Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பதில் தாருங்கள்
#81
இது தூயவனுக்கு

சங்க காலத்திலிருந்து உதாரணம் காட்டியது ஏனென்று விளக்கிவிட்டேன்.இனியும் விளக்கினால் கிழிந்துவிடும்.

உலகிலேயே தமிழினம் தான் தனித் தன்மையுடைய இனமென்றால் தமிழினம் செவ்வாய்க் கிரகத்தில்தான் குடியேற வேண்டும்.அது தலைவருக்கும் தெரியும் தெரிந்துதான்.மதம்,சாதி,பெண்ணடிமை போன்றவற்றைக் கட்டுடைத்து முற்போக்கு வழியில் செல்கிறார்.ராஜ ராஜ சோழன் வாளைத் தேடுவதை விடுத்து ரஷ்யாவுக்குப் போய் ஏவுகணை வாங்குகிறார்.

மற்றது இந்த விடயங்களை விட்டு பிராமிக்கும் தமிழுக்கும் உள்ள உறவு,சோழ சாம்ராச்சியத்தின் சிதைவு,சேர நாடு ஏன் மலையாள நாடாகியது என்றெல்லாம் என்னை ஆரயச் சொன்னதற்கு நன்றி இன்னொரு பக்கம் நீங்களே ஆரம்பியுங்கள் அவற்றைப் பற்றியும் பேசுவோம்.

சிங்கப்பூரிலும் ஐரோப்பாவிலும் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டது ஏன் தமிழீழத்தில் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது.இவ்விரண்டு நாடுகளும் வளரவில்லை.அல்லது இவ்விரண்டு நாடுகளிலும் வசிப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் பாலியல் தொழிலாளி வீட்டுக்குப் போய்விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார்கள்.

முடிந்தால் தமிழீழத்தில் பாலியல் தொழில் ஏன் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது என்பதற்கு உங்கள் வாதத்தை வையுங்கள்.அதைவிடுத்து அங்கு செய்கிறார்கள் இங்கும் செய்யவேண்டுமா என்று கேட்காதீர்கள்.திருமணத்திற்கு கோட்டுச் சூட்டுப் போட்டு கேக்கு வெட்டுவது வரைக்கும் ஐரோப்பாவைப் பார்த்துப் பிரதி பண்ணத் தெரியும் இப்போது மட்டும் கலாச்சாரம் தடுக்குதோ?
\" \"
Reply
#82
ஆயிரம் விதண்டாவாதங்களை அழகுத் தமிழில் தந்த உங்களை வாழ்த்துகின்றோம்.

சரி. உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சி கணக்கெடுத்தலை ஆரம்பிப்போம். எவ்வாறு அங்கே சில லட்சங்கள் தேறுதோ அவ்வாறே போதைவஸ்து பாவனையில் கோடி தேறுதுங்கோ. எனவே போதைவஸ்து சார்பான எல்லாவற்றையும் சகல நாடுகளும் அங்கிகரிக்க ஒரு வாதத்தை தொடங்குங்கள். இப்போது சிறுவர் துஸ்பிரயோகமும் கணக்கெடுக்க இயலாத அளவு உள்ளது. அவ்வாறு செய்பவர்களும் லட்சத்தில் உள்ளதால் அதையும் சட்டபுூர்வமாக்குவோம். எப்படி கதை போகுது பார்த்தியளா? . குற்றங்களை இல்லாதாது ஆக்குவதற்கு குற்றவாளிகளை நிராதிபதி எனத் தீர்ப்பிடுவது தான் தீர்வு என்ற மாதிரி அல்லவா கிடக்குது.

புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான் வாழ்க்கை என்று சிறிய வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றீர்கள். விதண்டா வாதம் கதைப்பதை ஏன் விட்டுவைத்தீர்கள். உங்களுக்கே உங்கள் மீது தெளிவில்லையா? புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான் வாழ்க்கை என்றால் பிறகென்ன தேவைக்கு இவ் விவாதங்களும் சச்சரவுகளும். பேசாமல் அதைச் செய்து கொண்டிருங்களேன்.

புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான்; வாழ்க்கை என்றால் நாம் ஏன் சிங்களவனுடன் மோதல் செய்யவேண்டும்? தன் சுயவிருப்பங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தமிழீழம் விடிவு பெறவேண்டும் என்பதற்காக மறைந்த, போராடிக் கொண்டிருக்கும் எம் இனவீரர்களின் தியாகங்கள் வீண் என்று நினைக்கின்றீர்களா? தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என கையோப்பம் வைத்திருப்பது எல்லாம் ஏமாற்று கதைகள் தானா?

உரிமை என்பது எப்போது மனிதர்கள் கூடி ஒரு அமைப்பாக வாழவேண்டும் எனத் தீர்மானித்தார்களோ அன்று தானாகவே கிடைக்கப் பெற்றது. ஒரு நீதிமன்றம் தனக்கான உரிமையை எங்கிருந்து பெற்றது? ஒருவன் குற்றவாளி எனத் தீர்மானிக்கும் தகுதியை எவ்வாறு அது பெற்றுக் கொண்டது? எல்லாம் நாமே எமக்கு கொடுத்த வரையறை தானே. ஆனால் அந்த வரையறையே மீறுதல் என்பது எந்த நீதிமன்றாலும் முடியாதது தானே. அவ்வாறே தமிழ்சமுதாயம் என்பதற்கும் ஒரு வரையறை உண்டு. அவ் வரையறையை மீறி ஒருத்தன் நடக்கும் பட்சதில் ஒன்று அவன் குற்றவாளியாக்கப்படுவான்.

தன்னினசெயற்கையும் தமிழ்மரபு என்று சொன்னதை எதிர்க்கின்றோம். இப்போது உதாரணம் சொல்கின்றேன். நாம் இப்போது விவாதம் செய்கின்றோம். உங்கள் கருத்துக்களைத் தழுவிய ஆக்கங்கள் வெளியிடுகின்றீர்கள். உண்மையில் தமிழ்மரபுடன் ஒட்டித்தான் நீங்கள் கருத்தை முன்னெடுக்கின்றீர்கள். தலைமுறைகள் கழிய விவாதிப்பவர்கள் நீங்கள் விவாதித்ததை வைத்து தமிழ் மரபு என்று அடையாளம் கொடுக்கமுடியுமா? முடியாதல்லவா.

தேசியத் தலைவர் மதம், சாதி, பெண்ணடிமை போன்றவற்றில் கொடுத்த சீர்திருத்தங்கள் என்பன எப்போதும் எம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீறி என்றுமே சென்றதில்லை. பெண் போராளிகளை உள்வாங்கிய போது கூட அவர் தெளிவாகத் தான் இருந்தார். முதன்முதலில் பயிற்சி கொடுத்த பொன்னம்மான், விக்டர் போன்றவர்களை தவிர மற்ற எவருமே பெண்களை வழிநடத்த விடப்படவில்லை. பெண்களுக்கென்று தனித்தளபதிகள், தனியான போக்குவரத்துவசதிகள், தனிப்பாசறைகள், கழுத்து ஒட்டப்போடப்பட்ட சட்டைகள். இடுப்பில் பட்டி, என்று அடையாளங்களைக் காக்கக் கூடியவிதத்தில் தான் செயற்பாட்டை மேற்கொண்டார். அவர் தகர்த்தது மூட நம்பிக்கைகளைத் தவிர எம் காலச்சார விழுமியங்களை அல்ல. உங்களின் தப்பான விவாதங்களுக்கு சாட்சியாக அவரைப் பயனிபடுத்தி அவரின் பெருமைகளில் கரி புூசாதீர்கள்.

ஆயுதம் வாங்குவதை என்னத்துக்கு இதற்குள் சம்பந்தப்படுத்தி எழுகின்றீர்கள். நான் நினைக்கின்றேன். நீங்கள் நிறையவே குழம்பிப் போயி இருக்கின்றீர்கள்....ம்.... உண்மை தான். உங்கள் வாதங்களின் தோல்வியால் ஏற்பட்ட இயாலாமைத் தன்மையின் வெளிப்பாடுகள் தான் இவை.

பலபெயரில் வந்து கருத்துக்கள் சொல்வதால் எல்லாம் பலர் ஆதரவு கொண்டதற்கான சாட்சியல்ல. அவை உங்களாலேயே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பிரமை. உங்களின் பெருமையை நீங்களே மெச்சிக் கொள்ளுங்கள்.

