Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விவாகரத்து குறைவு
#61
Mathana Wrote:தலா நீங்கள் கணகாலம் யாழ்ப்பாணம் போகவில்லை என்று நினைக்கின்றேன். போனால் தெரியும் தாயகத்தின் நிலமை. வருடங்களா மாதங்களா செல்லும் என்பது போனால் தான் தெரியும். ஆனால் நான் யாழ்ப்பாணத்தை மட்டும் தான் சொல்கின்றேன். அங்கு யாருடைய ஆட்சி என்று தெரியும் தானே

நான் கலாச்சாரத்தை சொல்வது போல் இருந்தாலும் நான் சமூகத்துடன் சேர்ந்தாற்போல இருக்கும் அவர்களின் வாழ்க்கைமுறை. முன்னேற்ரம் எண்ட பேரில எல்லாரும் கூத்தடித்தாலும் ஊருக்கும் இங்கையும் இன்னும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
::
Reply
#62
அது சரி தான்

Reply
#63
இங்கு நடைபெறும் விவாதத்தில் பங்கு கொள்ள நேரம் இன்மையால் முடியவில்லை. எனினும் தாணுவின் வலைப்பதிவில் இருந்து ஒரு கவிதையை உருவிப் போட்டுள்ளேன், உங்களுக்காக.


[size=16]<b>ஆண்களில்லாத உலகத்திலே</b>

பெண்களுக்கே வக்காலாத்து வாங்கி
ஆண்களைச் சாடிக்கொண்டிருப்பதால்
ஆண்களுக்கு எதிரியல்ல நான்
ஆணாதிக்கத்துக்கு மட்டுமே எதிரி

அன்பான அப்பா சொல்லித் தந்தது
அறிவோடு தன்னம்பிக்கை வேண்டுமென்று
அனுசரணையான அண்ணன் கற்பித்தது
அடுக்களையோடு அடங்கி விடாதேயென்று!

பால்ய நண்பன் பகிர்ந்து கொண்டது
பாலியல் பேதம் நட்பிற்கில்லையென்று
பருவத்தே வந்த நண்பர் கலந்தது
பசுமையான இல்லறத்தில்.

இடையிடையே எத்தனை நண்பர்கள்
இன்னலுற்ற போழ்திலெல்லாம்
இருகரம் நீட்டி துயர் அகற்றி
இன்றும் நல்லதுணையாயிருப்பவர்கள்

இத்தனை இதயங்களையும் மறந்து
இகழ்மொழி பேசுவேனோ இதயமின்றி!
ஆணாதிக்கம் மறந்தவர்கள் மட்டுமே
ஆண்கள்.................என்மொழியில்!
<b> . .</b>
Reply
#64
கவிதை நன்னா இருக்கு நன்றி உருவிப்போட்டதுக்கு கிருபன்ஸ்
<b> .. .. !!</b>
Reply
#65
tamilini Wrote:
Quote:இலங்கையுல் விவாகரத்து குறைவுக்கு புரிந்துணர்வு அதிகக் என்பதை விட சமுக கட்டுப்பாடும் பெண்கள் தமது சொந்த காலில் நிற்க முடியாத நிலைமையுமே காரணம் என்று நினைக்கின்றேன். விவாகரத்து என்பது சமுகத்தில் ஒரு அங்கீகாரமில்லாத அதனை சட்டரீதியாக இலகுவாக பெறமுடியாத ஒன்றாக இருப்பதால் பலர் அது பற்றி சிந்திப்பதில்லை, அது தவிர சேர்ந்து வாழமுடியாமல் வேதனையில் துவளும் பல பெண்கள் அதுபற்றி ஒரு கணம் சிந்தித்தாலும் அதற்கு அவர்களுக்கு சொந்த காலில் நிற்க கூடிய தன்மையும் பொருளாதார பின்புலமும் இல்லாமையால் மேற்கொண்டு விவாகரத்து பற்றி சிந்திப்பதில்லை,
_________________
மதன் சொந்தக்காலில் நிற்றல் என்று எதைச்சொல்றீங்க. சுயசம்பாத்தியமா? ஆண்களைப்போல நமது பெண்கள் விவசாயம் செய்கிறார்கள். விவசாய
வேலைகளிற்கு செல்கிறார்கள். குடிசைக்கைத்தொழில் அது இது என்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அண்மையில் தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில்
காட்டினார்கள் குடும்பத்தலைவர்கள் வீட்டுச்சாமன்களைக்கூட விற்றுக்குடிக்கிறார்கள் என்று. இத்தனைக்கும் பெண்கள் தான் உழைச்சு அவர்களிற்கும் சாப்பாடு போடுறார்கள். பல சமயங்களில்
குடிக்கவும் காசு கொடுக்கிறார்கள். இதை விட தமிழீலத்தில் விதவைகள் வாழ்ந்ததில்லையா தனியாக தங்கள் சுயசம்பாத்தியத்தில்? பலர் கணவன்மாரில் தங்கியிருக்கிறவர்கள்
இல்லை என்றில்லை இருக்கிறார்கள். ஆனால் அவர்களாலும் இப்படி செய்ய முடியாதா என்ன? நம்மட ஊர்களில விவாகாரத்திக்குறைவுக்கு காரணம்
அன்பு பாசம் தான் அதிகமாக இருக்கலாம். கணவனுடன் சண்டை போட்டு தாய் வீடு வாற பெண்கள். என்ன தான் தாய் தகப்பனவை போகவேணாம் என்றாலுமம்
புருசன் வந்து கூப்பிட சந்தோசமாக போறவை தான் அதிகம் இதை கண்கூடு கண்டிருக்கம். நம்மூர்களிலும் கணவன் மாரை பிரிஞ்சு வாழுற பெண்களும் இருக்காங்க இதில மறுமணம் செய்யிறவங்க குறைவு.
அவங்களில் சிலர் ஒரு சில சமூகப்பிரச்சனைகளையும் எதிர் கொள்றாங்க அவர்களது நடவடிக்கைகளால்.

