Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலக்கும் கார்த்திக்
#1
<img src='http://www.dinamalar.com/2006april05/photos/FPN06.jpg' border='0' alt='user posted image'>
கலக்கும் கார்த்திக்


சென்னை: ""மற்ற தலைவர்களை குறை சொல்லி வளர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,'' என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கார்த்திக் நேற்று கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இப்பட்டியலில் மேலும் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் அறிவிப்பைத் தொடர்ந்து கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

பார்வர்டு பிளாக் கட்சியைப் பற்றியும் என்னைப் பற்றியும் சிலர் சில தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். "சீட்' கிடைக்காதவர்களுக்கு மன வருத்தம் இருக்கலாம். எல்லாருக்கும் "சீட்' கொடுக்க முடியாது. வேட்பாளர்களைத் தேர்வு செய்து தான் கொடுக்க முடியும். "சீட்' கிடைக்காதவர்கள் தவறான செய்திகளை பரப்பி வருவது வருத்தத்திற்குரிய விஷயம். பார்வர்டு பிளாக் கட்சி சுதந்திரத்திற்காக போராடிய இயக்கம். புரட்சிகரமான இயக்கம். மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம். இடையில் சிறிதுகாலம் இயங்காமல் இருந்தது.

இப்போது மக்களின் பேராதரவுடனும் இளைஞர்களின் எழுச்சியுடனும் மீண்டும் எழுந்துள்ளது. இந்த இயக்கத்திற்கு 90 சதவீத முக்குலத்தோரின் ஆதரவு உள்ளது. எல்லாத் துறையினரும் முன்னேற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். சமுதாய தலைவர்களாக இருப்பவர்கள் ஒரு சமுதாயத்திற்கும் இன்னொரு சமுதாயத்திற்கும் இடையே பிரச்னை ஏற்படாமல் சமரசம் ஏற்படுத்தி ஒற்றுமையை உருவாக்கித் தர வேண்டும். சுயநலத்திற்காக தங்கள் சமுதாயத்தை பயன்படுத்தக் கூடாது. எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பினரின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.

நான் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் நடிக்கப் போகிறேன் என்று சொல்வது முற்றிலும் தவறான செய்தி. இதை மக்கள் நம்ப மாட்டார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் என்னை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைவர், பொதுச் செயலர் என இரண்டு பொறுப்புகளும் என்னை நம்பி வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்புகளுக்கு என் இறுதி மூச்சு இருக்கும் வரை தகுதி உடையவனாக இருப்பேன். கட்சிக்காக என் உயிரையும் கொடுப்பேன். எனது கடமையில் இருந்து துளியும் விலக மாட்டேன். எங்கள் இயக்கம் எல்லா தலைவர்களையும் மதிக்கும். எந்த தலைவரையும் மரியாதை குறைவாக விமர்சிக்க மாட்டோம். பார்வர்டு பிளாக் இழந்த பெருமைகளை மீண்டும் பெற வைப்பதே எனது நோக்கம்.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?

நான் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் கார்த்திக் தான் என்று நினைத்து மக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் போட்டியிட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நான் போட்டியிட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். மத்திய கமிட்டி எனக்கு இதுபற்றி ஒரு கடிதம் அனுப்புவதாக சொல்லியிருக்கிறது. அதை பார்த்த பிறகு முடிவெடுக்கப்படும்.

பிரசாரத்தை எப்போது ஆரம்பிப்பீர்கள்?

வரும் 7ம் தேதிக்கு பிறகு ஆரம்பிப்பேன். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்.

தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவீர்கள்?

விரைவில் வெளியிடுவோம். மக்களை பாதுகாக்கும் வகையிலும் ஒட்டு மொத்த தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மன நிம்மதியுடன் வாழ்வதற்கும் கொள்கைகளை அறிவிப்போம்.

போயஸ் தோட்டத்தில் உங்களை அவமானப்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளதே?

பார்வர்டு பிளாக் கட்சியை அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேர்ப்பதற்கு சசிகலா கணவர் நடராஜன் மிகவும் பாடுபட்டார். அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசியலில் எல்லா தலைவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் யாரையும் எதிர்க்க விரும்பவில்லை. எனக்கு நடந்தது என்னோடு போகட்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. குறை சொல்லி கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்கு என்ன செய்வோம் என்பதைப் பற்றி மட்டுமே சொல்வோம். பார்வர்டு பிளாக் கட்சியின் கொள்கைகளைச் சொல்வோம். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள்.

இவ்வாறு கார்த்திக் கூறினர்.

"இதெல்லாம் அரசியலில் சகஜம்': பார்வர்டு பிளாக்கில் இருந்து முருகன்ஜி என்பவர் விலகிச் சென்று விமர்சித்து வருவது குறித்து கார்த்திக் கிடம் கேட்டதற்கு, ""அவர் "சீட்' கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. அவருக்கு எப்படி "சீட்' கொடுக்க முடியும்? கவுண்டமணி சொல்வதைப் போல் இதெல்லாம் அரசியலில் சகஜம். நாளைக்கு நாங்கள் வெற்றி பெற்றால் அவரே மீண்டும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்,'' என்று நகைச்சுவையாகக் கூறினார்.
Reply
#2
கார்த்திக் துண்டைக்காணோம், துணியக்காணோம் என்று ஓடப்போறார். தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளினைத்தவிர மற்றைய கட்சிகளில் அதிகமானவை கட்டுப்பாணத்தினை இழக்கப்போகிறது. கார்த்திக்கின் தகப்பன் முத்துராமன் தமிழர். தாயார் கர்னாடக மொழியினைத்தாய் மொழியாகக்கொண்டவர்.
! ?
'' .. ?
! ?.
Reply
#3
உந்த அப்பிராணிக்கு ஏன் உந்த வேலை? எவனோ நல்லா ஏத்தி விட்டிருக்கிறான், சினிமாவில உழைச்சது முழுக்க உதில விடப்போறார், இல்லாட்டி தலைவர் செயலாலர் இரு பதவிகளையும் கொடுப்பார்களா?? எவனோ நல்லா பப்பாவில ஏத்துறான்.
.