<b>****</b>

ஆனால் என்னதான் கத்து நீங்கள் கத்தினாலும் தேசியத் தலைவர் கொண்ட கொள்கையில் கொண்ட பற்றுதியை மாற்றமாட்டார். அது உங்களுக்கும் தெரியும். உண்மையில் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும். அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆகவே புசித்து புணர்ந்து மரித்துபோங்கள்.
............................................................................................................
தரப்பட்ட கருத்துக்கள் யாவும் எவருடைய மனதையும் நோகடிக்கும் எண்ணம் கொண்டதல்ல.

<b>**** தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>
Reply
#83
[quote]உங்கள் முட்டாள் தனத்திற்கு

இது குறித்த கருத்தாளனை தனது பார்வையில் வைத்து விமர்சிக்கும் அளவு..! இது தனிநபர் தாக்குதல் இல்லையா...???! இப்படியானவை ஓர் இருவருக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்..???!

ஏனெனில் அது முட்டாள் தனமோ இல்லையோ என்பதை கருத்துச் சொல்ல வேண்டுமே தவிர கருத்து எழுதுபவர் சொல்லக் கூடாது...அது தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை கொண்டுவரும்..!

தொடர்ந்தும் தூயவனின் கருத்துக்கள் மட்டும் தணிக்கைக்கு உட்படுகின்றன..ஆனால் அவரை தணிக்கை அளவுக்கு எழுதத் தூண்டுபவை இங்கு விடப்பட்டுள்ளன..! இதைத்தான் பாரபட்சம் எங்கிறோம்..! உங்கள் பார்வைக்கு புலப்படாதவை எனி எங்களால் சுட்டிக்காட்டப்படும்..! Confusedhock: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#84
இல்லை குருவி. என்னைப் பொறுத்தவரைக்கும் என் கருத்துக்கள் முழுமையாக களப்பொறுப்பாளர்களை சென்றடைந்தால் போதுமானது. மற்றவர்கள் என்ன வழமை மாதிரி அந்தக் காலத்திலே............ என்று தானே ஆரம்பிக்கப்போகின்றனர்.
Reply
#85
தூயவன் உங்களுக்கு மீண்டும் கூறுகிறேன் தேவயற்ற விதத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை இங்கே நடக்கும் விவாதத்திற்குள் உங்கள் கருத்துக்களைத் திணிப்பதற்காகவும்,எதிர்கருத்தாடுபவரை முடக்குவதற்காகவும் பாவிக்க வேண்டாம்.

உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன் தேசிய விடுதலை பற்றிய அரசியல் தெழிவின்மை உங்கள் பல கருத்துக்களில் உண்டு.
நீங்கள் சொல்லும் எமது சமுதாய மரபுகளுக்குள் எமது தேசிய விடுதலைப் போராட்டம் நின்றிருந்தால் இன்று பெண்கள் படயணிகளே தோன்றி இருக்காது.மாவீரரின் வித்துடல்கள் புதைக்கபடாமல் எரிக்கப் பட்டிருக்கும்.எது எமக்குத் தேவை என்பதை தீர்மானிப்பது நீங்கள் அல்ல.எது எமக்குத் தேவை என்பதை தமிழீழ மக்களே தீர்மானிக்கின்றனர்.புலிகள் இயக்கம் சமூதாயத்துடன் கலந்துரை ஆடியே இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சீதனத் தடைச் சட்டம்.தமிழ் ஈழத்தின் சட்டக் கோவை பல மரபுவழிச் சட்டங்களை மாற்றி இருக்கிறது.பல மனித உரிமைச் சட்டங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.அதனை ஆக்குவதற்கு பல வெளி நாட்டு நிபுணர்களின் உதவிகள் ஆலோசனைகள் உள் வாங்கப் பட்டுள்ளன.இவற்றை நாம் மேற்குலகில் இருந்தே உள் வாங்கி உள்ளோம்.ஆகவே கண் மூடித் தனமாக தேசியத்தை உங்கள் வாதங்களுக்கு வலுச் சேக்கவும்,எதிர் கருத்தாடுபவரை மவுனிக்கச் செய்யவும் பயன் படுத்தாதீர்கள்.உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு ஆனால் அது தான் முடிந்த முடிபு அது தான் எமது தேசியத்தை வரயறுக்கிறது என்று எழுதி எமது தேசிய விடுதலைப் போரை மலினப் படுத்தாதீர்.அனைத்து அடக்குமுறமைகளுக்கும் எதிரானதே எமது தேசிய விடுதலைப் போராட்டம்.ஒரு சமூகத்துக்குத் என்ன தேவை என்பதை அந்த சமூகத்துக்குள் கருத்தாடுவதன் மூலமே வெளிக் கொணர முடியும். நீங்கள் கூறுவதைப் போல் கருத்தியல் தடைகளால் அல்ல.இந்த கருத்தாடலில் யாழ் களமும் ஒரு பங்காற்றுகிறது.