அதெப்படி ஒருவரது அல்லது ஒருத்தியின் நடவடிக்கைகள் பிடிக்கல என்று பிரிஞ்சிட்டு. இன்னொருதரை அல்லது இன்னொருத்தியை மறுமணம் செய்திட்டு ஒருவேளை அவரது அல்லது அவாவின் நடவடிக்கைகள் பிடிக்கல என்று மனமுறிவு வந்தா
அவரையும் பிரியிறதா?? பிறகு இன்னொருதர். இதால பாதிக்கப்போறது என்னவோ இருவருக்கும் பிறந்த பிள்ளைகள்.

ஆனா இன்றைய சமூகத்தில் அதிகமான இடங்களில பிரிவிற்கு காரணம் ஈகோவாக இருக்கலாம். சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.
ஒருவரை ஒருவர் சரியா புரிஞ்சிருந்தா சில சில பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளலாம். சக உறவு இருவரும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழ் முனையக்கூடாதா?? தம்பதியினருக்கு அது அவசியம் தானே.

ஒரு வேளை இதுவே வேறைமாதிரியான காரணங்கள் என்றால் இன்னொருதருடன் தொடர்பு
அப்படி இப்படியான காரணங்கள் என்றால் பிரிந்து போறதில தவறில்லைத்தானே
எடுத்த உடனை விவாகரத்து எடுத்திட்டு பிரிஞ்சுவிட்டு பிறகு நினைத்து வருந்திறவங்க இல்லாமல் இருப்பாங்களா?
பெம்பளையிலின்ரை உந்த நிலைக்கு ஆம்பிளையள் இல்லை காரணம் .உப்பிடியான உந்த அம்மம்மாக்களும் ஆச்சிமாரும் தான் காரணம்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#66
இதைப் பற்றி ஏற்கனவே கருத்தாடப் போய் நிறைய பேர் கோவப்பட்டு இருக்கினம் பிறகும் இதை எடுத்து சண்டை பிடிக்கிறது நல்லாவா இருக்கு சரி இங்கை போய் மிச்சத்தைப் பாருங்கோ

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5235
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#67
நன்றி முகத்தார்,இப்ப தான் முந்தி எழுதினதுகள வாசிச்சன்,
உந்த கருத்தாடல்களுக்க கன பேர் தாங்களும் குழம்பி மற்றவையும் குழப்பி இருக்கினம் போல.எப்பவுமே கருத்துத் தெளிவும் நடைமுறை அனுபவமும் வேணும் ,திருமணம் தாம்பத்திய உறவைப் பற்றிக் கதைக்க.அது இல்லாதவர்கள் வெறும் கற்பனையிலேயே இதுகளப் பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது, கிருபன் சொன்ன மாதிரி இந்தக் கற்பனைகள் நடமுறை வாழ்க்கையில் சிக்கல்களையும்,உறவு முறைகளில் குழப்பங்களையுமே தரும்.

1)இங்கே முதலாவது பிரச்சனை,விவாகரத்து என்னும் சட்டவியல் நடைமுறை எமக்கு அவசியமா என்பதே?
புலத்திலும் சரி ,ஊரிலும் சரி இது ஒரு சட்டவியல் நடைமுறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆகவே இந்தக் கேள்வி அர்த்தமற்றது,ஏனெனில் சட்டவியல் நடைமுறையாக இருக்கின்ற ஒன்றை இல்லாது செய்ய முடியாது,அது இருப்பதற்கான காரணங்கள் அந்தச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாலேயே அது சட்டமாக இயற்றப் பட்டது,யாரோ தேசவழமை எண்டெல்லாம் கதை அளந்திருந்திச்சினம்,தேசவழமைச் சட்டம் சொத்துரிமை சம்பந்தமாக மட்டுமே பாவிக்கப் படக் கூடியது.விவாகரத்து சம்பந்தமாக அதில் எதுவும் இல்லை.தமிழீழச் சட்டக் கோவையிலும் இவை இடம்பெற்றுள்ளன,ஆனால் அதன் விபரங்களைத் தெரிந்தவர்கள் கூறினால் நன்று.


