10-02-2005, 02:30 PM
<b>ஐரோப்பிய தடையும் புலம்பெயர் தமிழர்கள் தொடங்க வேண்டிய 'யுத்தமும்' </b>
உண்மையை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால், பிழையானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற ஆணித்தரமிருந்தால் எவனும் எழுத்தாளனாக, செய்தியாளனாக மாறலாம் என்ற உதாரணம் புதினத்திற்கு மிகப் பொருந்தும்.
குறிப்பாக புதினம் கடந்த ஒரு சில நாட்களில் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட இரண்டு செய்திளும் இவற்றை மாசற விளக்கி நிற்கின்ற செய்திகளும் எனக்கு உந்துதலாயின. முதலாவது ஐரோப்பிய அரசியல்வாதி பற்றிக் குறிப்பிட்டிருந்த ஒரு செய்தி ஆய்வு. மற்றையது லண்டனில் இடம்பெற்ற சிங்களவர்களின் குதூகலக் கொண்டாட்டம் பற்றிய செய்தி.
<b>இரண்டுமே விடுதலைப் புலிகள் ஐரோப்பாவிற்கு பயணம் செய்வதைத் தற்காலிகமாகத் தடைசெய்வதைப் பற்றியன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தவறான தகவல் சென்றடைகிறதே!. தமிழா நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியையே மறைமுகமாக வெளியிட்ட அந்த இரண்டு செய்திகளும் புதிய செய்தியாளர்களின், படைப்பாளர்களின் தகவல்களே என்று அறிந்த போது, தமிழனின் ஆதங்கம் வழிந்தோடி தமிழீழ நதியில் கலக்கும் ஒரு வாய்க்காலாக புதினம் இருக்கிறது என்பதை மட்டும் என்னால் திடமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.</b>
கலப்படமற்ற, எந்தவித பூச்சுமெழுக்குமற்ற அந்த இரு செய்திகளையும் மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். நான் சொல்ல வருகின்ற செய்தி உங்களிற்கும் புரியும். என்றாலும் அந்த இருவருரின் ஆதங்கங்களும் ஐரோப்பாவிற்கு மாத்திரம் பொருந்தவில்லை. மாறாக நான் வசிக்கும் வட அமெரிக்கக் கண்டத்துடனும் அப்படியே பொருந்துகின்றன.
<b>நாங்கள் வசிக்கின்ற நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்ளிற் சிலரும் ஏறக்குறைய அந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரைப் போன்றவர்களே என்பதை நான் நேரடியாகவே உணர்ந்த சம்பவமொன்று கடந்த சில மாதங்களிற்கு முன்பு இடம்பெற்றது</b>.
நான் குடிமகான இருக்கும் இந்த நாட்டில் (ஆம், நான் இந்த நாட்டின் குடிமகன், இந்த குடிபெயர்ந்த நாட்டில் என்னால் நல்ல மாற்றங்களை உண்டு பண்ண முடியும்), எனது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர். நல்ல கல்வியறிவுடைய ஒரு அரசியல்வாதி. சந்தர்ப்பவசமாக சிறிலங்கா சம்பந்தமான அரசியலில் கலந்து விட்டார். காரணம் எமது தொகுதியில் கணிசமான வாக்குகள் தமிழ் வாக்குகள்.
<b>ஆனால் அவரை சிறிலங்காத் தூதுவருக்கு அருகாமையாக கொண்டு சென்று, அவரை இரு நாடுகளிற்குமிடையிலான பாராளுமன்றக் குழவின் உறுப்பினராக்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் நியமிக்கும் அளவிற்கு சிலர் செயற்பட்ட காரணத்தால் அவர் சில வேளைகளில் தாறுமாறாகக் கருத்துச் சொல்வார். ஆனால் அது அளுங்கட்சியின் அக்கறைக்கு எடுபடாமலே பலவேளைகளில் போகும்.</b>
இருந்தாலும் இவர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிவதற்கான ஒரு சந்தர்ப்பம் எப்போதும் ஏற்பட்டதில்லை. ஆனால் நான் குடிமகனாக உள்ள இந்த நாட்டில் தேர்தல் நெருங்குகிற படியால் அவர் எனது தொழில்சார் நிறுவனத்தை தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக அணுகியிருந்தார். ஆறுதலாகக் கதைப்பதற்குச் சந்தர்ப்பமும் தந்தார்.