நான் முன்னறும் இதனை உங்களுக்குத் தெழிவு படுத்த புலிகளின் மூத்த உறுப்பினர் பால குமார் கூறிய கருத்துக்களை நாபகப் படுத்த விரும்புகிறேன்.எமது எதிர்காலச் சமுதாயம் எப்படி அமய வேண்டும் என்பதில் புலிகள் மிகத் தெழிவாகவே இருக்கிறார்கள்.
Reply
#86
நாரதர் !

நீங்கள் ஒருதலைப்பட்சமாக உங்கள் கருத்தை எழுதுகின்றீர்கள். ஏற்கனவே ஈழவன் விடுதலைப்போராட்டத்தையும் ஒப்பிட்டு எழுதிய கருத்திற்குத்தான் தூயவன் தனது பதில்க் கருத்தை எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வித தவறான கருத்துக்களையும் சொல்லவில்லை. எனவே தவறாக விமர்சிக்காதீர்கள்.
Reply
#87
தூயவன் நீங்கள் இன்னும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் தரவில்லை! மீண்டும் இடுகின்றேன்..

தொடர்ந்து விவாதிக்க உங்கள் பதில்கள் தேவையாக இருக்கின்றது..
--------

பாலியல் குறித்த எழுத்துக்கள் தீவிர எழுத்தாக இருக்க கூடும். ஆனால் தீவிர எழுத்துக்கள் என்றால் அது பாலியல் மட்டும் இல்லை. அதற்குள்ளே அதிகார வெறியர்களின் கொரூர முகம் குறித்த எழுத்து இருக்கும். அடக்கப்படுகின்ற மக்களின் குமுறல் குறித்த எழுத்து இருக்கும். ஆண் பெண் காமத்தில் தன் ஆசைகள் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் இருக்கும். அல்லது தன் மீது திணிக்கப்பட்ட காமம் மீதான கோபம் இருக்கும்.

இவையெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களா? ஒரு பெண் தன் மீது தன் விருப்பின்றி காமம் திணிக்கப்படுகிறது.. என்னும் போது எழுகின்ற கோபத்தை எழுதினால்.. இவளெல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ.. நாலு சுவருக்குள்ளை நடக்கிறதை இப்பிடி பப்பிளிக்காக சொல்லுறாளே.. உவளின்ரை எழுத்தை தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்

அல்லது ஒரு ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான காமத்தில் தன்னுடைய ஆசைகள் நிராகரிக்கப்படுகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுவதில்லை. நான் வெறும் பிணமாகவே நடாத்தப்படுகின்றேன் என்னும் அவளது ஏக்கத்தை எழுத்தில் பதிவு செய்தால் .. ச்சீ இவள் எல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ..? உவள் அலையிறாள்.. என்கிற வரிசையில் அதியுச்சமாக அவளுக்கு விபசாரி பட்டம் கட்டுகிறீர்கள்.

நான் மேலே சொன்ன விடயங்கள் சமூக தளத்தில் விவாதிக்கப்பட கூடாதவையா..? அவையெல்லாம் பாரதூரமான விடயங்களாக உங்களுக்கு தெரியவில்லையா..
Reply
#88
வசம்பு நான் எனது கருதுக்கான ஆதோரங்களுடன் எவ்வாறு தேசிய விடுதலைப் போராட்டத்தில் மேற்குலகில் இருந்தும் கருத்துக்கள் உள்வாங்கப் பட்டன என்று எழுதி உள்ளேன்.ஆனால் நீங்கள் மொட்டயாக ஒருதலைப் பட்சம்,
தவறாக விமர்சிக்கிறீர்கள் என்று எழுதி உள்ளீர்கள்.இவ்வாறு கூறுவதற்கான மேற்கோள்களையும் அதற்கான காரணங்களையும் கூறுங்களேன்.அப்போது தான் பதிற் கருத்து எழுத முடியும்.வெறுமனே உங்கள் அபிப் பிராயங்கள் கருத்தாகிவிடா.
Reply
#89
Vasampu wrote:
நாரதர் !

