Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4வயது சிறுவன் மனைவி, குழந்தைகளுடன் வாழ அடம்பிடிக்கிறான்
#1
முற்பிறப்பை கூறும் 4 வயது அதிசய சிறுவன்
மனைவி, குழந்தைகளுடன் வாழவேண்டும் என்று அடம் பிடிக்கிறான்


லக்னோ,நவ.4-

4 வயது சிறுவன் தனது முற்பிறப்பை கூறி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.

அதிசய சிறுவன்

உத்தர பிரதேசமாநிலம் லக்னோ அருகில் உள்ள பிபாரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாபுராம். இவரது ஒரே மகன் அனகேஷ். இவனுக்கு 4 வயதாகிறது.

கடந்த ஆண்டு அனகேஷ் ஒருநாள் திடீர் என்று தனது பெயர் சோட்டேலால் என்றும் தனக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருப்பதாகவும் கூறினான்.

தனது கிராமத்தின் பெயர் குர்சாலி என்றும் விபத்தில் மரணம் அடைந்ததாகவும் இப்போது அந்த கிராமத்துக்கு சென்று மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்றும் கூறினான்.

முதலில் இதை கேட்ட அவனது தந்தை அவன் ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று நினைத்து அதை பொருட்படுத்தவில்லை.

விபத்தில் மரணம்

ஆனால் அவன் இதையே அடிக்கடி கூறிவந்தான். இதனால் அவனது தந்தை தனது உறவினர் ஒருவரை குர்சாலி என்ற கிராமத்துக்கு அனுப்பி இதுபற்றி விசாரித்து வரும் படி கூறினார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சோட்டேலால் என்பவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்தார் என்றும் அவருக்கு 3 குழந்தைகள் உண்டு என்பதும் தெரிய வந்தது.

வீட்டுக்கு அழைத்துச் சென்றான்

இதைத் தொடர்ந்து பாபுராம் ஒரு நாள் தனது மகன் அனகேஷை குர்சாலி கிராமத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் இது தனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊர் போல் தனது தந்தையை ஒவ்வொரு தெருவாக அழைத்துச் சென்று நேராக சோட்டேலாலின் வீட்டில் போய் நின்று இதுதான் எனது வீடு என்று கூறினான்.

அத்துடன் அங்கு இருந்த ஒரு பெண்ணை பார்த்து தன்னுடைய தாயார் என்றும் மற்றொரு பெண்ணை பார்த்து தனது மனைவி என்றும் கூறினான். அங்கு நின்று கொண்டு இருந்த 3 குழந்தைகளை பார்த்து அவர்கள் தான் தனது பிள்ளைகள் என்றும் கூறினான். அத்துடன் அங்கிருந்த அத்தனை பேரின் பெயர்களையும் சரியாக சொன்னான். முற்பிறவியில் தான் சோட்டேலாலாக இருந்த போது நிகழ்ந்த சில சம்பவங்களையும் சரியாக கூறினான்.

இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். திடீரென்று 4 வயது சிறுவன் ஒருவன் வந்து இவர் தான் எனது தாயார், இவர் தான் என் மனைவி என்று கூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பின்னர் அனகேஷ் சோட்டேலாலின் குடும்பத்தினருடையே தங்கி அவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது தந்தை பாபுராமிடம் கூறினான். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் அவனை மீண்டும் பிபாரியா கிராமத்துக்கு அழைத்து வந்து விட்டார்.

மனோதத்துவ நிபுணர்

அதன்பிறகு அவர் வீட்டில் பூஜைகள் நடத்தினார். ஜோசியர்களையும் பார்த்தார். இறுதியாக பரேலியில் உள்ள மனோதத்துவ நிபுணர் ஒருவரையும் சென்று பார்த்தனர். அவர் அனகேஷ் வளர்ந்து பெரியவன் ஆனதும் முற்பிறவி தொடர்பான நினைவுகள் அவனுக்கு படிபடியாக மறந்து விடும் என்று கூறி இருப்பதாகவும் இது ஒன்றுதான் தற்போது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்றும் பாபுராம் கூறினார்.

இந்த விவரங்களை அறிந்த அக்கம் பக்கத்து கிராமத்தினர், அதிசய சிறுவன் அனகேஷை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ம்ம் அதிசய சிறுவன் தான்..முன்பும் இதே போல் முற்பிறவி தொடர்பான நினைவுகள் இருக்கின்ற ஒருவரைப் பற்றி எங்கயோ படித்த ஞாபகம்...தகவலுக்கு நன்றி வாணம்பாடி..
Reply
#3
பாவம் அந்தச்சிறுவன் மனைவி பிள்ளைகளை எப்படி சொந்தங் கொண்டாட? அப்ப இந்தப்பிறவிக்கு பொருள் இல்லையா.?? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
tamilini Wrote:பாவம் அந்தச்சிறுவன் மனைவி பிள்ளைகளை எப்படி சொந்தங் கொண்டாட? அப்ப இந்தப்பிறவிக்கு பொருள் இல்லையா.?? :?

ம்ம் வளர வளர அந்த முற்பிரவி நினைவுகள் மறந்திடுமாம் என்று சொல்லிருக்காராம் மருத்துவர்... மறந்தால் கொஞ்சம் நல்லம் எண்டு நினைக்குறன்... :roll:
Reply
#5
நினைவுகள் அழியுமா?? அப்படி நடந்தா நல்லது தான் 4 வயசு சிறுவன் பாவம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> செய்தி உண்மையா இருக்குமோ. கட்டுக்கதையா இருக்காதா??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
தகப்பன் பிள்ளைக்கு வடிவா எல்லாம் சொல்லிக்
குடுத்திருக்கார்..பிள்ளை அப்பிடியே சொல்லுது....
எல்லாம் பிரபலமாகிற ஆசைதான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
பாவம் 4வயசு சிறுவன் தகவலுக்கு நன்றி வாணம்பாடி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#8
vasisutha Wrote:தகப்பன் பிள்ளைக்கு வடிவா எல்லாம் சொல்லிக்
குடுத்திருக்கார்..பிள்ளை அப்பிடியே சொல்லுது....
எல்லாம் பிரபலமாகிற ஆசைதான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப என்ன வசி உங்கள் பிள்ளைக்கும் சொல்லிக்கொடுக்க போறீர்களா? :wink:
<b> .. .. !!</b>
Reply
#9
இலங்கேலையும் முன்னம் மலைநாட்டுப்பக்கத்திலை பிரேமதாசா பிறந்திருக்கிறார் எண்டு கதையெல்லாம் சிங்களப் பேப்பர்களிலை வந்திச்சு பிறகு ஒரு சத்தமும் இல்லை சில வேளைலை வசி சொல்லுற மாதிரி பேப்பரிலை பேர் வருகிறத்துக்கு ஆட்கள் செய்யிற ஜில்மாலுகளோ தெரியேலை
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)