09-19-2005, 12:23 PM
புதிய கண்டுபிடிப்புகள்
ஆண் இனம் அழியப்போகிறதா? :?: :oops:
எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உள்ளவர்கள் பலர் உண்டு.
சிலர் வரிசையாக பெண் குழந்தைகளை பெற்று விட்டு அடுத்தது கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் ஆபத்து வரப்போகிறது என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.
விஞ்ஞானிகளின் இந்த திடுக்கிடும் அறிவிப்பு ஆண்களை கலங்கடித்துள்ளது. அது என்னவென்றால் இன்னும் 100 லட்சம் ஆண்டுகளுக்குப்பிறகு ஆண்குழந்தைகள் பிறக்காது. பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெண்ணாகத்தான் இருக்கும்.
இதற்கு காரணம்- ஆண் விந்தணுவில் உள்ள (ஆண் குழந்தை பிறக்க காரணமாக இருக்கும்) "ஓய்'' குரோமோசோம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதுதான்.
பொதுவாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் ஆண்களின் உயிரணுக்களில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் பெண்ணின் சினை முட்டையில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் இணைய வேண்டும் அப்போது தான் ஆண் குழந்தை பிறக்கும்.
அதற்கு மாறாக பெண்ணின் சினை முட்டையில் உள்ள "எக்ஸ்'' குரோமசோம்களும்இ ஆண்களின் உயிரணுவில் உள்ள "எக்ஸ்'' குரோமசோம்களும் இணையும் போது பெண் குழந்தைகள் பிறக்கின்றன.
விஞ்ஞானிகள் சொல்கிறபடி பார்த்தால் ஆண்குழந்தைகளை உருவாக்குகிற ஓய் குரோமசோம்கள் ஆண்களிடம் இருந்து அழிந்து விட்டால் ஆண்களை காட்டிலும் பெண் குழந்தைகளே அதிகஅளவு பிறக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதனால் ஒரு கட்டத்தில் மனித விருத்தியே தடைப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்தினர்.
இது உண்மைதானா என்பதை அறிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உயிர் மருத்துவ விஞ்ஞானி டேவிட் பேஜி இதை பற்றிய ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இது போன்ற ஒய் குரோமோசோம்கள் அழிந்து வருவது ஒரு சில குடும்பங்களைச் சாந்தவர்களுக்கு நிகழும் வாய்ப்பு உள்ளது என்றார். ஒய் குரோமோசோம்கள் பல நூறு கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதாவது உயிரினம் குறிப்பாக மனித இனம் பல கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சில மாற்றங்கள் மனிதனின் உடலில் ஏற்பட்டுள்ளது. இது போல அவனது உயிரணு விலும் மரபணுவிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களால் மனித குலத்திற்கு துளியளவும் பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார்.
அவரால் அதற்கு சரியாக ஆதாரங்களை காட்ட முடியவில்லை. என்றாலும் மனித குலத்திற்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று மட்டும் தெரிவித்தார்.
ஆனால் அவரின் கூற்றை விஞ்ஞானிகள் ஒட்டு மொத்தமாக மறுத்து வருகின்றனர். ஆண் குழந்தைகளை உருவாக்கும் "ஓய்'' குரோமோசோம்கள் ஆண்களிடம் வேகமாக குறைந்து வருகிறது என்றும் 100 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக குறைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் சொல்வதில் யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
இது உண்மையா இல்லையா என்பது இன்னும் போகபோக தான் தெரியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நடந்த ஆய்வுகளில் ஆண்களின் மரபணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தவறான உணவு பழக்க வழக்கங்கள்இ போதிய உடற்பயிற்சி இல்லாததுஇ தவறான போதை மற்றும் மது அருந்தும் பழக்கம் காரணமாக இளைய தலைமுறையின் மரபணுக்கள் பாதிப்பது அதிகரித்துள்ளது. வாரிசுகளை பெற்றுக்கொடுக்க முடியாத அளவுக்கு சில இளைஞர்களின் விந்தணுக்கள் பலவீனமாக உள்ளது. இந்த நிலைக்கு சுற்றுப்புற சூழல் மாசுபட்டு இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
எது எப்படியோ வருங்காலம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வளமாக அமைய அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் சுகாதாரமான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சிறந்தது.
சுட்டது தினத்தந்தி இளைஞர்மலர்

.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->