நீங்கள் ஒருதலைப்பட்சமாக உங்கள் கருத்தை எழுதுகின்றீர்கள். ஏற்கனவே ஈழவன் விடுதலைப்போராட்டத்தையும் ஒப்பிட்டு எழுதிய கருத்திற்குத்தான் தூயவன் தனது பதில்க் கருத்தை எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வித தவறான கருத்துக்களையும் சொல்லவில்லை. எனவே தவறாக விமர்சிக்காதீர்கள்.


நாரதர் முதலில் நான் எழுதிய கருத்தை நன்றாகக் கவனியுங்கள். நான் மொட்டையாக எழுதவில்லை விபரமாகத்தான் எழுதியுள்ளேன்.
Reply
#90
Eelavan Wrote:பதில் தாருங்கள்

அண்மையில் டி.சே எழுதிய கவிதை நண்பர் ஒருவரால் களத்தில் இடப்பட்டதைத் தொடர்ந்து ஆங்காங்கே இடம்பெற்ற சர்சைகளையும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் கவனித்தேன்.

அவற்றுக்குப் பதிலளிக்க முயன்றால் ஒவ்வொரு களமும் பூட்டப்படுகிறது.
கெட்ட வார்த்தைகள்,தலித் இலக்கியம் பின்னவீனத்துவம் பற்றி அரைகுறையான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன கள உறுப்பினர்கள் இவற்றைப் பற்றி விவாதிப்பதும் அவற்றைப் பற்றி அறிவதும் முக்கியம் என நினைக்கிறேன்.வெறுமனே களத்தைப் பூட்டிவிடுவதால் சண்டையைத் தவிர்க்க முடியும் ஒழிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாது

இந்தத் தலைப்புகளினை விவாதிப்பதற்கு களத்தின் எந்தப் பகுதி பொருத்தமானது என்று யாராவது சொல்லுங்கள்
இவற்றை விரும்பாதவர்களுக்கு இந்தத் தலைப்புகளின் கீழ் இன்னின்ன கருத்துகள் விவாதிக்கப்படும் என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருப்பதால்.அவற்றைப் படித்து ஆட்சேபணை தெரிவிப்பதில் காலத்தை வீணாக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.


எங்கே ஆரம்பிக்கலாம்

வணக்கம் ஈழவன்,

களத்தில் சிந்தனைக்களம் என்கிற பிரிவு உள்ளது. அதில் புதிய பிரிவுகள் சில உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன தீவிர இலக்கியம், சிறப்பு விவாதங்கள். இங்கே பொருத்தமான பிரிவில் நீங்கள் விவாதிக்கலாம். அவை தவிர அரசியல், சமூகம், தத்துவம் போன்ற பிரிவுகளும் உள்ளன.

மேலதிக தகவல்களிற்கு:
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=135363#135363

[b]


Reply
#91
மீண்டும் வாதங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற தோற்றப்பாட்டை கொண்டு இதை நான் ஆரம்பிக்கவில்லை. ஆனால் கேட்ட கேள்விக்கு( பதில் தாருங்கள் பகுதியில்) பதில் தரவேண்டிய கடப்பாட்டை கருத்தில் கொண்டு எழுதுகின்றேன்.

வணக்கம் நாரதர்
தேசியவிடுதலைப் போராட்டத்தை என் தேவையற்ற விதத்தில் பயன்படுத்துமளவுக்கு சிறுமைப்பட்டுப் போகவில்லை. ஆனால் அதெப்படி நாரதர். உங்கள் சார்பான கருத்துக்களை போராட்டம் சார்பாக கொண்டு செல்லும் போது சரி எனவும், உங்கள் கருத்துக்களுக்கு எதிராகப் போகின்றபோது பிழை என்றும் போகின்றது. அப்படியிருக்க எனது எக் கருத்தில் தவறு என்று உங்களால் சுட்டிக்காட்டமுடியுமா? மேலும் இங்கே பலர் போராட்டத்தை கேலி செய்து பேசும்போது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? குருக்கள் ....... குற்றமில்லையோ?