2)இரண்டாவது பிரச்சனை தனி மனித நலனை முன்னிறுத்தும் மேற்கத்தியே காலாச்சாரத்திற்கும்,சமுதாயம் குடும்பம் என்னும் கட்டுமானத்தைய்க் கொண்ட கிழக்கத்தேய சமூக அமைப்பு முறைக்கும் இடயேயான பிரச்சனை. நாம் ஊரில் இருந்து காவி வந்த இந்த சமுதாய நடைமுறைகளுக்கும்,அது சார்ந்த கருத்தியலுக்கும் , தனி மனிதை சுதந்திரத்தை முதன்மைப் படுத்தி அமைக்கப்பட்டுள்ள மேற்கத்திய வாழ்வு முறமைக்கும் இடயேயான பிரச்சனை.

இந்தப் பிரச்ச்னை எமது அடுத்த சந்தத்யினருக்கே மிகவும் சிக்கலானதக இருக்கப் போகிறது,காரணம் அவர்கள் முற்று முளுக்க மேற்கத்திய கருத்தியல் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தினூடாகவே வளர்க்கப் படுகின்றன்ர்.இது பாடசாலையில் தொடங்கி பிறகு நண்பர்கள், சட்டங்கள் , நிறுவனங்கள் என்று விரிகின்றது.அதனாலேயே வீட்டிலே தமிழ் பேசி தமிழ் படம் பாத்து வெளியில் பூனைக் குட்டி சொன்ன மாதிரி சேர்ந்து வாழத் தலைப் படுகினம்.இங்கே முரண் படுவது இரு வேறு சமூகக் கட்டமைப் புக்கள் சார்ந்த கருத்தியல்களே அன்றி ,தனி மனிதரின் ஒழுக்க முறமையல்ல.எமக்கு கெட்ட நடத்தையாகத் தெரிவது இன்னொருவருக்கு சரியானதாகத் தெரியும்.இது அந்த நடத்தயால் அல்ல எமது சமூகக் கண்ணோட்டத்தில் இருந்தே நல்லது ,கெட்டது ஆகின்றது.

ஆகவே இவ்வாறு நிறுவனப் படுத்தப் பட்டு எம்மைச் சூழ்ந்துள்ள இந்த வாழ்க்கை முறமைக்கு எதிராக நிறுவனங்களை அமைத்தோ,தடை போட்டோ இதனைத் தடுக்க முடியாது. நாம் தமிழராக, தமிழர் சமூகக் கட்டமைப் புடன் வாழ வேன்டு மாயின் அது நிறுவனப்படுத்தப் பட வேன்டும்,அதற்கான சமூக அடித்தளங்கள் ஆரம்பக் கல்விச் சாலைகள் முதல் ,சமூக அமைப்புக்கள் வரை அமைக்கப் பட வேண்டும். இது தனி மனிதனை முன்னிறுத்தும் மேற்குலகில் சாத்தியப் படாது ,அது எமது நாட்டிலேயே சாத்தியப்படும்.

ஆகவே விவகாரத்து என்பது ஒரு நியாயத்தை வளங்குவதற்கான ,எல்லாச் சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள சட்டவியல் நடை முறமை.

தனி மனித சுதந்திரத்தையும், நலத்தையும் முன்னிறுத்துகின்ற மேற்கத்தீய சமூக நடமுறமைக்குள் இது அதிகமாகக் காணப் படுகிறது.அதற்குள் வாழும் எம்மவர்க்கு அது ஒரு தெரிவாக இருக்கிறது.இதில் எந்த வாழ் முறமையய் தேர்ந்தெடுப்பது என்பது அவர் அவர் தனிப்பட்ட தெரிவாக இருக்கிறது. நாங்கள் எவ்வளவு கூக் குரலிட்டாலும் இதனைத் தடுக்க முடியாது.இதில் சரி பிழை அவர் அவர் சமூகக் கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.

