08-21-2005, 09:16 PM
<b>பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களோடு
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
ஜெர்மன் முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்தில்
பதினாறாவது ஆசீர்வாதப்பர் அறை கூவல்</b>
<img src='http://www.virakesari.lk/VIRA/20050822/images/1708vdp1.jpg' border='0' alt='user posted image'>
மேற்கு ஜெர்மனி நகரான சோலோனுக் கருகிலுள்ள மெரீன் பெல்ட் என்னுமிடத்தில் இடம்பெற்ற
20 ஆவது உலக இளைஞர் தின விழாவில் பதினா றாவது ஆசிர்வாதப்பர் பிரார்த்னை நடத்துகி றார்.
இதையடு த்து நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆசிர்வாதப் பர், தமது தாயகமான ஜெர்மனுக்கு
தாம் மேற்கொண்ட நான்கு நாள் விஜயத் தினன நிறைவு செய்து கொண்டார்.
கோலோன், ஜெர்மனி,
பயங்கரவாதம் எங்கும் பரந்து விரிவடைந்து வருகிறது. இதனைத் தடுக்கும் பணியில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பதினாறாவது ஆசீர்வாதப்பர் முஸ்லிம்களுக்கு அறை கூவல் விடுத்து உரையாற்றினார்.
கோலோனில் நிகழ்ந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசீர்வாதப்பர் உரையாற்றினார். ஜெர்மனின் பல பகுதிகளைச் சேர்ந்த முப்பது உயர் மட்ட முஸ்லிம் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
பயங்கரவாதத்தின் குரூர வெறியாட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு முஸ்லிம்களும் உதவ வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நேரிய வழியில் கல்வி புகட்டுவதற்கான உன்னத பெரும் பொறுப்பு இஸ்லாமிய ஆசிரியர்களுக்குண்டு என்றும் அவர் சொன்னார்.
ஆசீர்வாதப்பர் கடந்த காலத்திய யுத்தங்களையும் அழிவுகளையும் நினைவு கூர்ந்தார்.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சண்டைகள் இடம் பெற்றுள்ளன. இரு தரப்பினரும் இறைவனின் பெயரை பயன்படுத்தி இருக்கின்றனர். எதிரியைக் கொல்வது இறைவனை பூரிக்க வைக்கும் ஒரு காரியமென கருதப்பட்டுள்ளது. இது ஒரு குரூரச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குரூர வெறியாட்டம் அநேகரின் உயிருக்கு பேராபத்தாக உள்ளது. உலக சமாதானத்தை நோக்கி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடைமுறைகளுக்கு தடைக்கல்லாக அமைகிறது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இக்குரூர வெறியாட்ட அலையை நீக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40712000/jpg/_40712360_crowdafp203story.jpg' border='0' alt='user posted image'>
இக்கூட்டத்துக்குப் பின்னர் கோலோன் நகர வெளியரங்கில் மாபெரும் பிரார்த்தனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் குறைந்த பட்சம் 700,000 பேர் வரை கலந்து கொண்டனர். பதினாறாவது ஆசீர்வாதப்பர், ஆசியுரை நிகழ்த்தினார்.
அவர் தமதுரையில் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பொறுத்த மட்டில் விமர்சனத்துக்குரிய அம்சங்களும் உள்ளன. இது எமக்கு தெரியும். இறைவனும் எமக்கு உணர்த்தியுள்ளார். இது நல்ல மீன்களையும் தீய மீன்களையும் கொண்டவையாகவுள்ளது என்றார்.
<img src='http://images.wn.com/i/3e/57ebc62fbfa044.jpg' border='0' alt='user posted image'>
ஆசீர்வாதப்பர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் தமது நான்கு நாள் ஜெர்மன் பயணத்தை நிறைவு செய்து கொண்டார். ஆசீர்வாதப்பராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொண்ட முதல் தாயகப் பயணம் இதுவாகும்.
veerakesari