Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று உலக சிக்கன தினம்
#1
<b>சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார அபிவிருத்தியின் ஊற்றுக் கண்கள் உலக சிக்கன தினம் </b>
இன்று உலக சிக்கன தினம்

கே.ஏ.அலீம்

தொன்மைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும்,பண்பாட்டுக் கோலங்களும் சிக்கனம் சேமிப்பு என்பவற்றின் பயன்களை ஏற்று வந்துள்ளன. இதனால் எம்நாட்டு மக்கள் மத்தியில் சிக்கனமும், சேமிப்பும் நிலவியுள்ளதை வரலாறும் கோடிட்டுக் காட்டுகின்றன. மழைக்காலங்களில் நீரைச் சேமித்து வந்துள்ளனர். விளைச்சல் காலங்களில் பெறும் உற்பத்திகளை சிக்கனமாக உபயோகித்து மீதியைச் சேமித்து வைத்து பின்னர் தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பானது பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் அடிப்படைக் காரணிகளிலொன்றாகவுள்ளது. சிக்கனத்தில் இருந்தே சேமிப்பு உருவாகின்றது. சிக்கனம் தனிநபர் வாழ்க்கை மட்டத்திலிருந்து சர்வதேச மட்டம்வரையான ஒரு தர்ம நெறியாகும். சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார அபிவிருத்தியின் ஊற்றுக் கண்களெனலாம்.

இன்று உலகளாவிய ரீதியில் 81 ஆவது உலக சிக்கன தினம் அனுஷ்டிக்கப்படுகிது. சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன என்பதே இத்தினத்தின் கருப்பொருளாகும். இத்தினம் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக சிக்கனத்தினதும் சேமிப்பினதும் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. உலக நாடுகள் இத்தினத்தில் சேமிப்புத் தொடர்பான பல நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி சிக்கனத்தின் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்பதைப் போதிக்கின்றன. மக்கள் வங்கி உட்பட அநேக வங்கிகள் அக்டோபரை சேமிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தி பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன.

மனிதனால் முன்வைக்கப்பட்ட தூரநோக்குமிகு அறிவுசார் பண்டமாக பணம் கருதப்படுகிறது. பணக் கருவியின் அறிமுகத்தோடு மனிதன் தனது சேமிப்பைப் பணமாக மேற்கொள்ளலானான். சேமிப்பானது நாட்டின் முதலீட்டைப் பெருக்கி, உற்பத்தியைப் பெருக்கி வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. இதன் மூலம் தனிநபர் வருமானம் பெருக வாழ்க்கைத் தரம், ஆள்வீத வருமானம் என்பனவும் உயர்கின்றன. உற்பத்தி பெருகும்போது ஏற்றுமதி வாய்ப்புகளும் செலாவணி உட்பாய்ச்சல்களும் நிலையான சந்தை வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. உண்ணாட்டில் பொருட்களின் விலை குறைவடையும். வட்டி இலாபங்கள் போன்றவற்றை சேமிப்பும் முதலீடுகளும் ஈட்டிக் கொள்கின்றன. எமது பொருளாதார வளர்ச்சி வேகம் 5.4 சதவீதத்திலேயேயுள்ளது. இதனால் தொடர்ந்தும் அபிவிருத்தியடைந்துவரும் நாடெனும் நிலையிலேயே இருக்கின்றோம். இந்நிலையிலிருந்து மாறி அபிவிருத்தி அடைந்த நாடு எனும் இலக்கை நோக்கி நாம் நகர எமது பொருளாதார வளர்ச்சி வேகத்தை 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு சேமிப்பு வீதமும், முதலீட்டு வீதமும் சாதகமான நிலையில் காணப்பட்டால் மட்டுமே எமது பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதம்வரை நகர்த்த முடியும்.

