Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்குடாநாட்டில் பரவலாக எல்லாளன் படையின் சுவரொட்டிகள்
#1
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் எல்லாளன் படையின் பெயரில் எச்சிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடைஞ்சலான செயல்பாடுகளில் ஈடுபட்டவாகள் எனப் பலரையும் எச்சரிக்கும் விதத்தில் இச் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. குறிப்பாக சந்திக்கு சந்தி ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளை; ஒட்டப்பட்ட இடங்களில் எல்லாம் பொது மக்கள் குழுமி நின்று வாசிப்பதையும் அவதானிக்க முடிந்தது. மேலும் இத்தகைய சம்பவங்கள் மூலம் இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளார்கள் இத்தகைய வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் முதல் சுமார் ஆறு போர் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிய நிலையில் இச் சுவரொட்டி வெளிவந்துள்ளமை குறிப்பிடக் கூடியதாகும்
nitharsanam
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)