<b>ஏன் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய வேறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்று பச்சையாகவே கேட்டேன். அவரும் பச்சையாகவே பதில் சொன்னார். படித்துப் பாருங்கள்... "நான் ஏதோ உலக வரலாற்றில் அல்லது ஏனைய நாடுகளின் விடயங்களில் பூரண அறிவுடையவன் அல்லன், எனக்கு இலங்கைப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையுமில்லை. மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல நானும் சும்மா இருந்துவிட்டு, இலங்கையில் இருபகுதியும் சுடுபட்டு செத்துவிட்டு, மிஞ்சுபவர்கள் வரட்டும் என்று இருந்திருக்கலாம். ஆனால் எனது தொகுதியில் கூடுதலான இலங்கையர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் நான் ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன்" என்று கூறினார்.</b>
<b>அப்படியானால் உங்கள் தொகுதியில் உள்ளவர்கள் தமிழர்கள், ஆனால் நீங்கள் சிறிலங்காவின் கருத்துக்களையல்லவா செவி மடுக்கிறீர்கள். அவர்கள் சொல்வது போலல்லவா நடக்கிறீர்கள் என்று கேட்ட போது,
.... உண்மையிலேயே நான் நினைத்தது என்னவென்றால் ஒரு நாட்டின் பிரஜையை அந்த நாட்டு அரசாங்கத்தின் தூதரகமே பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதே... அதையே இந்த விவகாரத்திலும் நான் முற்றாக நம்பியிருந்தேன் ஆனால் போகப் போகத்தான் உண்மை புரிந்தது... என்றார்</b>.
அவரே ஒப்புக்கொள்ளும் போதும், இருக்கின்ற கேள்வியை எறிவதற்கு எனக்குத் தயக்கமில்லை, ஏனென்றால் நான் கேட்கப்போவது நியாயமானது என்பதை விட, நான் கொண்டிருந்த அதே கருத்தைக் கொண்டிருந்த, நான் வதியும் இந்தத் தொகுதியிலேயே வசிக்கின்ற வேறு மூன்று பேரும் அந்தச் சந்திப்பின் போது என்னுடன் இருந்தார்கள்.
...உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் நீங்கள் சிறிலங்காத் தூதுவர் தருகின்ற விருந்துகளில் திளைத்துப் போயல்லவா இவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்ற கருத்து நிலவுகிறேதே... என்று கேட்ட போது,
<b>பாராளுமன்ற அமர்வுகள் உள்ள பொழுதுகளில் இடையிடையே சிறிலங்காத்தூதுவர் தலைநகரிலுள்ள தனது இல்லத்தில் விருந்துபசாரம் வழங்கியது உண்மையே. இதர கட்சிகளிலுள்ள சிறிலங்காப் பிரச்சினையில் அக்கறையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
ஆரம்பத்தில் ஆரோக்கியமாக இருந்த இந்தச் சந்திப்புக்களை நாங்களாகவே தவிர்க்குமளவிற்கு அவர்கள் (தூதரகத்தினர்) தங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணித்து அவற்றை செய்யும் படி வேண்டினார்கள். ஆனால் அவை ஏற்புடையதாக இல்லாததை அவர்களிற்கு விளங்கப்படுத்த முயன்ற போது, ஆரோக்கியமாக இருந்த இந்த விருந்துகள் கசப்பாக மாறின என்பதே உண்மை என்றார்.</b>
ஆகமொத்தம், "நக்கினார் நாவிழந்தார்" என்ற தமிழ்ப் பழமொழியைப் பயன்படுத்தி சிறிலங்காத் தூதரகம் எவ்வாறு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய உதாரணமே இது. ஆனால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் போட்ட இன்னொரு குண்டை இனிக் கவணிப்போம்.
நானே தொடர்ந்தேன்... "நல்லது நீங்கள் உணர்ந்து கொண்டுவிட்டீர்கள். இவர்கள் (தூதரகத்தினர்) இப்படித்தான். 1983-இல் அரசமயப்படுத்தப்பட்ட ஒரு இன அழிப்பில் இவர்கள் எங்கள் மக்களின் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்து, பெண்களின் கற்பைச் சூறையாடி, பலகோடி சொத்தையழித்த போதே நாங்கள் இந்தத் தேசத்திற்குள் காலடி வைத்தோம். இப்போது இங்கேயும் எங்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க முனைகிறார்கள். பார்த்தீர்களா" என்றேன்.
<b>அவர் என்னைப் புதினமாகப் பார்த்து விட்டுச் சொன்னார்.... "நான் அரசியலிற்கு வந்ததே 1990-க்களின் நடுப்பகுதியில் தான். அதற்கு முன்பு நான் எனது தொழிலில் முனைப்போடு செயற்பட்டு வந்தேன். எனவே எனக்கு நீங்கள் கூறுகிற விடயத்தைப் பற்றித் தெரியாது" என்றார்.