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் தேசிய சேமிப்பானது பெரும் பணிபுரிகின்றது. எனவேதான் அந்நாட்டுத் தேறிய தேசிய உற்பத்தியில் தேசிய சேமிப்பு வீதம் ஒரு குறிகாட்டியாகக் கொள்ளப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி இலங்கையின் சேமிப்பு வீதம் 15.9 சதவீதமாகவுள்ளது. இது ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகும். எனவே சேமிப்பு வீதத்தை உயர்த்த நாட்டு மக்களிடையே நிறுவன ரீதியான சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

பூகோளரீதியில் அனைத்துச் சேமிப்பு வங்கிகளாலும் அனுஷ்டிக்கப்படும் உலக சிக்கன தினம் 1924 ஆம் ஆண்டு இத்தாலியில் நிகழ்ந்த சேமிப்பு வங்கியாளர் மகாநாட்டில் பிரதியாண்டும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதியை உலக சிக்கன தினமாக அஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. சிக்கனமாக வாழ்தல் மீதான கவனத்தை ஈர்ப்பதோடல்லாது உலகினரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இத்தினத்தின் இலட்சிய நோக்குகளில் ஒன்றாகும். 1810 ஆம் ஆண்டு சங்கைமிகு ஹென்றிடங்கன் என்பவரால் ஸ்கொட்லாந்தில் முதலாவது சேமிப்பு நிறுவனம் உலகில் தோற்றுவிக்கப்பட்டது. சமூகத்தில் நிலவிய வறுமை, நிதிமுடக்குகள் போன்றவற்றிலிருந்து சமூகத்தினர் நிவாரணம் பெறவே இச்சேமிப்பகம் நிறுவப்பட்டது. காலவோட்டத்தில் சேமிப்பு நிறுவனம் உலகின் பற்றிசையும் பரவியது. பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் அவசியம் எனும் எண்ணக்கரு வலுப்பெற்று 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு நிறுவனங்கள் உருவாகின. ஆங்கிலத் தேசாதிபதி சேர்.ஹபார்ட் ஹோட்டனினால் 1832 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் திகதியன்று இலங்கை சேமிப்பு வங்கி அங்குரார்ப்பணஞ் செய்யப்பட்டது. நிறுவன ரீதியாக இலங்கையில் சேமிப்பகம் நிறுவி 172 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இச்சேமிப்பகத்தின் முதலாவது தலைவராக கலாநிதி வில்ஸ்பேர்ட் நியமனம் பெற்றார்.

1885 ஏப்ரல் 16 ஆம் திகதி அஞ்சலக சேமிப்பகம் எனும் மற்றுமொரு சேமிப்பு வங்கி அறிமுகமானது. இரண்டாம் உலகப் போரின்போது தபால் திணைக்களத்தினால் சேமிப்புச் சான்றிதழ் நிதியம் அமைக்கப்பட்டது. மறைந்த நிதியமைச்சர் யூ.பி.வன்னிநாயக்கவினால் 1969.08.31 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் தேசிய சேமிப்பு வங்கி பற்றிய மசோதாவென்று முன்வைக்கப்பட்டது. எனினும் அமரர் கலாநிதி என்.எம்.பெரேராவின் திட்டப்படி 1971 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கு அமைய ஏலவே இயங்கிய மூன்று சேமிப்பு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி முதல் தேசிய சேமிப்பு வங்கியாக மாற்றப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளையும், நாலாயிரத்திற்கு மேற்பட்ட தபாலகச் சேமிப்புப் பீடங்களையும் கொண்டுள்ள தேசிய சேமிப்பு வங்கி, இந்நாட்டின் சேமிப்பில் பெரும்பகுதியைத் தன்பால் ஈர்த்து வைத்துள்ளது. சிறு சிறு சேமிப்பாளரின் சேமிப்பாற்றலை விருத்தியுறச் செய்து சேமிக்கும் ஆற்றலைத் தூண்டும் இவ்வங்கி நாட்டின் நிதிச்சந்தையில் ஒரு சிறப்புறு நிறுவனமாகப் பரிணமிக்கின்றது. எந்தவொரு நாட்டிற்கும் அதனது மூலதனச் செழிப்புக்கு. சிக்கனமும் சேமிப்பும் முன்னறிகுறிகளாகும். அபிவிருத்தியடைந்த நாடுகள் போதியளவு மூலதனத்தைக் கட்டியெழுப்பும்வேளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்நிலையை அடையாது மந்தநிலையில் காணப்படுகின்றன. இத்தகைய நாடுகளின் முதலீட்டினைப் பெருக்குமுகமாக பிறநாட்டு நிதியுதவிகளும் உள்ளூர் மூலதனங்களும் ஏதுவாக அமைகின்றன. அண்மைக் காலமாக பிறநாட்டுதவி பெறுவதில் இடர்கள் மிகுந்துள்ளதால் மாற்று வழிகளில் முதலீடுகளைப் பெருக்குவதற்கு போதிய சூழ்நிலைகள் தோன்றின.