இதை விட நீங்கள் சொன்னது போல எதிர்கருத்துக்களை வழங்குபவர் முடங்கிப்போகின்றார் என்றால் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து அவர் அன்னியப்பட்டுத் தானே போகின்றார் என்று தானே அர்த்தம். ஆக அவர் சார்பான கருத்துக்களை எம் விடுதலைப் போராட்டம் தாங்கி நிற்கவில்லை என்பது தானே உண்மை. அவரது கருத்துக்கள் அதன் முன் எடுபடாமை தான் உங்கள் விலகும் வார்த்தைகளுக்கான மறைமுகக் காரணிகளோ?

அரசியல் தெளிவின்மை பற்றி சொன்னீர்கள்? எது குறித்து என்பதை தெளிவுபடுத்தியிருந்தால் திருத்திக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்(உங்களைத் தான்). மூடநம்பிக்கையிலிருந்தான விடுதலையைத் தான் தலைவன் தந்தான் தவிர கலாச்சார விலகல் அல்ல என்று ஏலவே சொல்லியிருக்கின்றேன். திரும்பியும் விளங்கப்படுத்தியாக வேண்டிய நிலைக்கு நீங்கள் இல்லை என நினைக்கின்றேன்.

பல சட்டங்கள் வெளிநாட்டு முறைமையைப் பின்பற்றி இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றை அப்படியே உபயோகிக்கப்படவில்லையே. எம் இனம் சார்ந்த திருத்தங்களுடன் தான் அவை உள்வாங்கப்பட்டன. கண்மூடித்தனமாக உள்வாங்குதற்கும், திருத்தங்களுடன் உள்வாங்குவதற்கும் நிறைய வேறுபாடுக்ள உள்ளன நண்பரே. முடிந்தால் மேலைத்தேச ஆனால் எமக்கு ஒவ்வாத சட்டதிருத்தத்தை அடையாளப்படுத்துங்கள்.

எதிர்கால சமுதாயம் எப்படி அமையவேண்டும் என்பதை புலிகள் தெளிவாக உள்ளார்கள் என்று சொன்னீர்கள் அல்லவா. ஏற்றுக்கொள்கின்றேன். அதற்கு நடைமுறை உதாரணங்களைக் கூறுகின்றேன்

நீங்கள் சமாதான காலத்தில் யாழ்ப்பாண பிரசித்தி பெற்ற ஆலயத் திருவிழா எதற்காவது சென்ற அனுபவம் உண்டோ. அப்படிப் போய் இருந்தீர்கள் என்றால் சில மணித்துளிகளுக்கு இடையிடையே ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்கும் வசனம் ஒன்றை கேட்டிருப்பீர்கள். அதன் சாரம்சம் இது தான். "தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் எவராவது இங்கே நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை கலாச்சாரத்தை பேணும் குழு எச்சரிக்கின்றது". என்பது. இதற்கு மேலே விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்.

அவ்வாறே ஒரு பெண்ணை நக்கல் அடிக்கும் போது பிடிபட்டால் கத்தரிவிதையோ, பாகல்விதையோ தரப்பட்டு குறித்த இடம் ஒன்றில் நடப்பட்டு அது வளர்ந்து பலன் தரும் வரை நீர் ஊற்றப்பட வேண்டும். இடையில் பட்டுவிட்டால் திரும்ப செய்யவேண்டும். அவ்வாறே இன்னுமொரு தண்டனை. 50 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும். ஆனால் தினமும் 50 சதம் தான் கட்டப்படவேண்டும். நேற்று முந்தினம் கூட யாழ்பாணம் மானிப்பாய் பகுதியிலும், வடமராட்சிப் பகுதியிலும் கூடி நின்று சேட்டைகள் செய்தவர்களை சிலர் தாக்கிய விடயம் அறிந்திருப்பீர்கள். அது யார் தாக்கியிருப்பினம் என்றும் உங்களுக்கு தெரியும்.

