Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது லொள்ளுங்க சோமவன்ச
#1
விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்கள் இருக்கும் வரை நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படாது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க
விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களிடம் ஆயுதம் இருக்கும் வரை நாட்டில் சமாதானமோ அமைதியோ ஏற்படப் போவதில்லை.
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கஇ காலி - சமனல மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய சோமவன்ஸ:

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தை நவீனமயப்படுத்தப் போவதாகக் கூறுகின்றார். எப்படி செய்யப்போகிறார். விடுதலைப் புலிகளின் படைக்கு சமமாக கொண்டு வருவாராஇ படை அணியைக் குறைக்கப் போவதாகக் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளுடன்இ அவர் பிரதமராக இருந்தபோது செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி சிவில் உடையில் பொலிஸாரோஇ இராணுவத்தினரோ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் போக முடியாது! இதுதான் சமாதான ஒப்பந்தம்.

விடுதலைப் புலிகளிடம் அடிமைகளாக வாழும் வடக்குஇ கிழக்கு தமிழ் மக்கள் அதில் இருந்து விடுவிக்க தென்பகுதி மக்களின் உதவியை நாடுகின்றனர்.

ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது அதனை எதிர்த்தவர் மகிந்த ராஜபக்ஷ. உலக நாடுகளும் அதனை எதிர்த்தன. ஆனால் ரணில் அதனை ஆதரித்தார்.

ஜே.வி.பி.பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தமது உரையில்:

புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படாமல் செய்யப்பட்டது. புலிகளுக்கு நாட்டை பிரிக்கும் ஒப்பந்தமே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

வெளிநாட்டவர்கள் எமது நிலங்களை வாங்குகின்றனர். காலி கோட்டையில் 40 வீடுகளை வெளிநாட்டவர்கள் வாங்கியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றினார். நாம் ஆட்சிக்கு வந்து அதனை மீண்டும் திணைக்களமாக மாற்றினோம்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் நாட்டை அபிவிருத்தி செய்வதாக தனியாருக்கு அரச சொத்துக்களை விற்பார்கள் என்றார்.

[b]ஏனுங்கோ நீங்கள் 87 களில் வைச்சிருந்ததையெல்லாம் கொடுத்துவிட்டியளோ
நீங்கள் அதை வைச்சு பிரித் ஓதினனீங்களோ? அதை வைச்சு போதுமக்களைதானே கொன்று குவித்தனிங்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)