நாங்கள் எதற்காக இங்கே வந்தோம், இந்த நாட்டை இரண்டாவது தாயகமாக ஏற்றோம் என்பது உங்களிற்கு உண்மையிலேயே தெரியாதா என்று கேட்ட போது, அவர் மீண்டும் சொன்னார்.... எனக்குக் கடந்த காலத்தைப் பற்றித் தெரியாது. உண்மையிலே, எனது தொகுதியில் குறிப்பிட்டளவு இலங்கையர்கள் இப்போது இல்லாவிட்டால், இப்போது கூட நான் இதே அக்கறையோடு இருப்பேனோ தெரியாது.... என்றார்.
உண்மையிலேயே அவர் சொன்னவை முத்தான வார்த்தைகள். 22 வருடங்களிற்கு முன் எங்களிற்கு இழைத்த அநியாயங்களை மறைப்பதற்காக இப்போது இடம்பெறுகிற போரை மையப்படுத்தி எங்களைப் பற்றிய தவறான கருத்துரைகளைச் செய்து வரும் சிங்களத்தை விட மீறிய அறிவுப் புலத்தையும், ஆட்பலத்தையும் கொண்டுள்ள நாங்கள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
நாங்கள் ஏன் புலம்பெயர்ந்தோம் என்பது தெரியாத எனது தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரையும் விடக் குறைவான தரவுகளுடனேயே ஏனைய நாடுகளிலுள்ள வெளியுறவுத் துறை சார்ந்தோரும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் தலைவர்களும் இருப்பார்கள் என்ற உண்மையை இப்போதே நாம் உணர வேண்டும்.</b>
<b>1983-இல் இருந்த மேற்குலக அரசியற் தலைவர்களோ, அல்லது வெளியுறவுத் துறை மற்றும் இராஜதந்திர வட்டாரத்தைச் சேர்ந்தவர்களோ இப்போதும் அங்கே இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போமானால் அது எமது தவறு. இப்போது செய்திகளில் அடிபடுகின்ற, அல்லது இலங்கைத் தீவு சம்பந்தமான விவகாரங்களைக் கையாள்கின்ற இராஜதந்திரிகளை எடுத்துப் பார்த்தால், அவர்கள் இச்சேவையில் சேர்ந்து 10 அல்லது 15 வருடங்களிற்குள்ளேயே இருக்கலாம் என்ற நிலையே உள்ளது.
எனவே இவ்வாறானவர்களிற்கு சிங்களர்வர்கள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக எம்மை விரட்டியடித்தார்கள், எத்தனை இனக்கலவரங்கள் ஏற்பட்ட என்பதையெல்லாம் மீண்டுமொரு முறை அவர்களிற்குப் புரிய வைக்க வேண்டிய விதத்தில் எடுத்தியம்புவது இன்றைய தேவை. நாங்கள் ஏன் புலம்பெயர்ந்தோம் என்பதை விளக்கினாலேயே எல்லாமும் அதனுள் அடங்கி விடும்.</b>
<b>அத்தோடு, புதினம் குறிப்பிட்ட, லண்டன் ஒன்றுகூடல் போன்றவற்றை முறியடிக்க, தேசியத் தலைவரின் வரிகளிகேற்ப, நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ நாமனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். உள்ளே எத்தனை வேறுபாடிருந்தாலும் எவ்வாறு அவர்கள் செயற்படுகிறாhர்கள் என்பதற்கு உதாரணமே அந்த லண்டன் கூட்டம்.
ஒரு பொய்யை உண்மையாக்க முயலும் அந்தக் கூட்டத்தைப் பார்த்து நாங்கள் எள்ளவும் யோசிக்கத் தேவையில்லை. மாறாக, நாம் ஏன் புலம்பெயர்ந்தோம், எவ்வாறு ஒடுக்கப்பட்டோம் என்பனவற்றோடு, எமது இனம் மொழிவாரியான இனம், நாம் மதவாதிகளல்ல போன்ற விடயங்களையும் கையிலெடுத்து போரைத் தொடங்குவோம். மேற்கத்தைய தேசத்தவர்கள், அவர்களாகவே புரிந்து கொள்வார்கள் என்றிருக்க இது நேரமில்லை. ஏனேன்றால் தேவை எங்களிற்கே தவிர, அவர்களிற்கு அல்ல.</b>தொடர்புபட்ட செய்திகள்:
<b>ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையை நம்பி விட்டதா?
'ஐரோப்பியத் தடைக்கு உழைத்த' சிறிலங்கா அரசின் 'லண்டன் இரகசியக் குழு'</b>!!
www.puthinam.com