11-07-2005, 04:09 AM
போர்'' அடித்ததால் நகை திருடி மாட்டிக்கொண்ட மூதாட்டி
62 வயதான இத்தாலி நாட்டு மூதாட்டி ஒருவர் வாழ்க்கை `போர்' அடித்ததால் அதை உற்சாகமாக மாற்ற நகைகளை திருடியதால் ஜெனோவா நகர போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். மெலிதாக இருந்தாலும் தன்னை பணக்கார பெண் போல் காட்டிக்கொண்டு நகைக்கடைகளில் தன் `கைவரிசை'யை காட்டி வந்தார்.
நகைகளை பார்வையிடுவது போல் பாவனை செய்து, விற்பனையாளர் மற்ற வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது நைசாக நகைகளை திருடி உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக்கொள்வார். இப்படி அவர் திருடிச் சேர்த்த நகைகளின் மதிப்பு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாகும். ஆனால், ஒரு நாள் திருடும்போது கேமராவில் சிக்கிக்கொண்ட அவர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
அன்றாட வாழ்க்கை `போர்' அடித்ததால் அதை உற்சாகமாக மாற்ற நகைகள் திருட ஆரம்பித்ததாக கூறிய அவர், தான் வயதானவர் என்பதாலும், உள்ளாடைக்குள் நகைகளை மறைத்து வைத்ததாலும் இதுவரை யாருக்கும் சந்தேகம் வரவில்லை'' என்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
Thanks:Thanthi....

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............