எமது வாழ்வு முறமை நிறுவனப் படுத்தப் பட்ட தமிழீழ தேசத்திலேயே சமுதாயம்,குடும்பம் என்ற அலகுகள் முதன்மை அடையும்.அங்கேயும் விவாகரத்தென்பது அடக்கப் படுகின்ற,சித்திரவதைக் குள்ளாகின்ற பெண்களுக்கு ஒரு சட்டவியல் நடைமுறமையாக ,தீர்வாக அமையும்.ஏனெனில் எல்லா மனிதர்களும்,உறவுகளும் ஒரு மாதிரியானவை அல்ல, அந்த அந்த நிலமைகளுக்கு ஏற்பவே ஒரு வரின் குடும்ப வாழ்வும், வளமும் அமைகிறது.அதே நேரம் குடும்பம் என்ற அலகை செழிமைப் படுத்துகின்ற சமுதாய அமைப் புக்களும், சமூகக் கண்ணோட்டமும் மேன் நிலைப் படுத்தப் படும்.
Reply
#68
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Niththila+--><div class='quotetop'>QUOTE(Niththila)<!--QuoteEBegin-->:roll:  :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எதாவது கருத்தச் சொல்லுங்களேன்,உங்களுக்குத் தானே இப்படியான கேசுகளில விருப்பம் எண்டியள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

நாரதர் அங்கிள் நான் குடும்ப வழக்குகள் சிலவற்றில நேரடியாக டீல் பண்ணி இருக்கிறன் பெரும்பாலான வழக்குகள்( எல்லாம் இல்லை) ஆண்களின் 40 வயசுக்கு பிறகுதான் அதாவது திருமணமாகி 10-15 வருடம் சேர்ந்து வாழ்ந்தவைதான் விவாகரத்து செய்யிறது கூட

ஆண்களை விட பெண்கள்தான் கூடுதலா தமது துணைவர் திருமணத்திற்கு அப்பால் பட்ட தொடர்பு வைத்திருக்கிறார் என்று விவாகரத்து கேட்பினம்

ஆண்களில அதிகமா பெண்களது அன் றீசனபிள் பிகேவியர் காரணமாக விவாகரத்து கேட்பதாக சொல்லுவினம்


ஆனால் இங்க கதைக்கிறவை மாதிரி கதைக்க எனக்கு அனுபவ அறிவும் சமுக அறிவும் குறைவு அதால தான் நான் இங்கு எதுவும் கதைக்கவில்லை
. .
.
Reply
#69
quote="Vasampu"]ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தெழுதுகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்ற விவாகரத்துக்களிலோ அல்லது தாயகத்தில் நடைபெற்ற விவாகரத்துக்களிலோ எத்தனை வீதமானவை கணவனின் கொடுமையினால் நடைபெற்றவை??? மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்;. பல பெண்கள் தமக்குள்ள சுதந்திரங்களை தவறான வழிகளில் பயன்படுத்தவில்லையா???? தன் பிள்ளைகளையும் கணவனையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு ஆடவனுடன் சென்ற பெண்களா அல்லது தன் பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்ற ஆண்களா அதிகம். எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் என்று ரீல் விடாதீர்கள்.ஆண்களை விட பெண்களுக்கு சுயநலம் அதிகம்.[/quote]

என்ன சொல்றீங்க வசம்பண்ணா :roll: :roll:
. .
.
Reply
#70
நித்தி ஏன் அப்படிச் சொல்லுறியள்,
இங்க எழுதிறவயில உங்களுக்குத்தான் சட்ட ரீதியான அறிவும், நடைமுறயில ஏன் இப்படி நடக்குது எண்ட அனுபவமும்(மற்றவர்களது) இருக்கு,ஆகவே உங்கட கருத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்,பயப் பிடாம எழுதுங்கோ.

இங்கே வாதிடிவோர் பலர் விவாகரத்துகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு பல காரணங்களும் வியாக்கியானங்களும் சொல்லுகின்றனர்,இதுகள் உங்கட அனுபவத்தில இருந்து சரி யெண்டு படுதோ?

விவாகரத்து என்றது ஒரு நியாயத்தை வழங்குவதற்கான சமூகத்துக்கு தேவயான நடைமுறயா?
இங்கே விவாகரத்துக்கள் வழங்கும் போது எவ்வாறு அது நடைமுறைப் படுத்தப் படுகிறது,இதை வழங்கும் போது எவை எவை கவனத்தில் எடுக்கப் படுகின்றன,குழந்தைகளின் நலன் இந்த விவாகரதுக்களால் பாதுகாக்கப் படுகுதா,இதி சட்டவியல் ரீதியாக எவ்வாறு அணுகப் படுகின்றது?

எம்மவர்கள் புலத்தில் அதிகமாக எதற்காக விவாகரத்துக் கோருகின்றனர்?

