Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவி தேவை
#1
அன்பின் கள உறவுகளுக்கு வணக்கம்

முன்னொருமுறை வெங்கட் எழுதிய ஹார்வர்ட்-கூகுள் மின்னூலாக்கத் திட்டத்தைப் பற்றிய கட்டுரைய மதன் இங்கிட்டதை மறந்திருக்கமாட்டீர்கள்.

அந்தக் கட்டுரையில் வெங்கட் சுட்டிக்காட்டிய விடயம்.யாழ் நூலகத்தின் எரிப்பும்பலகோடி பெறுமதியான நூல்களின் இழப்பும்.அதன் பின்னர் தமிழ்நூல் மற்றும் ஆவணக் காப்பகம் பற்றிய கருத்துருவாக்கம் வலுப்பெற்று சில தனிநபர்களால் முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.

அவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பது தனிநபர் சார்ந்த விடயமல்ல.பல்கலைக்கழகங்களோ நிறுவனங்களோ செய்யவேண்டிய விடயங்கள்.

ஆனாலும் அவற்றுக்காகக் காத்திருக்கும் காலத்தில் எஞ்சிய பல நூல்களும் மெல்ல மெல்ல அழிந்து விடுமோ டென்ற அச்சம் எழுகிறது.

இவ்வாறான ஒரு சிந்தனையின் அடிப்படையில் திரு.பத்மநாப ஐயர் மதுரைத் திட்டம் என்னும் மின்னூலாக்கத் திட்டத்தில் ஈழத்து நூல்களின் பங்களிப்பையும் சாத்தியமாக்கினார்.பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டமும் கிடப்பில் இருக்கிறது.ஆகவே புதியதொரு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது

நூல்களை இணையத்தில் ஆவணம்மாக்கவேண்டிய தேவை தமிழகத் தமிழர்களை விட ஈழத்தமிழர்களுக்கு உண்டு.யாழ் பொது நூலகம்,ஹாட்லிக் கல்லூரி நூலகம்,யாழ் பல்கலைக்கழக நூலகம் என்று பலவிதமான இழப்புகளைச் சந்தித்தவர் நாங்கள்

அவ்வாறான இழப்புகள் தீண்டாதவண்ணம் எமது தமிழுக்கு வளம் சேர்த்த நூல்களை இணையத்தின் சாத்தியப் பாடுகளைப் பயன்படுத்திப் பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

அதனைச் செயற்படுத்துவதற்காக நண்பர்கள் சிலர் சேர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களின் உதவி கீழ்வரும் செயற்பாடுகளில் தேவைப்படுகிறது.

முக்கியமான நூல்களை(அவை கட்டுரை,நாவல் எவ்வாறாகவும் இருக்கலாம்) தட்டச்சுச் செய்தல்.அவற்றின் ஆசிரியர்களை அறிந்திருப்பின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளல்

அவற்றைச் செவ்வை பார்த்தல்

அவ்வாறான நூல்கள் கைவசம் இருந்து உங்களால் தட்டச்சுச் செய்ய முடியாதிருப்பின் அவற்றின் ஒளிப்பிரதியையோ(photocopy) அல்லது.மின்படமாகவோ(Scan copy) எமக்கு அனுப்புதல்.

ஈழத்து எழுத்தாளர்கள்,ஆவணங்களை வைத்திருப்பவர்கள் பலரும் புலத்தில் வதிவதால் நீங்கள் அறிந்தவர்கள்/உறவினர்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறி அவர்களின் நூல்களைப் பெற்றுத்தருதல்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் eelanathan@gmail.com

அன்புடன்
ஈழவன்
\" \"
Reply
#2
இது தான் அந்த <b>ஹார்வர்ட்-கூகுள் மின்னூலாக்க திட்டம்</b> குறித்த இணைப்பு


http://www.yarl.com/forum/viewtopic.php?t=2528
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
இதுவரை ஒரு நண்பர் மட்டுமே தொடர்புகொண்டிருக்கிறார்.மற்றவர்கலின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்
\" \"
Reply
#4
ஈழவன்,

மதுரை மின்னூலாக்க திட்டத்தில் தொகுப்பட்ட(?) புத்தகங்களும் இதில் சேர்க்கப்படுகின்றனவா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
ஓம் மதன்
மதுரைத் திட்டத்தில் இருந்த பதின்மூன்று புத்தகங்களையும் பெற்றுக்கொண்டாயிற்று.
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)