Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடைக்கெதிரான பிரச்சாரக் களம்
#1
தடைக்கெதிரான பிரச்சாரக் களம்: கையாளப்பட வேண்டிய விடயங்கள் எவை?
[வியாழக்கிழமை, 6 ஒக்ரொபர் 2005, 04:54 ஈழம்] [எ.செந்திலாதன்]

முன்னைய செய்தி ஆய்விற்கு ஆதரவளித்து வந்திருந்த பல மின்னஞ்சல்கள் செய்தி ஆய்வின் கருவை பூரணமாக ஆதரித்ததோடு, நாம் பலமான முறையில் பிரச்சாரத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன. எனினும் அவற்றில் இரண்டு மின்னஞ்சல்கள் வித்தியாசமான கேள்விகளை முன்வைத்திருந்தன.


<span style='font-size:25pt;line-height:100%'><b>சிங்கப்பூரிலிருந்து வந்த மின்னஞ்சல் புலம்பெயர்ந்த தமிழினம் (Tamil Diaspora) இவ்வளவு பலமானதாக இருந்தும் உண்மைகளை வெளிக்கொணரும் நடவடிக்கையில் மந்தமான போக்கு ஏன் என்று கேள்வியோடு, இவ்வாறான பிரச்சாரப்போரை நாம் முன்னெடுப்பதற்கு தொடர் உறவு இன்றியமையாதது (Networking) என்பதையும் விளக்கியிருந்தது</b>.</span>
அதேபோல, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மின்னஞ்சல் ஒன்று, தமிழர்கள் இன்று மேற்குலகில் சுய அடையாளமுள்ளதொரு இனமாக, தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என்பதனை பல நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் உணர்ந்துள்ளனவே, ஆனால் இதை நாம் (தமிழினம்) உணர்ந்துள்ளோமா என்ற கேள்வியையும், இவ்வாறான பிரச்சாரத்தை நாம் நிறுவனமயப்படுத்திச் செய்வது நல்லதா அல்லது தனித்தனியே தொடர்வது நல்லதா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.

இந்த இரு கேள்விகளிற்குமான பதிலை அண்டியதாக இந்தச் செய்தி ஆய்வை எடுத்துச் செல்வோம். முதலாவதாக நாம் தெளிவாக இருக்க வேண்டிய மையப்பொருள் ஒன்றேதான். அதாவது நாம் சிறிலங்காவைப் போல பொய்யுரைக்க வேண்டிய தேவையேதுமேயில்லை. நாம் உண்மைகளை வெளிக்கொணர முயல்கிறோம் என்பதே யதார்த்தம்.

இதற்கான தேவை ஏற்படுகின்ற போது, இதை நாம் எப்படி முன்னெடுப்பது என்ற கேள்வி உங்களிற்குத் தோன்றலாம். உங்களது இரத்த உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் என ஒரு சமூகம் அங்கே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றிய அக்கறை உங்களிற்கு இருக்கிறது என்பதே இதற்கான விடை. உங்கள் உறவுகளின் மீதான உங்கள் உணர்வுகளை யாராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அக்கறை நியாயமானது என்பதை எந்த அரசியல்வாதியும் ஏற்றுக்கொள்வார், மதிப்பளிப்பார்.

எனவே உங்கள் உறவுகளின் மீதான அக்கறையை மையப்படுத்தி நீங்கள் இவ்விவகாரத்தை உங்கள் பகுதி அரசியல்வாதிகளிற்கும் உங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை சார் இராஜதந்திரிகளிற்கும் புரிய வையுங்கள். அவர்களுடன் தொடர்ச்சியான நட்புறவைப் பேணுங்கள். இதுவே நீங்கள் முன்னெடுக்க வேண்டிய முதற்கட்ட நடவடிக்கை.

இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு அரசியல்வாதியினூடாகவும், அமைப்பினூடகவும் செல்லும் போது ஏற்படுகின்ற கருத்தோட்டம் மிகவும் பலமானது. ஏனெனில் நீங்கள் வசிக்கின்ற தேசத்தின் பிரஜைகள் என்கிற தகுதியோடு, அவ்வவ் நாடுகளின் மொழிகளில் உள்ள பரிச்சயம் உங்களிற்கான மேலதிகத் தகுதி. நாட்டின் பிரஜை என்கிற முறையில் உங்கள் தொடர்புகளிற்கு மதிப்பளிக்க, பதிலளிக்க வேண்டிய தேவை அதிகாரிகளிற்கும், அரசியல்வாதிகளிற்கும் இன்றியமையாது.

ஒரு முறை அவர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டு பாருங்கள். ஏன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுங்கள் அல்லது ஒரு கடிதமெழுதிப் பாருங்கள். எவ்வாறு உங்களிற்கு மதிப்பளித்து உங்கள் கருத்தைச் செவிசாய்க்கிறார்கள் என்பதை நீங்கள் யதார்த்தமாக உணர்வீர்கள்.

இவ்வாறு எங்களின் கருத்துக்கள் பலமுனைகளினூடாக சென்றடையும் போது அவர்கள் இவ்விவகாரத்தைப் பரிசீலிக்க வேண்டிய மென் அழுத்தம் உள்ளதை உணர்ந்து விழிப்பாகவே செயற்படுவார்கள். ஏந்த விடயத்திலும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதுவே நிறுவனமயப்படுத்திச் செயற்பட வேண்டுமா? என்ற கேள்விக்கான விடையாகவும் அமைந்து விடும். அதாவது நிறுவன மயப்படுத்திச் செய்ய வேண்டிய தேவைகளைச் தமிழர் தரப்பு மற்றும் தமிழர் சார் அமைப்புக்கள் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதற்கும் மேலாக நாங்கள் தனிப்பட்ட முறையில் எங்களால் இயன்றவரை உண்மைகளை வெளிவரச்செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

சிங்கப்பூர் அன்பர் லண்டன் உதாரணத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்ற தனது மின்அஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். அதாவது பல தனிநபர்கள் தனித்தனியே சிறிலங்காவிற்காக மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரம் ஒரு சிறிய தாக்கத்தை விளைவிக்குமாக இருந்தால், அதுவே உண்மையைத் தெளிவுபடுத்தும் எமது பணியை நாம் செவ்வனே செய்தால் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரிவித்திருந்தார்.

எனவே நாமாகவே தனிநபர்களாக, குடும்பமாக, நண்பர்களாக ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களாக முன்னெடுக்கும் முயற்சியாக இது இருக்கட்டும். இவ்வாறு நீங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற அரசியல்வாதியையோ அல்லது ஒரு அமைப்பின் பிரதிநிதியையோ நீங்கள் சந்திக்கச் செல்லும் போது குடும்பமாக, நண்பர்களாக, அல்லது ஒரே கருத்துடையோராக ஒரு கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளலாம்.

www.puthinam.com
www.puthinam.com
www.puthinam.com
www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)