வித்தியாசமான கதை அம்சமுடைய திரைப்படங்கள், வித்தியாசமான களத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தோல்வியைத்தழுவியதில்லை (சரியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால்) அப்பிடியோரு எதிர்பார்ப்புடன் உற்சாகமான இளைஞர் பட்டாளம் ஒன்று உருவாக்கிவரும் திரைப்படம் இனியவர்கள் திரைப்படத்தின் முதுபெலும்பே திரைக்கதை தான் என்பதை புரிந்து கொண்டு மிகவும் கவனம் செலுத்தி திரைக்கதையை அமைத்திருக்கின்றோம் என்கிறார் இனியவர்களின் இயக்குனர் லெனில்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/iniyavarkal4.png' border='0' alt='user posted image'>
திரைக்கதை பற்றிக் கேட்டால் நிறையவே உதாரணங்களை எடுத்து விடுகிறார். ஒரு சிறிய வரியில் சொல்லக்கூடிய கதையையும் சுவாரசியமான திரைக்கதையமைப்பு எங்கேயோ தூக்கிச் சென்று வெற்றியின் உச்சியில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதற்கு பல வெற்றிப்படங்களையே உதாரணம் காட்டுகின்றார். பாக்கியராஜின் அந்த 7 நாட்கள் வெற்றிப்படத்தின் மூலக்கதை ஒரேயோரு வரிக்கதைதான். என்னுடைய காதலி சந்தர்ப்பவசத்தால் உங்களுடைய மனைவியாக வரலாம். ஆனால் உங்களுடைய மனைவி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னுடைய காதலியாக வரமுடியாது. இந்த ஒரிவரிக்கதையை வைத்து அருமையாக திரைக்கதை அமைத்தார் கே.பாக்கியராஜ்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/iniyavarkal1.png' border='0' alt='user posted image'>
படமும் மிகப்பெரிய வெற்றி. இன்று கூட திரைக்கதை மன்னன் என்று பாக்கியராஜைக் குறிப்பிடுகிறார்கள் என்கிறார் இயக்குனர் லெனின். அது போலவே சமீகாலப்படங்களை எடுத்துப் பார்த்ததால் காதல், 7ஜீ ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், மன்மதன், என்று சுவாரசியமான திரைக்கதைகள் எவையுமே சோடைபோனதில்லை என்று கூறும் லெனின். இனியவர்கள் திரைக்கு வரட்டும் எங்களுடைய வித்தியாசமான திரைக்கதை அமைப்பைப் பாராட்டுவீர்கள் என்கிறார் குரலில் நம்பிக்கையுடன்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/iniyavarkal2.png' border='0' alt='user posted image'>
இனியவர்களில் நடித்தவர்களில் முன் அனுபவம் எப்படி என்று கேட்டால், கதாநாயகன் சுதனைத்தவிர மற்றய எல்லோருமே புதுமுகங்கள். ஆனால் எக்கசக்கமான திறமையை வைத்திருக்கும் புதுமுகங்கள் என்று கூறியவர் புதுமுகங்களை வைத்துப்படம் எடுப்பது தான் தற்போதய ட்ரென்ட் என்கிறார்.
அதற்கு உதாரணமாக அவர் காட்டுவது காதல் திரைபடத்தின் வெற்றியை. "காதாநாயகனைத் தவிர மற்றய பாத்திரங்களில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் படம் வசூலில் வாரிக்குவித்தது"
"அது போல இனியவர்கள் படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. நடித்தவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மேலாக நடித்திருக்கின்றார்கள். தற்போது எடிற்றிங் மற்றும் பின்னனி இசை சோர்ப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
நவம்பர் மாதத்தில் இனியவர்கள் உங்களிடையே வலம் வருவார்கள்" திரைப்படத்தை எடுப்பதற்க்கு தமிழ் வார்த்தகர்கள் உதவியதாக லெனின் மேலும் தெரிவித்தார். அவர்களது ஒத்துழைப்பு தம்மை உற்சாக்படுத்தியதாகவும் கூறினார். அத்துடன் ஊடக ஆதரவை ரீவிஐ தொலைக்காட்சி மற்றும் சீ.ஏம்.ஆர். வானொலி நிறுவனத்தினர் வழங்குகின்றனர். இனிவர்கள் திரைப்படம் கனடாவில் முற்று முழுதாகத் தயாரிக்கப்படும் திரைப்படம். திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் அனைவருமே 100 சதவீதம் ஈழத்தமிழர்கள்.
<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/iniyavarkal3.png' border='0' alt='user posted image'>
தென்னிந்தியத்திரைப்படங்களுக்கு பெருவாரியாக ஆதரவு கொடுத்துத் தூக்கிவிடும் புலம் பெயர்ந்த தமிழர்கள் நம்மவர்களின் முயற்சிக்கும் நிச்சயம் ஆதரவு கொடுக்கவேண்டும்.
கொடுப்பார்கள்!
எமது ஊடகங்களும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவித்தால் இனியவர்கள் குழுவிலுள்ள இளைஞர்கள் போல் வேறு பலரும் தங்களது திறமைகளைக் காட்ட முன்வருவார்கள்.
புகைப்படங்களை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது என்றேன் படமும் அப்படித்தான் என்றார் லெனின்...
அட தன்னம்பிக்கை....
படங்கள் மற்றும் கட்டுரை: <b>பரபரப்பு வார இதழ் </b>
நன்றிகள் :
தமிழமுதம்.நெற்