இதெல்லாம் நீங்கள் தான் சொல்ல வேணும்? :roll:
Reply
#71
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->
நாரதர் அங்கிள் நான் குடும்ப வழக்குகள் சிலவற்றில நேரடியாக டீல் பண்ணி இருக்கிறன் பெரும்பாலான வழக்குகள்( எல்லாம் இல்லை) ஆண்களின் 40 வயசுக்கு பிறகுதான்  அதாவது திருமணமாகி 10-15 வருடம் சேர்ந்து வாழ்ந்தவைதான் விவாகரத்து செய்யிறது கூட

ஆண்களை விட பெண்கள்தான்  கூடுதலா தமது துணைவர் திருமணத்திற்கு அப்பால் பட்ட தொடர்பு வைத்திருக்கிறார் என்று விவாகரத்து கேட்பினம்  

ஆண்களில அதிகமா பெண்களது அன் றீசனபிள் பிகேவியர் காரணமாக விவாகரத்து கேட்பதாக சொல்லுவினம்  

ஆனால் இங்க கதைக்கிறவை மாதிரி கதைக்க எனக்கு அனுபவ அறிவும் சமுக அறிவும் குறைவு அதால தான் நான் இங்கு எதுவும் கதைக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நித்தி எனக்கொரு கேள்வி 15 வருடம் வாழ்ந்தவை தான் விவாகரத்து கேட்கிறார்கள் எண்டால் அது வரை அவர்கள் புரிந்துணர்வுடன் வாழ்ந்திருக்கிறார்கள் எண்டு ஆகிவிடுகிறது. அதாவது சராசரி மனிதனின் அரைவாசிக் குடும்ப வாழ்க்கை. கிட்டத்தட்ட 45-55 வயதினர். அந்த வயதுதான் உடல்தளர்ச்சியால் துணையை தேவைப்படும் வயது.. அந்த வயதில் பிரிந்து போகிறார்கள் எண்டால், உண்மையாகவே பிரச்சினை இருக்கும், இல்லை எண்டால் அவர்கள் வருமானத்தை எதிர்பார்த்துச் செயலாம் (Single parent )

எனது கேள்வி என்னெண்டா இது சம்மந்தமாய் நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்???.. அவர்களின் பதிலில் இருந்து வேண்டாம். நீங்கள் பகுத்து அறிந்து பாத்ததில் இருந்து எப்படியான வளக்குகள் அவை...
::
Reply
#72
கொஞ்சம் லேட் எண்டாலும் நாரதர் கேட்டதுதான். நான் கேட்டதும்..
::
Reply
#73
பிரதேச இனத்துவ சமுதாய இடவெளிகளுக்கு அப்பால் சில மனித பொது நடத்தையியல் உள்ள குழறுபடிகள் பற்றியே இங்க பேசப்படுகிறது...! எந்தச் சேதத்திலும் நியாயாதிக்க காரணங்கள் விவாகரத்துக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளன...! அதை மீறி தனிமனிதர் செய்வதெல்லாம் சட்டவிரோதம்..! அந்தச் சட்டவிரோதச் செயல்கள் மனித சமூகக் கட்டமைப்பையே சீரழிக்கவல்லன..! அதனால் தான் அவை சட்டவிரோதமானவை எனக் குறிப்பிடப்படுகின்றன..! சுதந்திரம் என்று கொள்ளப்படும் தப்பான கருத்து உள்வாங்களால் பெருகும் சட்டவிரோத சமூகவிரோத செயல்களை சுட்டிக்காட்டுவதே இங்கு தரப்படும் கருத்தாடுதலின் முக்கிய நோக்கம்...!

இன்று பெண்களும் சரி ஆண்களும் சரி சட்டத்தை சமூகத்தை ஏமாற்றி விவாகரத்துக்களுக்குச் செல்கின்றனர்..! இதில் பெண்களின் பங்களிப்பே அதிகம்..! அது சட்டவிரோதமான மனித சமூகத்தை சீரழிக்கவல்ல ஒரு செயல்...!

(தனி மனித தேவைகள் என்பதுக்கும் ஒரு வரையறை உண்டு...அது எல்லை தாண்டிச் செல்ல அனுமதித்தால்...அது முழுச் சமூகத்தையுமே பாதிக்கும்..! சுதந்திரம் என்பதும் அதற்கு உள்ளானதுதான்...! என்பதை இங்கு கருத்தாடும் சிலர் கவனத்தில் கொள்வது சிறந்தது..!)

இன்று மேற்கிலும் சரி கிழக்கிலும் சரி அதிகம் பெண்கள் சட்டத்தை ஏமாற்றி விவாகரத்துக்குச் செல்ல பெரிதும் முனைகின்றனர்...! இதனால் ஆண்கள் பெண்களைக் கையாள தேடிக் கொண்ட மாற்றுவழியே...திருமணமாகாமல் கூடி வாழுதல் என்பதாகும்...! இதனால் புதிய பல சமூகச் சிக்கல்கள் முளைத்து வளர்ந்தும் வருகின்றன...அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டும் வருகின்றன..! இப்படிப்பட்ட விளைவுகளைத் தரும் சட்டத்தை ஏமாற்றி வாங்கும் விவாகரத்துக்களின் பெருக்கம் தடுக்கப்பட வேண்டின் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவர்கள் எங்கு வாழினும் சில அடிப்படை விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவது அவசியம்...! அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்லவர்களாகவோ இல்ல நிகழ்காலத்தை இயக்குபவர்களாகவோ இருந்திட்டுப் போகட்டும்... எவராகினும் அவர்கள் இது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும்...! காரணம்...சட்டத்தின் தேவை, பாதுக்காப்பான நடைமுறை என்பது மனித சமூகப் பாதுகாப்புக்கும் நாகரீகமான மனித வாழ்வு நோக்கியும் உருவாக்கப்பட்டது..!