நவீன பொருளாதார முறைமை சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சிகரமான வட்டி, பாதுகாப்பு ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின்பால் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களிடையே சேமிப்பு பற்றிய நம்பிக்கையை வளர்த்துள்ளன. பொருளாதாரத்தை விருத்தி செய்யவேண்டும் எனும் மனப்பாங்கைத் தோற்றுவித்துள்ளன. சேமிப்பை ஊக்குவிக்க தேசிய சேமிப்பு வங்கியும் நாட்டில் தொழிற்படும் வர்த்தக வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் பலவகையான கவர்ச்சிகரமான வட்டி வீதம், காப்புறுதி வசதி மற்றும் வெகுமதிப் பொருள் அடங்கலான சிறுவர், மகளிர், முதியோர் போன்றோருக்கான சேமிப்புக் கணக்குகளை அறிமுகஞ் செய்துள்ளதோடு, நாட்டிலுள்ள பெருமளவு பாடசாலைகளில் பாடசாலை வங்கிக்கிளைகளை நிறுவி மாணவரிடையே சேமிப்பாற்றலை வளர்த்து வருகின்றன. சிக்கனத் தன்மை மூலம் சேமிப்பைக் கட்டியெழுப்பி சுபிட்ச வாழ்வினைப் பெற்றிடுவோம்.
thinakural.com
<b> .. .. !!</b>
Reply
#2
ஓய்ய் ரசிகை உலக சிக்கன தினம் எண்டுபோட்டு உவ்வளவு பெரிய அறிக்கையை சுட்டுக்கொண்டு வந்து யாழில போட்டு பெரிய இடத்தை பிடிக்கபண்ணி அதில 2,3 பக்கத்தை ஒப்பின் பண்ண வழி வகுத்தால் நியாயமா? :evil: :twisted: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
Danklas Wrote:ஓய்ய் ரசிகை உலக சிக்கன தினம் எண்டுபோட்டு உவ்வளவு பெரிய அறிக்கையை சுட்டுக்கொண்டு வந்து யாழில போட்டு பெரிய இடத்தை பிடிக்கபண்ணி அதில 2,3 பக்கத்தை ஒப்பின் பண்ண வழி வகுத்தால் நியாயமா? :evil: :twisted: :evil:

டம்பி அதைத்தான் சொல்லுறது சிக்கனம் என்டு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#4
Danklas Wrote:ஓய்ய் ரசிகை உலக சிக்கன தினம் எண்டுபோட்டு உவ்வளவு பெரிய அறிக்கையை சுட்டுக்கொண்டு வந்து யாழில போட்டு பெரிய இடத்தை பிடிக்கபண்ணி அதில 2,3 பக்கத்தை ஒப்பின் பண்ண வழி வகுத்தால் நியாயமா? :evil: :twisted: :evil:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இருந்தாலும் இப்படியுமொரு நள் இருக்கின்றதென்கின்ற தகவலினை இணைத்த இரசிகைக்கு நன்றி. இனியாவது சேமிக்கின்றோமா பார்ப்போம்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#5
நன்றி ரசிகை தகவலுக்கு

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)