.
Reply
#4
உதுவா பிராணி. உதுக்கு அக்காவும்,தங்கையும் மனைவிகள். நடிகைகள் எல்லாத்தையும் விட்டுவைக்கவில்லை. போதாக்குறைக்கு தனது வயதிலும் கூடிய நடிகையினைக் காதலிக்க, அது தற்கொலைக்கு முயன்று தப்பியகதை, ஒரே குடி. ஊர் எல்லாம் கடன். சென்றவருடம் அ.தி.மு.கவில் இணைய விரும்பினார். ஆனால் ஜெயிடமிருந்து சாதகமான நிலை வரவில்லை என்றதும் இப்ப பார்வட் பிளக்கில் தமிழகத்தலைவர்.
! ?
'' .. ?
! ?.
Reply
#5
இது என்ன புது கதையா இருக்கு? ஏற்கனவே சினிமால உழைச்சத விட்டு;டதால தானே உதுல இறங்கினவர்....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#6
உழைச்ச காசுகள் குடிச்சதினாலும், முதல் மனைவி வருகினதாலும் போனதால் கார்த்திக் கஸ்டப்பட்டு, ஒழுங்காக நேரத்துக்குப்படப்பிடிப்புக்குப் போகததினால், 98,99 ல் வெளியான உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூவேலி போன்ற வெற்றிப்படங்களினால் உயர்ந்த மார்க்கெட்டில் இருந்த கார்த்திக் பிறகு கிழே போனார். ஆடம்பரச்செலவுக்கும் மனைவிகளின் தேவைக்குக்கும் கடன் எடுத்து கட்டமுடியாமல் இருக்க விஜயகாந்தும், ராதாரவியும் ஒரளவு கார்த்திக்கு உதவி செய்தார்கள். கார்த்திக்கின் உறவினர் ஒருவர் மூலம் நான் இச்செய்திகளினை அறிந்தேன்
! ?
'' .. ?
! ?.
Reply
#7
[size=18]தி.மு.க.வில் சேர்ந்தார் எம்.ஜி.ஆர். வாரிசு!

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை போண்டியாக்குவேன் என்று கோஷம் போட்டுக்கொண்டு கோதாவில் குதித்திருக்கிறார் பாக்யராஜ். நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரை சந்தித்த இந்த முன்னாள் அ.தி.மு.க. அனுதாபி, தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதுடன், ஜெ. மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வீசி தேர்தல் களத்தை சூடாக்கினார்.

எம்.ஜி.ஆரால் எனது வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜுக்கு ஜெ. ஆட்சியில் கிடைத்தது, ஆர்.எம். வீரப்பன், ஹண்டே, கே.ஏ.கே., செம்மலை, சைதை துரைசாமி போன்ற உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு கிடைத்த புறக்கணிப்பும், அலட்சியம் என்ற அல்வாவும் மட்டுமே! இந்த ஆணவச் செருக்கின் ஆணிவரை அடியோடு பிடுங்கவே தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதாக கூறினார் பாக்யராஜ்.


இந்த ஸ்க்ரீன் ப்ளே புலியின் முதல்நாள் ஆக்ஷ்ன் ப்ளேயே அமர்க்களம். தாமரைக்கனிக்கு கொள்ளி போடவும் அவர் மகனை அனுமதிக்காத ஜெ. வின் அடாவடி தொடங்கி சிம்ரன், செந்திலின் செந்தமிழ் சேவை வரை புரட்டியெடுத்துவிட்டார் மனிதர்.
ஜெயலலிதாவின் முன்னால் அங்கப்பிரதட்சணம் செய்யும் கட்சிக்காரர்களின் செயல் இவர் மனசை ரொம்பவே பாதித்திருக்கிறது. ஜெயலலிதா ஓவர் கான்பிடன்ஸ் ஆகி இறுமாப்புடன் நடந்துகொள்கிறார் என்று குற்றஞ்சாட்டினார் பாக்யராஜ். ஆண்டிப்பட்டி என்ன அனைத்துத் தொகுதிகளிலுமே பிரச்சாரத்தில் புரட்டியெடுக்கிறேன் என்று சபதமெடுத்தவர், அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளையும் சூட்டோடு சூடாக தொடங்கிவிட்டார்.


பீல்ட் அவுட்டான நடிகர்களால் ரொம்பிப்போய் இருக்கும் அ.தி.முக. தரப்பு எம்.ஜி.ஆர். வாரிசின் தடாலடி பிரவேசத்தால் கிடைக்கு தப்பிய ஆடாக கலங்கிப்போயிருக்கிறது.


இது ரொம்ப ஹாட்டா இருக்கு மச்சி!

- சினிசவுத்
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)