Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர்கள் இருவர் கடத்தல்
#1
மட்டக்களப்பைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொழும்பில் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர்.


சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து நல்லதம்பி(வயது 40), கந்தையா சசிகுமார் (வயது 22) ஆகியோரை வானொன்றில் வந்த 4 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர் கடத்தியுள்ளனர்.

தங்களை சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று கடத்தல்காரர்கள் கூறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நீர்க்கொழும்பில் இச்சம்பவம் நடந்தது.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

.............செய்தி: புதினத்திலிருந்து.........
" "
Reply
#2
இக்கடத்தலானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு "வேள்விக்கு பலியாகும் கடாக்கள்" போல அனுப்பப்பட்ட இந்தியக்கூலிகள் "ஈ.என்.டி.எல்.எப்"இனால் கடத்தப்பட்டதாக, பிரபல முன்னால் கட்டைவேலி/நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மாமூட்டைப்புகழ் உடையவரும், பாங்கொக்கை தளமாகக்கொண்ட பிரபல ஆட்கடத்தல் மன்னருமாகிய "கே.ரி.ராஜசிங்கத்தின்" இணையத்தளம் உரிமை கோரியுள்ளது!!!

ஒன்றுமறியாத அப்பாவிகள் கைது செய்யப்படுகையிலோ, கடத்தப்படுகையிலோ, படுகொலை செய்யப்படுகையிலோ இந்தக் கூலிகளின் இணையத்தளங்கள், சிங்கள ஊதுகுழல்கலையும் முந்திக்கொண்டு புலி முத்திரைகளைக் குத்தி விட்டு ஆரவாரம் செய்கின்றார்கள்!

இப்படியான கூலிகளுக்கு நிரந்தரமாக சங்கூதும் மட்டும், இவர்களின் தமிழின துரோகச் செயற்பாடுகள் தொடரத்தான் செய்யும்!!!
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)