினதும் கூட்டு நடவடிக்கையாக கதிர்காமரை அவர்கள் போட்டுத்தள்ளியிருக்கலாம். காரணம் கதிர்காமர் ஜேவிபியை தமது ஆளும் கட்சி எது சொன்னாலும் கேட்டுக்கொண்டு தலையாட்டும் ஓர் பொம்மைபோன்று நினைத்திருந்தார். அதன் நம்பிக்கையில் அமெரிக்காவில் இலங்கை அரசாங்கம் பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திட்டு புலிகளுடன் சமாதானப்பேச்சில் ஈடுபடும் வண்ணமும், அதற்கு ஜேவிபி முரண்பாடாக இருக்கின்றதா? எனவும் கேட்டிருந்தார்கள். அப்போ தமது சொல்லுக்கு ஆடும் ஓர் கட்சியாக ஜேவிபியை நினைத்து அனைவரும் ஒற்றுமையாக இயங்குவதாகவும், விடுதலைப்புலிகள் சும்மா விசமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் குறியிருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவில் அப்படிக்கூறிவிட்டு இலங்கை திரும்பமுன்னர் ஜேவிபி ஆளும் கட்சியிலிருந்து விலகியதுடன், தமது அமைச்சர்களையும் இராஜினாமாச்செய்ய வைத்திருந்தார்கள். இதன் அடிப்படையிலும் கதிர்காமருக்கும் ஜேவிபிக்கும் கருத்து முரண்பாடுகள்இருந்தன. ஆரம்பத்தில்; சிங்கள உறுமயாவாக இருந்த ஜாதிக கெல உறுமயா அடிப்படையில் தமிழின எதிர்ப்பாளர்கள். இவர்களுக்கு அரசியல் நோக்கம் என்பது கிடையாது. ஆனால் தமிழனை எதிர்ப்பதே அவர்கள் நோக்கம். அந்த வகையில் அவர்கள் ஜேவிபியுடன் கைகோர்த்து இக்கொலையை செய்திருக்கலாம் கதிர்காமர் தமிழன் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக. வாசகர்கள் நீங்கள் சிந்திக்கலாம். குறிபார்த்துச்சுடக்கூடிய வல்லமை அவர்களுக்கு இருந்திருக்குமா? என்று. நிச்சயமாக இருக்கின்றது. ஜேவிபியும் விடுதலைப்புலிகள் போன்று ஆயுதப்போராட்டம் செய்யாதவர்களாக இருப்பினும் முன் புலிகளுடனும் (தப்பியோடிய இராணுவம்) அரசுடனும் ஆயுதப்போர் செய்தவர்கள் தான். அவர்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களும் பாதாள உலகக்கோஷ்ரிகளும்தான். அத்துடன் சரளமாக சிங்களம் பேசும் சிங்கள இனத்தவர் என்பதால் கொலையைச்செய்துவிட்டு எடுவித பதட்டமும் இல்லாது காவலரணைத்தாண்டி சென்றிருப்பார்கள். 1970களில் இருந்து ஜேவிபிக்கு இந்தியாவை அறவே பிடிக்காது. காரணம் சிறீமாவே பண்டாரநாயக்கா ஜேவிபியினரை அடக்குவ தற்கு இந்திய இராணுவத்தை பயன்படுத்தியது. அதன் வெளிப்பாடாகவே 1987இல் இருந்து 1990 மார்ச் மாதம் வரை இலங்கையில் இருந்த இந்திய இராணுவத்திற்கெதிராகவும் இந்தியப்பொருட்களை வாங்கக்கூடதென்கின்ற பிரச்சாரத்துடனும் அவர்கள் செய்த கிளர்ச்சியினால் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா அப்பாவி சிங்கள இளைஞர்கள் உட்பட ஒருஇலட்சத்தி முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களை கொன்று இரயர்போட்டும், களனி ஆற்றிலும் வீசியெறிந்த கொடுமை இன்றும் மறக்கமுடியாதவை. அந்த வடுக்கல் மறையமுன்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் மகள் சந்திரிகாவின் அமச்சரவையில் அங்கம் வகிக்கும் கதிர்காமர் இந்தியாவுடன் கூடிய நேசம் காட்டியமையும் அவர்களுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கலாம். அந்தவகையிலும் அவர்கள் கதிர்காமரை போடவேண்டிய தேவையிருந்திருக்கலாம். அத்துடன் அவரை போடுவதால் தமக்கான நன்மையாக இப்படி நினைத்திருக்கலாம் அது எப்படியான நன்மை.

தொடரும்.....

மலரவன் மலரினி
www.tamilkural.com

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)