அடுத்து....தற்காலத்தில் வளர்ந்து வரும் டேற்றிங்...இதன் மூலம் பெறப்படும் கூடி வாழுதல் மேற்குலக சமுதாயத்துக்கு அவசியம் என்று எந்த மேற்குலக நாகரிகம் அல்லது சட்டம் எங்கும் வலியுறுத்தவும் இல்லை தடை செய்யவும் இல்லை...! இப்போ புகைப்பிடிப்பது என்பது தீமை...இருந்தும் அது அனுமதிக்கப்பட்டுள்ளது...! அதுபோல சில விடயங்கள் சமுதாயத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக அவை ஆரோக்கியமானவை என்று கண்மூடித்தனமான வாதங்கள் மூலம் சாதிக்க முனைவது தற்கால சமூகத்தையும் எதிர்கால சந்ததியையும் மிகத்தவறாக வழி நடத்துவதையே குறிக்கும்...!

இந்த டேட்டிங் என்பது மக்களில் ஒரு குழுவினர் தங்கள் வசதிக்கு ஏற்ப தேடிக் கொண்ட நடைமுறை..! அதையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பதோ அல்லது அது ஒரு வளமான நடைமுறை என்பதோ உத்தரவாதப்படுத்தப்படவில்லை...! அல்லது அதுக்கு ஒரு நாகரீகமான மாற்றீடு இல்லை என்றும் இல்லை...இருக்கிறது...! அப்படி இருக்கும் போது ஏன் அதையே எதிர்காலச் சிறார்களுக்கு ஒப்பீட்டு ரீதியில் காட்டிச் செல்லாமல் அதுவே (டேற்றிங் மற்றும் லிவ்விங் ருகெதர்) சிறப்பானது நாகரிகமானது உபயோகமானது என்பது போல காட்ட வேண்டும்..! அதன் பாதிப்புக்கள் பற்றி ஏன் சொல்லத் தயங்குகின்றனர்...! அதனால் சீரழிக்கப்படும் பெண்களின் ஆண்களின் மன உழைச்சல்கள் ஏன் மறைக்கப்படுகின்றன...??! அதனால் தோன்றும் சமூக பொருளியல் சிக்கல்கள் ஏன் மறைக்கப்படுகின்றன..???!

இப்படி பலதை மறைத்து அதையே நாகரிகம் என்பது போலக் காட்ட விளைவது சிந்திக்கவல்ல மனிதனையும் மந்தையாக்கும் செயல்...! காரணம் இந்த டேற்றிங் லிவ்விங் ருகெதர் தரும் சமூகப் பிரச்சனைகள் பற்றி அதில் ஈடுபடுபவர்கள் சிந்திப்பதாக இல்லை..! மேற்குலக அரசுகள் தான் அதைத் தீர்மானிக்கப் போகின்றன..! அவை வசதி படைத்த அரசுகள்..அவர்களின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இப்படியான செயல்களின் பாதிப்பு இருக்கும்வரை அதை அனுமதிப்பர்...எல்லை தாண்டும் போது தடை செய்வர்..அல்லது மாற்றீட்டை காட்டாயப்படுத்தி அமுல்படுத்துவர்...! இல்ல அதைக் அநாகரிகம் என்று அப்போ போதிப்பர்...! அதுவரை மந்தைகள் போல மக்கள் அதைப் பின்பற்ற வேண்டுமா...???! சிந்தித்து எது வலுவானது திறமையானது என்பதை தீர்மானிக்க ஏன் முன்னரே திட்டமிடக் கூடாது வழிகாட்டக் கூடாது...??! காரணம்..இப்படி புதுமை என்றும் நாகரிகம் என்றும் சொல்லி மக்களை தவறாக வழித்துபவர்கள் இப்படியான போலி நாகரிகத்துக்கு அடிமையாகி உள்ளவர்களாகவோ..அல்லது அதனால் நன்மை பெறுபவர்களாக இருப்பதால்தான் என்று அமைய முடியும்..!

