Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
மாணவிகள் தலை முடி வளர்ப்பதற்கு தடை
ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ நாட்டில் மாணவிகள் தலைமுடியை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக நேரம் செலவிடுவதால் படிப்புக் கெட்டுப்போய் விடுவதாக கூறி தலை முடியை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் தடை விதித்து உள்ளனர்.
தலையை மொட்டை அடித்துக்கொண்டு வரும்படி கூறி மாணவிகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தலை முடியை இழக்க விரும்பாத சில மாணவிகள், பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மம்ம்ம்மம்ம்ம்ம்ம தலையை மொட்டை அடித்து விட்டு அதில் டிசைன் போட்டால் என்ன செய்வார்களாம் அந்த ஆசிரியார்கள்??????
Posts: 56
Threads: 6
Joined: Oct 2005
Reputation:
0
இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. தலைமயிரை வளர்ப்பதா இல்லையா என்பதைப் பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரியான காரணங்கள் இல்;லாத பட்சத்தில் இது கடுமையாகக் கண்டிக்கபட வேண்டிய ஒன்று. எங்கட தமிழ்ச்சமூகத்தில பெண் விரும்பாவிட்டாலும் அவள் தலைமுடியை வளர்க்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.அது எவ்வளவு தவறோ அதேயளவுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டலும் தவறு. பெண்களே தங்களுக்கு எது வசதியென்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு நீளமாக முடிவைத்திருப்பது பிடிக்கவில்லை. கட்டையாக வெட்டியிருப்பது பிடித்திருப்பதோடு வசதியாகவுமிருக்கிறது. ஆனால் சமூகத்தில், குறிப்பாக தாயகத்தில் இது விரும்பத்தகாததாகப் பார்க்கப்படுகிறது. ஏன
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
RaMa Wrote:மம்ம்ம்மம்ம்ம்ம்ம தலையை மொட்டை அடித்து விட்டு அதில் டிசைன் போட்டால் என்ன செய்வார்களாம் அந்த ஆசிரியார்கள்??????
அறிவு கொளுந்து உங்க புத்தி யாருக்கு வரும்....நல்ல காலம் நீங்க அங்க இல்ல....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
கோமதி Wrote:இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. தலைமயிரை வளர்ப்பதா இல்லையா என்பதைப் பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரியான காரணங்கள் இல்;லாத பட்சத்தில் இது கடுமையாகக் கண்டிக்கபட வேண்டிய ஒன்று. எங்கட தமிழ்ச்சமூகத்தில பெண் விரும்பாவிட்டாலும் அவள் தலைமுடியை வளர்க்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.அது எவ்வளவு தவறோ அதேயளவுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டலும் தவறு. பெண்களே தங்களுக்கு எது வசதியென்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு நீளமாக முடிவைத்திருப்பது பிடிக்கவில்லை. கட்டையாக வெட்டியிருப்பது பிடித்திருப்பதோடு வசதியாகவுமிருக்கிறது. ஆனால் சமூகத்தில், குறிப்பாக தாயகத்தில் இது விரும்பத்தகாததாகப் பார்க்கப்படுகிறது. ஏன
ஏனுங்க அம்மணி நீள முடி இருந்தா தானே பெண்களுக்கு அழகே.... :oops: :oops:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 56
Threads: 6
Joined: Oct 2005
Reputation:
0
சின்னப்பு,
கேட்டியளே ஒரு கேள்வி. நான் தமிழ்ச்சமுதாயத்தைச் சொல்லாமல் எந்தச் சமுதாயத்தைச் சொல்லுறது?
சுண்டலின்ர கருத்தையே பாருங்கோவன். அழகு எண்ட பெயரில எங்கட சமுதாயம் பெண்களை நீளக்கூந்தல் வளர் எண்டு சொல்லுதோ இல்லையோ? (சமுதாயத்தில ஆண்களும் பெண்களும் அடங்குவினம்)
இப்பவும் 'தமிழ்ப்பொம்பிளையளெண்டா தலைமுடி எப்படி வளர்க்க வேணும்?" எண்டு ஒரு கேள்வியக் கேட்டு எங்கட யாழ்க்களத்திலயே ஒரு கருத்துக்கணிப்பு வையுங்கோ பாப்பம். என்ன முடிபு வருமெண்டு உங்களுக்கே தெரியும்.
உந்தப் பிரச்சினையள வன்னியலயே பாத்தாச்சு. போராடப்போய் ஏதோ காரணத்தால விலத்தி வாற பெண்களைக்கூட அவையின்ர விருப்பத்துக்கு மாறா தலைமுடிய நீளமா வளர்க்கச்சொல்லித்தான் எங்கட சனம் நிக்குது. (பெண்கள் விரும்பியும் முடிவளர்க்கினம். அது வேற பிரச்சினை. ஆனால் விருப்பமின்றி ஒரு ஆழுத்தத்தைப் பிரயோகிப்பதைத்தான் நான் இங்கே சொன்னேன்) புலத்தில மட்டும் ஏதோ பெரிய புரட்சி நடந்திட்டுதோ என்ன?
-------------------------------
தலைமுடிய வளர் எண்டுறதும், இல்லை வெட்டு எண்டுறதும் சமுதாயமில்லாமல் வேற ஆராம்?
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஆபிரிக்களின் தலைமுடி மிகவும் வித்தியாசமானது. எங்களை
போல நீண்டமுடி அல்ல.. ஒற்றை ஒற்றையாக இருக்காது
ஸ்பிரிங் போல சுருண்டுதான் வளரும். அதை வளர்க்கும்
போது நீளமாக வளராது சுருள்சுருளாக மேல்நோக்கி
வளர்ந்து பற்றையைப் போல காணப்படும்..
அதை பின்னுவதாக இருந்தால் வேறொருவர் துணை வேண்டும்.
முழுவதும் பின்னிமுடிக்க குறைந்தது இரண்டு 3 மணி நேரங்கள்
தேவைப்படும்..
இந்த நிலையில் பாடசாலை செல்லும் ஆபிரிக்க சிறுமிகள்
தங்கள் தலைமுடியை நீளமாக வளர்ப்பதால் அவர்களின்
நேரம் விரயமாகும் என்பதற்காக இப்படி ஒரு முடிவை
அவர்கள் எடுத்திருக்கலாம்..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............