Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
#1
மது அருந்துபவர்கள் என்னும் போது ஆண்கள் தான் பொதுவாக நினை வுக்கு வருவார்கள் என்றில்லை, அரசல் புரசலாக, அதோ அந்த வீட்டுப் பொம்பள நல்லா தண்ணியடிப்பா.. அந்த வீட்டுப்பொண்ணு ஓட்டல் பார்- கூட போவுதாம்.. அந்த நடிகையா.. தண்ணியடிச்சுட்டா ஒரே கலாட்டா... கச்சேரியா ஆயிடும்..
இப்படி வழக்கத்திற்கு மாறhன நிகழ்வுகளும் கவனத்திற்கு வந்துவிடும். அதுவே பேசப்படும் பொருளாகிவிடும்.

ஆண்கள் தண்ணியடிக்கிறhர்கள் சரி, பெண்கள் தண்ணியடித்தால் என்ன ஆகும்? அந்த குடும்பமே தத்தளிக்கும்...

அதைவிட அவர்கள் உடல் நிலை வெகுவாகப் பாதிக்கும். சரி, நம் பெண்கள் ஏன் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிறhர்கள்?

ஆணும் பெண்ணும் சரி சமம் என்பது தொழில் ரீதியான போட்டிகளில், அறிவு ரீதியில், வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதில் மட்டும் என்றில்லாமல் பழக்க வழக்கங்களிலும் ஏற்படுவதன் விளைவுதான் மதுவே மதுவைக் குடிப்பது என்கிறhர்கள்.

ஆனால், ஆண் தண்ணியடிப்பதற்கும், பெண்தண்ணியடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆணின் உடலமைப்பு பெண்ணின் உடலமைப்பை விட பெரியது. ரத்த நாளங்கள் பெரியவை, நொதிக்கும் தன்மை அதிகம். எனவே, பெண்ணை விட ஆண் அதிக மது அருந்தி னாலும் தாக்குப்பிடிக்க முடியும். பெண்ணுக்கு எளிதில் நொதிப்பு ஏற்படாமல் ரத்தத்தில் ஆல்கஹhல் தங்குவதால் விரைவில் தள்ளாட்டம் வந்துவிடும்.

இவ்வளவுதானா? இதைத் தவிர வேறு பிரச்சினைகள் ஏதேனும் உள்ளனவா?
நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

மதுவினால் வருவனவற்றில் முக்கியமானவை கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, கருவுறுப்பு பாதிப்பு ஆகியவை. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

<b>கல்லீரல் பாதிப்பு </b>

ஆணின் உடலை விட பெண்ணின் உடல் கொழுப்புப் பொருட்களை மெதுவாகத்தான் சிதைக்கும். உடல் திரவம் குறைவாக இருப்பது, சிறிய உருவம், ஆல்கஹhலை நொதிக்கும் நொதிகள் குறைவாக இருப்பது ஆகியவை இவற்றுக்குக் காரணம். இதனால் மது பெண்களின் ரத்தத்தில் நீண்ட நேரம் தங்கியிருக்கும். இதன் காரணமாக கல்லீரல் பாதிப்புகள் விரைவாகப் பெண்களைப் பிடித்துக்கொள்கின்றன.

கொழுப்பு அமிலங்கள் சிதைக்கப்படாததால் அவை கல்லீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் ஹெபடைடிஸ், கல்லீரல் செதில்படல நோயான சிரோசிஸ் லிவர் போன்றவை வரு கின்றன. இறுதியில் மரணம்தான்.

<b>இதய பாதிப்பு </b>

மது அருந்துவதால் மிகை ரத்த அழுத்தம், இதயம் வீங்கி ரத்தத்தை சரியாக வெளியேற்றhத நிலையான கார்டியோ மயோபதி என்ற நிலை உண்டாகிறது. பக்கவாதம், இதயம் மிக வேகமாகவோ, மெதுவாகவோ ஒழுங்கற்ற லயத்தில் துடிக்கும் அர்ரித்யா, ஹhர்ட் பெயிலியர் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆல்கஹhலில் நிறைய கலோரிகள் உள்ளன. இது உடல் எடையை அதி கரிக்கவும், நீரிழிவு உண்டாகவும், இவற்றின் காரணமாக இதய பாதிப்பு தோன்றவும் வழி வகுக்கிறது.

<b>இனப்பெருக்கத் திறன் பாதிப்பு</b>

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பை மது அதிகரிப்பதாக அமெரிக்க மருத்துவச் சங்க ஆய்வு கூறுகிறது. மது அருந்தாதவர்களைவிட மது அருந்துவோருக்கு 41 விழுக்காடு அதிகமாக மார்பகப் புற்று வரும் வாய்ப்பு உண்டு. வயது முதிர்ந்த பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். அதிக மது அருந்துவதால் வலியுள்ள மாதப்போக்கு, மாதப்போக்கின்போது அதிக உதிரம், உதிரமே தோன்றhத நிலை, தானாக கருச்சிதைதல், மலட்டுத் தன்மை, முன்னதாக மாதவிலக்கு முற்றுப்பெறுதல் போன்றவை உண்டாகின்றன. மது ஹhர்மோன் செயல்பாட்டைச் சீர்குலைப்பதே இதற்குக் காரணம்.

மதுவினால் நரம்புத் திசுக்கள், குறிப்பாக மூளை நரம்புத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. மூளைச் சிதைவு, மன இறுக்கம், நரம்பு மண்டலக் கோளாறுகள், நடத்தைக் கோளாறுகள் போன்றவை இதனால் தோன்றுகின்றன.

<b>உடற்பருமன் </b>

மதுவை நொதிக்க முடியாததால் கலோரி அதிகமாவதாலும், நொறுக்குத் தீனிகள் நிறைய சாப்பிட வேண்டியிருப்பதாலும், வயிற்று உறுப்புகள் தளர்ந்து தொங்குவதாலும் உடற்பருமன் வரும்.

<b>எலும்பு பாதிப்புகள் </b>

உடலில் எலும்புகளின் உருவாக்கம், வளர்ச்சி மட்டுமின்றி, உடலின் முக்கியத் தேவைகளுக்கும் கால்சியம் தேவை. உடலில் எவ்வளவு கால்சியத்தை சேர்த்து வைக்கலாம், உடல் பயன்பாட்டுக்கு எவ்வளவு செலவழிக்கலாம், உபரிகளை எந்த விகிதத்தில் வெளியேற்றலாம் என்பதை யெல்லாம் ஹhர்மோன்கள் சரியாகச் செயல்படுத்திவரும். மதுவானது ஹhர்மோன்களைக் கெடுப்பதால் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், உடலில் கால்சியம் சேராமல் வெளியேறிவிடும். உணவிலிருந்தும் கால்சியத்தை உடலால் பெற இயலாது. இதனால் எலும்பு மெலிவு, கைகால் குடைச்சல் மூட்டு வலிகள் போன்ற தொல்லைகள் வரும்.

குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே உடலை காத்துக் கொள்ளலாம் என நினைக்காமல், மதுவை முற்றிலும் நிறுத்திவிட்டால் உடல் நலம் தானாகச் சரியாகும்.

-டாக்டர் ந. தமிழ்ச்சித்தன்
குரு சித்தவைத்திய சாலை,
தாம்பரம், சென்னை-45

நன்றி
தினகரன்.கொம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)