இப்படியாகத்தான் பல விடயங்கள் தீர ஆராயப்படாமல் மேற்குலகிலும் சரி கீழத்தேயத்திலும் சரி மக்களால் உள்வாங்கப்படுகின்றன...! அவையே நாகரிகம் என்று எதிர்கால சந்ததிக்கு காட்டப்படவும் செய்கின்றனர்...!அதனால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சமூக வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன...! இப்படி போலி நாகரிகத்துக்கு வழிகாட்டுபவர்கள்...இப்படியான குற்றங்கள் குறைக்கப்பட என்ன பரிந்துரை செய்யப் போகின்றனர்..! குற்றங்களுக்கான பாதையும் திறந்து கொண்டு..அதை கட்டுப்படுத்த என்ன சொல்லப் போகின்றனர்...??!

அடுத்து தேசவழமைச் சட்டம் சொத்துடமைச் சட்டம் மட்டுமே என்று சொல்லப்பட்டது...! நாங்கள் தெரிந்து கொண்டதன் படி தேசவழமையால் திருமணமாகும் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி ஆளப்படுகின்றனர் என்பதும் இதற்கான வழக்குகள் சிலவும் அறியப்பட்டிருந்ததன..! இருந்தாலும் இப்போ அவை ஞாபகத்தில் இல்லை...! இது தொடர்பாக மேலதிக தகவல்கள் பெறப்படும் போது நிச்சயம் இங்கு தருகின்றோம்..! தேசவழமைச் சட்டமும் கண்டியச் சட்டமும் இலங்கையின் பாரம்பரிய சட்ட வரைபுகளுக்கு உதாரணமாகக் கொள்ளப்படுகின்றன...! தற்போதைய இலங்கைச் சட்டம் பெரிதும் ஆங்கிலேய மற்றும் உரோமன் டச்சுச் சட்ட அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
நித்தி எங்க போட்டியள் ,
சட்டத்தை ஏமாற்றியும் விவாகரத்துப் பெற முடியுமே, புதுக் கண்டுபிடிப்பாக் கிடக்குது,அப்ப விவாகரத்திலேயும் சட்டவிரோதமானது ,சட்டத்திற்கு உட்பட்டது எண்டு இரண்டு வகை இருக்குப் போல,
அப்ப இந்த அப்புக்காத்துமாரும்,கோடும், நீதிபதிகளும் பேயரோ?
தனி மனித சுததந்திரத்திற்கான வரயறைகள் இங்கே சட்டங்களாலேயே அமுல்படுத்தப் படுகின்றன.மேலுள்ள தலைப்பு விவாகாரத்துக் குறைவு பற்றியது,சட்டவிரோத செயல்கள் பற்றியது அல்ல.சட்டங்களும் ,தனிமனித சுதந்திரத்திற்கான வரயறைகளும் நாட்டுக்கு நாட்டு வேறு படுகின்றன,இவை ஈற்றில் அந்த அந்த நாட்டு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சமூக்கவியல் காரணிகளால் நிர்ணயிக்கப் படுகின்றன.

நாங்கள் களவா கோயில்களிலேயும்,டியுசன் சென்டர்களிலும் செய்யிறத இங்கே டேடிங் எண்டு எல்லாருக்கும் தெரியிறமாதிரி வீட்ட வந்து செய்கிறார்கள்,இதில் சட்ட விரோதமான நடைமுறை என்ன இருக்கிறது.அவர்களின் வாழ்க்கை முறமை அப்படி.ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான நடை முறை அது,இதில் என்ன பிழை இருக்கிறது.இதை தவறாகப் பாவிப்பவர்கள் ,அதற்கான விழைவுகளையும் ஏற்கின்றனர். நல் ஒழுக்க நெறிகள் பாடசாலைகளிலும் வீடுகளிலும் போதிக்கப் படுகின்றன,இவற்றையும் மீறி சிலர் இதனைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர்,இவை எமது நாட்டிலும் தான் நடக்கிறது.

சட்ட விரோதமான எந்த செயலும் சட்டங்களினாலும்,காவல் துறையினராலும் கவனிக்கப் படுகின்றன.

இங்கே நான் முன்னர் சுட்டிக் காட்டியது போல் இவர்கள் குடும்பம் என்ற அலகை புனிதமானதாகவோ மாற்றமடைய முடியாத ஒன்றாகவோ கருதவில்லை.இதனை இரண்டு தனி மனிதர்களுக்கிடயே ஆன ஒப்பந்தமாகவே கருதுகின்றனர்.எப்போது இந்த ஒப்பந்தத்தால் ஒருவருடய தனி மனித சுதந்திரமும்,சந்தோசமும் அற்றுப் போகின்றதோ அப்போது அவர்கள் அதனை முறித்துக் கொள்கின்றனர்.