இதை ஏன் சொல்கின்றேன் என்றால் இப்படியான நடவடிக்கைகள் தான் எம் சகோதரிகள் இரவில் எத்தனை மணிக்கும் வீதியில் துணிவுடன் சென்று வருவதற்கான உரிமையைக் கொடுக்கின்றது. ஒழுங்கான ஆடைகளை அணிவிக்க ஊக்குவிக்கின்றது. இக் கலாச்சாரத்தை தான் தலைவனும் விரும்புகின்றான். தமிழ் மக்களும் விரும்புகின்றனர்.

துணிவிருந்தால் இங்கே சென்று உங்கள் கருத்துக்களைச் சொல்லிப்பாருங்கள். அதை விட்டிட்டு மூத்த உறுப்பினர் பாலாஅண்ணையை உங்கள் சாட்சிக்கு இழுக்காதீர்கள். அவர் பொதுவாக சொன்ன ஒரு கருத்துக்கும் உங்களின் வாதக்கருத்துக்கும் முடிச்சுப்போடாதீர்கள்.

எல்லாவற்றையும் விட தமிழர் பண்பாடு குறித்து நீங்கள் என்ன எண்ணத்தை கொண்டிருக்கின்றீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. படிக்கின்ற காலத்தில் வாத்தியாரைப் பற்றி கரியால் எழுதுதல், மிதிவண்டிக்கு காற்று கழட்டிவிடல், ஊரிலுள்ள சுவர் ஒன்றிலிருந்து ஊர்வம்பளத்தல் என்பன தமிழர் மரபு என்ற எண்ணப்பாட்டில் நீங்கள் இருந்தால் இப்போதே சொல்லிவிடுங்கள்.

ஒரு விடயம் புரிகின்றது. எங்களுக்கெதிரான கருத்துக்களை நீங்கள் சந்திக்கமுடியாமல் தத்தளிக்கின்ற போது மட்டறுத்தினர் நிறையவே கைகொடுக்கின்றார். அப்பக்கத்தை மூடி விடும் செயற்பாட்டை மேற்கொள்கின்றார். ஆனாலும் உண்மைகளை சாகடிக்க எவராலும் முடியாது. இதை புரிந்து கொண்டால் சரி.

அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானதே எம் விடுதலைப்போராட்டம் என்று கூறிக் கொண்டு தன்னினச்செயற்கையையும் நியாயப்படுத்தாதீர்கள்.<b> வார்த்தைகளால் ஏமாந்து போன தலைமுறைகளைத் தாண்டித் தான் நாம் வந்திருக்கின்றோம். மீண்டும் வார்த்தைகள் மூலம் எம் இனத்தை ஏமாற்றி விடமுடியும் எனக் கனவிலும் கொள்ளவேண்டாம்.</b>


..................................................................................................................................
கருத்துக்கள் யாவும் பதில்களாக மட்டுமே கொள்க
Reply
#92
இவோன்

உங்களுக்கு ஒரு விடயத்தை புரியவைக்க விரும்புகின்றேன். இன்று இலட்சக் கணக்கில் தளங்கள் உள்ளன. அவற்றில் பாலியல்ரீதியான தளங்கள் ஏராளம் உண்டு. அப்படியிருக்க நாம் எல்லோரும் அதற்கெதிராக கூச்சல் போட்டுக்கொண்டு திரியவில்லை. நாம் சொல்லுகின்ற விளக்கம் என்பது யாழ் களத்தோடு சாந்த பக்கமாக இது வடிவமைக்கப்படாமல் தனித்து இயங்க வைக்க வேண்டும் என்பது தான். அங்கே செய்யப்படும் எவ்வித விமர்சனங்கள் குறித்தோ நாம் அலட்டிக் கொள்ளப்போவதில்லை.

ஆனால் யாழ் களத்தோடு இணைந்தாக அமைக்கும் பட்சத்தில் ஏற்படும் சங்கடங்கள் குறித்தே நான் சொல்ல வருகின்றேன். உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு தெரியும் தனித்து இயக்கப்படுவதால் அதனால் எவ்வித பிரச்சனைகளையும் உங்களுக்கும் உருவாக்கப் போவதில்லை. எமக்கும் உருவாக்கப்போவதில்லை. இதற்கான விளக்க மடலாகத் தான் நான் குறித்தது. அதை விட சென்ற ஞாயிறு அரட்டை அறையில் விவாதித்தவைக்கான பதிலும் கூடவே.ஆனால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைத்துக் கொண்டு தான் நீங்கள் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

ஆனாலும் நீங்கள் கொண்டுள்ள விவாதக் கருப்பொருளில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதைக் குறித்துக் காட்டவிரும்புகின்றேன்.


