Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்டுக்குள் நடந்த சிலிர்க்கும் சண்டை
#1
காட்டுக்குள் நடந்த சிலிர்க்கும் சண்டை முதலையை விழுங்கிய மலைப்பாம்பின் வயிறு வெடித்துப் பிளந்து இரண்டும் பலி
[img=http://img151.imageshack.us/img151/1495/gator2xcopy4xe.jpg]

மியாமி, அக். 7- திகில் படத்தில் வரும் மயிர் கூச்செறியும் காட்சியைப் போன்ற அதிரடி சண்டைக்காட்சி, அமொpக்ககாட்டுக்குள் நடந்துள்ளது. முதலையை மலைப்பாம்பு விழுங்கிட, பாம்பை இரண்டாகப் பிளந்து வயிற்றைக் கிழித்து வெளியேறியது முதலை. இந்தப் போராட்டத்தில் இரண்டுமே உயிhpழந் தன.

கற்பனையில் கண்முன் தோன்றக் கூடிய அற்புத சண்டைக் காட்சி பற்றிய விவரம்„-

அமொpக்காவின் எவர் கிளேட் காட்டுப் பகுதியில் வன விலங்கு பற்றி ஆராய்ச்சியில் பிரபல உயிhpயல் நிபுணரும், ஹெலிகாப்டர் பைலட்டும் கடந்த வாரம் காமிராவுடன் …தேடுதல் வேட்டை† நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் 6 அடி நீள முதலையை 13 அடி நீள மலைப்பாம்பு விழுங்க முயன்றதையும், கடுமையான சண்டை நடந்ததையும் கண்டு படம் பிடித்தனர். அரைமணி நேரத்துக்கு மேல் நடந்த சண்டைக்குப் பிறகு, முதலையை மலைப் பாம்பு முழுதாக விழுங்கியது.

மலைப்பாம்பிடம் முதலை தோற்று உயிரைவிட்டதாக ஆய்வாளர்கள் கருதினர். அங்கிருந்து திரும்ப நினைத்தபோது அவர்கள் எதிர்பாராத அது நடந்தது. படார் என்ற சத்தத்துடன் மலைப்பாம்பு வயிறு கிழிந்து இரண்டு துண்டாகப் பிளந்தது. அடுத்த சில நிமிடங்கள் மீண்டும் உயிர் போராட்டம். பாம்பு வயிற்றைக் கிழித்து பாதி வெளிவந்த முதலையும், பேராசையில் அதை விழுங்கிய பாம்பும் அடுத்தடுத்து பலியாகின.

இந்த அபூர்வ சம்பவம் பற்றி புளோரிடா பல்கலைக்கழக வன விலங்கியல் துறை பேராசிhpயர் ப்ராங்க் மசோடி கூறுகையில், ……உயிருடன் விழுங் கிய முதலையை பாம்பு ஜPரணிக்க முயன்றதால் தனது நகங்களால் பாம்பு வயிற்றை முதலை கிழித்துவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் படம் பிடிக்கப்பட்ட மிக ஆக்ரோஷமான மலைப்பாம்பு - முதலைச்சண்டை இது. பொதுவாக, மனிதனையும் விழுங்கக் கூடிய மலைப்பாம்புகூட முதலையை விழுங்கத் தயங்கும். முதலையின் தடிமனான தோல் மற்றும் கூhpய நகங்கள், பற்களால் பாம்புக்குப் பிரச்சனை ஏற்படும். எவர்கிளேட் பகுதியில் ஆயிரக் கணக்கான முதலைகள் இருக்கின்றன.

மலைப்பாம்புகளை செல்ல பிராணியாக வளர்க்கத் தொடங்கும் பலர், அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் இங்குவிட்டுச் செல்கின்றனர். இதனால், வன விலங்குகள் ஆபத்தைச் சந்திக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 150 மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன என்றார்.

செய்தி: தினகரன் இந்தியா
படம்: AP
Reply
#2
<img src='http://img151.imageshack.us/img151/1495/gator2xcopy4xe.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
Confusedhock:
தகவலுக்கு நன்றி வதனா ..
Reply
#4
தகவலுக்கு நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#5
நன்றி வதனா

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)