நாம் அதற்கும் அப்பால் குடும்ப அலகை தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ,ஒரு அடிப்படை சமூக அலகாகப் பார்க்கிறோம் என்பதுவே உண்மை.இவை காலத்தால் மாற்றம் அடைவன.பாண்டவர் காலத்தில் ஐவருக்கு ஒரு மனைவி என்பது ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நடை முறமையாக இருந்தது,இக் காலத்தில் அது சட்டவிரோதமானதாகவும் ஒரு துர் நடத்தையானதாகவும் கருதப்படும்.
Reply
#75
தேசவழமைச் சட்டம் மலபார் வழி வந்த இந்திய மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கான பாரம்பரியச் சட்டம்...! இதில் அடிப்படை சொத்துரிமை மற்றும் திருமணத்தின் போதும் பின்னுமான கணவன் - மனைவி உரிமை மற்றும் வழமைகள் என்பன பற்றி சொல்லப்படுகின்ற போதும் விவாகரத்து என்பது ஆங்கிலேய மற்றும் உரோமன் - டச்சுச் சட்ட வழிவந்த பொதுச்சட்டத்தின் கீழேயே தற்போதைய நிலையில் பாவிக்கப்படுகிறது...! தற்போது சொத்துடமை தொடர்பிலேயே தேசவழமை யாழ்ப்பாண வழி வந்த தமிழருக்குப் பாவிக்கப்படுகிறது...! திருமணம் என்பது இலங்கையின் பொதுச்சட்ட அறிமுகத்தின் பின் அதன் கீழ் ஆளப்படுகிறது..! அதன் முன் தேசவழமையின் சில இலகு நடைமுறைக்குள் ஆளப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்துத் தெருவிக்கப்பட்டுள்ளது...!

தகவல் - இலங்கைச் சேர்ந்த சட்டத்தரணி..!

இதன்படி யாழ்ப்பாண ஆணைத் திருமணம் செய்யும் வெளியிடத்துப் பெண் கொள்ளும் உரிமை தொடர்பிலேயே நாம் தெரிந்து கொண்ட வழக்குகள் அமைந்திருக்கின்றன...! தற்போதைய நடைமுறையில் திருமணம் தொடர்பில் யாழ்ப்பாணத் தமிழர்கள்... கண்டிய சிங்களவர்கள் மற்றும் இஸ்லாமியரைத் தவிர்த்து...ஏனைய இலங்கையரைப் போல ஆங்கிலேய, உரேமன் டச்சுச் சட்டம் மூலம் ஆளப்படுவதாகத் தெரிகிறது...!

இது தொடர்பில் எமது சார்ப்பாக எந்தக் கருத்துத் தவறும் இடம்பெற்றிருந்தால் அது சுட்டிக்காட்டப்படலாம்...! திருத்தப்படும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
தேச வழமைச்சட்டம் சொத்துடமை சம்பந்தமானது. இலங்கையில் வாழும் இஸ்லாமியரகளுக்கு மட்டும் விவாகரத்துச்சட்டம் சிறிது வேறுபட்டது மற்றவர்களுக்கு எல்லா அம்சங்கள் SO call சுதந்திரத்தின் பின் இலங்கையில் பொதுவானது... தேசவழமைச்சட்டம் சொத்தை வாஙகுதல் விற்றலில் யாழ்ப்பாணத்தவரை தவிர்ந்து பிறர் புகும்போது யாழ்ப்பாணத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.இதனால் சிங்களவர் சொத்துக்கள் வாங்குவதை யாழ்ப்பாணத்தில் தடுக்க கூடியதாக இருந்தது
Reply
#77
[quote=stalin]தேச வழமைச்சட்டம் சொத்துடமை சம்பந்தமானது. இலங்கையில் வாழும் இஸ்லாமியரகளுக்கு மட்டும்

இங்கு சொல்லப்பட்ட ஒரு தகவல் தவறானது கண்டியச் சட்டத்தின் கீழே இன்றும் கண்டிச் சிங்களவர்களின் திருமணம் தெரிவின் அடிப்படையில் ஆளப்படுகிறது...! தேசவழமை திருமணத்தை நேரடியாக ஆளா விட்டாலும் திருமணம் சார்ந்த கணவன் - மனைவி உரிமைகள் (சொத்து உள்ளடங்களாக) தொடர்பில் இன்னும் வழக்கில் இருக்கிறது...!

The areas of Kandyan law that are currently retained in Sri Lanka relate to marriage and divorce and intestate succession. All Kandyans have the option of choosing whether they marry under the Marriage and Divorce (Kandyan) Act [M &D (K)A] and, thus be governed by the Kandyan laws or the General Marriages Ordinance in which case, they would be governed by the Roman Dutch law. In the case of intestate succession, a Kandyan person is governed by the Kandyan Law by virtue of the Kandyan Law Ordinance (KL) as well as the Matrimonial Rights and Inheritance Ordinance. Some areas of the Kandyan laws on adoption are also applicable here. In all other areas such as maintenance and custody the general law applies.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)