உங்கள் கேள்வியின் படி புறக்கணிக்கப்பட்ட பெண் என்னசெய்வாள் என்பது தானே. என்ன செய்வாள் என்ற கேள்விக்கு முதல் தன் ஏக்கங்களை எழுத்துக்கள் மூலம் வெளியிடுகின்றாள் என்றால் தன் ஏக்கங்களை தீர்ப்பதையும் தாண்டி எழுத்துக்கு கொடுக்கும் மரியாதை ஏன்? அவ் எழுத்துக்கள மூலம் தன்னை திருப்தி செய்யமுடியும் என நம்புகின்றாளா? எனவே எழுத்துக்கள் மூலம் தீர்க்கப்படுவது என்பது சூது நிறைந்த ஒரு பார்வை.
அங்கே பெண்ணுக்கான தீர்வுகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற வாதங்களுக்கு பின்னால் தங்கள் காமத்துக்கே களம் அமைக்கப்படுகின்றது.

அப்படி நீங்கள் சொல்லும் விதத்தில் ஒரு பெண் அதே எண்ணத்திலேயே அலைந்து திரிந்தால் அதற்கு வேறு பெயர் சொல்லித்தான் அழைக்கப்படுவார். விபச்சாரி என்பது பணத்துக்காக உடலை விற்பவளே தவிர அவ் எண்ணம் கொண்டு திரிபவள் கிடையாது.

விருப்பமின்றி திணிக்கப்படுவதை தடுப்பதற்கு வீரம் தான் தேவையே ஒழிய வேறு ஏதும் இல்லை. டிசேயின் வரிகளில் உள்ள குமுறலை விட உங்கள் குமுறல் தான் பரிதாபமாகத் தெரிகின்றது. நீங்கள் கேட்டது போல உங்கே இரட்டை வேடம் போடும் ஆணின் அயோக்கியத் தனம் தெளிவாகத் தெரிகின்றது. பாலியல் உணர்வைத் து}ண்டும் கவிதை என்பதை விட பாலியல் உணர்வு நிறைந்தவரின் எண்ணங்களின் வடிகால் தான் அக்கவிதை.

சினிமாவில் ஒரு பெண் அடக்குமுறைகளுக்கு எதிராகப் புறப்படுவதாக கதை அமைத்தால் அப் பெண் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகளை மொத்தநேரத்தில் காட்டி விட்டு கடைசி சில நிமிடத்தில் தான் பெண்ணின் எழுச்சி காட்டப்படும். உண்மையில் அப்படம் கொண்டிருக்கும் பெயர் என்னவென்றால் பெண்விடுதலைப் படம். இது தான் நீங்கள் செய்யப்போவது.

நண்பனே...

என்றும் வக்கிரகங்கள் பற்றியும், கொடூரம் பற்றி பேசப்படுவதும் சகஜமாகப் போகின்றதோ அன்றே அவை நிஜத்தில் சகஜமாகி விடும். நீங்கள் விவாதம் என்ற பெயரில் இவ் இழிச் செயலைத் தான் செய்யப்போகின்றீர்கள். முகமூடிகளை அதிக காலம் போட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது வெளிப்படை.

பெண்ணின் பெயரில் கட்டுரைகளை எழுதுவதன் மூலம் தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முறைமையை எவ்வாறு எதிர்கொள்வது? அங்கு பெண் மீது அனுதாபத்தை காட்டுவது போல நளினம் செய்வது என்பது வேடிக்கையான உண்மை தானே. இங்கே தான் தெளிவான இரட்டை வேடம் தெரிகின்றது.

குலம் சொன்னது போல வீணாக எண்ணங்களைச் சுமந்து நின்று விவாதம் என்ற பெயரிலேயே து}க்கிக் கொண்டு திரியப்போகின்றீர்கள். ஒவ்வொரு முறையும் இதைத் தானா விவாதம் செய்தோம் என்று உற்று நோக்கவேண்டிவரும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)